- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
நெஞ்சம் – 30 
“கிளம்பிட்டீயா? இல்லையா ஆதி? நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு!” தேவா மெல்லிய கோபம் இழையோட பேசவும்,
“டூ மினிட்ஸ் தேவா சார், வந்துட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்!” என்றவள் வீட்டைப் பூட்டிவிட்டு திறவுகோலை கைப்பையில் வைத்தவாறே அழைப்பைத் துண்டித்து படிகளில் இறங்கினாள். அபினவ் அதற்குள்ளே குடுகுடுவென சாலையில் இறங்கி தேவாவின் மகிழுந்தை நோக்கி ஓடினான்.
இவள் தெருமுனைக்கு செல்ல மூன்று நிமிடங்கள் ஆனது. சின்னவன் முன்புறம் ஏறியமர்ந்து தேவாவிடம் எங்கே செல்கிறோம் எனக் கேட்டு, கண்டிப்பாக இந்த வாரம் கடற்கரைக்கு செல்கிறோமா எனக் கேட்டு, தேவாவும் ஒப்புக் கொண்டதில் ஏகக் குஷியாகிப் போனான்.
“சாரி!” உதட்டைக் குவித்துக் கெஞ்சலாய் கேட்டவாறே உள்ளே ஏறியமர்ந்தாள் ஆதிரை. தேவாவின் பார்வை ஒரு நொடி அவளது உடையில் படிந்து மீண்டது. ஜீன்ஸ் வகையிலான கால்சராயும் இறுக்கிப் பிடித்த மேல் சட்டையும் அணிந்திருந்தவள் கழுத்தைச் சுற்றி ஒரு துப்பட்டாவைப் படரவிட்டிருந்தாள்.
“ஹம்ம்...” முறைப்புடன் அவளது மன்னிப்பை ஏற்றவன், வேகமாய் நடந்து வந்ததில் மூச்சு வாங்கியவளிடம் தண்ணீர் பொத்தலை நீட்டிவிட்டு வாகனத்தை இயக்கினான். அவர்களது பயணம் தொடங்கியது.
கண்ணாடி வழியே தேவாவைப் பார்த்த ஆதிரைக் குறுஞ்சிரிப்புடன் கைப்பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து திறக்க, இவனும் அவளைக் கவனித்தான் போல, என்னவென்பது போல நெற்றி சுருங்கியது.
“அபி, பனியாரம் சாப்பிடுடா!” என டப்பாவை அபியிடம் நீட்டியவளின் உதட்டில் புன்னகை ஒளிந்து கிடந்தது. தேவா அவளை அப்பட்டமாய் முறைத்தான்.
“தேவா சார், பனியாரம் வேணுமா?” எனக் கேட்டவளை திரும்பி முறைத்தவன், “வே...” என ஆரம்பிக்கும் போதே அவன் வாயில் ஒரு பனியாரத்தை அடைத்துவிட்டாள் இவள். அவன் முகத்தில் கோபமும் சிரிப்பும் சேர்ந்து படர்ந்தது.
அதை மென்று தின்றவன், “ஆனாலும் கொடுமைக்காரி டீ நீ. காலைல டீ மட்டுமே குடிச்சிட்டு அரக்கபறக்க வந்தவனுக்கு ஒருவாய் தண்ணி கூட கொடுக்கலை!” என அவன் கடுப்போடு கூற, இவள் கண்ணைச் சுருக்கினாள்.
“ஹம்ம்... சாரி, சாரி. லாஸ்ட் வீக் நீங்க ரொம்ப பசியா இருந்தீங்க இல்ல?” அவள் வருத்தமாய்க் கேட்க, “கொலைபசியில இருந்தேன். இதுல உன்கூட பேசியே டயர்டாகிட்டேன்!” முகதாட்சண்யம் எல்லாம் பார்க்காது முகத்தில் அடித்தாற் போல உள்ளது உள்ளபடியே சென்ற வாரத்தின் கோபசுவடு கொஞ்சமும் குறையாது அப்படியே கூறிவிட்டான்.
“சாரி தேவா, எனக்கு உங்க மேல செம்ம கோபம். அதான் சாப்பிடலைன்னா போட்டும் விட்டுட்டேன். ஏன் நீங்க வாயைத் திறந்து கேட்க வேண்டியதுதானே? நானா சொன்னாதான் சாப்பிடுவீங்களோ?” என முறுக்கினாள் இவள்.
“ஹம்ம்... உன் வீட்டுக்கு நான் வந்தா நீதான் என்னை பார்த்துக்கணும் ஆதி!” அவன் கண்டிப்புடன் கூறினான்.
