- Messages
- 1,319
- Reaction score
- 3,931
- Points
- 113
நேரம் – 37 
அன்றைக்கு இரவு எட்டு மணிக்கு சரியாய் ஒரு குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர விடுதியில் இசைவாணிக்கு பிரிவு உபச்சார விழா ஏற்பாடாகியிருந்தது. அவளுக்கு இதிலெல்லாம் விருப்பமே இல்லை. வேண்டாமென அவள் மறுத்தும், உடன் வேலை பார்ப்பவர்கள் அன்புடன் கட்டாயப்படுத்தினர். அதற்கு மேலும் மறுத்தால் அது நாகரீகமாக இராது என இவளும் கிளம்பலாமென எண்ணினாலும், படுக்கையைவிட்டு எழவேயில்லை.
மதிய உணவை உண்டுவிட்டு குட்டித் தூக்கம் போட்டாள். நட்சத்திர விடுதி இங்கிருந்து பதினைந்து நிமிடத் தொலைவுதான் என்பதால் பொறுமையாக செல்லலாம் என மெத்தையில் புரண்டு கொண்டிருந்தாள். நேரம் சென்று கொண்டேயிருக்க, பெருமூச்சுடன் எழுந்தாள்.
சக பெண் தோழி ஒருத்தி பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து வரவேண்டுமென கூறி, இவளுக்கும் புதிய ஆடை எடுத்துக் கொடுத்திருந்தாள். அதை எடுத்துப் பார்த்து சலித்தாள் வாணி.
காவி நிறத்தில் நீண்ட கால்சராயும், கையில்லா மேல் சண்டையும் அதற்கு மேலே வெள்ளை நிற அங்கியும் இருந்தது. உடை என்னவோ அழகாகத்தான் இருந்தது. என்ன அந்த மேல் சட்டையின் கழுத்துப் பகுதி சற்றே இறங்கியிருக்க, இவளுக்கு அதை அணிய சங்கடமாகயிருந்தது. என்னதான் இரண்டு வருட லண்டன் வாசம் என்றாலும் ஒருசில விஷயத்தில் வாணி மிகவும் சுயக்கட்டுப்பாடு கொண்டவள். உடை விஷயத்தில் வெகு கறார். அதுவும் சுந்தரி இருந்தவரை அடிக்கடி இதையேத்தான் கூறுவார்.
எல்லோருடனும் ஒத்துப் போக வேண்டுமே என்ற சலிப்புடன் குளித்து உடை மாற்றினாள். அவள் நினைத்ததை விட அந்த உடையின் கழுத்து நன்றாகவே இறங்கியிருந்தது. பேசாமல் கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவை போடலாம் என எண்ணி, காவி நிறத்திற்குப் பொருத்தமான துப்பட்டாவை தேடினாள்.
வெளியே ஏதா சப்தம் கேட்டது. வேறு எங்காவது இருக்குமென யோசனையுடன் தன் தேடலை அவள் தொடர, குரல் வெகு அருகில் பரிட்சயமாகக் கேட்க, யாரென்ற கேள்வியுடன் கூடத்திற்குச் சென்றாள். இளமதி தள்ளாட்டத்துடன் நின்றிருக்க, பரிதி அவளை அதட்டி அடக்கிக் கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும் அவன் பிடியிலிருந்து திமிறி வெளியேறியவள், “வாடீ வாணி, அலப்பி... எங்க டீ மினுக்கிட்டு கிளம்பிட்ட?” என எள்ளலாகக் கேட்டாள். வாணியின் முகம் நொடியில் மாறிற்று. பரிதியைக் கண்டனத்துடன் பார்த்தாள் அவள்.
“மதி ப்ளீஸ்... எதுவா இருந்தாலும் நீ தெளிவா இருக்கும்போது பேசிக்கலாம். வா, இப்போ உன்னை வீட்ல விட்டுட்டு வரேன்!” பரிதி அவள் கையைப் பிடித்தான்.
அவனிடமிருந்து கையை உருவியவள், “ஏய்... என்ன டீ? என் முன்னாடியே அவனை எதுக்கு முறைக்கிற நீ? நடிக்க வந்தவ உண்மையான பொண்டாட்டியாவே மாறிட்டீயா என்ன?” என மதி தள்ளாட்டத்துடன் கோபமாக கேட்க, பரிதி வாணியைக் கெஞ்சலாகப் பார்த்தான். அவளுக்கு அப்போதுதான் மதியின் செயலுக்கான காரணம் புரிந்தது.
