• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _07

தென்னாடுடைய சிவனே போற்றி!!..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!..
என்று சிவன் நாமம் அந்த கைபேசியில் மெலிதாய் ஒலிக்க காலை விடியல் மணி 5.45 என்று கடிகாரம் காட்ட உள்ளே பாத்ரூமில் தண்ணீர் சலசலப்போடு சேர்ந்து நம் பொன்னியும் ஈஸ்வரனின் நாமத்தை முதலில் ஜெபித்து பின்பே தண்ணீரின் குளுமை உணர்ந்தாள்.. அந்த குளுமை அவளை தூக்கி வாரி போட தான் செய்தது.. இருந்த தூக்கம் கூட கண்ணோடு காணாமல் சென்றது.. இந்த பச்ச தண்ணியில எப்படி குளிக்க என்று யோசித்தவல் அப்பொழுது தான் பாத்ரூமிற்குள் ஹீட்டர் இல்லாதது உரைக்க நெஞ்சில் கை வைத்து நின்று விட்டால்.. என்னதிது இங்க ஒரு ஹீட்டர் கூட இல்லை.. இந்த காலையிலே தான் இந்த மனுசன் இந்த தண்ணியில குளிக்கிறார் போல..

நினைக்கும் போதே அவளுக்கு நெஞ்சம் தூக்கி வாரி போட்டது.. அம்மாடியோவ் என்று.. சிறிது நேரம் அப்படியே நின்றவள் வேறு வழி இல்லாமல் வேக வேகமாய் அதே தண்ணீரை மடமடவென ஊத்தி குளித்து விட்டு தலை துவட்டி மேல் டாப்பை அணிந்து கொண்டு டாப் மேலே துண்டை சுற்றி கொண்டு தந்தியடிக்கும் பற்களோடு கை ரெண்டையும் தேய்த்து கொண்டு வெளியில் வந்தால்..

அப்பொழுது தான் எழுந்த மாறனும் இவள் இல்லாததை கண்டு தண்ணீர் சலசலப்பு கேட்க குளிக்கிறால் போலும் என்று அங்கேயே புஷப் செய்ய துவங்கினான்.. எப்பொழுதும் உடற்பயிற்சி செய்வதெல்லாம் அவன் பழக்கம் இல்லை.. ஆனால் எப்பொழுதாவது இப்படி செய்வது உண்டு.. ஏதாவது யோசிக்கும் நேரம்.. சில நேரம் ஆழ்ந்த முடிவுகளை சிந்திக்கும் நேரம் என்று மட்டுமே.. இருந்தும் கிராமத்தான்.. சில நேரங்களில் விவசாயன் சில நேரங்களில் தொழிலதிபன் என்று அவனின் வேலையும் அவனை உடல் கட்டு கோப்பாக தான் வைத்து இருந்தது..

வெளியில் வந்த பொன்னி தான் திகைத்து நின்றாள்.. எதிரே வெள்ளை பனியன் வேஸ்டியில் குப்புற விழுந்து விழுந்து எழுந்தவனின் முறுக்கேறிய உடலின் மேனரிசம் கண்டு தன் இறுபக்கம் தோல்களில் தேய்த்து கொண்டு இருந்த கை இப்பொழுது அவள் வாயில் வைத்து விட்டால்.. நிஜமாகவே உறைந்து நின்றாள் என்று தான் சொல்ல வேண்டும்..

கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர போன மாறன் கண்களுக்கு எதிரில் வெளிரென பளபளத்த வாழை தண்டு கால்கள் தான் கண் முன் வந்தது.. அவனுமே ஒரு நொடி திகைத்து தான் விட்டான்.. படக்கென நிமிர்ந்து பார்க்க அங்கு பொன்னி நின்று இருந்த போசை கண்டு மாறன் இடப்பக்கம் சிறிதாய் தலை சாய்த்து புருவம் உயர்த்தி அவளை பார்க்க அவள் தான் இந்த உலகில் இல்லையே..

