• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 30 💖

“கிளம்பிட்டீயா? இல்லையா ஆதி? நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு!” தேவா மெல்லிய கோபம் இழையோட பேசவும்,

“டூ மினிட்ஸ் தேவா சார், வந்துட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்!” என்றவள் வீட்டைப் பூட்டிவிட்டு திறவுகோலை கைப்பையில் வைத்தவாறே அழைப்பைத் துண்டித்து படிகளில் இறங்கினாள். அபினவ் அதற்குள்ளே குடுகுடுவென சாலையில் இறங்கி தேவாவின் மகிழுந்தை நோக்கி ஓடினான்.

இவள் தெருமுனைக்கு செல்ல மூன்று நிமிடங்கள் ஆனது. சின்னவன் முன்புறம் ஏறியமர்ந்து தேவாவிடம் எங்கே செல்கிறோம் எனக் கேட்டு, கண்டிப்பாக இந்த வாரம் கடற்கரைக்கு செல்கிறோமா எனக் கேட்டு, தேவாவும் ஒப்புக் கொண்டதில் ஏகக் குஷியாகிப் போனான்.

“சாரி!” உதட்டைக் குவித்துக் கெஞ்சலாய் கேட்டவாறே உள்ளே ஏறியமர்ந்தாள் ஆதிரை. தேவாவின் பார்வை ஒரு நொடி அவளது உடையில் படிந்து மீண்டது. ஜீன்ஸ் வகையிலான கால்சராயும் இறுக்கிப் பிடித்த மேல் சட்டையும் அணிந்திருந்தவள் கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவைப் படரவிட்டிருந்தாள்.

“ஹம்ம்...” முறைப்புடன் அவளது மன்னிப்பை ஏற்றவன், வேகமாய் நடந்து வந்ததில் மூச்சு வாங்கியவளிடம் தண்ணீர் பொத்தலை நீட்டிவிட்டு வாகனத்தை இயக்கினான். அவர்களது பயணம் தொடங்கியது.

கண்ணாடி வழியே தேவாவைப் பார்த்த ஆதிரைக் குறுஞ்சிரிப்புடன் கைப்பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து திறக்க, இவனும் அவளைக் கவனித்தான் போல, என்னவென்பது போல நெற்றி சுருங்கியது.

“அபி, பனியாரம் சாப்பிடுடா!” என டப்பாவை அபியிடம் நீட்டியவளின் உதட்டில் புன்னகை ஒளிந்து கிடந்தது. தேவா அவளை அப்பட்டமாய் முறைத்தான்.

“தேவா சார், பனியாரம் வேணுமா?” எனக் கேட்டவளை திரும்பி முறைத்தவன், “வே...” என ஆரம்பிக்கும் போதே அவன் வாயில் ஒரு பனியாரத்தை அடைத்துவிட்டாள் இவள். அவன் முகத்தில் கோபமும் சிரிப்பும் சேர்ந்து படர்ந்தது.

அதை மென்று தின்றவன், “ஆனாலும் கொடுமைக்காரி டீ நீ. காலைல டீ மட்டுமே குடிச்சிட்டு அரக்கபறக்க வந்தவனுக்கு ஒருவாய் தண்ணி கூட கொடுக்கலை!” என அவன் கடுப்போடு கூற, இவள் கண்ணைச் சுருக்கினாள்.

“ஹம்ம்... சாரி, சாரி. லாஸ்ட் வீக் நீங்க ரொம்ப பசியா இருந்தீங்க இல்ல?” அவள் வருத்தமாய்க் கேட்க, “கொலைபசியில இருந்தேன். இதுல உன்கூட பேசியே டயர்டாகிட்டேன்!” முகதாட்சண்யம் எல்லாம் பார்க்காது முகத்தில் அடித்தாற் போல உள்ளது உள்ளபடியே சென்ற வாரத்தின் கோபசுவடு கொஞ்சமும் குறையாது அப்படியே கூறிவிட்டான்.

“சாரி தேவா, எனக்கு உங்க மேல செம்ம கோபம். அதான் சாப்பிடலைன்னா போட்டும் விட்டுட்டேன். ஏன் நீங்க வாயைத் திறந்து கேட்க வேண்டியதுதானே? நானா சொன்னாதான் சாப்பிடுவீங்களோ?” என முறுக்கினாள்‌ இவள்.

“ஹம்ம்... உன் வீட்டுக்கு நான் வந்தா நீதான் என்னை பார்த்துக்கணும் ஆதி!” அவன் கண்டிப்புடன் கூறினான்.

“சோ... அப்போ ஃப்ரெண்ட்னு சொன்னது எல்லாம் வாய் வார்த்தை. சரி விடுங்க, உங்களுக்கு ஈகோ அதிகம்னு எனக்குப் புரியது!” உதட்டைக் கோணினாள் இவன்.

“அதெல்லாம் கூடவே பொறந்தது. அவ்வளோ சீக்கிரம் போகாது!” படுதீவிரமாய்க் கூறினான் தேவா.

“சரி... சமாதானம். ஒரு பணியாரத்தை எடுத்துகிட்டு சண்டையை முடிச்சுக்கலாம். இல்லைன்னா லாஸ்ட் வீக் அவுட்டிங் மாதிரி இந்த தடவையும் போரா போய்டும், உங்களை மாதிரியே!” உதட்டுக்குள் மறைத்த சிரிப்புடன் முன்புறம் எக்கி அவனிடம் டப்பாவை நீட்டினாள்.

