- Messages
- 1,319
- Reaction score
- 3,929
- Points
- 113
நேரம் – 38 
“லூசா டீ நீ? ஏன் இப்படி சீப்பா பேசுற?” பரிதி சீறினான்.
அவனை உறுத்துப் பார்த்தவள், “அப்படியா, அப்புறம் ஏன் டா அவ தனியா போறான்னு உனக்கு வலிக்குது. ப்ரெண்டு கூட இல்லை. ம்யூட்சுவல் ஹெல்ப்னு வாய் கிழியப் பேசுன. அப்போ அதெல்லாம் பொய்யா?” அவள் எள்ளலுடன் கேட்டாள்.
“மதி! மதி! மதி... எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புத்தியில ஏறாதா? அவ அப்படிப்பட்டவ இல்ல. நானும் ஒழுக்கமானவன். அவளைப் பேசுறேன்னு என்னையும் சேர்த்து அசிங்கப்படுத்துற நீ.
உண்மையை சொன்னா, நீ இந்த வீட்ல வந்து தங்குறது கூட எனக்கு இஷ்டம் இல்ல!” என அவன் முழுதாய் பேசி முடிக்கும் முன்னே,
“எப்படி இஷ்டம் வரும்? அவ கூட ரெண்டு வருஷம் ரகசியமா இஷ்டத்தோட குடும்பம் நடத்திட்டு புதுசா என்னைப் பார்த்தா உனக்கு கசக்கத்தானே செய்யும்?” என்றாள் அவள் எரிச்சலுடன். இவன் அப்பேச்சில் முகத்தைச் சுளித்தான்.
“சீ போடீ... நான் உன்னை லவ் பண்றேன் தான். உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன். அதுக்காக நீ சொல்ற எல்லாத்தையும் கேட்டுட்டு சும்மா இருக்க முடியாது. இப்போ நான் போய் வாணியை செண்ட் ஆஃப் பண்ணிட்டுத்தான் வருவேன்!” என்றவன், தன்னறைக்குள் நுழைந்து கதவை கோபத்தோடு சாற்றினான். மதி அந்த நீள்விருக்கையில் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தாள்.
அவன் உடைமாற்றி வெளியேற யத்தனிக்க, “நீ அவளைப் போய் செண்ட் ஆஃப் பண்ணிட்டு வந்தேன்னா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். உன் லைஃப்ல கூட இருக்க மாட்டேன். எனக்கு குட் பை சொல்லிட்டு போ!” என்றாள் அழுத்தமாய்.
அவளைத் திரும்பி இயலாமையுடன் பார்த்தவன், “அவ மேல ஏன் டீ உனக்கு இவ்ளோ வன்மம்? அவ உன்னை என்ன பண்ணா?” என ஆதங்கத்துடன் கேட்டான்.
“அவ நான் கல்யாணம் பண்ண போறவனோட தாலி கட்டி இதே வீட்ல ரெண்டு வருஷம் வெறும் ரூம் மேட்டா இருந்திருக்கால்ல. அதான் எனக்கு சந்தோஷத்துல நெஞ்சடைக்குது!” என்றாள் உச்சபட்ச வெறுப்புடன்.
“சைக்... அன்னையோட இந்தப் பேச்சை எடுக்க மாட்டேன்னு நீ சொன்னதாலதானே நான் அவ அழுதாலும் பரவாயில்லைன்னு தாலியை வாங்கி கொடுத்தேன். அப்புறமும் ஏன் டீ இப்படி பேசுற?” என்றான் தாள முடியாத வேதனையில். மனம் ஒருபக்கம் வாணியைச் சுற்றிவர, இவள் செல்லவிடாமல் தடுக்கிறாளே என கோபம், ஆதங்கம் பொங்கிற்று.
“அவ அழுதது உனக்குப் பெருசா தெரியுது. ஆனால், நான் மனசுக்குள்ளே எவ்வளோ அழுறேன் தெரியுமா இளா? உன்னை நம்பி என் வாழ்க்கையே கொடுக்க துணிஞ்சேன் நான். ஆனால், நீ எனக்கு என்ன பண்ணிருக்க? அந்தக் காயம் ஆறக் கூட இல்லை. அதுக்குள்ளேயும் அவ பின்னாடி நீ போற? அப்போ எனக்கு கோபம் வருமா? வராதா?” எனக் கேட்டவளுக்கு அழுகை வரப் பார்த்தது. மூக்கை உறுஞ்சினாள். அவள் கண் கவங்கியதும் இவனுக்கு என்னவோ போலானது.
