தேன் 6.2

.எழவே மனதின்றி படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் சரிதா அழைத்து விட்டார். “சொல்லுங்கம்மா” என்றிட,  “பாப்பா, சாப்படாச்சா? என்ன பண்ற? ரூம் எல்லாம் பிடிச்சிருக்கா?” என்று கேள்வியை அடுக்க,

“ம்ம்,  நல்லா இருக்கும்மா, இப்ப தான் சாப்பிட்டேன், அப்பா என்ன பண்றாங்க?” என்றாள்.

“அவர் வேலைக்கு போய்ட்டார், கவனமா படிக்கணும். எது தேவைனாலும்  ராகவ்கிட்ட கேளும்மா. தைரியமா இருக்கணும்” என்று பேச அவரது பேச்சு சற்று இதத்தை அளிக்க  உற்சாக எழுந்து அமர்ந்து அவரிடம் பேச  அடுத்து தேன்மொழியும் காவ்யாவும் பேசினார்கள்.

அவர்களுடனான உரையாடல்  அவள் கலக்கத்தை போக்க   மனதை அந்த சூழலை எதிர்கொள்வதற்காக  தயார் செய்வதற்கு உரு போட ஆரம்பித்தது மனது.   பொருட்களை ஒதுங்க வைத்து ஓய்வறை சென்று சுத்தப்படுத்தி வந்தவளின் கவனத்தை   சாளரத்தின்  வழியே கேட்ட   பறவைகளின் ஒலி கலைத்தது.  அதை எட்டிப்பார்த்தவள் அப்படியே மலைத்து நின்று விட்டாள்.   பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்க     அதன் மீதிலிருந்த பறவைகளுடன்  இரம்மியமாக இருந்தது அந்த சூழல்.

சிறிது நேரம் அங்கே நின்று ரசித்தவள்   பின்பு வெளியே சென்று சாப்பிட்டு வந்தாள். ராகவ் சாப்பிடும் இடத்தை காட்டி விட்டு தான் சென்றான்.

அப்படியே வந்தவள் உடல் அசதியில்  படுத்து உறங்கியும் விட்டாள்.   மதியம் வந்த ராகவ் அவளை அழைக்க உறக்கத்தில் இருந்து கலைந்து எழுந்தவள், “ம்ம், சொல்லுங்க” என்றிட, “வெளியில போகலாம், கீழ வா. வாசல்ல இருக்கேன்” என அழைப்பை துண்டிக்க எழுந்து உடை மாற்றி கீழிறங்கினாள்.

அவன் வெள்ளை அங்கி, இருதய துடிப்பு மானியோடு நிற்க, “சாப்பிட்டீங்களா, இதை மாத்தம கூட வந்திருக்கிங்க” என்று  வினவ, “சாப்பாடு வெளியில பார்த்துக்கலாம்” என்றவன் அதை கலட்டி அவளிடம் கொடுத்து, “உன் ரூம்ல வச்சிட்டு வா, போகும் போது எடுத்துக்கிறேன்” என்றான்.

வாங்கி கொண்டு படியேறினாள்.   அவன் பாதி வகுப்பிலே வந்திருந்தான். அவனுக்கு அவளை விட்டு இருப்பு கொள்ளவில்லை. புது இடம் என்ன செய்கிறாளோ ஏது செய்கிறாளோ  என்ற எண்ணமே பிரதானமாக இருக்க கிளம்பி வந்து விட்டான்.

அவள் வர அழைத்துக் கொண்டு  அருகிலிருக்கும்  உணவகம் சென்றவன் முதலில் இருவருக்கும் தேவையான   உணவை ஆர்டர் செய்ய சாப்பிட்டு முடித்தனர். எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. மாயா அந்த இடங்களை கவனித்துக் கொண்டே சாப்பிட்டு முடிய பக்கத்திலிருக்கும் பல்பொருள் அங்காடிக்கு  அழைத்துச் செல்ல   சுற்றி பார்த்தவள் தனக்கு தேவையான ஒரு சில பொருட்களை வாங்கிக் கொண்டாள்.

