• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,339
Reaction score
3,991
Points
113
இதயத்துக்குள் இறங்கியது காதல்

அத்தியாயம் 1:

இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அது நாம்தான் இன்று நிஜமாய்…


இருள் மெல்ல பிரிந்தும் பிரியாத காலை வேலை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க் கொண்டிருக்கின்றது. அந்த அதிகாலை வேளையிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மின்விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென்று மின்னியது. மதுரையிலிருந்து வெளியூர் செல்பவர்கள், வெளியூரிலிருந்து மதுரை வருபவர்கள் என்று பயணிகள் வந்து போய் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரையின் பிரபலமான மீன் விற்பனை சந்தை. அதிகாலை வேளையிலும் மீன் விரும்பிகள் வாகனங்களில் படையெடுத்து வந்து மீனை வாங்க துவங்கியிருந்தனர்.

அதுபோக ஊருக்குள் மீன் விற்பவர்கள் தங்களது விற்பனைக்காக கூடையில் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தது அங்கே. ஒவ்வொரு கடையும் சின்ன தடுப்பு போட்டு பிரிக்கப்பட்டிருந்தது.

மேற்கூரை மட்டும் போடப்பட்டிருக்க தரையில் தார்ப்பாய் போட்டு ஒவ்வொரு மீனும் வகை வகையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடையில் இருக்கும் ஆட்கள் மீனை பார்வையிட்டவாறு நகர்ந்து கொண்டிருந்தவர்களை அண்ணே நம்ம கடையில வந்து வாங்குங்க என்று அழைத்படி இருந்தனர்.

அந்த வரிசையில் ஏழாவது கடையில் இருந்து, “அண்ணே நம்ம கடைக்கு வாங்க காலையில இறக்குன பிரெஷ் மீனு ஊளி மீனு சங்கரா மீனு பாறை மீனு நெய்பாறை ஜிலேபி கண்ட நண்டு இறாலு” என்று மீன் வகைகளை ஒப்புவித்து ஆட்களை மீன் வாங்க அழைத்துக் கொண்டிருந்தாள் மலர் என்கிற கருணை மலர்.

மலரின் சத்தத்தில் ஒரு பெண்மணி அருகில் வர, “வாங்கக்கா வாங்க என்ன மீனு வேணும் நம்ம கிட்ட எல்லாமே இருக்கு”என்று அவரிடம் அனைத்து மீன் வகைகளையும் காண்பிக்க, “பாறை மீன் இருக்கா? என்று அவர் வினா எழுப்பினார்.

“ஆங் இருக்குக்கா பாறை நெய்பாறை ரெண்டுமே இருக்கு உங்களுக்கு எந்த பாறை வேணும் சொல்லுங்க கா?” என்று இரண்டு மீன்களையும் கையில் எடுத்து காண்பித்தாள்.

“ரெண்டுத்துல எந்த மீன் நல்லா இருக்கும்?” அந்த பெண்மணி கேட்க, “பாறைய விட நெய் பாறை நல்லா இருக்கும் சின்ன வெங்காயம் அறைச்சு ஊத்தி குழம்பு வச்சா எல்லாரும் சப்பு கொட்டி சாப்டுவாங்க. அதுவும் எண்ணையே ஊத்த தேவையில்லை குழம்புல நெய் மிதக்கும்” என்று மலர் பாவனையுடன் விளக்கம் அளித்தாள்.

“கிலோ எவ்வளவு?” என்று அவர் வினா எழுப்ப, “மத்தவங்களுக்கு இருநூத்தி அம்பது ரூவாக்கா உங்களுக்கு இருநூத்தி இருவதுக்கு போடுறேன் வாங்கிக்கோங்க எத்தனை கிலோ வேணும்?” என்று கேட்டு மீனை எடுத்து எடை இயந்திரத்தில் அடுக்கியவள் அவர் கேட்டதற்கு அதிகமாகவே ஒரு சிறிய மீனை எடுத்துப் போட்டாள்.

பின், “மணி அக்காவுக்கு மீனை எடுத்து கவர்ல போட்டு கொடு” என்று அருகில் இருந்தவனிடம் குரல் கொடுத்தாள்.

அவள் அதிகமாக ஒரு மீனை போட்டதில் திருப்தி அடைந்த பெண்மணி பணத்தை கொடுத்து விட்டு மீனை வாங்கிக் கொண்டு செல்ல, “அக்கா எதுக்கு எப்ப பாத்தாலும் அதிகமா போட்டு விடுற இதனால் நமக்கு நட்டமாக போகுது” என்று மணி குறைபட்டான்.