திமிறி நின்ற அவன் உடலின் மேனரிசம் கண்டு மயங்கி போய் அல்லவா நிற்கிறாள்.. அதுவும் ஒரு ஆண்.. தன்னை மணந்த மணாளன்.. அவளுக்கு இல்லாத உரிமையா.. முட்டை கண்கள் விரிந்து வாயில் கை வைத்து டாப் மட்டும் இருக்க கீழே பேண்ட் இல்லாது துண்டை சுற்றி நின்றவளை கண்டு இட வலம் என தலையசைத்த மாறன் அவளை அழைத்தான்..

" ஏய். " அவன் அழைக்க அவள் தான் அசைவு இல்லை.. மீண்டும் ஒரு கத்தல்..

" ஏய்.. உன்னதான்.." அவன் சவுண்ட் விட்ட அரட்டலில் திடுக்கிட்டு அவள் விழிக்க பிறகு கண்ணை மூடி மூடி திறந்தால்..

" என்ன காலங்காத்தால கனா கண்டுட்டு நிக்க.." அவனின் கேள்வியில் சற்று தெளிந்தவல் தோலை குலுக்கினாள்..

" ஒன்னும் இல்லையே.. ஒன்னுமே இல்லை.." அவளின் பதிலில் ஒரு மாதிரி பார்த்து விட்டு அங்கிருந்த டவலை எடுத்து அவன் பாத்ரூம் நோக்கி செல்ல இவள் தான் அவனையே பார்த்தாள்.. அதை கண்டு விட்டு அவள் பக்கம் திரும்ப அப்பவும் அப்படியே தான் நின்றாள்.. அதாவது பச்சையாக அவனை சைட் அடித்தால்.. அவளின் முன் சொடுகிட்டு எச்சரிக்கை விடுத்து ஒரு விரலை நீட்டினான்..

" இங்க பாரு.. உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம்.. அதுகுள்ள மாட்டு பட்டி அப்புறம் வீட்டுக்கு தண்ணி எடுக்குறது டீ போடுற வேலை எல்லாம் முடிஞ்சு இருக்கனும் புரிஞ்சுதா.. இல்ல பணிஷ்மெண்ட் இன்னும் ஹெவியா இருக்கும்.." என்றவன் சொல்லில் தான் அவளது வேலை இப்பொழுது நினைப்பு வற அரக்க பறக்க பெண்டை மாட்டி துப்பட்டாவை மாராப்பு போல் கட்டி தண்ணீர் வடிந்த கொண்டையோடு கீழே வேகமாக சென்றால்..

அவள் எழுந்த நேரம் மாறன் தாய் மற்றும் அத்தை எழுந்து ஆளுக்கொரு வேலை செய்ய இவளும் கீழே சென்று வேகமாக மாட்டு பட்டிக்கு சென்றால்.. அவள் அங்கு சென்று பார்த்த போது நிச்சயமாக அவளுக்கு தலை தான் சுற்றியது.. அதோடு அந்த பட்டியில் மாட்டு சானி வைக்கோல் ஆங்காங்கு கொட்டி இல்லாது தனியாக ஒவ்வொரு குளியிலும் இருக்க அதை சுத்த படுத்துவது கூட ரொம்பவும் ஈஸி தான்.. ஆனால் இந்த சாணி.. ஹையோ கடவுளே நினைக்கும் போதே அவளுக்கு குமட்டி விட்டது.. அதோடு பட்டி வேறு நீண்டு இருந்தது.. கிட்டத்தட்ட 10 மாடுகள் நிற்க அனைத்தையும் பின்னே இருந்த பெரிய மரத்தடிக்கு கொண்டு சென்றால் மட்டுமே இவள் அனைத்தையும் சுத்தம் செய்ய முடியும்..

ஆனால் இப்பொழுது இவை எல்லாம் எப்படி வெளியில் கொண்டு போவது.. நினைக்கும் போது அவளுக்கு தலை சுற்ற அதே நேரம் பின்னிருந்து ஒரு கை அவள் தோல் தட்ட ஸ்லோ மோஷனில் திரும்பினாள்..