அங்கிருந்த பலரின் உடையை பார்த்தும் மாயா முகம் சுளித்தாள். அவளது எண்ணவோட்டத்தை அறிந்தவன்,  “இங்க இப்படி தான் இருக்கும். போக போக உனக்கும் பழகிடும்” என்று கூற அவனை முறைத்தாள்.

“ஹேய் லூசு,   நான் என்ன சொன்னேனா பார்த்து பழகிடும். வித்தியாசமா தெரியாதுன்ற அர்த்தத்துல” என்று புன்னகைக்க   தலையாட்டிவளின் இதழிலும் புன்னகை தோன்ற அன்றைய நாள் முழுவதும் வெளியில் தான் சுற்றினார்கள்.

இரவு போல் விடுதிக்கு அழைத்து வந்தவன் அவளது சிறிது தெளிந்த முகத்தில் திருப்தியுற்றவனாக,  “சரி நான் கிளம்புறேன், நாளைக்கு என்னோட க்ளாஸ் மெட்ஸ் தமிழ் தான் இங்க இருக்காங்க. உனக்கு இன்ட்ரோ கொடுக்கிறேன். நாளைக்கு என் ப்ரெண்ட்க்கு பர்த்டே பார்ட்டி, ஈவ்னிங் ரெடியா இரு. மார்னிங்  சீக்கிரமே க்ளாஸ் போய்டுவேன் வர முடியாது” என்று கூறி  தனது மேலாடையை  வாங்கி கிளம்பி விட்டான்.

அவனுடன் இருந்தவரை எதுவும் தெரியவில்லை. ஆனால் அவன் கிளம்பிய நொடி கண்களில் நீர் தேங்கி விட்டது.   தனதறையில் அடைந்து கொண்டாள்.

தனிமை அவளை தாக்க   அப்படியே  சாளரத்தை வெறித்து அமர்ந்திருந்தவள் எப்பொழுது உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.  சரிதா அவளை எங்குமே தனியாக அனுப்பியதில்லை. அவரின்  பிறந்த வீட்டிற்கு செல்லும் போது கூட உடன் அழைத்து செல்லுவாறே தவிர தனியாக தங்கவிட்டதில்லை.

அதனாலே இவ்வளவு மறுகுகிறாள் மங்கை. ராகவ்விற்காக தான் வந்தாள். அவனும் இருக்கிறான் தான் ஆனால் முதலில் அவன் மட்டுமே பிரதானமாக  தெரிந்தவளுக்கு  இப்பொழுது தான் சுற்றுபுற சூழலை உரைத்தது.

முடிந்தளவு தன்னை நிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கி விட்டாள். மறுநாள் எழுந்தவள் குளித்து உண்டு விட்டு அறையில் அடைந்து கொண்டாள்.  அதிகாலையிலே மகேஷ் அழைத்து விட இருவரிடமும் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.  கிளம்பும்  முன் ராகவும் அழைத்து அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை உறுதி செய்து  விட்டு கல்லூரி கிளம்பினான்.

மாலையில் அவனுடன் பிறந்தநாள் விருந்திற்கு கிளம்பி விட்டாள். கேளிக்கை விடுதிக்கு  தான் அழைத்துச் சென்றான்.  பல யுவன் யுவதிகள்  தங்கள் போல் நடனமாடிக் கொண்டிருக்க  எந்த வித கட்டுப்பாடும் இல்லை. மற்றொரு புறம் ஆண், பெண் பேதமில்லாமல் எல்லோருமே குடித்துக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்தவள் மிரட்சியுடன் அவன் கையை பற்றிக் கொண்டாள்.

