பொழுது – 2 💖
மீனாட்சி வணிகவளாகம் வசந்தநகர் பேருந்து நிலையத்திலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்தது. மதிய நேரம் ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டனர். பெரிதாய் சலசலப்புகளற்று காணப்பட்டாலும், ஊழியர்கள் தங்களது பணியில் மூழ்கியிருந்தனர். இரண்டு தளங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த வணிகவளாகத்தில்...