அவளை முறைத்தவன், “ஒன்னும் வேணாம்... போடீ!” முகத்தை திருப்பினான். அதற்குள்ளே போக்குவரத்து சமிக்ஞையில் மகிழுந்து நின்றிருந்தது.

“இப்போ பனியாரத்தை எடுத்துப்பீங்களா? மட்டீங்களா?” மிரட்டலாய்க் கேட்டவளை திரும்பி அலட்சியமாய் பார்த்தவன், “முடியாது...” தோளைக் குலுக்கினான்.

“முடியாது... ஹம்ம்?” எனக் கேட்டவளை வெகு தீவிரமாக பார்த்தவன், “யெஸ் அப்கோர்ஸ். பசிக்கும் போது பச்ச தண்ணி தரலை. இப்போ ஐ யம் ஃபுல். எனக்கு உன் பனியாரம் வேணாம்!” இவனும் விடாது வாதம் புரிந்தான்.

“பாவம் இந்த மனுஷனை சாப்பிடாம அனுப்பிட்டோமேன்னு ஒரே கவலையா போச்சு. ஒரு வாரம் முன்னாடியே இன்னைக்கு பனியாரம் சுடணும்னு யோசிச்சு, நேத்து காலைல மறக்காம அரிசியை ஊறப்போட்டு வேலை முடிச்சு வந்தக் கையோட டயர்டா இருந்தாலும் மாவை ஆட்டி ப்ரிட்ஜ்ல வச்சு, காலைல சீக்கிரம் எழுந்து உங்களுக்காக பார்த்து பார்த்து பனியாரம் சுட்டேன் இல்லை. எல்லாம் என் தப்பு!” மூச்சு வாங்கப் பேசியவளைப் பார்த்து தேவாவின் முகத்தில் முறுவல் பூத்தது. உண்மையில் கடந்த வாரம் அவளது செய்கை அவனுக்கு உவப்பாய் இல்லை. ஆனால் இப்போது அவளது மெனக்கெடல்கள் முழுவதிலும் தான்தான் நிறைந்திருக்கிறோம் என்ற நினைப்பே தித்தித்தது.

அவள் மேலும் ஏதோ பேச வரும் முன்னே தேவா ஒரு பனியாரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வாகனத்தை இயக்கவும் இவளுக்கும் முகம் மலர்ந்தது. மீதமிருந்த இரண்டு பனியாரத்தை அபியிடம் கொடுத்தவள் கையை முன்புறம் நீட்டி தேவாவின் கரத்தில் வலிக்காது கிள்ளிவிட்டு படக்கென திரும்பி டப்பாவை வைக்கும் நோக்கில் குனிந்து கொண்டாள்.

அவளைத் திரும்பி பார்த்த தேவாவின் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது. உண்மையில் சென்ற வாரமே ஆதிரையிடம் இது போல இணக்கமான பேச்சு, உரிமையான செய்கை, எளிதில் அவனை அணுகுமுறை என நிறைய நிறைய தேடியிருந்தான். இந்த வாரம் அவளது பேச்சு, உரிமை அனைத்திலும் ஒருமாதிரி மனம் திருப்தியாய் உணர்ந்தது.

“அப்புறம் தேவா சார், பனியாரம் எப்படி இருந்துச்சு?” என ஆர்வமாய் கேட்டாள்.

முன்புற கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தவன், “ஹம்ம்... நல்லா இருக்கு. பட்...” என இழுத்தான்.

“பட்...” இவளது முகம் சுருங்கி யோசித்தது‌.

“லாஸ்ட் வீக் சாப்பிட்ட பனியாரம் அளவுக்கு இல்ல!” என்று குறும்பாய் முடித்தவனை மென்மையாய் முறைத்தவளுக்கும் சிரிப்பு வந்தது.

“அங்கிள்தான் லாஸ்ட் வீக் பனியாரமே சாப்பிடலையே மா!” அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த அபினவ் இடைபுக, தேவா லேசாய் இருமினான்.

“உன் அங்கிள் விர்ச்சுவல் பனியாரம் சாப்பிட்டிருப்பாரு டா!” தேவாவை நக்கலாகப் பார்த்துக் கொண்டே ஆதிரை கூறினாள்.

“விர்ச்சுவல் பனியாரமா! என்னம்மா அது?” அவன் யோசிக்க, “அதை அவர்கிட்டயே கேளுடா!” என்றவள் ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

தேவா அவனை சமாளிக்க வழி தெரியாது முகப்பு பலகையை திறந்து அதிலிருந்து ஒரு அமுல் இன்னெட்டைக் கொடுத்ததும், “தேங்க்ஸ் அங்கிள்!” என அவன் அந்தப் பேச்சை மறந்து பெற்றுக் கொள்ளவும், ஆதிரை என்னவெனத் திரும்பி பார்த்தாள்.

“இனிமே அவனுக்குச் சாக்லேட் வாங்கிக் குடுங்க... ரெண்டு பேரையும் வெளுக்குறேன்!” கண்டித்தவளிடம் இனிப்பை நீட்டினான் தேவா. அதை வெடுக்கென வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்தினாள். இல்லையென்றால் அபி அதையும் வாங்கி உண்டுவிட்டு பல்வலி என இரவில் அழுவான்.