உடை கட்டுப்பாடு முதல் எல்லாவற்றிலும் ஒரு வித கட்டுப்பாட்டில் வளர்ந்தவளுக்கு  இந்த வாழ்க்கை முறை ஒரே நாளில் அதிக அச்சத்தை  தான் அளித்தது.  இரண்டு நாளுக்கே கண்களை கட்டிக் கொண்டு வருகிறதே இதில் எவ்வாறு நான் வருடங்களை கடத்தப் போகிறேன் என்ற பயம் துளிர்த்தது.  அவளது முக பாவனையிலே அவளை உணர்ந்த ராகவ்,  “ரிலாக்ஸ் மோகனா, வா” என அவளை அழைத்துச் சென்று  ஓரமாக நாற்காலியில் அமர வைக்க இன்னும் அவளது பார்வை மிரட்சியில் இருந்து வெளி வரவில்லை.

“இங்க இப்படி தான் இருக்கும், நம்ம ஊர் மாதிரி இருக்காது. போகப் போக உனக்கே புரியும்” என்று கூற தலையை மட்டும் அசைத்தவள்  எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்திருந்தாள்.  சென்னையிலும் இது போல் பல இடங்கள் இருந்தாலும்  அவள்  சரிதாவுடன் கோயிலை தாண்டி எங்கும் சென்றதில்லை. அங்கு ஒரு சில இடங்கள் மட்டுமே இப்படி இருக்க இங்கே எல்லாமே அவ்வாறு இருந்தது.

சிறிது நேரத்தில் ஒரு கூட்டமாக  மாணவர்கள்  அவர்களை நோக்கி வர ராகவ் எழுந்து நின்றான்.

“ஹாய் ராகவ்” என்று கையசைத்த சில மாணவர்களும் மாணவிகளும் அவனை கட்டியணைக்க   மாயா  அதையே அதிர்ச்சியுடன் பார்த்து அமர்ந்திருந்தாள்.

அவர்களிடமிருந்து சற்று விலகியவன் மாயாவை பார்த்து வா என்பது போல்   கண்களால் அழைக்க எழுந்து அவனருகில் சென்றாள்.  அவன் அவளை தன்னுடைய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த  அவளையும் கட்டி அணைத்தனர். மாணவர்கள்களுடன் கைக்குலுக்கலோடு நிறுத்திக் கொண்டாள்.  இதுவே அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
இரண்டு  மாணவிகளை அழைத்த ராகவ், “மோகனா, இவங்க தமிழ் தான். ஹாஸ்ட்டல்ல தான் இருக்காங்க, ஏதாவது வேணும்னா கேட்டுக்கோ” என்று கூற அந்த  மாணவியும்  மாயாவின் இறுக்கமான முகத்தை பார்த்து,  “ரிலாக்ஸ், எல்லாமே பழகிடும், நாங்களும் உன்னை மாதிரி தான் இருந்தோம். நம்ம ஊரை விட  இங்க தான் ரொம்ப கம்பர்ட்டா இருக்கு” என்று அவள் கன்னத்தை தட்டிட மாயா மெலிதாக புன்னகைத்தாள்.

அடுத்ததாக ஒரு சிறிய அறை போன்ற தடுப்புக்கு செல்ல  பெரிதாக கேக் வைத்திருந்தனர். கூச்சல் ஆர்பாட்டத்தோடு அதை வெட்ட அந்த இடமே இசையால் அதிர்ந்தது.  மாயா பயத்தில் மேலும்  ராகவ்வை  ஒட்டியே நிற்க அவள் தோள் மேல் கைப் போட்டு தன் அருகிலே வைத்துக் கொண்டான்.

மாயாவால் எதிலுமே ஒன்ற முடியவில்லை.  விலகல் தன்மையுடனே இருந்தாள்.  சிறிது நேரத்தில்  அவன் அறிமுகப்படுத்திய மாணவிகள் மாயாவை அழைக்க அவள் ராகவை பார்த்தாள். போ என்று கண்காட்ட அவர்களுடன் சற்று தள்ளி சென்றாள். அவர்கள் நடனமாடி  அவளையும் ஆடுமாறு கூற மறுத்து தலையாட்டியவள் அருகிலே நின்று வேடிக்கை பார்த்தாள்.