“டேய் அவங்கள பாத்தா இப்பதான் முதல் தடவை வர்ற மாதிரி இருக்கு. முன்ன பின்ன கொஞ்சம் அதிகமா போட்டா இனிமே நம்மக்கிட்ட வந்து வாங்குவாங்க டா. இதெல்லாம் நட்ட கணக்கு இல்ல, லாப கணக்கு. அமைதியா வேலைய பாரு” என்று அவனை அதட்டியவள், அடுத்து ஒவ்வொருவராக தன் கடைக்கு அழைத்து மீனை விற்க துவங்கினாள்.

அங்கிருந்த கடைகளில் மிகவும் குறைந்த வயதில் மீன் விற்பனை செய்பவள் கருணை மலர் மட்டுமே மற்றவர்கள் எல்லாம் ஆண்கள் அல்லது மத்திய வயது பெண்களாக இருந்தனர்.

காலை நான்கு மணிக்கு மீன் லாரிகளில் வந்து இறங்கி விடும். கடை உரிமையாளர்கள் விலையைப் பேசி தங்களது கடைக்கு வாங்கி வைத்துக் கொள்ள நான்கு முப்பதுக்கு மேல் வாடிக்கையாளர் வர துவங்குவார்கள்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எதிர்புறத்தில் வந்து நின்றது அந்த உயர்ரக மகிழுந்து. உள்ளே அமர்ந்திருந்த ராதா மகனிடம், “மார்க்கெட் வந்துட்டோமா கண்ணா?” என்று வினவ, “பக்கத்துல தான் மா கூகுள் மேப் காட்டுது” என்று தன் அலைபேசியை பார்த்தான்.

“இதோ இந்த ஆப்போசிட் ரோடை கிராஸ் பண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடுல இருக்குமா” என்றவன் தனது மகிழுந்தை இயக்கி சாலையைக் கடந்து மீன் சந்தையின் வாயிலை அடைந்தான்.

வாயிலின் அருகே வாகனங்களை நிறுத்த டோக்கன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாயும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாயும் வசூலிக்கப்படும்.

இவர்களது மகிழுந்து நின்றவுடன் ஒரு நடுத்தர வயதுக்காரன் அருகில் வந்து, “சார் பார்க்கிங்க்கு டோக்கன் வாங்கணும்” என்று கூற, உள்ளிருந்தவன், “எவ்ளோ?” என்று வினா தொடுத்தான்.

“பத்து ரூபா சார்” என்று பதில் வர தனது பஸ்ஸில் தேடினான். அதில் ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களே இருந்தது. திரும்பி தாயைக் கண்டவன், “உன்கிட்ட சேஞ்ச் இருக்காம்மா?” என்று வினவினான்.

“இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ராதா தனது பஸ்ஸில் துழாவி பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து தீட்டினார். அதனை வாங்கிக் கொண்டு எதிரில் இ
ருந்தவன் டோக்கனை கொடுத்தான்.
 
Administrator
Staff member
Messages
1,339
Reaction score
3,991
Points
113
இருக்கும்னு நினைக்கிறேன்” என்ற ராதா தனது பஸ்ஸில் துழாவி பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து தீட்டினார். அதனை வாங்கிக் கொண்டு எதிரில் இருந்தவன் டோக்கனை கொடுத்தான்.

டோக்கனை பெற்றுக் கொண்டு வாகன நிறுத்துமிடத்தில் மகிழுந்தை நிறுத்தியவன் வெளியே வர, “கண்ணா நீ இங்கே இரு நான் போய் வாங்கிட்டு வரேன் உனக்கு தான் மீன் ஸ்மெல் பிடிக்காதுல” என்ற என்ற ராதா இறங்கி வேடிக்கை பார்த்தவாறு நடக்கத் துவங்கினார்.

ஒவ்வொரு கடையையும் அவரது கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தது. எந்த கடையில் வாங்கலாம் என்று அவர் யோசனையுடன் வேடிக்கை பார்த்தபடி வர, “அம்மா வாங்க அக்கா வாங்க இங்க வாங்க அம்மா” என்ற பெண் குரல் அவரது கவனத்தை ஈர்த்தது. காரணம் அங்கே முக்கால்வாசி ஆண்கள் தான் கூவி கூவி அழைத்துக் கொண்டிருந்தனர்.

குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க, “இங்க வாங்கம்மா உங்களுக்கு என்ன மீனு வேணும் எல்லா மீனுமே நம்மகிட்ட இருக்கு எல்லாமே பிரஸ்ஸா காலைல தான் இறக்குனோம் வாங்கம்மா வாங்க” என்று அழைத்தது மலரே தான்.