" என்ன அம்மணி இவ்வளவு விடியல்ல எழுந்து இங்க என்ன செய்ரிங்க.." அவளின் கேள்வியில் சிறு பிள்ளையாய் அவள் முழிக்க இவளுக்கு சிரிப்பு தான் வந்தது..

" என்ன புள்ள கேக்குறேன் தானே.. என்ன பன்ற இங்கனக்க நின்னுகிட்டு.."

" ரேணு.." பாவமாய் அழைத்தால்..

" நானே தான் சொல்லு.."

" நீ எப்பவும் இந்த நேரத்துக்கு தான் எழும்புவியா??.." பொன்னி அவளை பார்த்து கேட்க அவளும் பதில் தந்தால்..

" ஆமா.. ஏன் கேள்வி கேக்குற?.."

" உனக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் முழிப்பு வருது.. அதுவும் இப்படி விடியல்ல தலை குளிச்சிட்டு கொஞ்சம் கூட சுணக்கம் இல்லாம நிக்கிற எப்படி.."

" இது என்ன பெரிய விசயம்.. எங்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான்.. நாங்க எழுந்துக்க இல்லைனாலும் வீட்ல ரெண்டு பெரிய பெண்மணிகள் இருக்காங்க பாரு.. நாங்க ரொம்ப நேரம் தூங்கி கிடந்தா வீடு விளங்காதாம்.. சீக்கிரம் விடிய விடிய எங்களை உசுப்பி விட்ருவாங்க.. அதிலே அப்படியே பழக்க பட்டு போச்சு.. சரி நீ ஏன் இப்படி நிக்க அதை சொல்லு வெரசா.. வேலை கிடக்கு நிறையா.." என்றபடி தலையில் இருந்த துண்டை தூக்கி நடந்த படி அங்கிருந்த வெளி கொடியில் போட்டவல் தாவணியை இடுப்பில் சொருகி ஈரமாக இருந்த தலையை அள்ளி கொண்டை இட்டால்.. இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த படி பொன்னி நிற்க இவள் மீண்டும் கத்தினாள்..

" ஏய் என்ன புள்ள.. காலையிலே யோசினையிலே நிக்க.." அவள் கேட்ட பின்பே வேகமாய் மாறன் தன்னை செய்ய சொன்ன அனைத்து வேலைகளையும் அவளிடம் சொல்லவே ஆன் என்று வாயில் கை வைத்து விட்டால்..

" ஆனா ஏன் பெரிய மாமா உன்ன இந்த வேலை எல்லாம் செய்ய சொன்னாங்க.. அதுக்கு தான் நம்ம பக்கத்து வீட்டு மாரி அக்காவை அம்மா வேலைக்கு வச்சி இருக்கே.." இவள் அதிசயித்து சொல்ல பொன்னி விழித்தால்..

" என்ன ரேணு சொல்ற.."

" ஆமா பொன்னி இங்க நிக்கிற மாடெல்லாம் நான் பின்ன இருக்க நம்ம ஆலமரத்தடி கொண்டு போய் கட்டி போற்றுவென்.. நம்ம மாரி அக்கா இதெல்லாம் சுத்தம் பண்ணிரும்.. அப்புறம் நான் தண்ணி எடுத்துருவேன்.. அம்மா டீ போடுவாங்க.. ஆனா ஏன் மாமா உன்ன எல்லாத்தையும் செய்ய சொன்னது தெரியலையே.. அப்படியே இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்குமே.." அவள் சொல்ல இன்னும் பொன்னி தெளிய வில்லை..

அப்புறம் ஏன் அவர் இதெல்லாம் என்ன செய்ய சொன்னார்.. ஒருவேளை வேணும்னு அலைய விடவா இல்ல வேற எதுக்கு என்று அவள் யோசிக்க அதேநேரம் அந்த மாரியும் உள்ளே நுழைந்தாள் பின் வாசல் வழியே.. ரேணு மாட்டை ரெண்டு ரெண்டாக இழுத்து கொண்டு பின்னே செல்ல இவளை பார்த்து வரவேற்றாள்..