“இவளை இங்கருந்து கூட்டிட்டு போய்டு பரிதி. இல்லைன்னா அவ பேசுறதை என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது!” என்றாள் கண்டிப்பான குரலில்.
“ஏய்... என்னை வீட்டைவிட்டு வெளியப் போக சொல்ல நீ யாரு டீ? இது என் இளா வீடு. அவனும் ரென்டு தர்றான். ஹால்ல இருப்பேன். ரூம்ல கூடப் படுத்து உருளுவேன்!” என்றாள் பொத்தென இருக்கையில் விழுந்து.
இசைவாணி அவளைப் பொருட்படுத்தாமல் அகலப் பார்க்க, “ஏய்... எங்க டீ எஸ்கேப் ஆகப் பார்க்குற? உன்னை நறுக்குனு நாலு வார்த்தைக் கேட்லாம்னுதான் டீ நான் வந்ததே!” என ஓடிச் சென்று அவள் கையைப் பிடித்திழுத்தாள் மதி.
வாணி எரிச்சலோடு அவளைப் பார்க்க, “ஏன்டீ.. இசைவாணி. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா? உன்னைவிட சின்ன பையனை அக்ரீமெண்ட் மேரேஜ், விசா வாங்கித் தரேன்னு ஆசைக் காட்டி வளைச்சுப் போடப் பார்த்திருக்க? நீயெல்லாம் என்னப் பிறவி டீ. உன்னை உங்கம்மா இப்படித்தான் வயசுல சின்னவனா பார்த்து வளைச்சுப் போடுன்னு அவுத்து விட்டுட்டாங்ளா?” என அவள் கேட்டு முடியும் முன்னே இசைவாணி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையைக் கொடுத்திருந்தாள். மதி தாக்குப் பிடிக்க முடியாமல் அப்படியே பொத்தென தரையில் விழுந்திருக்க, இசைவாணியின் முகம் ரௌத்திரமாயிருந்தது.
“மதி... அறிவுருக்கா உனக்கு? உன்கிட்டே படிச்சு படிச்சு என்ன சொன்னேன்? நாங்க ரெண்டு பேரும் மேரேஜை கேன்சல் பண்ணி டைவர்ஸ் வாங்கிட்டோம்னு சொன்னேனா இல்லையா? இப்படித்தான் அவளைப் பத்தி தப்பா பேசுவீயா? உனக்கு யாரு அந்த ரைட்ஸைக் கொடுத்தது? முதல்ல அவகிட்டே சாரி கேளு!” என சீற்றத்துடன் பரிதி மதியை எழுப்பி நிற்க வைக்க, அவள் கண்களிலிருந்து பொலபொலவென நீர் வடிந்தது.
“எனக்குத் தெரியும் டா. இவளோட சேர்ந்து என்னை ஏமாத்துறதுதானே உன் ப்ளான். நீ என்ன சொன்னாலும் தலையாட்டி பூம் பூம் மாடு மாதிரி கேட்டேன் பாரு. என்னை செருப்பால அடிக்கணும். அக்ரீமெண்ட் அது இதுன்னு பொய் சொல்லி இரண்டு வருஷம் இவளோட லிவ்விங் இன்ல இருந்திருக்கல்ல நீ?” என ஆங்காரத்தோடு அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் மதி.
“லூசா டீ நீ... அவளோட ஒரே வீட்லருந்தா நாங்க ஒன்னா வாழ்ந்ததா அர்த்தமா? அப்படி அதான் உண்மைன்னா அதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்ல. நடக்காத விஷயத்தை நீயா கற்பனை பண்ணி என்னை டென்ஷன் பண்ணாத!” இவன் தலையைப் பிடித்தான். காலையில் அவள் நல்ல மனநிலையில் இருக்கவும், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விட்டான். அப்போது அவனிடம் சண்டையிட்டு குடித்து ஆர்ப்பாட்டம் செய்தவள், போதை இறங்கியதும் மீண்டும் குடித்துவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு வாணியோடு சண்டையிட வந்தாள்.
“பொய்! நீ ஒரு ஏமாத்துக்காரன். உன்னை நம்பி நான் ஏமாந்துதான் போகப் போறேன். உன்னை உண்மையா லவ் பண்ணேனேடா. உனக்காக எவ்ளோ செஞ்சிருக்கேன் நான். இப்படி அவளோட நீ அஃபேர்ல இருப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கலை. எனக்கு நீ உண்மையா இல்லை!” என்றவள் தன் தலையிலே அடித்துக்கொண்டு அழ, பரிதி அவளைத் தடுத்து நிறுத்தி தன் முகம் பார்க்க வைத்தான்.