சிறிது தூரம் சென்றதும் தேவா ஒரு கடையில் நிறுத்தி, தேநீரும், உப்பு ரொட்டியும் வாங்கிக் கொடுத்தான். அதை உண்டுவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர். அவன் செல்லும் பாதையை ஆதிரையால் கணிக்க முடியவில்லை. அதனால் எங்கு செல்கிறோம் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது.

“எங்க போறோம் தேவா?” அவள் ஆர்வமாய்க் கேட்டதும், “சர்ப்ரைஸ்!” என்றான் அவன்.

அபியும், “ஆமா... ஆமா சர்ப்ரைஸ் மா!” என்றான் தலையை ஆட்டி. இருவரையும் மென்மையாய் முறைத்தவள் வெளியே விழிகளைப் பதித்தாள்.

ஒன்னே கால் மணிநேரப் பயணத்தை முடித்துக்கொண்டு மகிழுந்து அந்தக் பெரிய கோவில் முன்னே நின்றது. உள்ளே வரும் போதே மகாபலிபுரம் என்ற பெயர் பலகையைப் பார்த்துவிட்டாள் ஆதிரை. தேவா வாகனத்தை நிறுத்திவிட்டு வரவும், மூவரும் மணிக்கோட்டை குகை கோவிலுக்குள் நுழைந்தனர்.

பகல் நேரம் என்பதால் ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் கல்லூரி மாணவர்கள், சில பல குடும்பம் என ஓரளவுக்கு ஜனத்திரள் காணப்பட்டது. அந்த இடமே பாறையைக் குடைந்து குகை போல காட்சியளிக்க, ஆங்காங்கே சிங்கமுகத்தோடு தூண்கள் இருந்தன.

இவர்கள் முதலில் வராக குகை கோவிலுக்குள் நுழைந்து அதை சுற்றிப் பார்த்தனர். விஷ்ணு சிலைக்கு அருகே சென்று அபியும் ஆதிரையும் நின்று சுயமி புகைப்படம் எடுக்க, தேவா சிலையை தொட்டு ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

“தேவா சார்!” என அழைத்தவள் அவன் நிமரவும், அவனையும் புகைப்படத்திற்குள் அடக்கினாள். அப்படியே நடந்து அங்கிருந்த சிற்பங்களைச் சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்தவாறு ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்தனர்.

மகிஷாசுர மர்தினி குகைக் கோவிலையும் சுற்றிவிட்டு பாஞ்ச பாண்டவர் மண்டபத்தை அடையும் போது மதிய உணவு நேரமே கடந்து போயிருந்தது. மற்ற
இருவரும் சோர்ந்து போக, தேவா மட்டும் அனைத்தையும் ஆர்வமாய்ப் பார்த்தான்.
 
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
ஆதிரை அங்கிருந்த தூணிற்கு அருகே அமர்ந்தவள், “தேவா சார், அபிக்கு பசிக்குதாம்!” என்றாள் சற்றே சத்தமாய். தேவா அபியைப் பார்த்தான்.

அவன், “இல்ல அங்கிள், எனக்கு கால்தான் வலிக்குது‌. பசிக்கலை!” என்றான் வேகமாய். ஆதிரை அவனை முறைத்தாள்.

அவர்களுக்கு அருகே வந்த தேவா, “டயர்டா இருக்கா‌ ஆதி?” எனக் கேட்டான்.

“பின்னே இருக்காதா சார்? பசி வேற, சாப்ட்டு மிச்சத்தை சுத்திப் பார்க்கலாம். வாங்க, நல்ல ஹோட்டலா பார்த்துப் போகலாம்!” என அவள் எழ, தேவா மூவரையும் தான் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்று அமர்ந்ததும் மேஜை மீது வகை வகையான உணவுகள் பரிமாறப்பட, “நாங்க இன்னும் ஆர்டர் பண்ணலையே?” ஆதிரை ஊழியரிடம் புரியாது கூறினாள்.

“மேடம், சார் ஆல்ரெடி டேபிள் புக் பண்ணி ஆர்டர் பண்ணிட்டாரு!” என அவர் பதிலளித்து நகர, அவனை முறைத்தாள்.

“இவ்வளோ ஆர்டர் பண்ணி இருக்கீங்க. மூனு பேரால சாப்பிட முடியுமா தேவா சார்? சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுறீங்க. காசையும் தான்!” அவனை திட்டிக் கொண்டே பசித்த வயிற்றுக்கு உணவை ஈந்தாள். தேவா அவள் பேசுவதற்கெல்லாம் அலட்டிக்காது உண்டான். உண்மையில் மூன்று பேரால் அத்தனையும் உண்ண முடியவில்லை. கொஞ்சம் வீணானது. அதற்கும் அவனை முறைத்தாள்.

அடுத்ததாக பஞ்ச பாண்டவர் மண்டபத்திற்குச் சென்றனர். ஆதிரை மரத்தினருகே அவள் கழுத்திலிருந்த துப்பட்டாவை விரித்து சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

தேவா அவளைக் கேள்வியாகப் பார்க்க, “நிறைய சாப்ட்டேன் தேவா சார். நீங்களும் அபியும் போய் சுத்தீட்டு வாங்க. நான் நெக்ஸ்ட் மண்டபத்துல ஜாய்ன் பண்ணிக்கிறேன்!” என்றாள் கொட்டாவி விட்டபடியே. உண்ட உணவிற்கு கண்கள் சொக்கின.