" வாங்க மாரி அக்கா.. நா மாட்ட கூட்டி போறேன்.. நீங்க சுத்தம் பண்ணுங்க.." என்ற ரேணு சொல்ல அவள் தான் சென்றவளை பிடித்து நிறுத்தினால்..

" ரேணு சொல்ல நினைச்சேன்.. மறந்துட்டேன்.. அதான் இப்போ வந்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.. நம்ம மாறன் ஐயா என்ன ஒரு வாரத்துக்கு வேலைக்கு வற வேணாம் சொன்னார்.. நேத்து நான் முடியாம செஞ்சதை பார்த்து எனக்கு உடம்பு சரியில்லை அப்படின்னு அந்த ஐயா கண்டு பிடிச்சு எனக்கு விடுப்பு குடுத்துடார்.. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. நான் ஒரு வாரம் லீவு.." என்றவள் சொல்லி செல்ல ரேணு பின்னே திரும்பி பொன்னியை பார்க்க அவளோ மனதிற்குள் நினைத்தால்..

அதானே பார்த்தேன்.. இந்த மனுசன் எல்லாம் பிளான் பண்ணி தான் என்ன வேலை ஏவுறார்.. நான் சொன்ன பொய்க்கு இதெல்லாம் நமக்கு தேவை தான்.. ஆனா நா மட்டும் என்ன வேணும்னா பொய் சொன்னேன்.. சொல்ல வேண்டிய சில கட்டாய சூழ்நிலைகள்.. செய்ய வேண்டிய வேலைகள் இதுக்காக தானே அப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு.. என்ன இருந்தாலும் என் மேலும் தப்பு இருக்கு.. ஊரே மதிக்கிற ஒரு மனுசன் மேல நான் பலியை போட்டு வச்சி இருக்கேன்.. அதுவும் அவ்வளவு பேர் கூடி நின்ன சபையிலே தப்பு தான் அதுக்கு பலனா அந்த மனுசன் என்ன சொன்னாலும் நாம செய்து தான் ஆகனும்.." என்று நினைத்தவள் ரேணுவ பார்க்க அவளோ தலை ஆட்டி வைத்தால்.. சுத்தம் என்பது போல..

" இப்போ என்னவே பண்ண போற.."

" வேற வழி.. அதான் உங்க நோமா ஆர்டர் போட்டார் செய்து தானே ஆகனும்.. ஆனா எப்படி செய்றது தெரியல.. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்றியா.. உன்ன பாத்து நான் பழகிக்கிறேன்.." என்றவளின் பாவமான சொல்லில் ரேணுவிற்கு கூட ஒரு மாதிரி ஆகி விட்டது..

" அதுக்கு ஏன் புள்ள இப்படி நிக்க.. நான் உனக்கு ஒத்தாசை பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து சீக்கிரம் செய்வோம்.. சரியா.. இரு மொத நா இவங்களை பின்ன கட்டிட்டு வாரேன்.." என்றவள் மடமடவென அனைத்து மாடுகளையும் பின்னே கட்டி விட்டு வைக்கோல் அள்ளி தனி தனியாக போட்டு விட்டு பொன்னி பக்கத்தில் வந்து நின்றாள்..

" இங்க பாரு நம்ம வேலையை பிரிச்சி செய்வோம்.. அப்போ தான் சீக்கிரம் செய்யலாம் சரியா.." ரேணு கேட்க பொன்னி வேகமாய் தலை அசைத்தாள்..

" இப்போ நான் இந்த சானியெல்லம் அல்லுறேன்.. நீ போய் வாளியில தண்ணி கொண்டு வந்து ஊத்தி கழுவி விடு.. சரியா.." என்றவள் கேட்க அவளும் போய் வாளியில் தண்ணி கொண்டு வந்தால்.. அதற்குள் ரேணு அங்கிருந்த முறத்தை எடுத்து வெலக்குமாரு கொண்டு சாணி அள்ளி ஒரு கூடையில் வீச அவள் செய்யும் வேலைகளை இவள் தான் சற்று முகம் சுளித்தவாரு பார்த்து நின்றாள்..

