- Messages
- 1,339
- Reaction score
- 4,005
- Points
- 113
நேரம் – 50 
“தம்பி, என்னப்பா நீங்க?” வாயிற்காவலாளி முதுகில் ஒரு பையும், வலகை விரல்களோடு பிணைந்த தள்ளும் பையோடு வந்து நின்ற பரிதியை சங்கடத்துடன் பார்த்து குடியிருப்பிற்குள்ளே விட மறுத்தார்.
‘சே... என் பொண்டாட்டியை கூட சமாதானம் பண்ணிடலாம் போல. இவர் ரொம்ப சின்சியரா இருக்காரு!’ என முனங்கியவன், அலைபேசியை எடுத்து வாணியின் இரண்டாம் எண்ணிற்கு அழைத்தான். இருமுறை அவள் அழைப்பைத் துண்டித்தாள்.
‘அர்ஜெண்ட் வாணி. பிக்கப்!’ ஒரு செய்தியை தட்டிவிட்டு மீண்டும் பரிதி அழைக்க, உடனே அதை ஏற்றவள், “ஹலோ...” என்றாள்.
“மேடம்... நான் வாட்ச்மேன் பேசுறேன். பரிதி தம்பி வந்திருக்காரு. ட்யூப்ளிகேட் சாவி கேட்குறாரு. உள்ளே விடவா மேடம்?” அவர் கேட்டதும், சில நொடிகள் யோசித்தவள், “சாவி கொடுங்கண்ணா!” என்றாள்.
அவரும் சரியென்றுவிட்டு பரிதியிடம் மாற்றுச் சாவியைக் கொடுக்க, அவன் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கிட்டத்தட்ட பத்துமணி நேரம் உட்கார்ந்தே பயணித்ததில் அவனுக்கு உடம்பு வலிக்க, முகப்பறையிலிருந்த பீன் பேக்கில் தலையை சாய்த்து உடலை வெளியே நீட்டினான். பின்னர் சோர்வுற்ற கண்கள் அதன் இமையுடன் இணைந்தன.
வாணி அருகேயிருந்த துர்க்கை அம்மன் கோவிலில் இருந்தாள். அவள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்தான் இவளை அழைத்து வந்தது. கர்நாடாகாவில் ஏதோ விசேஷ நாளென அரசு விடுமுறை அன்று. சரியென மாலை குளித்து கிளம்பி கோவிலுக்கு கிளம்பினாள்.
சுரிதார் அணிய சென்றவளை, “ரெட் சேரி கட்டிக்கோங்க வாணி!” என அந்தப் பெண் வற்புறுத்தி கூற, இவளும் சரியென சிகப்பு புடவையை அணிந்து சென்றாள். பூஜை முடிந்து வாணி வீடு திரும்ப ஒருமணி நேரமானது.
வீட்டிற்கு வந்ததும் கதவைத் திறந்தாள் அவள். வெறுமனே சாற்றி வைத்திருந்தான் பரிதி.
வீடு மொத்தமும் அடர் இருட்டில் மூழ்கியிருக்க, பொத்தானை சொடுக்கி மின்விளக்கை உயிர்ப்பித்தாள். யாரோ ஒரு நெடியவன் பாதி கூடத்தை அடைத்து படுத்திருக்க, அவள் திடுக்கிட்டுப் போனாள்.
ஒருநொடி மனம் பரிதியின் இருப்பை உள்வாங்காது அதிர, பின்னர் அவன்தான் என்பதை உணர்ந்து மூச்சை வெளியிட்டாள்.
பரிதி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். கதவை மெதுவாய் சாற்றிவிட்டு வாணி அறையை நோக்கிச் செல்ல, இமையை உடுருவிய வெளிச்சத்தில் மெல்ல கண் விழித்தான் அவன்.