“தூக்கம் வருதா ஆதி?” என அவன் கேட்க, இவள் சங்கடத்துடன் தலையை நான்குபுறமும் அசைத்தாள்.

“ஹம்ம்... ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்குற லவுஞ்ச் இருக்கு. நீ போய் கொஞ்ச நேரம் தூங்குறீயா?” என அவன் கேட்க, “இல்ல... இல்ல வேணாம் சார். நீங்க சுத்தி வர்றதுக்குள்ள தூக்கம் போய்டும்!” அவள் மறுத்தாள்.

“ஆர் யூ ஷ்யூர். நாங்க போனப்புறம் இங்கேயே தூங்கிட மாட்டல்ல?” கேலியாய்க் கேட்டவனை முறைத்தாள் பெண். தேவா அபியை அழைத்துக்கொண்டு ஒருமணி நேரம் சுற்றி முடித்து திரும்ப, ஆதிரைக்கு உறக்கம் தொலைந்து போயிருந்தது. மேலும் இரண்டு மண்டபங்களை சுற்றினார்கள்.

குல்பி குல்பி என தூரத்தில் குரல் கேட்டதும் தேவாவும் ஆதிரையும் அபியை நோக்கித் திரும்பினர். அவன் தாயின் முறைத்த முகத்தைப் பார்த்துவிட்டு பெரியவனை பார்த்து விழித்தான்.

“நால் குல்ஃபி சாப்பிட போறேன்!” தேவா முன்னேற, ஆதிரை அபியின் கையைப் பற்றினாள்.

“நீங்க சாப்பிட்டு வாங்க தேவா சார், நாங்க அப்படியே நடக்குறோம்!” இவள் மெல்லிய கோபத்தோடு கூறினாள். சின்ன குழந்தையை வைத்துக்கொண்டு அவன் மட்டும் சாப்பிட்டால், இவன் ஏங்க மாட்டானா என்ற கடுப்பு. ஏற்கனவே அபிக்கு சளி தொந்தரவால் இரவில் டானிக்கை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“சின்ன பையனை பார்க்க வச்சு சாப்பிட முடியாது ஆதி!” என்றவன், அவளுக்கும் அபிக்கும் சேர்த்தே வாங்கி வந்து கொடுக்க, “எனக்கு வேணாம்!” என முகத்தை நொடித்து திருப்பினாள்.

“சரி, அபியே ரெண்டையும் சாப்பிடட்டும்!” அவன் கேலியாய்க் கூறியதும் இவள் முறைப்புடன் குல்பியை பிடுங்கி சுவைக்கத் தொடங்கினாள். நேரம் மாலை ஐந்தை தொட்டுவிட, கட்ற்கரைக்குச் சென்று சிறிது நேரம் அங்கே செலவழித்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என முடிவெடுத்தனர்.

வெயில் மந்தமாகி குளிர் காற்று ஊடுருவ, மண்ணில் கால் புதைய மூவரும் மகாபலிபுரம் கடற்கரையை அடைந்தனர். அபி ஆர்பரித்து வரும் கடல் அலையில் கொண்டாடத்துடன் விளையாட, இவள் அவனைக் கண்டித்தாள்.

“ஆதி... நான் பார்த்துக்கிறேன் அவனை. மிரட்டீட்டே இருக்காத!” தேவா அவளை அதட்ட, சிறிது நேரம் காலை நீரில் நனைத்தவள் பின்னர் சற்று தூரம் நகர்ந்து அவர்களைப் பார்த்தவாறு அமர்ந்துவிட்டாள். தேவாவோடு அபி ஓடிப்பிடித்து விளையாடினான்.

அவர்கள் விளையாடுவதை மென்புன்னகையுடன் பார்த்த ஆதிரை, தன் அலைபேசியில் அவற்றை புகைப்படமாக்கினாள். தேவா அபியைத் தூக்கிச் சுற்ற, இருவரது முகத்தையும் சிரிப்பு நிறைத்திருந்தது. இவள் அனைத்தையும் ரசித்துப் பார்த்து பலவித கோணங்களில் படமெடுத்தாள்.

தேவா அபியிடம் ஏதோ பேசிக் கொண்டே தலையைக் கோதுவது, பின்னர் அவனை முறைத்து சிரிப்பது, துரத்துவது என அவனது ஒவ்வொரு அசைவையும் அலைபேசியில் உள்வாங்கினாள். வசீகரமான அவன் சிரிப்பை இவளும் வசீகரத்துடன் பார்த்தாள்.

‘இந்த சிரிப்பு இவனை இன்னுமே அழகாய் காண்பிக்கிறது!’ மனம் எத்தனை தடவை எண்ணிக் கொண்டதோ. அந்தப் புகைப்படத்தை பெரிது
படுத்திப் பார்த்தாள். அதற்குள்ளே இருவரும் அருகே வர, அலைபேசியை அணைத்துப் போட்டுவிட்டு நீரை அருந்தக் கொடுத்தாள். மீண்டும் இருவரும் அதே உற்சாகத்துடன் அலையில் நனைந்து விளையாடினர்.

