தேன் 1.2

  இருசக்கர வாகனத்தில் தான் பள்ளிக்கு செல்லுவான். கிருபாகரனுக்கு வாங்கி தர விருப்பமில்லை என்றாலும்  அழுது அடம்பிடித்து உண்ணாவிரதம் என்று  பல போராட்டாங்களை நடத்திட பத்தாம் வகுப்பில் நானூற்றி எழுபதிற்கு மேல் மதிப்பெண் எடுக்குமாறு கட்டளை தேன்மொழி  விதிக்க  நானூற்றி தொன்னூற்றி இரண்டு பெற்று வண்டியும்  வாங்கி விட்டான்.  கொடுக்கும் பொழுதே  அதிக வேகத்தில் செல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு கொடுக்க அந்த விதிமுறை எல்லாம், அவர்கள் வீட்டை தாண்டி தேன்மொழி கண்ணிலிருந்து  மறையும் வரை மட்டுமே.

சிறிது நேரத்தில் தேன்மொழியும்  கிருபாகரனும் வந்து விட அவர் அலுவகத்திற்கு கிளம்பி விட இவன் பள்ளிக்கு கிளம்பினான்.

“ராகவ் சாப்பிட்டு போடா, எடுத்து வைச்சிட்டேன்” என்ற தேன்மொழியின் குரல் காற்றோடு கரைய பறந்து விட்டான்.

பள்ளிக்கு சென்றவன் தன் நண்பர்களுடன் அமர்ந்து தேர்வு அறை வாயிலில் பேசிக் கொண்டிருக்க      மாயாவும் அவளது தோழியும் அந்த அறையில் இருக்கும் ஆசிரியரை பார்ப்பதற்காக நுழைந்தனர்.

அவளை தூரத்திலே பார்த்து விட்ட ராகவின் நண்பர்கள் வேண்டுமென்றே ராகவ் ராகவ் என்று குரல் கொடுக்க அவள் அவனை முறைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைந்தாள்.  “வாயை மூட்டிட்டு சும்மா இருங்கடா, ஏதாவது இழுத்து விட்றாதீங்க”  என்றவன் அவர்களை முறைக்க அமைதியாகி விட்டனர்.

ராகவிற்கும் அவளுக்கும் இடையில் முட்டிக் கொண்டாலும் அதையும் மீறி அவளிடம் ஒரு ஈர்ப்பு அவனுக்கு எப்பொழுதுமே  உண்டு. அவளுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னிலை வகிப்பது அவனே. 

அன்று மாயா பள்ளி முடித்து  காவ்யாவிற்காக காத்திருக்க   வேறு பிரிவை சேர்ந்த பனிரெண்டாம்  வகுப்பு மாணவன் காதல்  கடிதம் கொடுக்க அவள் வாங்காமல் மறுத்து நின்றாள் பள்ளியின் வாயிலில். கிட்டதட்ட ஒரு ஐந்து மாணவர்களுக்கு நடுவில்.

“நீ என்ன பெரிய உலக அழகியா?  திரும்பியே பார்க்க மாட்ற? என் மச்சான் எத்தனை நாளா உன் பின்னாடி சுத்துறான் தெரியுமா? கொஞ்சம் அழகா இருந்தா போதுமே ரொம்ப சீன் போடுவியே. சாயந்தரம் வரை தான் உனக்கு டைம், டியூசன் வரும் போது ஓகே சொல்லணும். இல்லை உன்னை அவ்வளவு தான்” என்று மிரட்டி கொண்டிருக்க அவளுக்கு கண்ணெல்லாம் நீர்  தேங்கியது. அவனை எதிர்த்து பேச மூளை கூறினாலும்  நா வறண்டிருக்க   கைகளிருந்த புத்தகத்தை கெட்டியாக மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள்.

அவளது விழிகள்  ஆட்டோக்காரர்  வந்து விட மாட்டாரா என  ரோட்டையே பார்த்திருக்க    தேர்வு  முடித்து  தனது வண்டியில் வெளி வந்து விட்டான் ராகவ்.