வெற்று அறையில் வாணியின் காலடி சப்தம் மட்டும் மெலிதாக தெளிவாகக் கேட்க, அவன் புலன்கள் கூர்மை பெற, அனிச்சையாய் அவளை நோக்கித் திரும்பினான். அடர் சிவப்பில் பச்சைக்கரை வைத்த புடவை உடுத்தி, தலைக்கு குளித்து முடியை விரித்துவிட்டு கதம்ப பூவை வைத்திருந்தாள். அவளை அப்படிபார்த்ததும் இவன் முகம் மலர, உதட்டில் புன்னகை பூத்தது. ஆர்வமாய் எழுந்தமர்ந்தான்.
வாணி உடை மாற்றிவிட்டு முடியைத் தூக்கிக் கொண்டையிட்டவாறே வந்தாள். இவனுக்கு எதிரே அமர்ந்தவள், “என்ன வேலை உனக்கு இங்க? எதுக்காக வந்த?” என நேரடியாக கேட்டாள்.
“சென்னைல ஃப்ளைட் கிடைக்கலை வாணி. பெங்களுர்லதான் கிடைச்சது. சரின்னு இங்க தங்கலாம்னு வந்தேன்!” என அவன் இழுத்துக் கூறிய பொய்யை அவள் நம்பவில்லை.
“நான் என்ன லாட்ஜா வச்சு நடத்துறேன்? போறவன், வர்றவன் எல்லாம் வந்து தங்கிட்டுப் போக?” என அவள் கேலியாக கேட்டாள்.
“ப்ம்ச்... நான் போறவன் வர்றவனா வாணி? ரொம்ப பண்ணாத. நான் இங்க வரக் கூடாதா?” என குரலை உயர்த்தினான் அவன்.
“வரக்கூடாது. நீ ஏன் இங்க வரணும். உனக்கு ஸ்டே பண்ணணும்னா ஏதாவது ஹோட்டலதான் பண்ணணும். தனியா இருக்கப் பொண்ணு வீட்ல உனக்கென்ன வேலை?” அவள் அழுத்தமாகக் கேட்டாள்.
“ச்சு... நான் ஒரு ப்ரெண்டா வந்திருக்கேன் வாணி. அபார்ட் ஃப்ரம் அவர் அக்ரீமெண்ட் மேரேஜ், நம்ப நல்ல ப்ரெண்ட்ஸா இருந்தோம்ன்றதை மறந்துடாத. நீ எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்!” என்றவனை எள்ளலாகப் பார்த்தாள் வாணி.
“அது சரி...நான் உன்னை ப்ரெண்டா எல்லாம் பார்க்கலையே!” அவள் நிறுத்தவும், பரிதி அவள் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தான்.
“உன்னை ஒரு நல்ல தம்பியா பார்த்தேன். உனக்கு கூட என்னோட இருந்தா அக்கா ஃபீல்னுதானே சொல்லுவ?” நக்கலாக கேட்டாள் அவள்.
அதில் முகத்தைக் கோணியவன்,
“பினாயில் ஏதும் இருந்தா எடுத்துட்டு வா வானு. பேசாம அதை வச்சு வாயைக் கழுவிடுறேன். அப்போவாது நீ இதை விடுறீயான்னு பார்ப்போம்!” என்றான் கடுப்பான குரலில்.
“அதெத்துக்கு வாயைக் கழுவிட்டு. பேசாம ஒரு பாட்டில் பினாயில் வாங்கித் தரேன். குடிச்சிடு, நானாவது நிம்மதியா இருப்பேன்!” என கடிந்துவிட்டு அவள் எழுந்து செல்ல,
“கொலை பண்றளவுக்கு என் மேல உனக்கு வன்மமா? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். எவ்ளோ தூரத்துலருந்து உன்னைப் பார்க்கலாம்னு ஆசையா ஓடி வந்தா என்னைத் தொரத்துறதுலயே குறியா இருக்க நீ!” என அவன் முகத்தைச் சுருக்கி அவளைக் குற்றம் சாட்டினான்.
