- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 12 
காலையில் எழுந்து வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் சுதிரமாலா. உடலும் மனதும் வெகுவாய் சோர்ந்திருக்க, ஒருநாள் விடுப்பு எடு என மூளை அனத்தியது. அதைப் புறந்தள்ளிவிட்டு கிளம்பினாள். படுத்தே கிடந்தால் இன்னுமே மனம் அதிகமாய் வலிக்கும். அதற்கு வேலைக்கு செல்வதே மேல் என சந்திரா கட்டிக் கொடுத்த உணவு டப்பாவை கைப்பையில் திணித்தாள்.
“ஏன் சுதி மூஞ்சியை இப்படி வச்சிருக்க. நைட்டெல்லாம் தூங்காம அழுதியா?” சௌம்யா அதட்டலாய்க் கேட்டாலும் குரலில் வேதனை ததும்பியிருந்தது. அவளைப் பார்த்து சிரிக்க முயன்று தோற்ற சுதி, “ப்ச்... நான் நல்லா இருக்கேன் அண்ணி. நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க!” என்றவாறு வெளியேறினாள்.
“ஒழுங்கா சாப்பிடு சுதி. கண்டதையும் நினைச்சு மனசைக் குழப்பிக்காத!” என சந்திரா கூற, தலையசைத்து விடைபெற்றாள் சுதிரமாலா.
இரவு முழுவதும் அழுததில் சிவந்திருந்தன விழிகள். முகம் கொஞ்சம் வீங்கியிருந்தது. பார்த்தவுடனே அழுததை அடையாளம் காணக் கூடியளவில் அவளது தோற்றமிருக்க, அமைதியாய் வேடிக்கைப் பார்த்தவாறே பயணம் செய்தாள். ரணப்பட்டிருந்த மனதை தேற்றுவார் யாருமின்றி வலித்ததுதான்.
‘ரெண்டு நாளில் சரியாகிவிடும். அனைத்தையும் மறந்து நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன்!’ என சுறத்தேற்றலில் தன்னை மீட்க முயன்றவாறே நிவினின் வீட்டிற்குச் சென்றாள். கதவு மூடியிருக்க, அழைப்பு மணியை அழுத்தினாள் . அவன்தான் வந்து கதவைத் திறந்து விட்டான். தடித்த இமைகளும் வீங்கிய முகமுமாய் உள்ளே நுழைந்தவளைக் ஒரு நொடி பார்த்தவன் பின்னே கதவைத் திறந்துவிட்டு அறைக்குள்ளே முடங்கினான். பாலுமகேந்திரா வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர் கிளம்பிவிட்டார் போல என்று எண்ணியவள், நிவினிடம் எதையும் கேட்கவில்லை.
நேற்றைக்கு அவன் சமைக்க சொல்லியவற்றை அமைதியாய் செய்தாள். இடையில் அவனது துணியை எந்திரத்தில் போட்டாள். வீட்டை சுத்தம் செய்துவிட்டு அவள் கிளம்ப ஆயத்தமாக, அப்போதுதான் பெரியவர் உள்ளே நுழைந்தார்.
“வாம்மா சுதி... வேலை முடிஞ்சதா?” எனக் கேட்டவரைப் பார்த்து இவள் ஆமாம் என்பது போல தலையை அசைத்தாள்.
“என் ப்ரெண்ட் ஒருத்தன் இங்க இருக்கான். அதான் பார்த்துட்டு வரலாம்னு போனேன் மா!” அவர் கூற, இவள் தலையசைத்துவிட்டு துணியைக் கம்பியில் காயப்போட்டாள்.
“டைமாகிடுச்சா மா? எனக்கு ஒரு காஃபி போட்டுத் தர்றீயா?” அவர் இருக்கையில் அமர்ந்தவாறு கேட்க, நேரம் கடந்தாலும் சுதி சரியென தலையசைத்து குளம்பியைத் தாயரித்து அவருக்குக் கொடுத்துவிட்டு கைப்பையை தோளில் எடுத்து மாட்டினாள்.