அவனை தூரத்திலே பார்த்த அந்த மாணவன் தன் நண்பனிடம், “டேய் ராகவ் வரான்டா” என்று கூற,  “அவன்கிட்ட சொன்ன உன்னை விட்டுடுவோம். ஆனா அவனை தூக்கிடுவோம்” என்று விரல் நீட்டி மிரட்டி விலகி நின்று  கொள்ள,  வெளியேற போன ராகவ்  அவளை பார்த்து அவளருகில் வண்டியை நிறுத்தினான்.

ஏற்கனவே அந்த மாணவர்களுக்கும் ராகவ் குழுவிற்கும் ஆகாது.  அவர்கள் வேண்டுமென்றே ராகவ்  மீதுள்ள கோபத்தில் தான் இவளிடம் வம்பிலுத்துக் கொண்டிருக்கின்றனர். நேரடியாக  அவனிடம் சென்றால் முதலில் அடி தான் அதற்கு பின் தான் பேசுவான். 

“என்ன இங்க நிற்கிற?” என்று  கேட்க  அவனை திரும்பி பார்த்தவள், “காவ்யாவுக்காக வெயிட் பண்றேன்” என்றாள் இறங்கிய குரலில்.

எப்பொழுதும் அவன் கேள்வி கேட்டால் ஏட்டிக்கு போட்டியாக பதில் கூறுபவள் இன்று அமைதியாக இருக்க அவனது கண்கள் அவள் முகத்தே ஆராய கண்கள் கலங்கி இருந்தது. சற்று பதற்றத்துடன் தான் இருந்தாள்.

“என்னாச்சு அழுதியா?” என்று சரியாக கணித்து கேட்க அவன் கண்டறிந்ததில் பயந்தவள்   ஒன்றுமில்லை என தலையாட்டி முகத்தை  திருப்பி  கண்ணீரை உள்ளிழுத்து காவ்யா வருகிறாளா என்று ஆராய ஆரம்பித்தாள்.

அருகில் நின்றிருந்த அந்த மாணவர்களை பார்த்த ராகவ் வண்டியை நிறுத்தி இறங்காமல் அவள் அருகில் நின்றிருந்தான். இதே போல் ஏற்கனவே ஒரு முறை இவளிடம் வம்பிலுக்க அவர்களை அடித்து வெளுத்து விட சண்டை பெரிதாகியது. எதற்கு அடித்தேன் என்று அவனும் வெளியில் கூறாதிருக்க அடி வாங்கியவனும் வாய் திறக்காது போக  தலைமையாசிரியர்  பாரபட்சமின்றி இருபக்கமும் தண்டனை வழங்கினார்.

அவளை வெகுநேரம் சோதிக்காது  வந்த காவ்யா, “ரொம்ப நேரம் வெயிட் பண்ணீங்களா? சாரிக்கா” என்று அருகில் வர  லேசாக தலையாட்டி சிரித்தாள் மாயா.

“இவ்வளவு நேரம் என்ன பண்ண? கிளாஸ் அப்பவே முடிஞ்சது இல்லை” என்று  கடிந்தவன்  வழியை பார்க்க ஆட்டோக்காரர் வந்து விட்டார்.
இருவரும் ஏறிய பின்பே அவனும் தனது வண்டியில் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவன் டியூசன் செல்லுவதற்கு தயாராகி வெளியேற போக, “டேய் மாயாவையும் கூட்டிட்டு போடா, சரிதா அத்தை இன்னைக்கு வர லேட்டாகுமா” என்று  தேன்மொழி குரல் கொடுக்க,  “ஏன் மேடம் கீழ வர மாட்டாங்களா?” என்று முணங்கியவன் வேகமாக படியேற  மாயா பயத்தில் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வீட்டில் சொன்னால் கண்டிப்பாக பிரச்சனை பெரிதாகும் ராகவிற்கு தெரிந்தால் அவ்வளவு தான்.  ஆனால் அதை பற்றி கூட அவளுக்கு கவலையில்லை. ஒரு பிரச்சனை என்று வந்த பிறகு மற்றவர்களின் ஏதார்த்த பார்வை கூட நம்மளை அதிகமாக பாதிக்கும். அது படிப்பை கெடுக்கும் என்றெல்லாம் எண்ணியவளுக்கு இதை எவ்வாறு சரி செய்வது என்று தெரியவில்லை.