“நான் உன்னை வர சொன்னேனா? இல்ல தானே? அப்புறம் ஏன் வந்து தொணதொணக்குற. ஏதோ பெரிய உத்தமன் மாதிரி உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்னு சொன்ன?” அவனை முறைத்தாள் வாணி.
“வானு... சாப்பிட்டு தெம்பா சண்டை போடலாம். இப்போ எனக்கு செம்ம பசி. லஞ்ச்க்கு பஸ்ஸை நிறுத்தும்போது நான் தூங்கிட்டேன். அப்புறம் எங்க சாப்பிட. பட்டினியா கிடந்தேன். ஏதாவது செஞ்சு கொடு!” அவன் கேட்டதும், “முடியாது!” என ஒற்றை வார்த்தையில் மறுத்தாள் அவள்.
“ஐயோ... பசிக்கிதே. பசியில வயிறே வலிக்குது!” வயிற்றைப் பிடித்து உடலைக் குறுக்கிக் கொண்டு அவன் பொய்யாய் கூற,
“சீ... நடிக்காத. அப்பட்டமா தெரியுது!” அவள் எரிச்சலாக கூற, அதில் ரோஷம் வந்து நிமிர்ந்து நின்றான் பரிதி.
“வானு.... நிஜமா பசிக்குது. ப்ளீஸ்!” முகத்தைச் சுருக்கி அவன் கெஞ்ச, தலையிலே அடித்தவள், “போய்த் தொலை. ஏதாவது குக் பண்றேன்!” என்றாள் கடுப்புடன்.
“ஒன்னும் அவசரம் இல்ல வானு. பொறுமையா செஞ்சா கூட டேஸ்டா பண்ணி எடுத்துட்டு வா!” என்றவன், கூடத்திற்குச் செல்ல, பத்து நிமிடத்தில் வாணி உணவை சமைத்து எடுத்து வந்தாள்.
“வாவ்! டென் மினிட்ஸ்ல குக் பண்ணிட்டீயா வாணி?” என்றவன் ஆர்வத்துடன் பாத்திரத்தை திறக்க, உள்ளே உப்மா அவனைப் பார்த்து சிரித்தது.
முகத்தை அஷ்டக் கோணலாக்கியவன், “இதுக்கு நீ என்னைப் பட்டினியா போட்டிருக்கலாம் வாணி!” என்றான் ஆதங்கத்துடன். ஆசையாக அவள் கைமணத்தில் சாப்பிட அமர்ந்தவனுக்கு உப்மாவைப் பார்த்துகீ கடுப்பானது.
“இஷ்டமிருந்தா சாப்பிடு. இல்லைன்னா பட்டினியா படு. எனக்கொன்னும் பிரச்சனை இல்ல. எடுத்து வச்சுட்டு காலைல சூடு பண்ணித் தருவேன்!” அவள் அசட்டையாக கூற,
‘பாவி... சோத்துல கை வச்சுப் பழி வாங்குறா!’ என முனகிக் கொண்டே சாப்பிட்டான். மற்றொரு கிண்ணத்தில் என்னவோ இருந்தது. இவன் திறந்து பார்க்க, வேர்க்கடலை சட்னி செய்திருந்தாள். அதை கொஞ்சம் வைத்து உப்மாவில் தோய்த்து வாயிலிட்டான். முகம் நொடியில் மலர்ந்தது.
“என்ன இவ்ளோ டேஸ்டா இருக்கு உப்மா, உன் கையால செஞ்சதாஷ உப்மா கூட இவ்வளோ டேஸ்ட் தருதே வாணி. கடலை பருப்பு சட்னியா இது? செம்ம போ. நான் எத்தனையோ ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன். ஆனால், உன் கைமணம் மாதிரி வர மாட்டுவது வாணி!” சிலாகித்து உண்டவன், “இதுக்காவே காலம் முழுக்க உன் கூட இருந்துடலாம் போல!” என்றான்.