“சோ... அப்போ ஃப்ரெண்ட்னு சொன்னது எல்லாம் வாய் வார்த்தை. சரி விடுங்க, உங்களுக்கு ஈகோ அதிகம்னு எனக்குப் புரியது!” உதட்டைக் கோணினாள் இவன்.
“அதெல்லாம் கூடவே பொறந்தது. அவ்வளோ சீக்கிரம் போகாது!” படுதீவிரமாய்க் கூறினான் தேவா.
“சரி... சமாதானம். ஒரு பணியாரத்தை எடுத்துகிட்டு சண்டையை முடிச்சுக்கலாம். இல்லைன்னா லாஸ்ட் வீக் அவுட்டிங் மாதிரி இந்த தடவையும் போரா போய்டும், உங்களை மாதிரியே!” உதட்டுக்குள் மறைத்த சிரிப்புடன் முன்புறம் எக்கி அவனிடம் டப்பாவை நீட்டினாள்.
அவளை முறைத்தவன், “ஒன்னும் வேணாம்... போடீ!” முகத்தை திருப்பினான். அதற்குள்ளே போக்குவரத்து சமிக்ஞையில் மகிழுந்து நின்றிருந்தது.
“இப்போ பனியாரத்தை எடுத்துப்பீங்களா? மட்டீங்களா?” மிரட்டலாய்க் கேட்டவளை திரும்பி அலட்சியமாய் பார்த்தவன், “முடியாது...” தோளைக் குலுக்கினான்.
“முடியாது... ஹம்ம்?” எனக் கேட்டவளை வெகு தீவிரமாக பார்த்தவன், “யெஸ் அப்கோர்ஸ். பசிக்கும் போது பச்ச தண்ணி தரலை. இப்போ ஐ யம் ஃபுல். எனக்கு உன் பனியாரம் வேணாம்!” இவனும் விடாது வாதம் புரிந்தான்.
“பாவம் இந்த மனுஷனை சாப்பிடாம அனுப்பிட்டோமேன்னு ஒரே கவலையா போச்சு. ஒரு வாரம் முன்னாடியே இன்னைக்கு பனியாரம் சுடணும்னு யோசிச்சு, நேத்து காலைல மறக்காம அரிசியை ஊறப்போட்டு வேலை முடிச்சு வந்தக் கையோட டயர்டா இருந்தாலும் மாவை ஆட்டி ப்ரிட்ஜ்ல வச்சு, காலைல சீக்கிரம் எழுந்து உங்களுக்காக பார்த்து பார்த்து பனியாரம் சுட்டேன் இல்லை. எல்லாம் என் தப்பு!” மூச்சு வாங்கப் பேசியவளைப் பார்த்து தேவாவின் முகத்தில் முறுவல் பூத்தது. உண்மையில் கடந்த வாரம் அவளது செய்கை அவனுக்கு உவப்பாய் இல்லை. ஆனால் இப்போது அவளது மெனக்கெடல்கள் முழுவதிலும் தான்தான் நிறைந்திருக்கிறோம் என்ற நினைப்பே தித்தித்தது.
அவள் மேலும் ஏதோ பேச வரும் முன்னே தேவா ஒரு பனியாரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வாகனத்தை இயக்கவும் இவளுக்கும் முகம் மலர்ந்தது. மீதமிருந்த இரண்டு பனியாரத்தை அபியிடம் கொடுத்தவள் கையை முன்புறம் நீட்டி தேவாவின் கரத்தில் வலிக்காது கிள்ளிவிட்டு படக்கென திரும்பி டப்பாவை வைக்கும் நோக்கில் குனிந்து கொண்டாள்.
அவளைத் திரும்பி பார்த்த தேவாவின் முகத்தில் மென்முறுவல் படர்ந்தது. உண்மையில் சென்ற வாரமே ஆதிரையிடம் இது போல இணக்கமான பேச்சு, உரிமையான செய்கை, எளிதில் அவனை அணுகுமுறை என நிறைய நிறைய தேடியிருந்தான். இந்த வாரம் அவளது பேச்சு, உரிமை அனைத்திலும் ஒருமாதிரி மனம் திருப்தியாய் உணர்ந்தது.
“அப்புறம் தேவா சார், பனியாரம் எப்படி இருந்துச்சு?” என ஆர்வமாய் கேட்டாள்.
முன்புற கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தவன், “ஹம்ம்... நல்லா இருக்கு. பட்...” என இழுத்தான்.
“பட்...” இவளது முகம் சுருங்கி யோசித்தது.
