New member
- Messages
- 14
- Reaction score
- 16
- Points
- 3
அத்தியாயம்_01
பொன்பட்டினம் கிராமம்.. பார்க்கும் இடமெல்லாம் கொப்பும் கொழையுமாய் செழித்து நிற்கும் பச்சை பசேலென வயல் வெளிகள்.. ஊரின் தொடக்கத்திலும் சரி.. முடிவிலும் சரி.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செழித்து நின்றது வயல்வெளி.. நெல், கம்பு, சோளம், காய்கறிகள் என்று இயற்கைக்கும் பஞ்சமில்லாமல் மக்கள் வைத்துக்கும் பஞ்சமில்லாத உணவுகள் விவசாயிகளின் உதவியுடன் மட்டும் அல்லாது நாயிரு திங்கள் உதவியுடனும் செல்வ செளிப்பாக செழித்து நின்றது..
ஊரின் தொடக்கத்திலேயே ரைஸ் மில், பருத்தி மில்,, எண்ணெய் மில் என்று அந்த முழு இடத்தையும் ஆக்கிரமித்து உள்ளுக்குள் தனி தனி பிரிவுகளாக பிரித்தெடுக்க பட்டு இருந்தது.. உள்ளுக்குள் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாள்கள் வேலை செய்ய அதற்கு வலப்புறமோ மிகப்பெரிய மெட்டீரியல் இன்டஸ்ட்ரி ஒன்றும் உள்ளது.. அதிலும் உள்ளூர் வெளியூர் என்று பாரபட்சம் இல்லாமல் ஏகப்பட்ட தொழிலாளிகள் வேலை செய்தனர்.. இவை அனைத்திற்கும் ஒரே பெயரே முற்றிலும் ஆக்கிரமித்து இருந்தது.. பொன்மாறன் மெட்டீரியல் இண்டஸ்ட்ரி அண்ட் பொன்மாறன் மில்ஸ் என்று மொத்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து இருந்த அந்த இடத்தை பொத்தாம் பொதுவான நடுவில் நின்று அவ்விடத்தை கண்களிலே மின்னலுடன் முகத்தில் முழு பூரிப்பையும் ஏற்றி அந்த அறுபது வயதிலும் தளராது முதிர்ச்சி கொள்ளாது நிமிர்ந்து நின்று பின்னே கைகளை கட்டி கொண்டு அவனை மனதில் நினைத்து கர்வத்துடன் பார்த்தார் அந்த கம்பெனியை..
இருக்காதா பின்னே.. காலம் காலமாய் இருந்த மில்ஸ் தான்.. இருந்தாலும் அதை பெரிது படுத்தி நவீனமாக வந்த புது புது மிசின்கள் வாங்கி பெரிய பெரிய கடைகள் முதல் கொண்டு சிறு சிறு கடைகள் வரை ஆர்டர்ஸ் எடுத்து வேலை நடத்தி வேலை பெறுக பெறுக நிறைய வேலையாட்கள் வைத்து இப்பொழுது வரை வெற்றிகரமாக செல்லும் மில்ஸ் அவனால தான்.. மெட்டீரியல் இண்டஸ்ட்ரி சொல்லவே தேவையில்லை.. அதுவும் முழு மூச்சாக அவன் மட்டுமே இறங்கி வேலை பார்த்த ஒன்று.. அவனின் கனவும் கூட.. சிறு வயதில் உழைத்து உத்வேகத்துடன் முன்னேறி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக நின்று திகழும் தன் பேரனை நினைக்க நினைக்க அவர்க்கு கர்வமும் முகத்தில் சந்தோசமும் தான் கூடியது..
அவர் அப்படி நிற்கும் பொழுதே பின்னிருந்து ஒரு குரல்.. இவை அனைத்திற்கும் சொந்தமான அந்த குரல் அவரை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது..
