• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _06

ஆண்கள் அனைவரும் தம் தம் வேலைகளை கவனிக்க செல்ல வீட்டு இரு பெரிய பெண்மணிகள் இருவரும் சமையல் அறையில் மதிய உணவை தயார் செய்தனர்.. இதற்கிடையில் பொன்னி மற்றும் ரேணு இருவரும் ஹாலில் அமர்ந்து இருக்க ஆதியோ சித்தப்பா வாசுவுடன் கடைக்கு கிளம்பி இருந்தான்.. ஹாலில் டிவி ஓடி கொண்டு இருக்க பொன்னி அதில் வந்த பாடலை ரசித்தவாறு எப்படி இந்த வீட்டில் ஒவ்வொருவரிடமும் தன் நெருக்கத்தை கூட்டலாம் என்று அவள் தீவிர யோசனையில் இருக்க மறுபுறம் இருந்த மரத்தினாலான சோபாவில் கன்னத்தில் கை வைத்த படி ரேணு அமர்ந்து இருந்தாள்.. கடைக்குட்டி பொற்குழலி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்க அவளை செல்வி கிட்செனில் விடாப்பிடியாக அமர்த்தி வைத்து இருந்தார்..

இருவரும் தம் தம் நினைவில் இருக்க பெரியவர்கள் இருவரும் சமையல் அறையில் கிசு கிசுத்தனர்.. பொன்னி என்றதும் சற்று சலிப்பாய் பேசினார் செல்வி..

" ஏன் தேவகி.. காலையில நீதானா காப்பி தண்ணி போட்ட.. அதை உன் மறுமவனுக்கு குடுக்க உனக்கு என்ன கசப்பு.. நீ குடுக்காம எதுக்கு அந்த பொண்ணை குடுக்க சொன்ன.." செல்வி தேவகியை பார்த்து கேட்க தேவகி பதில் தர போக குழலி சுணங்கி கொண்டு கட் பண்ணிய காய்யை அப்படியே வைத்து விட்டு டேபிளில் கை தாங்கி கன்னத்தில் கை வைத்து இவர்கள் பக்கம் திரும்பினால்..

" ஏன் மதனி.. என்ன ஆச்சு.. அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே.. இப்பவே இந்த வேலை எல்லாம் செய்ய கத்துக்கிட்டா தான் நல்லா இருக்கும்.. பொழுதினியும் இந்த அடுப்படியில கிடக்கிற நீ கூட மருமவ வந்துட்டானு கொஞ்சம் ஓய்வா உக்காரலாம்.." அவர் சொல்ல செல்விக்கு ஏனோ ஒன்று உறுத்தலாக இருந்தது..

" என்ன பேசுற தேவகி.. அவளை பார்த்தியா என் பிள்ளைய அதுக்குள்ள அத்தான் கூப்பிட்டு கோவ பட வச்சிட்டா.. முதல என் புள்ளைக்கு என்ன விருப்பம் எது விருப்பம் இல்லனு தெரிஞ்சிக்க சொல்லு.. எனக்கு என்னமோ அவ மேல அவ்வளவு பிடித்தம் இல்லை.. அதுவும் இல்லாம பார்த்தாலே தெரியுது.. பட்டணத்து படிச்ச ராணி போல.. இந்த கூட்டு குடும்பம் கிராமம் அதுக்கும் மேல என் பேரன் எல்லாம் எப்படி பார்த்துப்பாலோ நினச்சு எனக்கு விசனம் தான் கூடுது.." செல்வி சொல்ல தேவகி பாத்திரம் கழுவிய கைகளை முந்தானையால் துடைத்து கொண்டு அதை இடுப்பில் சொருகியவாரு பேச ஆரம்பித்தார்..