“ஏன் மா ஒரு மாதிரி இருக்க. உடம்பு எதுவும் சரியில்லையா?” அவர் கேட்டதும், சுதி முகம் மாறாதிருக்க வெகு சிரமப்பட்டாள். வீட்டில் யாரிடமும் கூறிக் கூட அவளால் அழ முடியவில்லை. விவேகாவிடம் தன் மனதிலிருப்பதை பகிர்ந்தால் பாரம் சற்று குறையுமென மனம் தோழியைச் சுற்றி வந்தது. சட்டென இவர் அக்கறையாய்க் கேட்கவும், மனமும் விழிகளும் கலங்கிப் போயின. வெகுபிரயத்தனப்பட்டு உதடுகளை விரித்துப் புன்னகைக்க முயன்றவள், “இல்ல சார்... லைட்டா தலைவலி. சரியா தூங்கலை, அதான். சாப்ட்டு மாத்திரை போட்டா சரியாகிடும்...” என்றவள் அவர் வேறு ஏதும் கேட்குமுன்னே விறுவிறுவென சென்றுவிட்டாள். பெரியவருக்கு அவள் அழுதிருக்கிறாள் எனப் புரிந்தது. அவரால் அதற்கு மேலும் உரிமை எடுத்துப் பேச முடியாது. இரண்டு நாட்கள் பழகியதும் இந்தளவிற்கு அவள் பேசியதே பெரிது என சுதியின் குணத்தை அவர் கணித்திருந்தார். குடும்ப பிரச்சனையாக இருக்கக் கூடுமென எண்ணி பெருமூச்சுவிட்டவர், அடுத்தடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.
கீழே சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறே கடினப்பட்டு உணவை உண்டாள். எழில்மதி கூறியது போலதான், தான் இருக்கிறோம். இனிமேலாவது தன் உடல்நலனில் அக்கறைக் காட்ட வேண்டும் என்று நினைத்தவள், தினமும் சரியாய் உணவு உண்ண வேண்டும் என எண்ணிக் கொண்டாள். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளவாது தான் நலனைப் பேண வேண்டும் என மூளை அறிவறுத்தியது. வருவோர் போவோரை இலக்கில்லாமல் பார்த்தாள். அந்த சூழ்நிலைக்கு மனம் கொஞ்சம் சமன்பட, நேரமானதை உணர்ந்து மெதுவாய் நடந்து வணிகவளாகத்தை அடைந்தாள்.
இவளுக்கு முன்பே விவேகா வந்துவிட்டாள் போல. அவள் வேலையிலிருக்க, சுதி கைரேகயைப் பதிந்துவிட்டு கைப்பையை அதனிடத்தில் வைத்தாள். “சுதி, ஃபர்ஸ்ட் ப்ளோர் போங்க!” என வைகுண்டம் வந்ததும் அவளை முதல் தளத்திற்கு அனுப்பிவிட்டார். இடைவேளை நேரத்திலும் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லை. விவேகா சுதியின் முகத்தைப் பார்த்திருந்தாள். என்னவாகிற்று இந்தப் பெண்ணிற்கு என அவள் மனம் முழுவதும் தோழியைச் சுற்றித்தான் நகர்ந்தது.
மதிய உணவு இடைவேளை விடவும், “சுதி... அழுதீயா? முகமெல்லாம் ஏன் வீங்கியிருக்கு?” எனக் கேட்டாள் விவேகா. அவள் கேட்டதும் கொட்ட வேண்டிய இடம் இதுதானோ என்பது போல சுதியின் விழிகளில் சரசரவென நீர் வழிந்தது.