ஆதிரை அவ்வப்போது நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். மதியம் உண்ட உணவே இன்னும் வயிற்றில் இருப்பது போல பிரேமை உண்டானது. எப்படியும் இரவு உண்ண வேண்டாம் என எண்ணியவள், அபிக்குப் பசித்தால் வீட்டிற்கு சென்று எதாவது செய்து கொடுக்கலாம் என எண்ணியவாறே எழுந்தவள் மீண்டுமொருமுறை உப்பு நீரில் காலை நனைத்தாள். அவர்கள் இருவரும் விளையாடி களைத்து சோர்ந்த முகத்துடன் இவளுக்கு அருகே வந்தனர். அவர்களுக்கு அருந்த நீரைக் கொடுத்தாள்.

“தேவா சார், கிளம்பலாமா? அபி, விளையாடுனது போதும் தானே? டைமாச்சு...” என்றாள் நேரத்தைப் பார்த்து‌.

“ம்மா... இன்னும் டென் மினிட்ஸ் மா!” சின்னவனுக்கு இன்னும் சிறிது நேரம் விளையாட வேண்டும் என்று அவா. எங்கே சென்றாலும் தாயும் மகனுமாய் செல்வார்கள். அவனுக்கு உடன் விளையாட ஒருவரும் இருக்க மாட்டார்கள். தேவா அளவிற்கு ஆதிரை அவனோடு விளையாட மாட்டாள். இன்று போலவே எப்போதும் ஓரமாய் அமர்ந்து அவனை விளையாடவிட்டு வேடிக்கை மட்டுமே பார்ப்பாள்.

“ஹம்ம்... நெக்ஸ்ட் வீக்கும் வரலாம் டா. இன்னும் பாதி கேவ்ஸ், கோவில் சிற்பம் எல்லாம் பார்க்கவே இல்லை. அடுத்த வாரம் ப்ளான் பண்ணலாம்!” என்றவள் தேவாவைப் பார்க்க, “ஷ்யூர், நெக்ஸ்ட் வீக் நிறைய நேரம் விளையாடலாம் அபி!” எனச் சின்னவனைக் கையில் அள்ளினான். அபி ஓரளவிற்கு சமாதானமாகிவிட்டான்.

மூவரும் மகிழுந்திற்குள் ஏறியதும் ஆதிரை தன் கைப்பையிலிருந்த துண்டை எடுத்து அபியின் முகம் தலை என துவட்டிவிட்டாள். நீரில் நனைந்து பின்னர் மண்ணில் நடந்து அப்படியே உள்ளே ஏறியதும் மண் துகள்கள் நிறைய ஒட்டிக் கொண்டன.

“சாரி, கார் மண்ணாகிடுச்சு தேவா சார்!” அபி காலை உதறியதும் இன்னும் மண் தெறித்தது.

“பரவாயில்லை ஆதி... என் கால்லயும்தான் மண்ணு. வாஷ் பண்ணிக்கலாம், விடு!” என்றவன் கையிலிருந்த துண்டை ஆதிரை உற்றுப் பார்த்தாள். அவளுடையதுதான் அது. முதல் வாரம் அவனுக்கு கொடுத்திருந்தாள்.

தேவா அவள் பார்வை உணர்ந்து சிரிப்புடன் தலையை துவட்டிவிட்டு முகத்தை துடைத்து அதை நுகரவும், இவள் அவனை முறைத்தாள்.

“அந்த டவலை தூக்கிப் போடலையா நீங்க?” அவள் கேட்டதும், “எதுக்கு தூக்கிப் போடணும். நல்ல டவல்தானே?” என்றவன் அதை பத்திரப்படுத்தினான். போயா என்பது போல தோளைக் குலுக்கியவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

மூவரும் செங்கல்பட்டை நோக்கிப் பயணமாகினர். அபி பத்து பதினைந்து நிமிடத்திலே தூங்கிவிட்டான். சிறிது தூரம் சென்றதும் அவனைப் பார்த்த தேவா, “அபி சாப்பிடாம தூங்கிட்டானே?” என சின்னவனைப் பார்த்து வினவினான்.

“இதுக்கு மேல எதுவும் அவன் சாப்பிட மாட்டான் தேவா சார். நைட்டு பசிச்சா பால் காய்ச்சிக் கொடுத்துப்பேன். எனக்குமே மதியம் சாப்பிட்டதே ஃபுல்லா இருக்கு!” என்றவள், “உங்களுக்கு பசிக்குதுன்னா எங்கையாவது நிறுத்துங்க. சாப்ட்டு போகலாம்...” என அவன் முகம் பார்த்தாள்.

“இல்ல, எனக்குமே பசியில்ல. நான் வீட்டுக்குப் போய் பார்த்துக்கிறேன்...” என அவன் கூற, தலையை அசைத்தவள் அலைபேசியை எடுத்து எதையோ பார்த்தாள்.

“ஆதி, உன் ஃபோன் குடு. இன்னைக்கு எடுத்த போட்டோஸ் பார்க்குறேன்!” இடது கையை அவள் முன்னே நீட்டினான்.

“நான் உங்களுக்கு வாட்சப் பண்றேனே தேவா சார்!” அவள் படக்கென்று அலைபேசியை தூரக்கொண்டு சென்றுவிட்டு தர விருப்பமில்லாமல் உரைக்க, இவன் புரியாது பார்த்தான்.