ராதா அவளது கடைக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசனையுடன் பார்க்க, “எல்லாமே பிரெஷ் மீனுமா எல்லாரையும் விட குறைச்ச விலையில் தர்றோம் வந்து வாங்குங்க அம்மா வாங்க” இன்று மலர் மீண்டும் குரல் உயர்த்தி அழைத்தாள்.

இவ்வளவு தூரம் அழைப்பதால் ராதா அவளது கடைக்கு செல்ல, “சொல்லுங்கம்மா உங்களுக்கு என்ன மீனு வேணும்?” என்று வழக்கம் போல கடையில் உள்ள அனைத்து மீன்களையும் பட்டியலிட்டாள்.

பார்க்க சிறு பெண்ணாக இருப்பவளை ஒரு முறை ஆராய்ச்சியாக கண்டவரது விழிகள் அவரது கடையை கூர்ந்து கவனித்தது.

ராதாவின் பார்வையை உணர்ந்தவள், “கடையெல்லாம் நல்ல சுத்தமா டெய்லியும் கிளீன் பண்ணிடுவோம்மா எல்லாமே சுத்தபத்தமா தான் இருக்கும்” என்று விளக்கம் அளித்தாள்.

“ஹ்ம்ம்…” என்று தலை அசைத்தவர், “நண்டு இறால் இரண்டும் வேணும்” என்று கூற, “எவ்வளவு வேணுமா?” என்று கூடையில் இறாலை அள்ளிப் போட்டாள்.

“இறால் ஃப்ரஷா தானே இருக்கு? என்று ராதா மீண்டும் வினா எழுப்ப, “அம்மா இங்க பாருங்க கண்ணு கருப்பா இருக்கு உடம்பு நல்லா சிவப்பு கலர்ல இருக்கு பிரெஷா இருக்குற இறால் மட்டும்தான் இந்த கலர்ல இருக்கும் பழைய இறால் சாம்பல் கலர்ல மங்கிடுமா நீங்களே பாருங்க” என்று ஒரு இறாலை எடுத்து தலையை நன்றாக விரித்து காண்பித்தாள்.

அதைக் கண்டு திருப்தியான ராதா, “சரி ஒரு கிலோ போடுமா” என்று கூற, “சரிங்கமா” என்றவள் எடை இயந்திரத்தில் ஒரு கிலோவிற்கு நூறு கிராம் அதிகமாக வரும் அளவே எடை போட்டவள் ஒரு கவரில் எடுத்து வைத்துவிட்டு, “நண்டு எவ்வளவு வேணும்மா?” என்று வினவினாள்.

“நண்டும் ஒரு கிலோ போதும்” என்று ராதா பதில் அளிக்க, ஒரு நண்டை கையில் எடுத்தவள், “இந்த நண்ட பாருங்கம்மா வயிறு எப்படி ஒட்டி இருக்கு காலும் முழுசா இருக்கு பாருங்க பிரெஷா இருக்கறது மட்டும்தான் இப்படி இருக்கும். பிரஷா இருக்குறது மட்டும் தான்மா விப்பேன் வித்தது போக மிஞ்சிருச்சுன்னா அதை ஏதாவது கடைக்கு கொடுத்துவேன்ம்மா” என்று மீண்டும் நான் விற்பவை எல்லாம் புதிதாக வாங்கியவை என்று உறுதி செய்தவள் நண்டை எடைபோட்டு கவரில் எடுத்து வைத்தாள்.

“ஹ்ம்ம் மொத்தம் எவ்வளவு ஆச்சு?” என்று ராதா கேட்க “ரெண்டும் சேர்த்து தொள்ளாயிரம்மா” என்று பதில் அளித்தாள்.

ராதா தனது கையில் இருந்த பர்சை தேட அப்போதுதான் பர்சை காரிலே மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. கையில் இருந்த அலைபேசியில் மகனுக்கு அழைத்தார்.

அழைப்பை ஏற்றவன், “சொல்லுங்கம்மா வாங்கிட்டீங்களா?” என்று வினவ, “கண்ணா பர்ஸ கார்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் எடுத்துட்டு வந்து தர்றியா? எனறவர் பிறகு, “இல்ல நானே வந்து எடுத்துக்கிறேன்” என்று கூறினார்.

“அங்கே இருங்க மாம் நான் எடுத்துட்டு வந்து தரேன்” என்று ராதாவை தடுத்தவன் ஒரு முக கவசத்தை எடுத்து அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி சந்தைக்குள் நுழைந்தான்.

