• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
New member
Messages
14
Reaction score
16
Points
3
அத்தியாயம் _04

பொன்னி நெஞ்சு கூடு ஏறி இறங்கி நிற்க அவளின் இருபக்கம் கை விட்டு அணை போட்டு நின்றான் மாறன்.. அவன் அப்படி நின்றது ஏற்கனவே பயத்தில் வியர்த்து போய் நின்றவழுக்கு இப்பொழுது தரையில் ஊன்றி நின்ற கால்கள் தோய்வது போல் ஆனது.. விட்டால் மயக்கம் வரும் நிலை தான் அவளுக்கு.. இருந்தும் பின்னிருந்து சுவரில் கைகளை இறுக்கமாய் பதித்து நின்றாள்.. அவளின் மனம் வேகமாய் படபடக்கவே வேறெதுவும் அவளுக்கு நினைப்பில் இல்லை.. மூளை செயலிழந்து போனது போல்.. அருகில் நின்றவன் மேலும் அவளின் இடது புறம் காதோரம் நெருங்கினான்.. அவ்வளவு நெருக்கம்.. அவளுக்கு தான் மூச்சு வேகமாய் இழுத்தது.. நிசப்தமான அந்த அறையில் அவளின் மூச்சு காற்றின் சத்தம் மட்டுமே.. மாறன் அவளின் காதில் கிசகிசுத்தான்..

" பொய்கோழி.." அவ்வளவு தான் அவனின் வார்த்தை.. நகர்ந்து விட்டான் அவளை விட்டு இரண்டு அடி.. அவளோ அவனின் வரிகள் கண்டு திடுக்கிட்டு உள்ளுக்குள் பதை பதைத்து போனால்.. இவ்வளவு நேரம் இருந்த அவனின் நெருக்கம் விலகியதும் பொத்தென தரையில் விழுந்தால்.. சுவரோடு ஒன்றி குத்துக்கால் விட்டு அமர்ந்த படி.. வேக மூச்சுகள் அவளை இப்பொழுதே மூர்ச்சையாகி விடும் போல் தான் இருந்தது.. விலுந்தவளை அவன் தாங்கவும் இல்லை.. பதைக்கவும் இல்லை.. மெல்ல சென்று அவன் கட்டிலில் அமர்ந்தான்..

எப்பொழுதும் அவன் அறையில் உறங்கும் ஆதி இன்று அவன் அம்மம்மா தேவகியுடன் படுத்து கொண்டான்.. குட்டி வாண்டு உறங்கும் கட்டில் அவனுக்கு இப்பொழுது வெறுமையாய் தோன்றியது.. கூடவே மனதிலும் நினைத்தான்.. இவள் இந்த அறைக்கு வந்தவுடன் பிரிவினை.. மகனை கட்டி உரங்குபவனுக்கு இதை எல்லாம் நினைத்து சற்று கடுப்பு தான் மேலோங்கியது.. கீழே விழுந்து கிடந்தவல் மெல்ல தன்னை மீட்டெடுத்தால்..

" நான் பொய் எதுவும் சொல்ற பொய் கோழி இல்லை.." அமர்ந்த வாக்கில் அவனை பார்க்காமல் பேசினால்..

" அப்படியா.. அப்போ சொல்லு எனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சு.. நீயும் நானும் எப்போ சந்திச்சோம்.. எப்போ காதலிச்சோம்.." பெட்டில் அமர்ந்து தன் ஃபோனை கையில் எடுத்தவாரு அவளிடம் வினவினான்..

" மூணு வருஷத்துக்கு முன்ன நீங்களும் நானும் சந்த்திச்சோம்.. ஆனா காதல்.." அவள் முடிக்க வில்லை.. அவன் பேசினான்..