இவன் அவளருகே சென்று, அவள் கையை அழுத்திப் பிடித்தான். “ட்ரஸ்ட் மீ மதி, நான் உன்னோட இளா. அவ பின்னாடி போய்றேன் அது, இதுன்னு பேசாத. உனக்காகத்தான் அவ மனசை உடைச்சு அனுப்பிருக்கேன். உனக்கு நான், உன் பேரண்ட்ஸ், அங்கிள், ஆன்ட்டி ஃப்ரெண்ட்ஸ்னு எவ்வளோ பேர் இருக்கோம். ஆனால் அவளுக்குன்னு யாருமே கிடையாது. அங்க இந்தியா போனா கூட தனியாதான் இருப்பா. அதனால அவ மேல எனக்கு அக்கறை இருக்கத்தான் செய்யும். அவளோட நான் பண்ண அக்ரீமெண்ட் மேரேஜை மறந்துடு. அவ என்னோட கொலிக்னு நினைச்சுக்கோ மதி. இனி லைஃப் டைம்ல அவளை நான் எப்போ மீட் பண்ணுவேன்னு கூடத் தெரியாது. இந்த ஒரு டைம் மட்டும் என்னைப் புரிஞ்சுக்கோ மதி!” என்றான் பொறுமையாக.
மதி அவனை சில நொடிகள் வெறித்தவள், “போய்ட்டு ஒன் ஹவர்ல திரும்பி வர்ற!” என்றாள் கண்டிப்பான குரலில்.
அவள் கன்னத்தில் தட்டிப் புன்னகைத்தவன், “தேங்க்ஸ் மதி... தேங்க் யூ சோ மச்!” என ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை அடைந்தான். இன்னும் விமானம் கிளம்ப நேரமிருந்தாலும் இசைவாணி உள்ளே சென்றுவிட்டால், இவனால் நுழைய முடியாது. அவள் செல்கிறேன் என்றதும் இவனுக்கு என்னவோ ஒரு உணர்வு நெஞ்சைப் போட்டு அழுத்திற்று.
அரக்கப் பறக்க நுழைந்தவன், அவசர அவசரமாக கண்களை சுழற்றினான். இசைவாணி எங்கேயும் தென்படாது போனதில் உள்ளே ஏமாற்றம் நெஞ்சை கவ்விப் பிடித்தது. ஓடி வந்ததில் மூச்சை வேகமாக வெளியேற்றிவன், கண்கள் விக்னேஷிடம் நிலைத்தன. அவன் கையில் இரண்டு கோப்பை தேநீர் இருக்க, அப்படியென்றால் வாணி இன்னும் கிளம்பியிருக்க மாட்டாள் என மனம் ஆசுவாசம் கொள்ள, அவன் செல்லும் திசையைப் பார்த்தான். ஒரு ஓரத்தில் சுவர் மறைவில் இசைவாணி அமர்ந்திருந்தாள்.
யாருமற்றவள் போல அநாதரவாகத் தனியாய்
அமர்ந்திருந்தவளின் தோற்றம் கண்டு இவனுக்கு மனம் பிசைந்தது. விறுவிறுவென அவர்களிடம் விரைந்தான். விக்னேஷ் கொடுத்த தேநீரை சின்ன முறுவலுடன் பெற்றுக்கொண்டு பருகினாள் அவள். அவனும் ஏதோ பேசியபடியே சூடான பானத்தை உள்ளிறக்க, மூச்சு வாங்க அவள் முன்னே நின்றான் பரிதி.
நிமிர்ந்து பாராமல் அவன் கால்கள், உடை, காலணி என்ற இத்யாதிகளே அவனது வருகையை உரைக்க, அவள் பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. விக்னேஷ் இவனைக் கண்டதும் முகத்தைச் சுளித்தான்.