“லாஸ்ட் வீக் சாப்பிட்ட பனியாரம் அளவுக்கு இல்ல!” என்று குறும்பாய் முடித்தவனை மென்மையாய் முறைத்தவளுக்கும் சிரிப்பு வந்தது.
“அங்கிள்தான் லாஸ்ட் வீக் பனியாரமே சாப்பிடலையே மா!” அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த அபினவ் இடைபுக, தேவா லேசாய் இருமினான்.
“உன் அங்கிள் விர்ச்சுவல் பனியாரம் சாப்பிட்டிருப்பாரு டா!” தேவாவை நக்கலாகப் பார்த்துக் கொண்டே ஆதிரை கூறினாள்.
“விர்ச்சுவல் பனியாரமா! என்னம்மா அது?” அவன் யோசிக்க, “அதை அவர்கிட்டயே கேளுடா!” என்றவள் ஜன்னல் புறம் திரும்பி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
தேவா அவனை சமாளிக்க வழி தெரியாது முகப்பு பலகையை திறந்து அதிலிருந்து ஒரு அமுல் இன்னெட்டைக் கொடுத்ததும், “தேங்க்ஸ் அங்கிள்!” என அவன் அந்தப் பேச்சை மறந்து பெற்றுக் கொள்ளவும், ஆதிரை என்னவெனத் திரும்பி பார்த்தாள்.
“இனிமே அவனுக்குச் சாக்லேட் வாங்கிக் குடுங்க... ரெண்டு பேரையும் வெளுக்குறேன்!” கண்டித்தவளிடம் இனிப்பை நீட்டினான் தேவா. அதை வெடுக்கென வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்தினாள். இல்லையென்றால் அபி அதையும் வாங்கி உண்டுவிட்டு பல்வலி என இரவில் அழுவான்.
சிறிது தூரம் சென்றதும் தேவா ஒரு கடையில் நிறுத்தி, தேநீரும், உப்பு ரொட்டியும் வாங்கிக் கொடுத்தான். அதை உண்டுவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர். அவன் செல்லும் பாதையை ஆதிரையால் கணிக்க முடியவில்லை. அதனால் எங்கு செல்கிறோம் என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டது.
“எங்க போறோம் தேவா?” அவள் ஆர்வமாய்க் கேட்டதும், “சர்ப்ரைஸ்!” என்றான் அவன்.
அபியும், “ஆமா... ஆமா சர்ப்ரைஸ் மா!” என்றான் தலையை ஆட்டி. இருவரையும் மென்மையாய் முறைத்தவள் வெளியே விழிகளைப் பதித்தாள்.
ஒன்னே கால் மணிநேரப் பயணத்தை முடித்துக்கொண்டு மகிழுந்து அந்தக் பெரிய கோவில் முன்னே நின்றது. உள்ளே வரும் போதே மகாபலிபுரம் என்ற பெயர் பலகையைப் பார்த்துவிட்டாள் ஆதிரை. தேவா வாகனத்தை நிறுத்திவிட்டு வரவும், மூவரும் மணிக்கோட்டை குகை கோவிலுக்குள் நுழைந்தனர்.
பகல் நேரம் என்பதால் ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் கல்லூரி மாணவர்கள், சில பல குடும்பம் என ஓரளவுக்கு ஜனத்திரள் காணப்பட்டது. அந்த இடமே பாறையைக் குடைந்து குகை போல காட்சியளிக்க, ஆங்காங்கே சிங்கமுகத்தோடு தூண்கள் இருந்தன.
இவர்கள் முதலில் வராக குகை கோவிலுக்குள் நுழைந்து அதை சுற்றிப் பார்த்தனர். விஷ்ணு சிலைக்கு அருகே சென்று அபியும் ஆதிரையும் நின்று சுயமி புகைப்படம் எடுக்க, தேவா சிலையை தொட்டு ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
“தேவா சார்!” என அழைத்தவள் அவன் நிமரவும், அவனையும் புகைப்படத்திற்குள் அடக்கினாள். அப்படியே நடந்து அங்கிருந்த சிற்பங்களைச் சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்தவாறு ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்தனர்.
மகிஷாசுர மர்தினி குகைக் கோவிலையும் சுற்றிவிட்டு பாஞ்ச பாண்டவர் மண்டபத்தை அடையும் போது மதிய உணவு நேரமே கடந்து போயிருந்தது. மற்ற
இருவரும் சோர்ந்து போக, தேவா மட்டும் அனைத்தையும் ஆர்வமாய்ப் பார்த்தான்.