ராதா மகன் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்டவர் கையை அசைத்து காண்பிக்க அவரைக் கண்டு கொண்டவன் மலரின் மீன் கடையை நோக்கி சென்றான்.

இதற்குள் மற்றொரு வாடிக்கையாளருக்கு மீனை விற்று முடித்திருந்தவள் நினைவு வந்தவளாக, “அம்மா இறாலையும் நண்டயும் அந்த சைடு கிளீன் பண்ணி தருவாங்க அம்மா ஒரு கிலோவுக்கு இருபத்தி அஞ்சு ரூவா வாங்குவாங்க” என்று மொழிந்தாள்.

அவளது கூற்றில் திரும்பி மீனை சுத்தம் செய்து தரும் கடையை பார்க்க அங்கே ஒவ்வொரு கடையிலும் குறைந்தது ஐந்து பேர் வரிசையில் நின்றிருந்தனர் அதனை கண்டவர், “என்னமா இத்தனை பேர் நிக்கிறாங்க கிளீன் பண்ணி வாங்க ரொம்ப நேரம் ஆகுமா?” என்று மலரிடம் வினா தொடுத்தார்.

“ஆமாம்மா எல்லாரும் நின்னு தான் கிளீன் பண்ணி வாங்கிட்டு போவாங்க” என்ற மலர் இயம்ப, ராதா யோசனையுடன் அவ்விடத்தை நோக்கினார்.

அவரது வெளித்தோற்றத்திலே ராதா சற்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதை ஊகித்திருந்தாள். அதுவும் விலையைக் கேட்காது பொருளை வாங்கிவிட்டதில் தன்னுடைய கணிப்பு சரிதான் என்று நினைத்திருந்தாள்.

இவர் நிச்சயமாக இந்த கூட்டத்தில் காத்திருந்து சுத்தம் செய்து வாங்கி செல்ல யோசிப்பார் என்று நினைத்தவள், “குடுங்கம்மா நானே கிளீன் பண்ணி தரேன்” என்று கூற, ராதா பதில் கூறும் முன் மணி, “அக்கா கடைய யார் பாக்குறது” என்று கேட்டான்

“கொஞ்ச நேரத்துக்கு நீ பாருடா நான் இவங்களுக்கு கிளீன் பண்ணி குடுத்துட்டு வந்துடறேன்” என்றவள் கடையின் ஓரத்தில் அமர்ந்து இறாலை சுத்தம் செய்ய துவங்கினாள்.

புதிதாக செய்பவருக்கு தான் சற்று நேரம் எடுக்கும் இவள் ஏற்கனவே நன்றாக சுத்தம் செய்து பழகி இருந்ததால் மடமடவென சுத்தம் செய்ய துவங்கினாள்.

பணத்தைக் கொடுக்க வந்தவனும் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து ராதாவை நெருங்கி இருந்தான்.

“பர்ஸ எடுத்துட்டு வரணும்னு தான் நினைச்சேன் ஆனால் மறந்துட்டு வந்துட்டேன் கண்ணா” என்று மகனிடம் கூற, “மாஸ்க் போட்டிருக்கதால ஸ்மெல் ஒன்னும் பெருசா தெரியலம்மா” என்றவன், “எவ்வளவு பே பண்ணனும்மா?” என்று வினவினான்.

“நைன் பிப்டி கண்ணா அதை கிளீன் பண்ணி முடிச்சதும் கொடுப்பா” என்று ராதா கூற, சம்மதமாய் தலையை அசைத்தவனது விழிகள் அங்கிருந்த கடைகளின் மீது உலா வந்தது.

நல்ல பழகி இருந்த வேலை என்பதால் பத்து நிமிடத்திலே இரண்டையும் சுத்தம் செய்து முடித்தவள் பையில் போட்டு “இந்தாங்கம்மா பக்காவா கிளீன் பண்ணிட்டேன்” என்று ராதாவிடம் நீட்டினாள்.

ராதா, “தொள்ளாயிரத்து அம்பது ரூபாய் தானம்மா?” என்று வினவ, “ஆமாங்க அம்மா” என்று பதில் இயம்பினாள்.

அவளது பதிலைக் கேட்டவன் தனது பர்சிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு தாயுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

மலர் ஆயிரம் ரூபாயை பெட்டியில் வைத்துவிட்டு மீதி ஐம்பதை எடுத்து விட்டு நிமிர இருவரும் நான்கடி நகர்ந்திருந்தனர்.