அடுத்ததாக  அவர்கள் இருவரும் பீர் ஆடர் செய்ய மூவருக்குமே கொண்டு வந்தனர். எடுத்துக் கொண்டவர்கள் மாயாவை எடுக்க சொல்ல அரண்டவள்  வேகமாக எல்லா புறமும் தலையாட்டினாள்

“ஏன் இப்படி இருக்க நார்மலா இரு, உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்.  லெமன் ஜூஸ் குடி” என்று அவளுக்கு வாங்கி கொடுக்க  இதையும் மறுக்க இயலாது வாங்கி குடித்தாள்.

சிறிது நேரத்தில் அவளது விழிகள் ராகவை தேட வந்து விட்டான் அருகில்.

“என்ன மோகனா? ஏதாவது வேணுமா?” என்று கேட்க,  “கிளம்பலாமா?” என்றாள்.  “இப்ப தான வந்தோம், இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். உடனே கிளம்புனா ஏதாவது நினைச்சுக்குவாங்க” என்றவன் அவளை தன் அருகிலே அமர்த்திக் கொண்டான்.

மாயா எல்லாவற்றையும் விழி விரிந்து வேடிக்கை  பார்த்திருந்தாள்.   ராகவ் இருவருக்கும் சாப்பிட வாங்கி வர ஓரமாக மேஜையில் அமர்ந்தனர்.

அவள் சாப்பிடாமல்  இருக்க, “சாப்பாடு பிடிக்கலையா?” என்றான்.  இல்லையென்று மறுத்து தலையாட்டியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளிடம் பேசிய மாணவிகள் முழுவதுமாக குடித்து விட்டு  ஆட்டம் போட,  “ராகவ், இவங்க எல்லாம் நம்ம ஊர்க்காரங்க தான?   அப்புறம் ஏன் இப்படி இருக்காங்க” என்று நெடுநேர சந்தேகத்தை வினவ,

“எப்படி இருக்காங்க?” என்று அவளை எதிர்கேள்வி கேட்க,  “டிரெஸ்சிங் அப்புறம் ஆக்டிவிட்டிஸ்” என்று இழுக்க,

“முதல்ல வந்தப்ப இவங்க உன்னை விட மோசமா அழுதாங்க. அப்புறம் பழிடுச்சு இப்ப பார் இதுக்கு அடாப்ட் ஆகிட்டாங்க. மேபி நீயும் பியூசர்ல இப்படி ஆனாலும் ஆச்சரிபடுறதுக்கில்லை” என்று கூற அவனை முறைத்தவள்,

“நான் எப்பயுமே இப்படி தான் இருப்பேன். மாற மாட்டேன்” என்று உறுதியாக கூற தலையாட்டி சிரித்தவன், “பார்க்கலாம்” என்றிட   அவர்களை நோக்கி  வந்த ஒரு பெண், “ஹாய் ராகவ்” என்று  அவன் அருகில் அமர,  “ஹாய் விது, ஏன் இவ்வளவு லேட்” என்றவன் பேச ஆரம்பிக்க சிறிது நேரம் அப்படியே சென்றது. மாயா எல்லாவற்றையும் பார்த்து அமர்ந்திருக்க மாயாவையும் அவளிடம் அறிமுகப்படுத்த மெலிதாக புன்னகைத்தாள்.

இறுதியில் எழுந்து கொண்டவள்,  “ராகவ் நான் கேட்டது என்னாச்சு?” என்று கேள்வியாக நிறுத்த,  “விது, ப்ளீஸ் ட்ரை டூ அன்டர்ஸ்டான்ட். ஐயம் நாட் இன்ட்ரஸ்டட்” என்றான்.

“சரி  லவ் வேண்டாம், ஜஸ்ட் ஒன் டே டேட்டிங் போகலாம். டேட் நீயே பிக்ஸ் பண்ணு, எப்பனாலும் எனக்கு ஓகே” என்றவள் அவன் எதிர்பாராது  நெருங்கி கன்னத்தில் இதழ் பதிக்க  ராகவோ வேகமாக மாயாவை ஆராய  அவள் வெளிப்படையாகவே முறைத்து அமர்ந்திருந்தாள். 

error: Content is protected !!
Scroll to Top