“ட்ரைவ் பண்ணும் போது ஃபோன் பார்க்க கூடாது!” என்றவளை முறைத்தவன், “ஃபோனை குடு ஆதி!” என்றான் கண்டிப்புடன். இவளுக்கு தயக்கமாய் இருந்தது. வளைத்து வளைத்து அவனை அத்தனைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தாள். எதுவும் கூறாது அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு ஜன்னல் புறம் திரும்பினாள்.

தேவா சாலையில் ஒரு கண்ணை வைத்து கொண்டே அலைபேசியைப் பார்த்தான். திரையைத் தள்ளிக் கொண்டே வந்தவன் விரல்கள் ஒரு நொடி நின்றன. தெரியாமல் தன்னை மட்டும் படமெடுத்திருப்பாள் என எண்ணி அடுத்தடுத்து தள்ள, முழுவதும் அவனே நிறைந்து கிடந்தான். அவன் நின்றது, பல் தெரிய சிரித்தது, விளையாடியது ஏன் தண்ணீர் குடிக்கும்போது கூட புகைப்படம் எடுத்திருக்கிறாள். இவன் உதடுகளில் முறுவல் படர, ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான்.

கண்ணாடியோடு புதைந்து விடுவதைப் போல ஆதிரை முகத்தை வெளியே வைத்திருந்தாள். அவளுக்கு வெட்கமாய் போயிற்று. தன்னை அவன் பார்க்கிறான் எனத் தெரிந்தாலும் திரும்பவில்லை. எதுவும் கேட்டுவிடாதே என மனம் சிணுங்கியது.

இவன் மீண்டும் அலைபேசியில் பார்வையைப் பதித்தான். அனைத்துப் புகைப்படங்களையும் பார்த்துவிட்டு முகப்பு பலகையில் அலைபேசியை வைக்கவும், ஆதிரை சில நிமிடங்கள் கழித்து அதை எடுத்து உள்ளங்கைக்குள் பத்திரப்படுத்தினாள்.

அவன் எதுவும் கேட்கவில்லை என்றதும் சில நிமிடங்களில் இயல்பானாள். அதை உணர்ந்தவன் குரலை செருமிவிட்டு, “எனக்கு எவ்வளோ மார்க் போடுவ ஆதி?” எனக் கேட்டான். இவள் புரியாது அவனைப் பார்த்தாள்.

“இல்ல, வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்திருக்கீயே. எத்தனை மார்க் போடுவன்னு கேக்குறேன்!” உதட்டில் புன்னகையை மறைக்காது ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். ஆதிரைக்கு மெலிதாய் முகம் சிவந்தது.

“ஹம்ம்... பிஃப்டி போடலாம்ல தேவா சார்?” எனத் தன்னை சமாளித்து கேலியாகக் கூறினாள்.

“அவ்வளோ தானா?” அவன் புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தான்.

“ஆமா தேவா சார், சரி... போனா போகுதுன்னு ஒரு பிஃப்டி பைவ் வச்சுப்போம்!” என்றவளை மென்மையாய் முறைத்தான்.

“ஹக்கும்... அவுட்டிங் போறதுக்கு முன்னாடி நீங்க இதைக் கேட்டிருந்தா ஐஞ்சு பத்து மார்க் கூட போட்டிருக்க மாட்டேன்!” என்றவளை அப்பட்டமாய் முறைத்து வைத்தான்.

“சரி... சரி. கோபப்படாதீங்க சார். பாருங்க உங்களோட உண்மையான வயசை யாராலும் கெஸ் பண்ண முடியாது. பார்க்க தேர்டி ப்ளஸ் மாதிரியே இருக்கீங்க. பட், உங்களுக்கு தேர்டி செவன் தானே?” அவள் வெகுதீவிரக் குரலில் கேட்டதும்,

தேவா ஒரு நொடி தடுமாறிப் பின் வாகனத்தை சரியாய் செலுத்தியவன், “எனக்கு தேர்ட்டி த்ரீ தான் ஆதி!” உச்சபட்ச கடுப்பு அவன் குரலில். விட்டால் நாற்பது என்று கூட கூறுவாள். இவனுக்கு மனம் பொறுமியது.

“வாட்... ரியலி? உண்மையா தேவா சார்? நான் கூட தேர்டி செவன், தேர்ட்டி எயிட்...” இழுத்தவள் குரலில் போலி ஆச்சர்யம்.

திரும்பி அவளைக் காட்டமாய் பார்த்தவன், “விட்டா நாற்பதுன்னு கூட சொல்லுவ டீ!” என்றான் எரிச்சலாய். ஆதிரை தலையைப் பின்னிழுத்து கடகடவென சிரித்திருந்தாள்.

“தேவா சார், அப்போ முப்பது மூனு வயசுல கூட சொட்டை விழுமா என்ன?” சிரிப்பினூடே அவள் கேட்டதும் இவனது மனம் திடுக்கிட்டுப் போக, முன்புற கண்ணாடியில் தலையைப் பார்த்தான். அப்படியொன்றும் இல்லை என கண்கள் உறுதிப்படுத்தி புலன்கள் எல்லாம் நம்பிய பின்னர் உடலும் மனமும் தளர்ந்து போக, மூச்சை இழுத்துவிட்டவனுக்கு வெகுவாய் சிரமேற்கொண்டு சிரிப்பை உதட்டுக்குள் மறைக்கும் ஆதிரைதான் கண்ணை நிறைத்தாள்.