" என்னால அப்படி பாக்குற.."

" இல்ல உனக்கு ஒரு மாதிரி இல்லையா.. இந்த வாடை.. அருவருப்பு.. அப்படி எதுவும்.." அவள் கேட்க ரேணு தான் சிரித்தாள்..

" நீ எந்த ஊருனு எனக்கு தெரியல.. ஆனா நீ பன்றதை எல்லாம் பார்த்தா நிச்சயம் பட்டணத்து புள்ளையா தான் இருப்ப.. ஆனா எங்களை மாதிரி கிராமத்துல பிறந்த பிள்ளைங்க எல்லாம் இதெல்லாம் பழக்க பட்ட ஒன்னு.. நான் தான் சொன்னேனே முன்னமே.. கிராமத்துல இருக்குற பொம்பளை பிள்ளைகளை படிக்க வைக்குறாங்களோ இல்லையோ இந்த மாதிரி வீட்டு வேலைகளை நமக்கு அத்து படியா தெள்ள தெளிவா சொல்லி குடுத்துறுவாங்க.. அதுக்கும் மேல மாடு அது நமக்கு தெய்வம்.. உனக்கு தெரியாதா என்ன.. அதனாலே இதெல்லாம் எங்களுக்கு சலிப்பும் இல்லை.. அருவருப்பும் இல்லை.. பழக்கமாகி போச்சு.." ரேணு சொன்னதை என்னவோ உண்மை தானே.. முக்கால் வாசி பெண்களுக்கு இப்படி தான் நடக்குது.. படிப்பு இருக்கோ இல்லையோ வீட்டு வேலை பதின்ம வயதில் கல்யாணம் என்று அனைத்தையும் பெண்களுக்கு வெகு சிறத்தையாய் சீக்கிரம் முடித்து விடுவர்..

ரேணு தனக்கென்று எந்த கனவுகளும் இல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு விசயம் அவளை உருத்த வில்லை போலும்.. ஆனால் நிச்சயம் தனக்கென ஆசைகளும் கனவுகளும் இருக்கும் பெண்ணை சில பெற்றோர்கள் எதையும் சிந்திக்காது சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுவர்.. தங்கள் கடமை முடிய.. அதோடு பெண் பிள்ளை வயதுக்கு வந்த பின் யாரும் வெகுநாட்கள் வீட்டில் வைத்து இருப்பதும் இல்லை.. இது பெண்களுக்கே எழுத பட்ட விதி போலும்.. தங்கள் தலை எழுத்தை எண்ணி சிலரால் நொந்து கொள்ள மட்டுமே இயலும்.. வேறு எதுவும் செய்ய முடியா நிலையில்..

ஆனால் இங்கு அப்படியில்லை.. ரேணு தாராளமாக படிக்கலாம்.. அவளுக்கு எந்த தங்கு தடையும் இல்லை.. வீட்டில் உள்ள அனைவரும் அவள் படிக்க மாட்டேன் என்ற போதும் சொல்லி பார்த்து கேட்காத போது அவர்களும் இதற்கு மேல் உன் இஷ்டம் என்று விட்டு விட மாறன் மட்டுமே அவளை தனியாக அழைத்து பொறுமையாக படிப்பின் பலனை எடுத்து சொல்லி எவ்வளவோ கேட்டு பார்த்தான்.. அவள் தான் பரவாயில்ல மாமா வேணாம் என்று சொன்ன போதிலும் ஒரு பெண்ணுக்கு படிப்பு என்பது அவள் வாழ்வின் பெரும் சாதனை.. அதோடு உன்னை நீயே காத்து கொள்ள உதவும் ஓர் அச்சாணி.. யார் இல்லாத போதும் உன்னை நீயே பார்த்து கொள்ளலாம் என்று சொன்னவனிடம் முடிவாக மறுத்து விட்டாள் வேண்டாம் என்று அதனால் அவனும் விட்டு விட்டான்..

