அத்தியாயம்_01
பொன்பட்டினம் கிராமம்.. பார்க்கும் இடமெல்லாம் கொப்பும் கொழையுமாய் செழித்து நிற்கும் பச்சை பசேலென வயல் வெளிகள்.. ஊரின் தொடக்கத்திலும் சரி.. முடிவிலும் சரி.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செழித்து நின்றது வயல்வெளி.. நெல், கம்பு, சோளம், காய்கறிகள் என்று இயற்கைக்கும் பஞ்சமில்லாமல்...