“என்ன மீதியை வாங்காம போயிட்டாங்க” என்றவள், “சார் சிவப்பு சட்டை போட்ட சார்” என்று சத்தமாக அழைக்க ராதாவின் அருகில் இருந்தவனுக்கு அக்குரல் கேட்டு விட்டிருந்தது.

தன்னைத்தான் அழைக்கிறாள் என்பதை உணர்ந்து திரும்ப, “மீதி அம்பது ரூவாய வாங்காமல் போறீங்க சார்” என்று உரத்த குரலில் கூறினாள்.

அவளது குரலுக்கு பதிலாக, ‘அதை நீயே வைத்துக்கொள்’ எனும் விதமாக விழிகளை அசைத்தவன் திரும்பி தாயுடன் நடக்கத் துவங்க மலர்தான் “பார்றா அம்பது ரூவாய வேணாம்னு சொல்லிட்டு போறாரு பெரிய பணக்காரரா இருப்பாரோ?” என்று மணியிடம் கூறினாள்.

“இருக்கும் ஆளை பாத்தா அப்படித்தான் தெரியுது” என்று மணி பதில் கூற, “அதான் கொரோனாலாம் முடிஞ்சிருச்சே. இப்பவும் மாஸ்க் போட்டுட்டு சுத்துறாங்க நம்மளால கொஞ்ச நேரம் கூட போட்டு இருக்க முடியாது கசகசன்னு இருக்கும் ஏன் மணி?” என்று மலர் அவனிடம் வினவினாள்.

ஐம்பது ரூபாய்க்காக இருவரும் அவனை பணக்காரன் என்று யோசித்ததன் காரணம் பெரிதாக இங்கு யாரும் மீதமுள்ள காசை வாங்காமல் செல்ல மாட்டார்கள். அதுவும் இங்கே ஊரில் உள்ள கடைகளை விட குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் தான் நிறைய ஆட்கள் வந்து வாங்குகிறார்கள்.

“மல்லிகா சொன்னது மாதிரி நீங்க எல்லாமே பிரஷா தான் இருக்கு கண்ணா” என்று காரில் ஏறியதும் ராதா கூற, “ஹ்ம்ம் நானும் கவனிச்சேன் ம்மா மார்னிங் தான் லோடு கொண்டு வருவாங்க போல அப்படியே சேல் பண்ணிட்டு கிளம்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று பதில் அளித்தான்.

“ஆமாடா கண்ணா நான் மீன் வாங்கினேன் இல்ல அந்த கடையில் இருந்த பொண்ணு அதான் சொல்லுச்சு காலையில தான் வாங்குவாங்க போல வித்தது போக மீதி எல்லாம் ஏதாவது கடை கொண்டு போய் கொடுத்துடுவாங்கலாம் நான் இங்க வரும்போது இனிமே இங்கேயே வாங்கிக்கலாம்” என்று கூறினார்.

இருவரும் பேசியபடியே பத்து நிமிடத்தில் அண்ணாநகரில் இருந்த அவர்களது வீட்டினை அடைந்தனர். மதுரையில் அண்ணாநகர் சற்று வளமானவர்கள் வாழும் பகுதியாக இருந்தது. ஆங்காங்கே தள்ளி தள்ளி இருந்த பெரிய வீடுகள் அதற்கு சான்று.

இன்னும் ஒருவரும் அந்த பகுதியில் எழவில்லை என்பதற்கு சாட்சியாக தெருவே அமைதியாக இருந்தது. காரை அதை நிறுத்தத்தில் நிறுத்திய இருவரும் உள்ளே நுழைய ராதா சமையலறை சென்று மகனுக்கு காலை சமையலை துவங்க மகன் தனது அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்து கண்களை மூடினான்.

அவன் ரிஷிகேஷவ். ராதாவால் மட்டும் கண்ணா என்று செல்லமாக அழைக்கப்படுபவன். ரிஷி, ராதா அண்ணாமலை தம்பதியின் இரண்டாவது புதல்வன். மூத்தவன் ஹரிஹரன் அவனது மனைவி தூரிகா. மூன்றாவது பெண் ஷாலினி வீட்டின் செல்லப்பிள்ளை.

அண்ணாமலையின் பூர்வீகம் சிவகாசி. அண்ணாமலை பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பட்டாசு தொழிலை செய்ய விருப்பமில்லாமல் மனைவியின் பெயரில் ராதா கார்ஸ் என்ற கார் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். சிவகாசியில் மூன்று கிளையும் மதுரையில் ஒரு கிளையும் இருந்தது இதுபோக அவர்களுக்கு ஊரில் நிறைய தொழில்களும் இருக்கிறது.