டியூசன் செல்வதா வேண்டாமா வீட்டிலிருந்தால் சரிதா கேட்கும் கேள்விகளுக்கும் ஆராய்ச்சி பார்வைக்கும் பதில் கூற முடியாதே என்றவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக அழைப்பு மணி ஒலித்தது.

கதவை திறந்தவுடன், “மேடமை அழைக்க ஆள் வரணுமோ? இன்னும் கிளம்பாமா என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவனின் அதிகார குரலை எதிர்க்க இயலாது பையை  எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

கதவை பூட்டாமல் கிளம்ப, “ஏய் மோகினி கதவை பூட்டாம போற” என்றவன் சிறிதாக சிரிக்க,
“மோகினினு கூப்டாதீங்கனு எத்தனை தடவை சொல்றது” என்று பல்லைக் கடித்தவள்  கதவை பூட்டி வர,

“அப்படி தான் சொல்லுவேன், என்ன பண்ணுவ  மோகினி” என்றவன் புருவம் ஏறி இறங்க  அவனை கவனிக்கும் மனநிலையில் இல்லாதவள் படிகளில் வேகமாக இறங்க,
“பிசாசு, கூப்பிட வந்தவனை விட்டுட்டு போறா பார்” என்று அவளின் பின்னால் இறங்கி ஓடியவன் வண்டியை எடுக்க  பின்புறம் ஏறிக் கொண்டாள்.

அவளுக்கு இன்று என்ன நடக்குமோ என்ற பயத்தில்  வியர்த்து வடிய ஒரு வித நடுக்கத்துடனே அமர்ந்திருந்தாள். இவன் வேறு வண்டியை அதிக வேகத்தில் செலுத்த கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது, “இவ்வளவு வேகமாக எதுக்கு போறீங்க?” என்று சற்று கோபமாக கேட்க,

“நான் என்ன மாட்டு வண்டியா ஓட்டுறேன். விருப்பமில்லைன்னா எதுக்கு என் கூட வர்ற” என்று அவளை வம்பிலுத்தவன் அவளிடம் பதில் எதிர்பார்க்க அவள் அமைதியாகி விட்டாள்.

“சரி, இவன் இருக்கும் போது அவனுங்ககிட்ட வர மாட்டான்க”  என்று எண்ணி தன்னை சமன் செய்து கொண்டிருக்க வண்டியை டியூசன் சென்டர் வாசலில் நிறுத்தியவன்,

“ஏய் மோகினி, இன்னைக்கு என் ப்ரெண்ட்க்கு பர்த் டே சோ பக்கத்தில  செலிபிரேட் பண்ண போறோம். வழக்கம் போல டியூசன் கட் பண்ணதை அம்மாகிட்ட போட்டு கொடுத்த மண்டை வீங்கிடும்” என தன் வண்டியை திருப்ப  அவளுக்கு தான் தூக்கி வாரி போட்டது.

“இந்த லூசை நம்பி வந்தா  இப்படி கழட்டி விட்டு போறானே” என புலம்பியவள் வேறு வழியின்றி உள்ளே நுழைய ஏற்கனவே ஆசிரியர் வந்திருக்க  வேகமாக தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

முதலில்  தயங்கிய அவளது மூளை பாடத்தில் ஒன்றி விட குறிப்பெடுக்க ஆரம்பித்தவள் அந்த நிகழ்வை  மறந்து போயிருந்தாள்.

டியூசன் முடிய வேகமாக அடுத்த அறைக்கு சென்று ராகவ் வந்து விட்டானா என ஆராய்ந்தவள் அவனுக்கு அழைக்க,  “வெயிட் பண்ணு, பக்கத்தில தான் இருக்கேன் வந்திடுறேன்” என்று அழைப்பை துண்டிக்க,  ‘இவன் வேற சொதப்புறானே’ என்றவள் பயத்திலே வெளியில் நின்றிருக்க  அவள் தோழியும் தனது அண்ணனுக்காக காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவன் அண்ணனும் வந்து விட  அவள் புறப்பட்டு விட்டாள்.

அதுவரை காத்திருந்தவர்கள் அவள் அருகில் நெருங்க பயத்தில் அவள் கைக்கால் நடுங்க ஆரம்பித்தது.

error: Content is protected !!
Scroll to Top