“ஹே... சுதி, என்னாச்சு டி. ஏன் அழுற நீ?” என மற்றவள் தோழியைத் தேற்றி என்னவென விசாரித்தாள். தன்னை தேற்ற முயன்று கொண்டே கனத்த குரலும் ரணப்பட்ட மனதுமாய் சுதி நடந்ததைக் கூறி முடிக்கவும் விவேகா முகம் கோபத்தில் சிவந்தது.
“சைக்... கண்ட பொம்பளை பேசுறதுக்கெல்லாம் நீ அழுவியா டி. அந்தம்மா பெரிய கன்னகி. அது சொன்னதும் அப்படியே நடந்துடும் பாரு. அது மூஞ்சியும் ஆளும். என்னைக்காவது ஒருநாள் எனக்கு அதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சா போட்டுத் தாக்கிட்றேன் டி...” எனப் பல்லைக் கடித்தாள். சுதியிடம் மெல்லிய விசும்பல்.
“ப்ம்ச்... சுதி, என்ன டி நீ? அது ரொம்ப அழகு பாரு. போட்டோலயே அண்டா மாதிரி இருக்கு. அது உன்னைத் தேவாங்கு சொல்லுச்சுன்னு அழற நீ? இந்த காம்ப்ளக்ஸ்லயே நீதான் பார்க்க அழகா சிம்ரன் மாதிரி சிக்குன்னு இருக்க. என்னைப் பாரு அங்க இங்கன்னு வீங்கிப் போய் கிடக்குறேன். ஒல்லியா இருக்கது எல்லாம் குடுப்பினை டி. எவ்வளோ தின்னாலும் வெயிட் போடாது. அதை நினைச்சு சந்தோஷப்படணும்!” என்றவள் பேச்சில் சுதியின் அழுகை மெதுவாய் மட்டுப்பட்டது.
“ஆனால்... அந்தம்மா சொன்னதுல ஒரு உண்மை இருக்கு டி. எப்போ உனக்கொரு கல்யாணம் பண்றதா உங்க வீட்ல நினைச்சிருக்காங்க? எனக்கே வயசாகிடுச்சு, சீக்கிரம் மாப்ளை அமையணும்னு எங்கம்மா புலம்புது. சீக்கிரம் உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, இந்தத் தொல்லையெல்லாம் விட்டுவிட்டு புருஷன் வீட்ல போய் நிம்மதியா கஞ்சியோ, கூழோ குடிச்சிட்டு இருக்கலாம் டி. வேலை வாங்கியே மண்ணுல பொதைச்சுடுவாங்க இவனுங்க!” என அவள் ஆற்றாமையில் பேச, சுதிக்கும் வருத்தமாயிருந்தது. சீக்கிரம் யாருமே தெரியாத ஓரிடத்திற்குச் சென்றுவிட வேண்டும். நிம்மதியாக வாழ வேண்டும். திருமண வாழ்க்கை பிராப்தம் இருந்தால் கிட்டட்டும். இல்லையென்றால் இப்படியே இருந்துவிட்டுப் போகலாம் என்று நேற்று இரவு முழுவதும் யோசித்து அழுது சோர்ந்த மனது அவளை சமாதானம் செய்தது. பெருமூச்சுவிட்டாலும் சுதி ஏற்றுக் கொண்டாள். யாரு யாருக்கு என்வென்று கடவுள் வைத்திருக்கிறாரோ அதுதானே கிடைக்கும். எனக்கொரு வாழ்க்கையை அவர் வைத்திருந்தால் சந்தோஷமாய் வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இல்லையென்றால் தனியாய் நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறேன் என நினைத்தவள் வேலையைக் கவனித்து கொண்டிருந்தாள்.
நாசி உணர்ந்த வாசனை திரவியம் நிவினை நொடியில் மனத்திரையில் நிறுத்த, எத்தனையோ பேர் அந்த வாசனைத் திரவியத்தைப் பயன்படுகிறார்கள். கண்டிப்பாய் அவனாக இருக்காது என யோசித்து அவள் திரும்ப, நிவின்தான் நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தான். நேற்றுதான் வீட்டில் பொருட்கள் தீர்ந்துவிட்டதென அவள் செய்தி அனுப்பியிருக்க, அவன் வாங்கி வைத்துவிடுவதாய் சொல்லியிருந்தான். அதற்காகத்தான் வந்திருக்கக் கூடுமென யோசித்தவள் அவனருகே சென்றாள்.