“நீ எதுவுமே சொல்லத் தேவையில்ல தாயே. பேசாம வா!” அவன் பொறுமைப் பறந்து போனது.

“சாரி தேவா சார், நான் சும்மா கிண்டல் பண்ணேன்!” என இரண்டு விரல்களை எடுத்து உதட்டை மறைத்து சிரித்து முடித்தவள், “நான் எடுத்த போட்டோஸ்லயே தெரிய வேணாமா சார்? நீங்க அழகா இருக்கீங்கன்னு அதுவே சொல்லும். நான் வாயைத் திறந்து சொல்லணுமா?” எனத் தலை சாய்த்துப் புன்னகைத்தாள். தேவா அவளை முறைக்க முயன்றாலும் உதடுகளில் புன்னகை கவிந்தது.

“ஹம்ம்...” சிரிப்பும் முறைப்புமாய் ஏற்றான்‌.

“யூ க்நோ தேவா சார், எ ரெஸ்பான்சிபிள் மேன் இஸ் பெட்டர் தென் அ ரொமான்டிக்/ப்யூட்டி புல் மேன்னு சொல்லுவாங்க. சோ, அந்த வகையில எந்த இடத்துலயும் உங்க பொறுப்பை தட்டிக் கழிக்காம ஒரு பாஸா, ஒரு மகனா எல்லா இடத்துலயும் நீங்க பெர்பெக்டா இருக்கீங்க. அதனால நீங்க அழகா? இல்லையான்ற கேள்வியே வேணாம். யூ ஆர் அ வெரி ப்யூட்டி ஃபுல் சோல்!” ஆதிரை மனதின் அடியாழத்திலிருந்து வார்த்தைகள் வந்து விழ, தேவா வார்த்தைகள் இல்லாது அவளைப் பார்த்து தலையை அசைத்தான்.

உண்மையில் ஒத்த கருத்துடையவர்களோடு பயணம் செய்யும் போதே வாழ்க்கை இத்தனை அழகாகிவிடுமா என்ன? வெறும் நான்கு நாட்களே அவர்கள் மொத்த வாழ்க்கையும் எத்தனை சுகமாய் செல்லும் என்பதை கற்பனை கட்டமைத்து அவன் கண்முன்னே மேலெழுந்து நிற்கச் செய்தது ஆதிரையோடு வாழ்ந்தால் இன்னுமே தன் வாழ்க்கை சுகமாய் இருக்குமென ஸ்திரமாய் மனம் நம்பியது.

“தேங்க்ஸ் ஆதி!” ஆத்மார்த்தமான குரலில் சொன்னான். அவள் புன்னகைத்தாள்.

“அப்பியரன்ஸ் வைஸ் கூட நீங்க அழகுசார். பட், அந்த சொட்டை தான்...” குறும்பாய் இழுத்தவளை முறைத்துப் பார்த்தவன், “இவ்வளோ பேசுவீயா ஆதி?” என ஆச்சர்யமாய்க் கேட்டான்.

புன்னகையோடு அவன்புறம் திரும்பியவள், “ரொம்ப ரேர்தான் சார். ஸ்கூல்ல ஸ்வாதின்னு ஒரு ஃப்ரெண்ட், அப்புறம் அப்பு, தென் அபியைப் ப்ரெக்னன்டா இருந்தப்போ பார்த்துகிட்ட எலானிமா... இப்போ நீங்க. என்னோட கம்பர்ட் சோன்குள்ள இருக்கவங்ககிட்டே மட்டும்தான் நிறைய பேசுவேன்!” என்றாள்.

“ஓ...” தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான்.

“ரொம்ப பேசுறனோ?” இவள் அவன் முகம் பார்க்க, இல்லையென தலையை அசைத்துப் பின் ஆமாம் என முடித்தவன், “நீ பேசுறதைக் கேட்க உன் கூட யாரும் இல்லை ஆதி. இருந்தா நீ பேசிட்டே இருக்க கேட்டகிரி!” அவன் கூறியதும் யோசிப்பது போல பாவனை செய்தவள்,

“இருக்கலாம் தேவா சார். அபி மட்டும்தானே என் கூட இருக்கான். அவனோட இப்படிலாம் பேச முடியாது. அவனோட உலகமே தனி.
அப்புறம் தர்ஷினி, கோமதி அக்கா, தென் உங்க ஃபேவரைட் சுபாஷ்!” எனக் கேலியாய் கூறியவளை முறைத்தான்.

சில பல நிமிடங்கள் மௌனமாய் கழிய, “உங்களுக்கு டயர்டா இல்லையா?” எனக் கேட்டாள் ஆதிரை. அவன் புரியாது பார்த்தான்.

“இல்ல, யூ லுக் வெரி டயர்ட். நான் வேணா ட்ரைவ் பண்ணவா?” அவள் கேட்டதும், தேவாவின் புருவம் வியப்பில் ஏறின.

“உனக்கு ட்ரைவ் பண்ண தெரியுமா ஆதி?” அவன் கேட்டதும், “வொய் நாட்... நல்லா ட்ரைவ் பண்ணுவேன். பட், இப்போதான் காரோட்ற சான்சே கிடைக்கலை!” உதட்டைப் பிதுக்கினாள்.