ஹரிஹரன் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் தொழிலை கவனித்துக் கொண்டிருக்க ரிஷி வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு சில வருடங்கள் அங்கேயே பணி செய்து கொண்டிருந்தான்.


கடந்த மாதம் தான் தந்தையின் ஆசைக்கிணங்க வேலையை விட்டுவிட்டு குடும்பத் தொழிலை கவனிக்க வந்திருந்தான். சிவகாசியில் இருந்த மூன்று கிளையை விட மதுரை கிளையின் வருமானம் குறைவாக இருப்பதைக் கண்டவன் தான் அக்கிளையை பார்த்துக் கொள்வதாக தந்தையிடம் கூறிவிட்டு நேற்று மாலை தான் மதுரைக்கு இடம் பெயர்ந்திருந்தான்.

மகனை தனியே அனுப்ப மனமில்லாமல் விட்டு செல்வதற்காக ராதா உடன் வந்திருந்தார். அப்போதுதான் அவர்களது வீட்டில் பணிபுரியும் மல்லிகா மதுரை மீன் சந்தையை பற்றி கூறியது நினைவில் வைத்து அங்கு சென்றனர்.

எட்டு மணி வரை உறங்கியவன் அதன் பிறகு எழுந்து குளித்து வர ராதா காலை உணவு தயார் செய்து வைத்திருந்தார். மகனைக் கண்டதும், “கண்ணா சாப்பிடலாமா டைம் ஆயிடுச்சு” என்று அழைக்க மணி ஒன்பதாகியிருந்தது.

தாயுடன் அமர்ந்து பேசிக்கொண்டே காலை உணவை முடித்தவன் தனது மடிக்கணினியை எடுத்து ஏதோ வேலை செய்ய துவங்கினான்.

இங்கு மலர் அன்று வாங்கி இருந்த அனைத்து மீன்களையும் விற்று முடித்து இருந்தாள். தினமும் இதே போல் எல்லா மீன்களும் விற்பனை ஆகாது ஒரு சில நாட்கள் சில மீன்கள் அப்படியே தங்கிவிடும் அதை பாதி விலைக்கு வெளியில் உள்ள கடைக்கு கொடுத்து விடுவாள்.

இன்று அனைத்துமே விற்றதில் முகத்தில் புன்னகை பெரிதாய் பூத்திருந்தது. “எப்படியோ இன்னைக்கு எல்லாமே வித்துருச்சுடா மணி சந்தோஷமா இருக்கு” என்று அருகில் இருந்தவனிடம் கூற, “ஆமக்கா நேத்து பாதி விக்காம போனப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு இதே மாதிரி டெய்லி வித்தா நல்லா இருக்கும்லக்கா” என்று பதில் அளித்தான்.

“ஹ்ம்ம் நல்லா தான் இருக்கும் ஆனால் விக்கணுமே” என்று இழுத்தவள் கடையை மணியுடன் சேர்ந்து கூட்டி கழுவி விட துவங்கினாள். பின்னர் கீழே விரித்து இருந்த தார்ப்பாய் மற்றும் இதர பொருள்களை எடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் கட்டியவள் மணியுடன் வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

போகும் வழியில் சுதாகரன் தனது நண்பன் வீட்டிற்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்று கூறியது நினைவு வர, “டேய் சுதாகர் அண்ணா அவர் ஃப்ரெண்டு வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேணும்னு சொல்லி இருந்தாரு இப்பதான் ஞாபகம் வந்துச்சு நான் போய் பேசிட்டு வரேன்” என்று மணியிடம் கூற, “வீட்டுக்கு போய் சாப்பிட்டு போகலாம்ல க்கா” என்று மணி பதில் மொழிந்தான்.

“இல்லடா போயிட்டு திரும்பி வரணும், அலைச்சல்தான். போகும்போதே பேசிட்டு போயிட்டா நாளைல இருந்து வேலைக்கு வர ஆரம்பிச்சிடலாம்ல அதுவும் இல்லாம வேலை வேற ரொம்ப டிமாண்டா இருக்கு வேற யாராவது போய் கேட்டுட்டா என்ன பண்றது போன மாசமே வீட்டு செலவுக்கு காசு பத்தல நான் போயிட்டு வரேன்” என்றவள் அவனிடம் இரு சக்கர வாகனத்தை கொடுத்துவிட்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

சாலையை கடந்து அண்ணா நகரின் முதல் தெருவில் நுழைந்தாள் மலர். கருணை மலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாதவி ரவிச்சந்திரன் தம்பதியின் முதல் புதல்வி. இரண்டாவது சாகித்யா அடுத்து முரளி கடைசியாக வித்யா. ரவிச்சந்திரன் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சமையல் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் சமையல் கலைஞராக பணிபுரிந்தார். ரவிச்சந்திரனின் சம்பளத்தில் குடும்பத்தை சரியாக நிர்வகித்து வந்தார் மாதவி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் ரவிச்சந்திரன் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை குணப்படுத்த இருந்து பணத்தை எல்லாம் செலவழித்து கடன் வாங்கி எவ்வளவோ முயற்சித்தனர் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை.