" இங்க பாரு மதனி.. நீ தேவை இல்லாத விசனத்தை மனசுக்குள்ள வச்சிக்கிட்டு திரியுற.. அந்த புள்ளைய நல்லா பாரு முத.. அதை பார்த்தா குடும்பத்தை பிரிக்கிற புள்ளை மாதிரியா இருக்கு.. இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.. அது தானா எல்லார்கிட்டயும் ஆசை ஆசையாய் போய் பேசுது.. எல்லார் கூடவும் ஒட்டி நிக்க தான் விரும்புது.. இது அவ குடும்பம்.. என் மருமகன் அவ புருசன்.. ஒரு பொண்டாட்டி புருசனுக்கு செய்ய வேண்டிய பனிவிடை எல்லாத்தையும் இனிமே அவளை செய்ய விடு.. நீயும் அவகிட்ட கொஞ்சம் ஒட்டுதலா பழகு.. எனக்கு என்னமோ அவ ரொம்ப நல்ல புள்ளையா தான் தெரியுது.. அப்புறம் காலையில நான் தான் டீ போட்டேன்.. ஆனா அவ தான் வந்து குடுங்க அம்மா.. நான் போய் எல்லாருக்கும் குடுக்குறேன் சொல்லி தட்டை வாங்கிட்டு போரவலை நான் என்ன சொல்லுவேன் சொல்லு.. அதான் விட்டுட்டேன்.. நான் சொல்றதை சொல்லி புட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்.." அவர் சொல்ல செல்வி தான் ஒரு நொடி யோசித்து பின்பு தேவகியை அழைத்தார்..

" ஏன் தேவகி நீதான் டக்குனு புது ஆளுங்க கூட ஒட்ட மாட்டியே டி.. இவகிட்ட அப்படி என்னடி உனக்கு சொக்குபொடி இருக்கு.." அவர் சிலாகித்து கேட்க தேவகி சிரித்தார்..

" சொக்கு பொடி தான் அண்ணி.. அவளை நல்லா ஊத்து பாரு.. உனக்கே புரியும்.. யாரோட சாயல் நிக்கிதுனு.." அவர் சொல்லவே செல்வி புருவம் சுருக்க குழலி வாய் திறந்தால்..

" எம்மா.. அவங்களை பார்த்தா நல்லவகளா தான் மா தெரியுது.. அத்தை சொல்றது தான் சரி.. அப்புறம் இந்த காயை நீயே தானா அறிஞ்சிக்க.. நா ஹாலுக்கு போறேன்.. நீ சோத்தை ஆக்கிட்டு கூப்பிடு சாப்பிட வாரேன்.." என்றவள் அச்சு அசல் கிராமத்து பாசையில் பேசியதோடு செய்கை கூட அப்படி தான் இருந்தது... என்னதான் நகர் புறம் சென்று படித்தாலும் தன் ஊரு தன் இடம் என்று வரும்பொழுது தானாக அனைத்தும் ஒட்டி கொள்ள தானே செய்கிறது..

குழலி டீச்சருக்கு படித்த பெண் தான்.. ஆனால் வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் என்று தாய் செல்வி தடுத்திட அவளும் வீட்டிலே இருந்து விட்டாள்.. சரி போ என்று விட்டு.. இப்பொழுது தான் ஆறு மாதங்களாக வீட்டில் உள்ளாள்.. அவளுக்கான ராஜ குமாரனை வீட்டார் சல்லடை அடித்து தேட அவனோ இந்த சுற்று வட்டாரத்தில் இல்லை என்று அவர்களுக்கு சொல்வது யாரு..

குழலி எழுந்து தாவணி சேலையை இடுப்பில் சொருகி அங்கிருந்த கேரட்டை எடுத்து கடித்தவாரு செல்ல செல்வி தான் யோசனையில் உலன்றால்.. அதோடு அவரும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தார்.. மனமும் மூளையும் தேவகியின் பேச்சில் சற்று தெளிவு பெற அவள் யாராய் இருந்தால் என்ன ஆனால் இப்பொழுது அவள் என் பிள்ளையின் பொஞ்சாதி என் வீட்டு மருமக என்று தெளியவே அனைத்து வேலைகளையும் அவர் கடகடவென செய்ய ஆரம்பித்தார்..

இங்கோ ஹாலில் வந்த குழலி இரு பெண்கள் இருபுறம் கன்னத்தில் கை தாங்கி அமர்ந்து இருக்க இருவரையும் மாறி மாறி பார்த்து என்னடா இது என்று புலம்பி கொண்டு அங்கு நடுவில் இருந்த சோபாவில் இன்னும் கேரட்டை கொரித்தபடி ஒரு காலை குத்து கால் விட்டு மருகாலை கீழே தொங்க போட்டு அமர்ந்தாள்.. அதிலே கையையும் வைத்து இருவரையும் மாறி மாறி பார்த்தவள் பூப் என்று பெரிதாக ஒரு சத்தமிட்டால்..