" ஆனா நாலு வயசுல எனக்கு ஒரு பையன் இருக்கான்.. எனக்கு கல்யாணம் ஆகி நாலரை வருசம் ஆச்சு.. நீ சொல்ற மாதிரி மூணு வருசத்துக்கு முன்ன நீயும் நானும் சந்திச்சது என்னவோ உண்மை தான்.. ஆனா ஒரு தடவை மட்டும் தானே என்ன பார்த்த நீ.. ஆனா காதல் எங்கிருந்து வந்துச்சு.. பக்கா கிராமத்தான் என்ன சொன்னாலும் நம்பிருவான் மனசுல கோட்டை எதுவும் கட்டி இருந்தா இன்னையோட அதை அழிச்சிரு.. ஆறறிவு உள்ள மனுசன்.. என்ன சுத்தி என்ன நடக்குது ஏது நடக்குது தெரிஞ்சிக்க முடியாத அளவு நான் முட்டா பைய கிடையாது.." அவன் சொல்ல அவள் எதுவும் பேசவில்லை..

அவன் சொல்வது அத்துணையும் உண்மை தானே.. அதுவும் அல்லாது ஏதோ ஒரு சிந்தையில் சபையில் பொய் வேறு சொல்லி இருக்கிறாளே.. இப்பொழுது தான் அதையும் நினைத்து பார்த்தாள்.. விருட்டென நிமிர்ந்தாள்..

" என்ன என்ன பார்க்குற.. அவ்வளவு பேர் இருந்த சபையில அத்தனை பேருக்கும் என் கல்யாண வாழ்க்கை பத்தி தெரியும்.. அப்படி இருந்தும் எல்லாரும் அமைதியா இருந்த காரணம் என் தாத்தா.. அதுக்கும் மேல அவருக்கும் நீ சொல்றது பொய் அப்படின்னு தெரியும்.. இருந்தும் உன்ன ஏன் கட்டிக்கிட்டேன் தெரியுமா.. தெரிஞ்சோ தெரியாமலோ என் வாழ்க்கையில ரேனுவை இணைக்க முடிவு பண்ணிட்டாங்க.. ஆனா ரேனுக்கு இதுல சம்மதம் இல்லை.. அது தாத்தாவுக்கும் தெரியும்.. எப்படி தவிர்க்கிறது நினைச்ச கல்யாணம் உன்னால தடை பட்டுச்சு.. அது வரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசம்.. என் முகத்தை பார்த்தே தாத்தா யூகம் பண்ணிட்டாரு.. நிச்சயமா நீ நிருத்தலனா நானே அந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன்.. அதோட உன் கண்ணுல நான் ஒரு தீவிரத்தை பார்த்தேன்.. என்ன கல்யாணம் பண்ணியே ஆகனும்.. அதானே உன் ஆசை.. ஆனா எதுக்குனு நீதான் சொல்லனும்.. நானா கண்டு பிடிச்சா விபரீதம் உனக்கு தான்.. ஒரு மாசம் உனக்கு டையம்.. என்ன கல்யாணம் பண்ண காரணத்தை சொல்லனும்.. இப்போ படுத்து தூங்கு.." என்றவன் எழுந்து பால்கனி செல்ல அவளும் சோர்ந்து போனால்..

ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் அப்பாடா தப்பிச்சோம்.. என்று பெரு மூச்சுகளை வெளியிட்டால்.. ஆனால் எத்தனை நாளைக்கு இது.. நினைக்கவே அவளுக்கு கண்ணை கட்டியது.. எவ்வளவு சவால்களை அசாத்தியமாக செய்து இருப்பாள்.. ஆனால் பொய் சொல்லி மாட்டி கொள்வதும் மட்டும் இன்றளவும் அவள் கற்று கொள்ள வில்லை.. காலத்தின் கட்டாயத்தில் தெரியாத விடயங்கள் கூட நாம் தெரிந்து கொள்ள வேண்டியாகியது.. இப்பொழுது அப்படி ஒரு சூழலில் தான் இருந்தால் பொன்னி..