" ஐயா.. போலாங்களா.." பின்னிருந்து கேட்ட குரலில் சற்றும் குறையாத பார்வையோடு அவனை திரும்பி பார்த்தார்.. ஆம் அவன் தான்.. அவனே தான்.. மாறன்.. பொன்மாறன்.. முன் நெற்றி காற்றில் தொடும் கேசத்தோடு
கூர்மையான பார்வை கொண்டு ஆஜானுபாகுவான உடல் தோற்றத்துடன் கம்பீரமாக வெள்ளை வேட்டி சட்டையில் நின்ற தன் பேரனை தான்.. என்ன அழகு.. எத்துணை கூர்மையான பார்வை.. எத்துணை எத்துணை கம்பீரம்.. எதற்கும் அஞ்சாத விழிகள்.. எதையும் பிரதிபலிக்காத எப்பொழுதும் இறுகிய முகம் பார்க்க பார்க்க அவர்க்கு திகட்டவே இல்லை.. மேலும் மேலும் கர்வமே குடி கொண்டது..
மெல்ல அவனின் பக்கம் வந்து நின்று அவனின் தோல் மேல் கைபோட்டு தட்டி குடுத்தார் பொன்மாறனின் தாத்தா சத்ய நாராயணன்.. அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர்.. அவர் இல்லாத பொழுதுகளில் அவர் இடத்தில் இருந்து பொன்மாறன் தான் ஊர் மக்களுக்கு தேவையானதை செய்வான்..
" எனக்கு பெருமையாக இருக்குயா.. உன்ன நினச்சு.. நான் தினம் சந்தோச பட்டுக்குற ஒரே விசயம் நீயும் நீ வளர்த்து விட்ட தொழிலையும் தான்.. இந்த சின்ன வயசுலே எத்துணை அழகா தொழில் நடத்துற.. நேர்மையான தொழில்காரன் உன்ன நான் மெச்சுக்காத நாளில்லை.." தன் தாத்தாவின் பேச்சைக் கண்டு இதழுக்கே வலித்து விடுமோ என்று ஒரு ஓர சிரிப்பை மட்டுமே சிந்தினான்..
" எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்யா.." அவன் சொல்லை கேட்டு ஒரு புன்னகையுடன் இருவரும் கிளம்பினார்... பத்து நிமிட பயணத்தில் தான் அவர்களது வீடு.. பழங்காலத்து முற்றம் வைத்த வீடு.. அந்த காலத்திலேயே பார்த்து பார்த்து கட்டி வைத்து இருந்தனர்.. இப்பொழுது அந்த வீடே சில நெருங்கிய உறவுகளால் நிரம்பி இருந்தது.. இன்னும் இரண்டு நாளில் சத்ய நாராயனின் மூத்த பேரனான மாறனுக்கு இரண்டாவது கல்யாணம் முடிவாகி இருந்தது.. வாசலில் புல்லட் சத்தம் கேட்டதும் உள்ளே விளையாண்டு கொண்டிருந்த சிறுவன் தன் பிஞ்சு கால்களை வேக எட்டு வைத்து " அப்பா" என்று அழைத்து கொண்டே ஓடினான்.. தன் ஐயா இறங்கியதும் வேகமாக புல்லட்டை நிருத்தியவன் தன்னை நோக்கி பாய்யிந்து வந்த தன் மகனை ஒரே தூக்காக தூக்கி சுற்றினான்.. அப்படி சுற்றிய தன் அப்பாவிற்கு கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க அவனும் பதிலுக்கு வைத்தான்..
" அப்பா இன்னைக்கு நீங்க லேட்.." அவன் சொன்னதும் தான் அவசரமாக தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்தான்.. எப்பொழுதும் வீட்டுக்கு ஆறு மணிக்கு வந்து விடுபவன் இன்று அரைமணி நேரம் தாமதமாய் தான் வந்து இருந்தான்.. எங்கு என்ன வேலை ஆகினும் ஆறு மணிக்கு வீட்டில் இருக்கனும் தன் ஆறு வயது நிரம்பிய அன்பு மகனின் கட்டளை இதுவே..