“என்னத் தேடுறீங்க சார்? நான் எடுத்து தரேன்!” என இவள் நிற்க, அப்போதுதான் இவளைப் பார்த்தான் நிவின்.
“வால்நட்ஸ் வேணும்!” என அவன் கூற, “ஒன் மினிட் சார்...” என சுதி நடக்க, நிவினும் தள்ளும் ட்ராலியை ஒருகையால் நகர்த்திக்கொண்டு அவள் பின்னே சென்றான்.
“டூ பிஃப்டி கிராம் போதுமா சார்? ஆர் பைவ் ஹண்ட்ரட் கிராம்?” என கேட்டவாறு இரண்டு கையிலும் அக்ரூட் பருப்பை கையில் வைத்திருந்தாள் சுதி. வேலையில் ஆழ்ந்து விட்டதால் மனம் தற்காலிகமாக அனைத்தையும் தூர எறிந்திருக்க, முகம் கொஞ்சம் சாதாரணமாகியிருந்தது சுதிக்கு.
“டூ பிஃப்டி இஸ் எனாஃப்...” என்றவன் கூற்றில் சிறியதை அவன் கூடையில் போட்டாள். அவன் மேலும் எதையோ கேட்க, ஐந்து நிமிடங்கள் அவனுடன் நடந்து அனைத்தையும் எடுத்துக் கொடுத்தாள்.
“தேங்க் யூ சுதிரமாலா!” என அவன் கூறுவதைக் கேட்க அவள் அங்கில்லை. வேறொரு வாடிக்கையாளர் அழைத்துவிட்டாரென சென்றுவிட இவன் தோள் குலுக்கலுடன் அகன்றான்.
இரவு வீட்டிற்குச் செல்லும்போது சுதி ஓரளவிற்கு தன்னை மீட்டிருந்தாள். நடந்த நிகழ்வின் கசப்பு மெதுமெதுவாய் மங்கத் தொடங்கியிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் மொத்தமாய் மறந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தாள்.
உண்டு முடித்துப் படுக்கையில் விழுந்தவள் அலைபேசியில் கவனத்தைப் பதித்திருக்க, நிவின் எண்ணிலிருந்து அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது. “நோ நீட் டு குக் எனிதிங்க் டுமாரோ சுதிரமாலா. டூ ரெஸ்ட் ஆஃப் வொர்க்ஸ் ஒன்லி!” என அவன் அனுப்பியிருக்க, “ஓகே சார்...” என பதிலளித்தவள், தூங்கிப் போனாள்.
மறுநாள் எழுந்தவளுக்கு நேற்று அளவிற்கு சோர்வில்லை. முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது. தன்னைத் தேற்றிக் கொண்டேன் என முகத்தில் புன்னகையைப் பூசிக் கொண்டவள் வேலைக்கு கிளம்ப, “அத்தை...” எனக் கிசுகிசுப்பாய் அழைத்தவாறே அறைக் கதவை மெதுவாய் சாற்றியபடி அவளருகே வந்தான் தவச்செல்வன்.
“என்ன தவா?” இவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க, “அத்தை... அது... எனக்கு பிஃப்டி ரூபீஸ் வேணும்த்தை!” என்றான் தயக்கமாய்.
“அவ்வளோ காசு உனக்கெதுக்கு டா?” இவள் கேட்டாலும் தன் கைப்பையிலிருந்து ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தாள். பதில் சொன்னால்தான் தருவேன் என்பது போல சுதி நிற்க, “அத்த... என் ப்ரெண்ட்க்கு பெர்த் டே. எல்லாரும் சேர்ந்து அவனுக்கு கேக் வெட்டலாம்னு பிளான் பண்ணோம். அம்மாகிட்டே கேட்டா தர மாட்டாங்க...” என அவன் கூற, சுதி காசை அவன் கையில் திணித்தாள்.