பால்கனியில் நின்றவனுக்கோ மனதில் ஆயிரம் குழப்பங்கள்.. அனைத்தையும் எப்படி சரி கட்டுவது.. ஆனால் இப்பொழுது இந்த கல்யாணத்தை நிறுத்தியதில் அவனுக்கு ஏக போக திருப்தி.. இருக்கும் பிரலயங்கள் எதுவும் அவனுக்கு பெரிதாய் இல்லை.. இந்த கல்யாணம் தவிர.. இப்பொழுது அதுவும் தகர்ந்து போனது தான்.. ஆனால் புதிதாய் பொன்னி.. இவளை பற்றி ஒன்றும் தெரியாது ஆயிரம் குழப்பம் அவனுக்கு.. அவளின் நினைவில் உலன்று நிற்க தேகம் தீண்டிய தென்றல் காற்றில் கண்கள் மூடி அங்கிருந்த சேரில் அமர்ந்தான்..

*******

திரை விலகிய ஜன்னல் வழியாக காலை கதிரவன் அந்த அறையை வெளிச்சத்தில் குளிக்க வைக்க அதன் தாக்கத்தில் இவ்வளவு நேரம் பெட்டில் சுருண்டு கிடந்த பெண்ணவலோ மெல்ல கண்களை திறந்தாள்.. கண் கூச மறுபுறம் திரும்பி படுக்க எதிரே அவளின் மனையாளன் கண்ணாடி முன்பு நின்று இருந்தான்.. குளித்து முடித்து இருப்பான் போலும்.. சிகையை கை விட்டு கோதிய படி இடுப்பின் சற்றே மேலே கட்டிய வேஸ்டியோடு.. வெள்ளை பனியன் வேறு.. இரண்டும் கன கச்சிதமாய் அவனின் பின்னழகை காட்டியது..

யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் முன்னழகு பின்னழகு எல்லாம்.. ஆண்களுக்கு அதை விட அதிகம் கூட்டும் அல்லவா.. அவனின் பின்னழகு அவனின் ஆண் என்ற கர்வத்தை எப்பொழுதும் அதிக படுத்தியே இருக்கும்.. முன்னழகோ தான் ஒரு ஆண் மகன் என்ற கம்பீரத்தையும் கட்டழகு குறியாத காளையவன் என்றும் பறைசாற்றும் அல்லவா.. மொத்தத்தில் ஆணே பேராண்மை கூட்டிய காந்த கள்வன்..

சிகை கோதியவன் இடுப்பின் மேல் இருந்த வேஷ்டியை இப்பொழுது சரியாய் இறக்கி கட்டி உடம்பை இறுக்கி பிடித்த சட்டை ஒன்றை அணிந்து இவ்வளவு நேரம் கழட்டி வைத்து இருந்த வெள்ளி காப்பை கையில் அணிந்து அவன் திரும்ப இவ்வளவு நேரம் ஒருக்களித்து படுத்து தன் கன்னத்தின் மேல் ஒரு கையை நீட்டி இருந்தவள் வாய் தானாக முணு முணுத்தது..

" சோ ஹாண்ட்சம்.." அவள் சொல்ல தலையை தேறாது என்பது போல ஆட்டி சென்றான்.. அவள் அப்படியே படுத்து இருக்க அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் சாய்ந்து கைகளை பின்னே அதில் ஊன்றிய வண்ணம் அவன் நின்றான்..

" என்ன.." புருவம் உயர்த்தினான்..

" ஒரு பெட் காப்பி கிடைக்குமா.." முகம் சுருக்கி அவள் கேட்க அவனோ நக்கலாயி சிரித்தான்..

" இது உன் சென்னை பட்டனம் இல்லை.. உங்க ஆத்தா வீடும் இல்ல.." அவன் சொல்லவே வாயை கோனினால்..

" அதனாலே.."

" அதனாலே இனி இங்க நீதான் உனக்கான வேலைகளை செய்யனும்.. அங்க நீ எப்படி இருந்தியோ அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. ஆனா இங்க நீ இப்படித்தான் இருக்கனும் ஒரு விதிமுறை இருக்கு.. அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ.." அவன் சொல்லவே மீண்டும் முகம் சுருக்கினால்.. கூடவே வாயை சுழித்து கோனியும் காட்டினால்.. 😏

" பாத்து ஒருபக்கமா சுளுகிக்க போகுது.. இப்போ மணி ஏலு.. நாளையில் இருந்து இங்க நீ 5 மணிக்கு எல்லாம் எழுந்துக்கனும்.. புரிஞ்சுதா.." அவன் கேட்கவே திடுக்கிட்டாள்..

