வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் முடிய, உறவினர்கள் கலையத் தொடங்கின. வசுமதியும் சோனியாவும் துளசியை அணைத்துவிட்டு அகன்றனர். வேந்தன் அவர்களைத் தங்குமாறு கூற, கண்ணப்பனைக் காரணம் காண்பித்து நகர்ந்திருந்தனர். வசுமதி மகளிடம் ஆயிரம் பத்திரங்களைக் கூறி, கலங்கிய விழிகளுடன் அகல, சோனியாவிற்கும் கண்களில்...