அவனை நக்கலாகப் பார்த்த வாணி, “அதானே... உனக்கு சமைச்சு போட, ஆயா வேலை பார்க்கத்தானே நானு? உன் ஆளு மதிகிட்டே கூட என்னை மெய்ட்னு தானே சொல்லி வச்ச?” என்றாள் எரிச்சலாக.
வாயில் உப்மாவோடு தலையை இடம் வலமாக அசைத்தவன், “அதான் அப்பவே நான் சாரி கேட்டேனே வாணி. மத்தபடி சாப்பாட்டுக்காகலாம் உன்னைத் தேடி வரலை. நிஜமா பிடிச்சுப் போய்தான் வந்தேன்!” என அவன் மேலும் விளக்கம் கொடுக்கும் முன்,
“உன் கம்பி கட்ற கதையெல்லாம் இங்க வேணாம். இதான் உனக்கு லாஸ்ட். இங்க வந்து தங்கலாம்னு எண்ணத்தோட இனிமே வரக் கூடாது நீ. இப்போ சாப்பிட்டு, பாத்திரத்தை எல்லாம் வாஷ் பண்ணிடு. ஹால்லதான் படுக்குற. ரூம்குள்ளே வரக் கூடாது!” என்றவாறே எழுந்தாள் அவள்.
“ஹே வாணி... என்னை சந்தேகப்படுறீயா நீ? ரெண்டு வருஷத்துல எத்தனை நாள் உன் கூட ஒரே ரூம்ல இருந்திருக்கேன். என்னைக்காவது நான் உன்னை தப்பா பார்த்திருக்கேனா?” அவன் குரலை உயர்த்த,
“என்கிட்ட வாய்ஸை ரெய்ஸ் பண்ற வேலை வச்சுக்காத!” எனக் கண்டித்தவள், “ஆமா. ஆமா நீ ரொம்ப கன்னியமனா பையனாச்சே. அக்காவைப் போய் யாராவது தப்பா பார்ப்பாங்களா? நீ என்னை அக்காவாதானே நினைச்சுக்கிட்டே?” என எள்ளலாகக் கேட்டாள். பரிதி அவளைப் பாவமாகப் பார்த்தான்.
“இந்த மாதிரி பாவமா பார்த்து காரியம் சாதிக்கலாம்னு நினைக்காம சாப்பிட்டு படு. ரூம்குள்ளே காலெடுத்து வச்ச தோளை உரிச்சுடுவேன்!” என்றாள் மிரட்டலாய்.
“ஏன் வாணி... போன வாரம் எவ்ளோ பாசமா பார்த்துக்கிட்டே என்னை? நான் கேட்டதெல்லாம் செஞ்சு கொடுத்த. கேர் பண்ணியே, அதெல்லாம் அப்போ பொய்யா?” மூக்கு விடைக்க கேட்டான்.
“அது பாசம் இல்ல, பரிதாபம். பாவம், என்னால நீ அடி வாங்கிட்டீயேன்னு பாவம் பார்த்து உன்னைக் கேர் பண்ணேன். மத்தபடி ஐ வாஸ் எமோஷ்னல் தட் டைம். உனக்காகன்னு நீயா நினைச்சுக்காத. உன் பேரண்ட்ஸ், என் அத்தை, மாமாவெல்லாம் ஏமாத்திட்டேனேன்னு ஒரு கில்ட். தப்பு பண்ணிட்டோம்னு தோணுனதால அழுதேன். மத்தபடி உனக்காக நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலை. அதனால பொங்காத!” என்றாள் எரிச்சலாக.
“ஓஹோ... அடி வாங்குனாதான் உனக்கு என் மேல பாசம் வருமா? உனக்கொன்னு தெரியுமா வாணி? இன்னும் என் முதுகுல புண்ணு சரியாகலை. இன்னும் கொஞ்சம் காயம் இருக்கு!” என்றான் அவளைப் பிடித்து வைக்கும் நோக்கோடு. வாணி காதிலே வாங்காமல் நடந்தாள்.