அதில் இரண்டு பெண்களும் அலன்டு அடித்து விழிக்க அவர்களை பார்த்து சிரித்து வைத்தால் குழலி..

" எதுக்குடி இப்படி கத்துறவ.." ரேணு தான் கேட்டால்..

" ஹான்.. வேண்டுதலுடி.. ஆமா என்ன ரெண்டு பேரும் நடு வூட்டுல இப்படி குத்த வச்சி கிடக்கிங்க.. கப்பல் கிப்பலேதும் கவுந்து போச்சா.." காலை தூக்கி சப்பலமிட்ட படி கேட்டாள் குழலி..

" கப்பல் கவுந்தா கூட மனச தேத்திக்கலாம்.. ஆனா குழப்பமா இருக்க மனசை எப்படி தேத்துறது.." பொன்னி தான் இன்னும் கன்னத்தில் கை வைத்த அதே தோரணையில் கேட்டாள்..

" ஆமா எனக்கும் கூட குழப்பமா தான் இருக்கு.." ரேணு சொன்னால்.. இருவரின் பதிலும் ஒரே போல் இருக்க குழலி விழித்தால்..

" உனக்குமா.." நயனை போல் கேட்டாள்.. ரேணுவின் தலையாட்டல் கண்டு மீண்டும் அவளே கேள்வி எழுப்பினால்..

" அவங்களுக்கு குழப்பம் ஓகே.. ஆனா உனக்கு என்னத்தடி குழப்பம்.." குழலி கேட்க அவளுக்கு முன் பதில் தந்தால் பொன்னி..

" வேற என்ன இருக்க போகுது.. நமக்கு தான் பெரிய மாமா கூட கல்யாணம் நின்று போச்சே.. அப்புறம் ஏன் வாசு நம்மகிட்ட இன்னும் பேசாம இருக்கார் அப்படின்னு தானே.." அவள் கேட்க இருவரும் இப்பொழுது அவரின் புறம் திரும்பினர்.. ரேணு தான் அதிர்ந்து போனால்..

" ஆமா உனக்கு எப்படி தெரியும்.." இப்பொழுது ரேணுவும் கூட சப்பலமிட்டு அமர்ந்தாள்.. கன்னத்தில் கை தாங்கி.

" நான் தான் உன்னை பார்த்தேனே.. நீ மார்னிங் ப்ரேக் பாஸ்ட் அப்போ வாசுவை வச்ச கண் வாங்கமா பார்க்கிறத.. ஆமா அவ்வளவு லவுசா.." கால் மேல் கால் போட்டு அதில் கை வைத்து கன்னத்தை தாங்கி இருந்தால் இப்பொழுது பொன்னி..

"ம்ம்.." அவள் சோகமே உருவாய் தலையாட்ட குழலி தான் பதில் தந்தால்..

" நீங்க வேற லவுசுனா லவுஸ் அப்படி ஒரு லவுஸ்.. எந்த அளவுக்குனு கேளுங்க.. அம்மணி ஐயா நினைப்புல பன்னிரண்டாம் வகுப்பு பெயில் பண்ணுற அளவுக்கு.." கேரட்டை சாப்பிட்டு விட்டு கைகளை தூசு போல் தட்டியவாரு சொன்னால் குழலி..

" ஏதே.." திகைத்தாள் பொன்னி..

" ஆமா.. சின்ன வயசுலே அம்மனிக்கு வாசு ஐயானு முடிவு பண்ண இந்த அம்மணியும் அவரை பார்த்தா வெக்க படுறதும் போய் ஓடி ஒழியுறதுமா இருக்க 12 வது படிக்கும் போதும் அம்முனி வயசுக்கு வரல.. இதுல எங்க அண்ணனும் காலேஜ் ஒரு டிகிரி முடிச்சு கோல்ட் மெடல்ல பாசாகி போக சந்தோசத்தில் பக்கத்துல இருந்த இவளை தூக்கி சுத்துனதும் என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. இந்த அம்மணி என் அண்ணன் கை பட்டு வயசுக்கு வந்து போய்ட்டா.. ஊருக்குள்ள கூட ஒரே பேச்சு.. கட்டிக்க போறவன் தொட்டு பூபெஞ்சிட்டா அப்படின்னு.. அந்த நினைப்புல ஐயா மேல லவுஸ் ஓவர் ஆகி 12 பெயில்.. அதுக்கு அப்புறம் படிக்க கூட போகல.. அதுல இருந்து வாசுனா ரேணு அம்மணிக்கு உசுரு.. இப்போ திடு திப்புனு பெரிய அண்ணன் கூட கண்ணாலம் சொல்லவும் ரெண்டும் பேருக்கும் ஒன்னும் புரியல.. ஆனா இப்போ தான் கல்யாணம் நின்னு போச்சு.. ஏன் வாசு அண்ணா பேசலனு தெரியலையே.." குழலி தன் நீண்ட உரையை முடித்து அவளும் யோசனையாக இருந்தால்.. ரேணுவும் சோகமாக இருக்க பொன்னி இருவரையும் பார்த்தாள்..