" எதே.."

" ஷாக்க குறை.. அப்புறம் நாளையில் இருந்து நம்ம மாட்டு தொழுவத்தை நீதான் கூட்டி பெருக்கனும்.. வீட்ல இருக்குற எல்லாருக்கும் ஆறு மணிக்கு எல்லாம் காபி போட்டு குடுக்கனும்.. அப்புறம் ஆதியோட எல்லா வேலைகளையும் நீதான் செய்யனும்.. அண்ட் சமையல் எப்போவும் என் அம்மா ராஜ்ஜியம்.. நிச்சயம் நீ அதுக்கு தேவை பட மாட்ட.. இப்போ நான் சொன்ன வேலை எல்லாம் சரியா நடக்கனும்.. எழுந்து போய் முத குளிச்சிட்டு வெளிய வா.. பொம்பளை புள்ளை இவ்வளவு நேரம் தூக்கம்.. வீடு ரொம்ப நல்லா விளங்கும்.." அவன் சொன்னதை கேட்டு திகைத்தவளுக்கு இப்பொழுது மனதில் ஒரு சந்தேகம்.. அதையும் அவனிடம் தான் கேட்டு வைத்தால்..

" ஆமா நீங்க எனக்கு மாமியாரா.. இல்ல உங்க அம்மா எனக்கு மாமியாரா.. இல்ல புருஷனுக்கும் மேல மாமியாரா.." அவள் கேட்க இப்பொழுது அவனின் இறுகிய முக தரிசனம் அவளுக்கு கிடைத்தது..

" ம்ம் உன் புருசன் உருவத்துல உனக்கு கிடைச்ச ராட்சசன்.." என்றவன் கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் காதருகில் முகம் உரச நின்று இருந்தான்.. நேற்றைய இரவு அவன் நின்ற அதே நெருக்கம்.. அவளுக்கு தான் அவன் பேச்சிலும் செயலிலும் மயிர் கூச்செரிந்தது உடல் முழுவதும்.. ஆம்.. அவள் அருகில் தான் நின்று இருந்தான் மாறன்.. இந்த பக்கம் டேபிளில் இருந்த அவன் ஃபோனை எடுக்கவே வந்து இருந்தான்.. வந்தவன் தான் அவள் கேட்ட கேள்வியில் அவளின் அருகே நெருக்கமாய் நின்று பதில் தந்தான்.. அவன் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு இரண்டெட்டு நகர்ந்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பினான்..

" நீதானே ஆசைப்பட்ட.. இந்த ராட்சசன் தான் உனக்கு வேணும்னு விரும்பி கட்டிக்கிட்ட.. நேத்து சபையில நீ யார்னு எனக்கு காட்டிட்ட.. நா யாருனு உனக்கு காட்ட வேண்டாம்.. நீ என்னைக்கு என்ன கட்டிக்க காரணம் என்னனு சொல்றியோ அன்னைக்கு நான் உன் முன்ன மாறனா நிக்கிறேன்.. அது வரை நான் இப்படி தான்.." என்றவன் இடகாலை தூக்கி வேட்டியின் நுனியை விரல் இடுக்கில் பிடித்து வேக எட்டுக்களுடன் வெளியில் சென்றான்..

இப்பொழுது அவன் பேசிய அனைத்திற்கும் மேல் அவனின் நடை தான் அவளின் கண்ணில் பட்டது.. அதுவும் அவன் வேட்டி நுனியை பிடித்து நடக்கும் காட்சியில் தானாக அவள் வாய் முனு முணுத்தது..

" செம்ம கெத்து.." அவன் பேசிய அனைத்தையும் தூசு போல் தட்டியவல் எழுந்து குளிக்க சென்றால்..

பொன்னி வருவாள்..
 
Top