“இன்னொரு நாள் நீ ட்ரைவ் பண்ணு. இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல போய்டுவோம்!” அவன் மறுக்க, “ப்ளீஸ், நான் ட்ரைவ் பண்றேனே. இப்போ நம்ப ஊருக்குள்ள போய்டுவோம். பெருசா வெஹிக்கிள் வராது தேவா சார்!” தன் முகத்தை ஆசையாய் நோக்குபவளிடம் மறுக்கத் தோன்றவில்லை.

“பீ கேர் புல்...” என்றவாறே அவன் வாகனத்தை ஓரமாய் நிறுத்த, இருவரும் இடம் மாறினர். ஆதிரை சாவியைத் திருப்பி கியரில் கை வைத்ததும் மெலிதாய் அவளிடம் பதற்றம் அப்பியது.

அவள் கைமீது தன் கரத்தை வைத்து அழுத்தியவன், “ரிலாக்ஸ் அண்ட் ட்ரைவ் ஆதி!” என்றான்.

அவன் வார்த்தையில் உடல் தளர்ந்து புன்னகைத்தவள் மெதுவாய் ஓட்டினாள். சில பல நிமிடங்களில் கை லாவகமாக திசைமாற்றியை இயக்க, அவளையே பார்த்திருந்த தேவா இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடினான். ஐந்து நிமிடங்கள் கடந்திருக்க, இவள் திரும்பி பார்க்க, அவனிடம் அசைவு இல்லை. அதற்குள்ளே தூங்கிவிட்டானா என ஆச்சர்யம்.

‘ப்ம்ச்... அபிக்கு ஈடுகொடுத்து விளையாடுனதுல டயர்டாகிட்டாரு போல!” கரிசனமாய் பார்த்தவள் சாலையில் விழிகளைப் பதித்தாள்.

வீடு வந்ததும், “தேவா சார்!” என அவனை தோள் தொட்டு உசுப்பினாள். முதல்நிலை உறக்கத்தில் இருந்தவன் படக்கென்று எழுந்துவிட்டான்.

“சாரி, தூங்கிட்டேனா?” என அவன் கண்ணை கசக்க, “முகத்தை கழுவிட்டு வாங்க...” என தண்ணீர் பொத்தலை அவனிடம் கொடுத்தாள். எதுவும் பேசாதவன் இறங்கி முகம் கழுவ, இவள் கைப்பையோடு அவனுக்கு அருகே வந்தாள்.

“வீடு வரைக்கும் ட்ரைவ் பண்ணிட்டு பத்திரமா போய்டுவீங்களா சார்? கண்ணெல்லாம் சிவந்து போய்டுச்சு!” அவள் தயக்கத்துடன் கேட்க, “நான் மேனேஜ் பண்ணிப்பேன்!” என்றவன் நகர்ந்து சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

அபியைத் தூக்கித் தோளில் போட்டவள், “ஷ்யூரா சார்? பாதி தூக்கத்துல இருக்கீங்க நீங்க!” கவலையாய் கேட்டாள் பெண்.

“போய்டுவேன் மா!” அவன் மென்குரலில் கூற, அதில் சமாதானமானாள்.

சில நொடிகள் நின்றவள், “தேங்க் யூ தேவா... ரொம்ப நாள் கழிச்சு நான் சந்தோஷமா இல்ல இல்ல நிம்மதியா இருந்தேன்‌.‌ யார் என்ன நினைப்பாங்க, தனியா இருக்கதால வந்து பேசுவாங்களா, வம்பு பண்ணுவாங்களான்னு எனிடைம் ஏதோ ஒன்னு என்னை டிஸ்டர்ப் பண்ணும். பட் இன்னைக்கு நான் யாரையும் கேர் பண்ணாம இருந்தேன். லைக் உங்க கூட இருக்கும்போது சேஃப்டியா ஃபீல் பண்ணேன்!” என்றாள் உணர்ந்து.

அவளை அன்பாய் பார்த்தவன், “லைஃப் லாங் உன்னை நிம்மதியா சந்தோஷமா வச்சுக்கணும்னு மனசு சொல்லுது ஆதி!” என்றான் மென்குரலில்.

ஆதிரையின் முகத்தில் முறுவல் படர்ந்தது. “யூ ரிசர்வ் பெட்டர் தேவா!” என்றாள்‌. அவன் வேறு ஏதோ பேச வர,

“பத்திரமா போங்க. போய்ட்டு எனக்கு மெசேஜ் போடுங்க. நான் வெய்ட் பண்ணுவேன்!” எனக் கூறிவிட்டு நடந்தவளை முறைத்தவன் அவள் வீட்டிற்குள் சென்று அடையும் வரைப் பார்த்திருந்துவிட்டே அவ்விடத்தை காலி செய்தான்.

தன்னிருப்பிடம் நுழைந்ததும் ஆதிரைக்கு ஒரு செய்தியை அனுப்பிவிட்டான். அவனுக்கு பதிலளித்துவிட்டே அவள் உறங்கச் சென்றாள்.

“தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி

கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன்
கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே!”


அடுத்த வாரம் அவுட்டிங் கடவுள் சதியால் முறிந்து போனது.

தொடரும்...

















 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Kadavul sathi ah illa janu oda madhi panra velai ippo than oru varam nalla pochi nu nenachi mudikirathu kula aduthu vettu ah ready ah vaikiraga
 
Well-known member
Messages
516
Reaction score
384
Points
63
அவுட்டிங் தடை பட்டது யாரால்?
 
Top