திடீரென கணவனை இழந்துவிட்ட மாதவிக்கு திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை. அப்போதுதான் மலர் கல்லூரி முதல் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்தவள் தாய்க்கு உதவியாக குடும்ப பாரத்தை தூக்கி சுமக்க துவங்கினாள். தந்தை இருந்தவரை அவருடன் பள்ளி விடுமுறையில் சமையல் வேலைக்கு சென்றதால் சமையல் திறமை அவளிடமும் இருந்தது. அதைவிட கை பக்குவம் மிகவும் நன்றாக வர பகுதி நேர வேலையாக சமையல் வேலை செய்ய துவங்கினாள்.

மாதவியும் வீட்டிலிருந்தே தையல் வேலை செய்து ஓரளவு குடும்பச் செலவை சமாளிக்க, அதே நேரம் கடன் கொடுத்தவர்களும் கடனை உடனடியாக அடைக்க கூறி மொத்தமாய் முற்றுகையிட வேறு வழி இன்று தங்கள் இருந்த சிறு வீட்டை விற்று முக்கால்வாசி கடனை அடைத்து இருந்தனர்.

அப்போது சாகித்யாவிற்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது தங்கையை தனியே விடுதியில் விட மனமில்லாதவள் தூரத்து உறவினர் ஒருவரது உதவியால் குடும்பத்தினரோடு மதுரைக்கு இடம் பெயர்ந்திருந்தாள்.

இங்கு வந்த பிறகு பக்கத்து வீட்டு ஆட்களின் உதவியால் இந்த மீன் சந்தையில் ஒரு கடையை வைத்து அதே பகுதியில் வசிக்கும் மணியையும் துணைக்கு சேர்த்துக் கொண்டாள். மீன் விற்று வந்த பணம் கடனை அடைக்கவே சரியாக இருக்க வீட்டு செலவிற்கு மிகவும் திண்டாட்டமாக இருந்தது இதுபோக வாடகை வேறு கொடுக்க வேண்டியதாயிருக்க வந்த புதிதில் மிகவும் அல்லாடிப் போனாள்.

இவர்களது துன்பத்தைக் கண்ட பக்கத்து வீட்டு சுமதி தான் வேலை செய்யும் பகுதியில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டாள். அதுதான் சுதாகரின் வீடு. சுதாகர் திருமணமாகி மனைவி மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தான்.

சுதாகரன் மற்றும் அவரது குடும்பம் மலரிடம் நன்முறையில் நடந்து கொள்ள மலரும் அண்ணா அண்ணி என்று உரிமையாக அழைக்கும் அளவிற்கு அவ்வீட்டில் ஒரு வருடமாக வேலை செய்தாள். இந்த நிலையில் சுதாகருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு வர தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு வெளிநாடு சென்றிருந்தான்.

சுதாகரின் வீட்டில் வேலை செய்து வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வருமானம் நின்று போகவும் மீண்டும் பழைய நிலைக்கு உள்ளானாள். அப்போது அவளை காப்பது போல சுதாகரிடமிருந்து நேற்று ஒரு செய்தி வந்திருந்தது.

சுதாகரின் நண்பன் ரிஷி தான் அந்த வீட்டை வாங்கி இருந்தான். ராதா சுதாகரிடம் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று பேசும்போது கூறியிருக்க தன் வீட்டில் முன்பு வேலை செய்த பெண் நன்றாக வேலை செய்வாள் அவளை வரக் கூறுகிறேன் என்று அவர்களிடம் மலருக்காக பேசியிருந்தான்.

அன்றே மலருக்கு அழைத்து கூறி இருந்தான். அதன் விளைவு தான் மலர் இப்போது முன்பு வேலை செய்த அதே வீட்டை நோக்கி சென்றாள்.

பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்தவள் விழிகளால் சுற்றிப் பார்த்தாள். ஒரே மாதத்தில் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு வீடு பளபளவென மின்னியது.