“இப்போ எதுக்கு வந்த பரிதி? யார் உன்னைக் கூப்பிட்டா?” அவன் கடுப்புடன் கேட்டதில் பரிதி எரிச்சலானான்.
“வாயை உடைச்சிடுவேன் விக்கி. அவ என் ப்ரெண்ட் முதல்ல. என் மூலமாதான் உனக்கு அறிமுகம். நீ எங்களுக்கு இடையில வராத!” என்றவன், “தயவு செஞ்சு ஐஞ்சு நிமிஷம் எங்கேயாவது போய்த் தொலை. அவகிட்டே நான் தனியா பேசணும்...” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.
“ஏன்... என்னை அனுப்பிட்டு நீயும் உன் ஆளு மதியும் பண்ண சில்லறைத் தனத்துக்கு மன்னிப்பு கேட்டு தியாகியா மாறப் போறீயா? ரூத்லெஸ் பீப்பிள்!” அவன் சீற, பரிதி வாணியைப் பார்த்தான்.
அவள் தனக்கு ஆதரவாகப் பேசுவாள் என எண்ணி ஏமாந்தவன், “விக்கி, உன்னைப் போக சொன்னேன் நான்!” என்றான் அழுத்தமாக.
விக்னேஷ் பதிலளிக்கும் முன்னே, “அவர் எங்கேயும் போக மாட்டாரு. இங்கதான் இருப்பாரு!” என வாணி அவனைப் பாராமலே பதிலளித்தாள்.
“ப்ம்ச்... வாணி, நமக்குள்ள ஆயிரம் இருக்கும். கண்டவனை எல்லாம் உள்ளே விடுவியா நீ?” அவளிடம் ஆதங்கப்பட்டான்.
அவனை நிதானமாக நிமிர்ந்து கண்களால் அளந்தவள், “உனக்கும் எனக்குமா? ஹம்ம்... உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? நீ யார் எனக்கு? ஹூ ஆர் யூ? உன் வருங்கால பொண்டாட்டிகிட்டே கெஞ்சி கூத்தாடி என்னைப் பார்க்க வந்தியா?” என்றாள் உதட்டை வளைத்து ஏளனமாக. அவள் கண்களில் வலியை மீறி கோபம், ஆதங்கம் நிரம்பி வழிந்தது.
“வாணி... இப்படி நீ யாரு யாருன்னு கேட்டா கஷ்டமா இருக்கு. இந்த மாதிரி பேசாத!” என்றான் வருத்தம் மேவிய குரலில்.
“ஆஹா... நீ செஞ்சதுக்கெல்லாம் வேற எப்படி பேசுறது? மடியில தூக்கி வச்சு வேணா கொஞ்ச சொல்லவா வாணியை?” விக்னேஷ் நக்கலாகக் கேட்க,
“விக்கி உன் வாயை மூடு நீ...” அவனிடம் சீறினான் மற்றவன்.
அவர்கள் இருவரும் மேலும் பேசும் முன்னே, “விக்னேஷ் ப்ளீஸ்... நீங்க இவனோட பேசி உங்க தரத்தைக் கொறைச்சுக்காதீங்க!” என்றாள் அவன் கையைப் பிடித்து. அதைப் பார்த்து பரிதிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“அவன்கிட்டேருந்து கையை எடு வாணி!” என இவளிடம் காய்ந்தான் பரிதி. அவள் அவன் பேச்சை பொருட்படுத்தவேயில்லை. அவளுடைய விமான அறிவிப்பு வந்துவிட்டது.
எழுந்து நின்றவள், “ஓகே விக்னேஷ்... நான் போய்ட்டு வரேன்!” சின்னதாய் முறுவலித்து அவனிடம் விடை பெற்றாள்.
அவள் கையை அழுத்திய விக்னேஷ், “அங்கப் போய் யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க வாணி. நான் இங்க இருந்தாலும் என் மொத்தக் குடும்பமும் அங்கதான் இருக்கு. ஏதாவது ஒரு பிரச்சனை இல்ல ஹெல்ப் வேணும்னா தயங்காம கூப்பிடுங்க. ஒரு ப்ரெண்டா எப்பவும் நான் உங்களுக்காக
இருப்பேன்!” என்றான் அவன். இவள் சிரிப்புடன் தலையசைத்தாள்.