“ப்ளீஸ் அத்தை, அம்மாகிட்டே சொல்லிடாத...” என அவன் நிற்க, இவளுக்கு மனம் வலித்தது. அவளும் பள்ளியில் படிக்கும்போது இது போல நண்பர்களுக்கு பிறந்தநாள் என்று பரிசு வழங்கியிருக்கிறாள். அப்போதெல்லாம் மாமாவிடம் உரிமையாய்க் காசு கேட்பாள். தவாவின் தயக்கம் அவனுக்கு குடும்ப சூழ்நிலை உறைத்திருக்கிறது எனப் புரிய அவன் தோளில் தட்டியவள், “நான் சொல்ல மாட்டேன் பெரிய மனுஷா. நீ எங்கேயும் சுத்தாம, பத்திரமா வீடு வந்து சேரு!” என அவனை அனுப்பிவிட்டு வேலைக்கு கிளம்பினாள். இன்றைக்கு விரைவாய் சென்று என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் அவளை மந்தமாய் செயல்பட வைத்தது.
பொறுமையாய்க் கிளம்பி அரைமணி நேரம் தாமதமாகத்தான் சென்றாள். இவள் உள்ளே நுழைய, வீடே கலகலவென்றிருந்தது. ஆரோன், அகஷா, நந்தனா, பாலாஜி, அவர்களின் பெற்றவர்கள் என அனைவரும் நிவின் வீட்டில் குழுமியிருந்தனர்.
அவர்கள் இப்போதுதான் வந்திருக்கிறார்கள் என அவளால் ஊகிக்க முடிந்தது. மகேந்திரா பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவள் வரவை ஒருவரும் கவனிக்கவில்லை.
நிவின் குளித்து முடித்து பளிச்சென அறையிலிருந்து வந்தான். தாடியை முழுதாய் மழித்திருந்தான். முகம் வெள்ளை வெளீரென்றிருந்தது. விவேகா கூறியது போல இவன் அத்தனை வெண்மைதான் என மனதில் நினைத்த சுதி நொடிக்கும் அதிகமாய் அவனைப் பார்த்துவிட்டு திரும்ப, “ஹே சுதி... வாங்க, எப்படி இருக்கீங்க?” என நந்தனாதான் அவளை அழைத்தாள். நிவினுக்கும் அவள் பார்வை புரிந்திருந்தது.
இவள் புன்னகைத்து, “நல்லா இருக்கேன் மேடம். நீங்க?” எனக் கேட்டாள். நந்தனா பதிலளிக்க, “ஹேப்பி பெர்த் டே மச்சான். சக்ஸஸ் புல்லா ட்வென்ட்டி செவன் இயர்ஸை வேஸ்ட் பண்ணிட்ட...” என பாலாஜி நிவினைக் கட்டிக் கொள்ள, சுதிக்கு அப்போதுதான் இத்தனை பேரும் இங்கே வந்திருப்பதற்கான நோக்கம் புரிந்தது.
ஒவ்வொருவராய் அவனுக்கு வாழ்த்த, நந்தனா தோளணைத்து தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தாள். அக்ஷா அனைவரும் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞை இன்றி, சட்டென நிவினை இறுக்கி அணைத்து, “ஹேப்பி பெர்த் டே நிவின். பீ ஆல்வேய்ஸ் ஹேப்பி. ரெக்கவர் சூன்!” என்று அவன் கன்னத்தில் மெலிதாய் முத்தமிட்டுக் கூற, பெரியவர்கள் முகம் மாறிப்போனது. அவர்களது காலம் வேறு. சட்டென இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவர்களால். அதனாலே சங்கடப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
(தொடர்ந்து கீழே படிக்கவும்)