“மதி... என்னை நம்புறேன், நம்புறேன்னு சொல்றல்ல. அப்போ இதையும் நம்பு. அவ மேல என் சுண்டு விரல் கூட பட்டதில்ல. நான் என் வருங்கால பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அண்ட் வாணி நீ சொல்ற மாதிரி கெட்டவ இல்ல. இப்போ நான் இங்கே இருக்கேன்னா அதுகெல்லாம் அவ மட்டும்தான் காரணம். அவளைப் பத்தி தப்பா பேசாத. எனக்கு கோபம் வரும்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அவன் முகத்தையே பார்த்திருந்த மதியின் கண்களில் நீர் நிரம்ப, அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள், தேம்பத் தொடங்கினாள். பரிதி அவள் அழுகையில் பரிதவித்து நானும் அமர்ந்தவன், “மதி... ஏன் டீ?” என ஆற்றாமையுடன் கேட்டான்.
அவன் சட்டையைப் பிடித்தவள், “உனக்கு எவ்வளோ தைரியம் டா. என் முன்னாடியே அவளைத் திட்டுனா உனக்கு கோபம் வரும்னு சொல்ற. அப்போ அவதான் உனக்கு முக்கியமா? அவ உனக்கு பொண்டாட்டியா நடிக்க வந்தவ. ஆனால் காலம் முழுக்க நான் உன்னோட வாழப் போறேன்டா. நீ எனக்குத்தானே ப்ரையாரிட்டி கொடுக்கணும். அவ என்ன அவ்ளோ முக்கியமா போய்ட்டா. நீதானே அவ வயசை மறைச்சு உன்னைக் கல்யாணம் பண்ணி ஏமாத்துனான்னு சொன்ன. அந்த ஏமாத்துக்காரிக்கு இப்போ நீ நல்லவ பட்டம் கொடுக்குற. ரெண்டு வருஷம் ரெண்டு பேரும் ஒரே வீட்ல இருந்திருக்கீங்க. அப்போ நான் என்னென்னு நினைக்கட்டும்?” எனக் கேட்டவள் கேவி அழுதாள்.
“மதி... உன்கிட்டே முன்னாடியே நான் சொல்லிருக்கணும். பட் நீ இதை பெருசா எடுத்துக்க மாட்டேன்னு நினைச்சுத்தான் நான் சொல்லலை!” அவன் தயங்கினான்.
அவன் கன்னத்திலே சப்பென ஒரு அறை கொடுத்தவள், “இதே மாதிரி நானும் காண்ட்ராக்ட் மேரேஜ்னு ஒருத்தன் கூட ரெண்டு வருஷம் வாழ்ந்துட்டு வரேன். உன்னை மாதிரியே ஒரே வீட்ல அவனைத் தொடாம இருந்துட்டு பத்தினின்னு சொல்றேன். நீ என்னை ஏத்துப்பீயா?” என அவள் சீற, இவன் முகம் அவமானத்தில் கன்றியது. முடியாது என தலையை அசைத்தான்.
“உன்னால முடியாது... ஆனால் நீ இவளோட ஒரே வீட்ல வாழ்ந்ததை நான் பெருசா எடுத்துக்க கூடாது. கல்யாணம்னா உனக்கு அவ்வளோ ஈஸியா போச்சாடா? ஊரறிய அவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டியாக்கியிருக்க. லீகலா ரெண்டு பேரும் பேப்பர்ல சைன் போட்டா எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா? அவ... அவளைப் பார்க்க பார்க்க எனக்கு கோபம் வருது டா. அவதானே முதல்ல வந்து இந்த ஐடியாவைக் கொடுத்தது!” எனக் கேட்ட மதி, தங்களையே உறுத்துப் பார்த்த வாணியைக் கண்களால் எரித்தாள்.
“வயசு ஏறிட்டே போகுது. பார்க்க ஆன்ட்டி மாதிரி இருக்கோம்னு உன்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிருக்கா அவ. ஆனால் நீ அவளுக்கு நல்லவ பட்டம் கொடுக்குற? நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம்னு நான் எவ்ளோ ப்ளான் பண்ணிருந்தேன் தெரியுமா?” எனக் கேட்டு அவள் தேம்ப,