ஆனால் அவளுக்கென்று சொந்தமாக ஏதாவது நிச்சயம் திறமை இருக்கும் என்று விட்டு அவளை தையல் மற்றும் அதோடு பியூடிசன் என்று இரண்டு வகுப்புகளையும் ஒன்றன் பின் ஒன்றாக நிச்சயம் அவளை கற்று கொள்ள வைத்த பின்பே ஓயிந்தான்.. ஆனால் அதற்கு மறுப்பு சொல்லாது அவளும் செயல் முறையான படிப்பு என்று சந்தோஷமாகவே சென்று படித்தால்.. அதை கடைசியில் கற்றும் கொண்டால்..

" ஏய் பொன்னி இந்தா தண்ணி ஊத்தி கழுவு.." என்றிட ஆமா இதெப்டி செய்யனும் என்று மறுபடியும் அவளிடம் கேட்டாள்.. அதை கண்டு விட்டு அவளின் தலையில் மெலிதாக தட்டிய ரேணு ஒரு கப்பில் தண்ணி எடுத்து கீழே ஊற்றி கொண்டே கழுவ அதை மும்முரமாக பார்த்தாள்.. அதை பார்த்து விட்டு திடீரென எழுந்த சந்தேகத்தையும் அவளிடம் கேட்டு விட்டாள்..

" ஏன் ரேணு இதுக்கு சும்மா சும்மா போய் தண்ணி எடுத்து வந்து ஊத்தி களுவக்குள்ள தான் விடிஞ்சிருமே.. அதனாலே நான் ஒரு யோசனை வச்சி இருக்கேன்.. அதையே இப்போ எக்ஸிகியுட் பண்றேன் பாரு.." என்றவள் மடமடவென அந்த பெரிய மாட்டு தொழுவத்தில் மேலே மாட்டி இருந்த ஓசை எடுத்து பின்னிருந்த பைப்பில் சொருகி அதை மாட்டு தொழுவத்துக்கு இழுத்தாள்..

கையில் இருந்த ஓசின் பெரிய துவாலையில் பாதியை கட்டை விரல் கொண்டு மறைத்து கீழே தண்ணீர் அடிக்க அது பீய்ச்சி போர்சாக அடிக்க பொன்னி உதடு கடித்து சிரித்து ரேணு பார்த்து புருவம் உயர்த்த அவளோ வாயில் கை வைத்து அடி பாவி என்னடி இது என்றால்..

" தண்ணி வேஸ்ட் ஆகும் டி.." அவள் சொல்ல பொன்னி மறுத்தால்..

" எதுக்கு தண்ணியை மிச்சம் பண்ணனும் ஒரு விவஸ்தை இருக்குல்ல.. இதுக்கு தாராளமா நம்ம தண்ணி செலவு செய்யலாம்.." என்றவள் வேகமாய் தண்ணீரை எல்லா பக்கமும் அடித்து விட்டு கையில் ஓசை தாங்கிய படி தொடைப்பம் எடுத்து கூட்ட ஆரம்பித்தாள்.. அதோடு அங்கிருந்த பினாயில் எடுத்து கொஞ்சம் எல்லா பக்கமும் தெளித்து மீண்டும் கழுவி விட்டு இருபது நிமிடம் கடந்து போக வழிந்த வியர்வையை துடைத்து கொண்டு எடுத்த ஓசை மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு வேலை முடிய ரேணு பக்கம் திரும்பி எப்படி என்றால்..

" நல்லா விவரமா தாண்டி இருக்க.." என்றவள் சொல்ல சரி சரி வா டீ குடிக்க போலாம் என்று இருவரும் உள்ளே செல்ல போக அப்படியே திகைத்து நின்று விட்டனர்..

வருவாள் பொன்னி..
 
Top