" அச்சோ டாடிக்கு இன்னிக்கு வேலை கொஞ்சம் அதிகம் டா குட்டி.. இன்னைக்கும் மட்டும் அப்பா சாரி.. இனி சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்.. ஓக்கே.." என்ற மாறன் தன் மகனான ஆதி தேவ் மண்டையில் தன் தலையை முட்டினான் அவனுக்கு வலிக்காத படி..
" ஓக்கே டாடி.. டாடி இன்னும் ரெண்டு நாள்ல ரேணு நம்ம வீட்டுக்கு வந்துடுவா இல்ல.. எனக்கு அம்மாவா.. பாட்டி சொன்னாங்க.." அவன் அப்படி சொன்னதும் இவ்வளவு நேரம் இருந்த சிறு நிம்மதி கூட அவனுக்கு பறந்து போனது மனதில்.. ஆனால் அதை எல்லாம் வெளியில் காட்டுபவன் தான் அவன் இல்லையே.. தன் மகன் கேட்டதற்கு ஒரு சிறு புன்னகை சிந்தி விட்டு உள்ளே சென்றான்..
உள்ளே அவனின் தாய் செல்வி அவனை சாப்பிட அழைக்க மாரனோ அவரை ஒரு பார்வை பார்த்து தலையை மட்டும் வேணாம் என்பது போல் ஆட்டி சென்று சோர்ந்த நடையுடன் நடந்த தன் மகனை காணும் போது பெற்றவராய் அவர் மனம் வேதனை அடைந்தது..
" யேன்மா என் புள்ளையை இப்படி சோதிக்கிற.. உனக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் நான் சீரும் சிறப்புமாக தானே செய்து வைக்கிறேன்.. எப்படி இருப்பான் என் புள்ளை.. இன்னைக்கு அவன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே.. பொம்பளை புள்ளையா இருந்தா வாய் விட்டு அழுதுட்டு போய்டும்.. ஆனா என் புள்ளை.." என்று நினைக்க நினைக்க செல்விக்கு துக்கம் தொண்டையை அடைத்தது..
அவர் கண்ணீரை முந்தானை கொண்டு துடைக்கும் வேளையில் பின்னிருந்து அவரின் தோளில் கை வைத்தான் வாசு தேவன்.. செல்வியின் இரண்டாவது மகன்..
" என்னமா எல்லாரும் இருக்காங்க இல்லை.. கண்ணை தொடைங்க.. அண்ணன் சீக்கிரம் சரி ஆகிடும் மா.." வாசு தன் தாய்க்கு நம்பிக்கை ஊட்டினான்.. கடந்து போன வாழ்வை நினைத்து குடும்பமே வேதனையில் உழன்று கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுது தான் வெளியில் வற ஆரம்பித்தது.. இருந்தும் தன் மகனை காணும் வேளையில் அனைத்தும் மாயமாய் தான் போனது..
" அம்மா நீங்க வேணா பாருங்க.. ரேணு வந்துட்டா இல்லை.. இனி நம்ம குடும்பம் மட்டும் இல்லை.. அண்ணனும் பழைய நிலமைக்கு வந்துருவார் என்ன வாசுண்ணா நான் சொல்றது சரிதானே.." என்று பேசிய படியே தன் தாயின் தோலில் தாடையை பதித்து நின்றாள் அந்த வீட்டின் கடைக்குட்டி பொற்குழலி.. அவள் அப்படி சொன்னதுமே வாசுவின் முகத்தில் ஒரு சோகம் தன்னாலே ஒட்டி கொண்டது.. என்ன செய்வது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை.. இப்போ நாம இந்த குடும்பத்தை பத்தி பாப்போம் வாங்க..