‘ஒரே மாசத்துல வீட்டை புதுசு மாதிரி ஆக்கிட்டாங்களே?’ என்று ஆச்சரியமாக நினைத்தவள் அழைப்பு மணியை அழுத்த இரண்டு நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது.

கதவைத் திறந்த ராதாவை கண்ட மலர், “அம்மா நீங்களா? நீங்க தான காலையில என்கிட்ட இறாலும் நண்டு வாங்கிட்டு போனீங்க?” என்று வியப்புடன் கேட்க, “ஆமாம்” எனும் விதமாக தலையை அசைத்தவர், “நீ எங்க இங்க?” என்று வினா எழுப்பினார்.

“சுதாகர் அண்ணா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டதா சொன்னாங்க” என்று மலர் கூற, “ஓ… வீட்டு வேலைக்கு வந்து இருக்கியா?” என்று வினவியவர், “உள்ள வா” என்று அழைத்தார்.

மலர் உள்ளே வந்ததும் கதவை பூட்டிவிட்டு நீள்விருக்கையில் அமர்ந்தவர் நேர்காணல் செய்யும் தோரணையில், “நீதான் சுதாகர் வீட்ல இதுக்கு முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்தியா?” என்று வினா எழுப்பினார்.

“ஆமாம்மா சமையல் வேலை வீட்டு வேலை எல்லாம் வேலையும் நான் தான் பாத்துட்டு இருந்தேன்” என்று பதில் மொழிந்தாள் மலர்.

ராதா, “காலையில மீன் மார்க்கெட்ல வேலை முடிச்சுட்டு இங்க வந்து வேலை பாப்பியா?” என்று பதில் வினவினார்.

“ஆமாங்கம்மா காலைல நாலு மணியிலிருந்து ஆறரை வரைக்கும் அங்க வேலை பார்ப்பேன் கரெக்டா ஏழு மணிக்கு சுதாகர் அண்ணா வீட்டுக்கு வேலைக்கு வந்துடுவேன்ம்மா” என பதில் இயம்பினாள்.

ராதா அடுத்த கேள்வியை கேட்பதற்குள், “அம்மா…” என்ற ரிஷியின் குரல் இடையிட்டது. குரல் வந்த திசையை நோக்கி ராதா திரும்ப மலரின் பார்வையும் அந்த புறம் நகர்ந்தது.

அங்கே தனது அறையின் வாயிலை அடைத்தவாறு நின்று கொண்டிருந்தான் ரிஷிகேஷவ். அவனது விழிகளை கண்டவளுக்கு அவன் தான் காலையில் வந்தவன் என்று புரிந்தது.

தாயும் மகனும் ஏதோ பார்வையாலே பரிமாறிக் கொள்ள மலர் புரியாது நின்றிருந்தாள்.

மகனின் முகம் பார்த்து அகம் அறிந்தவர், “நீ இந்த வேலைக்கு வேண்டாம் வேற ஆள பாத்துக்குறோம்” என்று கூற, மலரின் முகத்தில் ஏகமாய் அதிர்ச்சி பரவியது.

“அம்மா என்னாச்சு ஏன் திடீர்னு வேணாம்னு சொல்றீங்க?” என்று அதிர்ந்த குரலிலே வினவ, “என் மகனுக்கு மீன் ஸ்மெல்லே ஆகாது. நீ வந்ததும் உனக்கு முன்னாடி மீன் ஸ்மெல் வருது. அதனால்தான் வேணாம்னு சொன்னேன் நான் வேற யாராவது பாத்துக்குறேன் நீ போயிட்டு வா” என்று பதில் அளித்தார்.

அவரது பதில் ஒரு நொடி திகைத்தவள், “அம்மா உங்களுக்கு இந்த மீன் வாசம் தான் பிரச்சனைனா டெய்லி வியாவாரம் முடிஞ்சதும் வீட்டுக் போய் குளிச்சிட்டு ஜவ்வாது போட்டுட்டு நல்லா சுத்த பத்தமா மீன் வாசம் வராத மாதிரி வர்றேன் மா ஒரே ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கம்மா எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்மா இப்பவே போய் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு மீன் வாசம் இல்லாம கிளம்பி வரேன்மா” என்று கெஞ்சலுடன் கேட்க, ராதாவின் பார்வை மகனிடம் சென்றது.

அதை உணர்ந்து, “ப்ளீஸ் சார் இந்த வேலை எனக்கு ரொம்
ப முக்கியம் இதை வச்சு தான் என் குடும்பத்தை பாக்கணும்” என்று தவிப்புடன் கூறியவள் விழிகளில் இறைஞ்சலுடன் அவனை கண்டாள்.














 
Top