" சரி அப்போ ஒன்னு பண்ணலாம்.. அதுக்கு முன்னாடி நம்ம ஒரு டீல் பேசலாம்.. உங்களுக்கு ஓகே வா.." பொன்னி கேட்க இருவரும் என்னவென பார்த்தனர்..

" இப்போ வாசுவை உன்கூட பேச வைக்கிறது என்னுடைய பொறுப்பு.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு டீல்.. அந்த டீல்க்கு நீங்க ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டா நானும் என் பிளான் படி வாஸுவை உன்கூட பேச வைக்கேன்.. என்ன சரியா.." அவள் கேட்க ஒரு நொடி யோசித்த ரேணு பட்டென ஓகே சொல்லி விட்டால்..

" நீங்க என்ன சொன்னாலும் நா செய்றேன்.. ஆனா வாசு மாமா என்கிட்ட பேசனும்.. அவர் இல்லாம என்னால நிச்சயமா இருக்கவே முடியாது.." என்றவளின் தோய்ந்து போன குரல் அவள் வாசுவின் மேல் வைத்து இருக்கும் காதலை சொல்ல சிரிப்புடன் பார்த்தனர் இருவரும்..

" அவளே ஓகே சொல்லிட்டா.. எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை.." குழலி தான் தோல்களை குலுக்கி சொன்னால்..

" ஓகே.. அப்போ நம்ம மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்.. நா எப்படி வாசு உன்கூட பேச ஹெல்ப் செய்றேனோ அதே போல நீங்களும் இந்த வீட்ல உள்ள எல்லாரும் என்கூட அட்டாச் ஆக ஹெல்ப் பண்ணனும்.. நானும் இந்த வீட்ல ஒருத்தி ஆகனும்.. அதுக்கு உங்க ரெண்டு பேர் ஹெல்ப் எனக்கு வேணும்.. இதுக்கு ஓகே அப்படின்னா நானும் உங்களுக்கு ஹெல்ப் செய்றேன்.." பொன்னி சொல்ல அதற்கும் இருவரும் சரி என்றனர்..

பொன்னி பேசிய எதுவும் அவர்களுக்கு பெரிதாய் தெரிய வில்லை.. அவளும் இந்த வீட்டு பெண்.. அதுவும் இந்த வீட்டு செல்ல பையனின் மனைவி.. அவள் இவ்வளவு மெனகெடல் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. இருந்தும் அவள் இப்படி கேட்பது அவர்களுக்கும் மனநிறைவு தான்.. இவ்வளவு பெரிய குடும்பத்தில் ஒன்றி போகும் ஆசை படும் அவளை கண்டு சந்தோசம் தான் அடைந்தனர்..

" சரி.. இப்போ நம்ம பிளான் நாளையில் இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்.. சரியா.." அவள் கேட்க குழலி உற்சாகமாய் தலை அசைக்க ரேணு மீண்டும் சோர்ந்தால்..

" நாளைக்கு தானா.. இன்னையில இருந்து இல்லையா.." சோகமாய் தலையாட்டி வினவினாள்..

" ஏய் அவசர குடுக்க.. புது பொண்ணு டி.. அவளும் கொஞ்சம் அசதியா இருப்பா இல்ல.. அதனாலே நம்மலும் நாளையில் இருந்து ஆரம்பிப்போம்.. ஆக்க பொறுத்த உனக்கு ஆற பொறுக்களையோ.." அவள் கேட்டு கொண்டு இருக்க பொன்னியும் தலை அசைக்க அதே நேரம் வீட்டு ஆண்கள் மதிய உணவிற்கு வந்து சேர்ந்தனர்..