சத்ய நாராயணன். மங்களம் தம்பதியினருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள்.. மகன் கதிரவனுக்கு தங்கள் சொந்தத்திலே செல்வி என்ற பெண்ணை பார்த்து கட்டி வைத்தனர்.. கதிரவன் செல்வி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்.. முதல் மகன் பொன்மாறன்.. இரண்டாம் மகன் வாசு தேவன்.. மூன்றாவது பெண் பொற்குழலி.. அடுத்து இரண்டு மகள்களில் ஒருவரை உள்ளூரிலேயே மனம் முடிந்து வைத்தனர்.. கதிரவனுக்கு அடுத்து தேவகி.. அவரின் மகள் தான் ரேணு.. இப்பொழுது அவளை தான் மாறனுக்கு கண்ணாலம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர்.. மூன்றாம் மகள் ரத்தினம் இவரை பற்றி கதை போகும் போக்கில் தெரிந்து கொள்ளலாம்..
மணி ஒன்பதை கடந்து இருக்க தன் மகனை தட்டி குடுத்து உறங்க வைத்தவன் அவனை பெட்டில் கிடத்தி மெல்ல எழுந்து அறையில் உள்ள பால்கனியில் வந்து நின்றான்.. தூரல் போட ஆரம்பித்தது மெல்ல.. தென்றல் சார காற்று தேகம் தழுவ கைப்பிடி சுவரில் இருகைகளையும் ஊன்றி நின்றான்.. அழுத்தமாக அதே சமயம் அவனின் திடமான கைகளில் புஜங்கள் புடைத்து நின்றது.. போன வாழ்கையை நினைத்து.. கண்களை மூடினான்.. சில்லென தூறல்கள் முகத்தில் ஒவ்வொன்றாக விழுந்தது.. தலையுயர்த்தி தாங்கினான்..
என்ன நினைத்தானோ திடிரென்று சட்டை பட்டனை கழட்டி வீசி எறிந்து வெற்று உடலோடு வேட்டியை மடித்துக் கட்டியவன் இறங்கினான் செயற்கை நீரூற்று ஒன்று அவனே பால்கனியில் உருவாக்கி இருக்க.. அதே பால்கனி கைப்பிடி சுவரில் இருந்து பிங்க் நிற பூக்கள் பூத்த செடி ஒன்றை வளர்ந்து இருக்க அதை கொடியாய் இழுத்து ஆங்காங்கு கட்டி இருந்தான்.. அதாவது உதிரும் பூக்கள் மொத்தமும் அந்த ஸ்விமிங்கில் விழுவது போல்.. இப்பொழுதும் அப்படி பூக்கள் உதிர்ந்து கிடக்க தண்ணீரில் பூக்கள் மிதக்கும் அழகான காட்சியை ரசிக்கும் மனம் எல்லாம் அவனுக்கு இல்லை.. அதனால் தூரிய மழையில் சிறிது நேரம் அப்படியே நின்றவன் இப்பொழுது நீச்சல் அடிக்க ஆரம்பித்தான்.. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக.. கடந்து போன வாழ்க்கை வசந்தத்தை தராவிடினும் வெறும் காயத்தை மட்டும் அல்லவா அளவில்லாமல் அள்ளி தந்து சென்றது.. ஊரே உறங்கி போன நள்ளிரவு.. இப்பொழுது தான் பலத்த இடி ஒன்று வானை பிளந்து கொண்டு முழங்க அதில் சுயநினைவு பெற்றவன் எழுந்து சென்று உடை மாற்றி படுக்கையில் விழுந்தான்..
********
சென்னை மாநகராட்சி ஜேஜேவென்ற மக்கள் கூட்டம் எந்நேரமும் அலைமோதியது.. வருவோர் போவோர் என்று பாரபட்சம் இல்லாது எவரையும் நிரந்தரமாய் தன்னில் ஈர்க்க கூடிய ஒட்டு மொத்த உலகில் உள்ள மொழிகள் வெவ்வேறு இனம் கொண்ட மக்கள் என்று பாரபட்சம் இல்லாது அனைவரையும் கையில் ஏந்தும் ஊர்.. அப்படி பட்ட அந்த ஊரில் பெரிய பெரிய கட்டிடங்கள் உயர்ந்து நின்ற அந்த இடத்தில் அனைத்து கட்டிடங்களையும் விட இன்னும் உயர்ந்து நின்றது அந்த கட்டிடம்..
