தேன் 5.2

சில நிமிடங்களில் அவளே விலக நினைத்தாலும் அவரது கைகள் விடவில்லை. “சரிதா, டையமாகிடுச்சு. அவளை விடு” என்று மகேஷ் அதட்டிய பின்பே  சுதாரித்தவர் அவளது நெற்றியில் இதழ் பதித்து,  “கவனமா இருக்கணும் மாயா,  தினமும் அம்மாக்கு கால் பண்ணனும். நல்லா படிக்கணும்” என்றவர் கைகள் விருப்பமே இன்றி அவளுக்கு விடை கொடுத்து.

அவளது தலையை வருடிய மகேஷ், “கவனம்மா, புது இடம். பழக நாளாகும், ஃபுட் எல்லாம் கொஞ்சம் சிரமம் தான். பார்த்துக்கோ, எப்பயுமே அப்பாவும் அம்மாவும் உனக்காக காத்திருப்போம். இன்கேஸ் உன்னால  இருக்கவே முடியலைன்னா  எதை பத்தியும் கவலைப்படாத வந்திடு. அப்பா இருக்கேன், உன்னை தவிர பணம் எல்லாம் பெரிய விஷயம் இல்லை” என்று மகளை அறிந்தவராக  கூறி அவளது கையில் அழுத்தத்தை கொடுக்க,  “நீங்க அம்மாவை பார்த்துக்கோங்கப்பா. என்னை பத்தி கவலைப்படாதீங்க, நான் மேனேஜ் பண்ணிப்பேன். ஐயம் நாட் எ கிட்” என்றவளை புன்னைகையுடன் நோக்கியவர்,

“உனக்கு எத்தனை வயசானாலும் எங்களுக்கு நீ கிட் தான் தென்  இப்ப நிம்மதியா இருக்கு. என் பொண்ணு அவளை பார்த்துக்கிற அளவுக்கு வளர்ந்திட்டா போல நாங்க தான் கவனிக்கலை” என்று சன்னமான. சிரிப்போடு கூற,

“ப்பா” என்று சிணுங்களோடு அவரது தோள் சாய்ந்தவள்  கிளம்பி விட்டாள்.

அவருக்கும் கண்கள் எல்லாம் கலங்கி தான் போனது, பெண் குழந்தை என்றிருந்தாலும் திருமணமாகி இன்னொரு வீட்டிற்கு சென்று விடுவார்  என்ற நிதர்சனம் ஆரம்பத்தில் இருந்து புரிந்தாலும் அதை ஏற்க மனித மனம் தடுமாறி தான் போகிறது.  ஆனால் அவள் இன்னும் சற்று நாட்கள்  திருமணம் வரை தங்களுடன் இருப்பாள் என்று எதிர்பார்த்திருக்க  இந்த பிரிவு  ஏற்க  அவர்களுக்கு சிரமமாக இருந்தது.
அவள் வந்த உடனே திருமணம் செய்து விட வேண்டும் அப்படியே இல்லையென்றாலும் மிஞ்சிப் போனால் ஒரு சில சொற்ப வருடங்களோ மகள் தங்களுடன் இருப்பாள் என்று  பல விதங்களில் எண்ணியது அவரது மனம்.

அவளும் திரும்பி திரும்பி பார்த்து சென்றாள். மனதை  பிசைந்தது அவர்கள் நின்ற நிலை. வேறு வழியின்றி கண்ணீரை துடைத்து  உள்ளே நுழைந்து கொண்டாள்.

அவள் கிளம்பிய நொடி சரிதா முகத்தை மூடி அழுக ஆரம்பிக்க, “சரிதா கூல்,  படிக்க தான போறா. ஏன் இப்படி பண்ற? வா வீட்டுக்கு போகலாம்”   என்று  மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்றவர்  ராகவை அழைத்து விட்டார்.

“சொல்லுங்க மாமா” என்றிட,  “ராகவ், மாயாவ ப்ளைட் ஏத்தி விட்டேன். பிக்கப் பண்ணிக்கோப்பா, அப்புறம் அவளை கொஞ்சம் பார்த்துக்கோ. சின்ன பொண்ணு” என்றவரின் குரலில் வலி நிறைந்திருந்தது.  ராகவ்விற்கு அவள் வருவது பிடிக்கவில்லை. அவனே வெகு சிரமப்பட்டு அந்த சூழலோடு பொருந்தினான். அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்று நினைத்தவன்   வர வேண்டாம் என்று நேரடியாகவே கூற  அவளோ செல்வதில் உறுதியாக இருந்தாள்.

“நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்” என்றவன் சிறிது நேரம் சரிதாவை சமாதானம் செய்து விட்டே அழைப்பை துண்டித்தான்.

மாயா விமானத்தில் ஏறி கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். வெகுநேரம் சரிதாவையும் மகேஷையும் நினைத்தவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது. அவள் ஏதோ விளையாட்டாய் தொடங்கி விட்டாள் ஆனால் இப்பொழுது அவர்களை விட்டு செல்வதால் மனதை பாரம் அழுத்தியது.  வெகு நேரம்  அழுதிருந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.

விமான தரையிரங்கும் நேரத்தில் அவளுக்கு விழிப்பு தட்டி விட்டது.  நேற்றைய நினைவுகள் அழுகை எல்லாம் பின்னால் போக   சற்று நேரத்தில் ராகவை காண போகின்ற ஆர்வம் வந்து ஆர்பரித்தது.
முழுதாக ஒரு வருடம்  கழித்து அவனை காண போகிறாள் என்ற நினைப்பே தித்திப்பாய் இருந்தது. எந்த நொடி அவன் தன்னை இப்படி ஆக்கிரமித்தான் என்று கேட்டாள் அவளிடம் பதிலில்லை.

ஏற்கனவே உள்ளுக்குள் அவனிடம் தோன்றிய ஈர்ப்பை இந்த பிரிவு  பிரவாகமாக  பொங்க வைத்து விட்டது. 

விமானம் ஏறும்  பொழுது சரிதாவை நினைத்துக் கொண்டிருந்தால் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.     விமானம் பஞ்சு பொதி போன்ற மேகத்திலிருந்து மெதுவாக விலகி  தரையிறங்க சன்னல் வழியாக பார்த்து   அந்த இடத்தின்  அழகில்லயித்து விட்டாள்.

அது தரையிறங்க மெதுவாக  பார்வையை சுற்றி பதித்துக் கொண்டே  கீழிறங்கி  வந்து தனது  உடைமைகளை  வரிசையில்  நின்று வாங்கி வெளியே வந்தவள் விழிகள் ராகவை தேடியது.  

அப்பொழுது தான் உள்ளே நுழைந்தவன் அவளை கண்டு விட்டான்.

“மோகினி” என்றவனின் குரலில் திரும்பியவளை பார்த்து  புன்னகைத்து கையசைக்க அவனை நெருங்கி சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top