" சரி சரி எல்லாரும் வந்துட்டாங்க.. வாங்க சாப்பிட போலாம்.." என்ற குழலி எழுந்து கொள்ள பொன்னி ரேணுவும் எழுந்தனர்.. அனைவரும் சாப்பாட்டில் அமர தேவகி செல்வி இருவரும் பரிமாற நிற்க திடீரென்று பொன்னிக்கு ஒரு யோசனை தோன்ற அப்பொழுதே அதை செயல் படுத்தினால்.. கூடவே ரேனுவையும் இழுத்து கொண்டால்..

" ஹான்.. அத்தை.. அம்மா.. நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க.. நான் எல்லாருக்கும் சேவ் பண்றேன்.." பொன்னி சொல்ல அனைவரும் அவளை தான் பார்த்தனர்..

" வேணாம் வேணாம்.. நான் பார்த்துக்கிறேன்.. நீ உக்காந்து சாப்பிடு.." செல்வி மறுக்க தேவகி அவளுக்கு உதவினார்..

" மதனி.. மறுமவ பொண்ணு செய்யட்டும்.. நம்ம ஆதியை பார்ப்போம் வா.." தேவகி அழைக்க அவரும் அவளை பார்த்து விட்டு சரி என்று நகர்ந்தார்..

பொன்னி கழுத்தில் இருந்த துப்பட்டாவை மாராப்பு சுற்றி அதை இடுப்பில் இழுத்து சொருகி ரேனுவையும் துணைக்கு அழைத்தால்.. அவளின் பிளான் புரியாத ரேணு சரி என்று அவளுக்கு உதவினால்..

" ஹான்.. ரேணு வாசுவுக்கு சாப்பாடு வை.. பொரியல் வை.. அப்பளம் வை.." என்று பொன்னி சொல்லி கொண்டே தன் கணவன் மாமனார் தாத்தா என்று மூவருக்கும் சாப்பாடு பரிமாறி கொண்டே அவள் ரேனுவுக்கு வேலை சொல்ல அவளோ திருதிருவென முழித்தாள்..

ஆனால் குழலி பொன்னியின் இந்த செய்கை எதற்கு என்று புரிந்து சிரித்து கொண்டே தலையாட்ட ரேணு இன்னும் முழிக்க பொன்னி கண்ணசைக்க அவளும் செய்தாள்..

வாசுவுக்கும் குழலிக்கும் ரேணு பரிமாற வாசுவுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து வைத்தால்.. அதே சமயம் பொன்னி தன் கணவன் சாப்பிடும் அளவு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று அனைத்தையும் நோட்டம் விட்டாள்..

இந்த பக்கம் சாப்பிட்டு கொண்டே இருந்த வாசு பக்கத்தில் நின்ற ரேணு வை திரும்பி பார்த்தான்.. அவள் அவனின் பக்கம் ஆசையாக நிற்பதை பார்த்து கண்ணால் சைகை செய்தான்.. அது காதல் பாசை இல்லை.. பக்கத்தில் இருக்கும் குழம்பை ஊத்த சொல்லி தான் சைகை செய்தான்.. அதற்கே அவள் சிவந்து நின்றாள்.. பொன்னி தான் வியந்து போனால்..

என்ன இது ஒரு கண்ணசைவுக்கு இப்படி சிவக்கிறால் என்று.. அதே சமயம் இந்த வெட்கமெல்லாம் தனக்கு வருமா என்று யோசிக்க கூட செய்தால்.. வெட்கமா அது எப்படி தனக்கு வரும் என்று யோசிக்கும் பொழுதே அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.. அவள் சிவக்க வில்லை என்றாலும் நிச்சயம் பொன்னியின் மாறன் அவளை சிவக்க வைப்பான் என்று அப்பொழுது அவள் அறியவில்லை போலும்.. அனைவரும் சாப்பிட்டு எழுந்து கொள்ள அவரவர் வேளையில் மூழ்கினர்.. பொன்னி நாளை என்ன செய்யலாம் என்ற யோசனையில் உலன்றாள்..

வருவாள் பொன்னி..
 
Top