அமைதியே உருவாய் சின்ன குண்டூசி விழுந்தாலும் மற்றவர் காதில் விழாத அளவுக்கு உள்ளிருந்த முப்பது வேலை ஆட்களும் பார்த்து பார்த்து வேலை செய்தனர்.. தங்கள் சின்ன முதலாளியம்மா இப்பொழுது ஹாலில் அமர்ந்து யோசனையுடன் இருக்க அனைவரின் பார்வையும் அவ்வப்பொழுது அவரை தொட்டு மீண்டது..
காரணம் எப்பொழுதும் இப்படி அமைதியுடன் இருப்பவள் அவள் இல்லை... இன்று அல்ல அவள் பிறந்ததில் இருந்தே அந்த வீடு எந்நேரமும் அமைதியை கொள்ளாது ஒரு ஆரவாரத்துடன் தான் இருக்கும்.. இந்த வீட்டிற்கு ஒரே மகள் செல்ல மகள் அவள் இல்லாது ஒரு நொடியும் இவ்வீடு இயங்காது.. அதற்காக அவள் மட்டும் என்று நினைக்காதீர்கள்.. அவளுக்கு ஒரு அண்ணனும் உண்டு.. பெண் என்று அந்த வீட்டில் அவள் மட்டுமே..
அப்படி பட்டவள் தன் தாயின் சொல்லை கேட்டு அவரின் இத்துணை நாள் ஆசை என்னவென்று அறிந்து கொண்டதால் அதை செய்யலாமா வேண்டாமா அப்படியே செய்தாலும் எப்படி செய்வது என்று ஓராயிரம் யோசனைகளில் உழன்று இருக்க திடிரென அவள் தோலின் மேல் கை வைத்து அவளை நினவுலகிற்கு கொண்டு வந்தான் அவளின் அண்ணன் ராம்குமார்..
" எதுக்குடா இவ்வளவு யோசனை.."
" அம்மா சொன்னது பத்தி தான் அண்ணா.." அவனின் முகம் பார்த்து சொன்னால்..
" இதுல யோசிக்க ஒன்னுமே இல்லை.. இதெல்லாம் ரொம்ப ரிஸ்க்.. நீ போய் கூப்பிட்டது அவங்க வந்துறுவாங்க நினைச்சியா.." தவிப்பாய் கேட்டான்.. அவனுக்கும் தாய் ஆசை நிறைவேற்ற கொள்ளை எண்ணம் தான்.. ஆனால் முடியுமா என்பது தான் அவனின் கேள்விக்குறி..
" நிச்சயமா மாட்டாங்க.. ஆனா பண்ணி தான் ஆகனும்.. அப்படி ஏதாவது பண்ணினா தான் அம்மா பழைய மாதிரி வருவாங்க.. ரொம்ப நாள் ஆசை போல.. அது நிறைவேறினால் அந்த சந்தோசத்தில் கூட ஏதாவது மிராக்கல் நடக்கலாம் இல்லை.." இப்பொழுது தான் ஆழ்ந்து யோசித்தான்.. அவள் சொல்வதும் சரி தானே.. ஆனால் எப்படி எப்படி என்ற கேள்வி தான்.. அதை கண்டு கொண்டவளோ பதில் அளித்தால்..
" எனக்கும் தெரியாது.. அங்க அம்மாவுக்கு நம்பக தகுந்த ஒரு ஆள் இருக்கார்.. அம்மா சொன்னாங்க.. அவர்கிட்ட தான் ஃபர்ஸ்ட் நிறைய விசயங்கள் கேட்டு தெரிஞ்சுக்கணும்.. அடுத்து என்ன பண்ணலாம் பாக்கணும்.." என்றவள் யோசனையில் ஆழ்ந்தால்..
வருவாள் பொன்னி..
ஹாய்.. இது நியூ ஸ்டோரி.. இந்த இறகி சைட்ல.. டூ டேஸ் ஒன்ஸ்ud தருவேன்.. படிச்சிட்டு சொல்லுங்க.. நன்றி மக்களே..