“ஹ்ம்ம் பிராப்ளம் தான்” என்று அவளிடம் எதையும் மறைக்க விரும்பாதவன் நடந்ததை கூற,
அதனை கேட்ட ஹனியின் முகமெங்கும் வருத்தம் அச்சத்தின் சாயல்.
தன் வீட்டில் இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போதுதான் இவனுடைய வீட்டிலும் திருமணத்திற்கு வற்புறுத்த வேண்டுமா? இப்போது குரு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டால் தான் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது.
அவளது முகத்தை வைத்தே அகத்தை அறிந்தவன்,
“ஹனி டோன்ட் பேனிக். நான் இந்த ரீசன்னால உன்னை நான் எப்பவும் மேரேஜ்க்கு கம்பெல் பண்ண மாட்டேன். நான் சொன்னது சொன்னது தான் நமக்கு டூ இயர்ஸ் அப்புறம் தான் மேரேஜ். சோ ஜெஸ்ட் கூல்” என்க,
சடுதியில் அவளது பயம் அகன்றிட,
“லவ் யூ லாட் லாட் குரு. யூ ஆர் மை ப்ரிசியஸ் கிஃப்ட் இன் தி வோர்ல்ட்” என்று உணர்ச்சிவசப்பட்டாள்.
“ஹே ஹனி போதும் டோன்ட் கெட் எமோஷனல்” என்று அவளது செய்கையில் புன்சிரிப்புடன் கூற,
“ஐ காண்ட் கன்ட்ரோல் மை எமோஷன். நீ தான் எல்லாத்தையும் வாங்கிக்கணும். யூ ஆர் மை மேன்” என்று சிரிப்புடன் கூறியவளது வதனமெங்கும் நேசம் தான்.
குருவின் முகத்தில் மென்னகை படர்ந்தது.
“குரு நாம இதுக்கு புதுசா எதாவது சொல்யூசன் தான் கண்டுபிடிக்கணும்” என்று ஹனி கூற,
“எஸ் வி நீட் டு பைண்ட் எ சொல்யூசன். அதுவும் சீக்கிரமே” என்றான் குரு.
“குரு இப்படி பண்ணா என்ன?” என்று ஹனி வினவ,
என்னவென்பது போல குரு நோக்க,
“பேசாம உங்க அம்மா சொல்ற மாதிரி நீ மேரேஜ் பண்ணிக்கோ. பட் அது அக்ரிமெண்ட் மேரேஜா இருக்கட்டும் டூ இயர்ஸ் அப்புறம் டிவோர்ஸ் வாங்கிக்கலாம். தென் நான் என்வீட்ல பேசி எப்படியாவது கன்வின்ஸ் பண்றேன் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்” என்க,
அவளை முறைத்தவன்,
“சீரியர் ட்ராமா எல்லாம் பாத்து ரொம்ப கெட்டு போய்ட்ட நீ” என்க,
“ஆமா கெட்டு போய்ட்டேன். இப்போ அதனால தான ஒரு நல்ல ஐடியா கிடைச்சிருக்கு. இந்த ஐடியால நிறைய பெனிபிட்ஸ் இருக்கு. இப்போதைக்கு பிராப்ளம் சால்வ்ட். டூ இயர்ஸ்க்கு எந்த இஸ்யூவும் இல்லை. டூ இயர்ஸ்க்கு அப்புறம் நமக்கு தேவையானப்போ டிவோர்ஸ் வாங்கிக்கலாம். எனக்கே இதுல அப்ஜெக்ஷன் இல்லாத போது நீ ஏன் இவ்ளோ திங்க் பண்ற” என்க,
“இல்லை இது சரிவராது நான் வேற எதாவது பாக்குறேன்” என்று முடித்தவன் பின்னர் சில பல நிமிடங்கள் வேறு பேச்சுக்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அதன் பின்னர் தொழில் எல்லாம் பின்னுக்கு போய்விட இந்த விடயம் தான் பிரதானமாக இருந்தது. என்ன செய்வது என்று பலவாறாக யோசித்தும் ஒரு வழியும் பிடிபடவில்லை.
மறுநாள் இரவு யோசித்து யோசித்து அலுப்புடன் பால்கனியில் வந்து நின்றுவிட்டான்.
எலும்பை ஊடுருவும் குளிர்காற்றை அவன் பொருட்படுத்தாமல் கைகளை கட்டி கொண்டு வானத்தினை வெறித்தான்.
அப்போது அதே சமயம் தான் மகியும் வெளியே நின்று வானத்தை வெறித்து கொண்டிருந்தாள்.
சிந்தனையுடன் இருளை வெறித்தவனது விழிகளுக்கு புலப்பட்டது கைகளை கட்டி கொண்டு இருட்டில் வானத்தை வெறித்தபடி நின்றிருந்த மகியின் தோற்றம்.
முகத்தில் விழுந்த கூந்தல் இழைகளை அடிக்கடி ஒதுக்கிவிட்டவாறு வானத்தையே பார்த்து கொண்டிருந்தவளில் தான் அவனது பார்வை நிலைத்தது.
மனதில் திடீரென ஒரு மின்னல் தோன்றியது. தொழில் செய்தவனின் மூளை வேகமாக நடந்த நிகழ்வுகளை தொடர்புபடுத்தி கணக்கிட்டது.
இதற்கு ஹனி கூறியது போல ஒப்பந்த திருமணம் தான் ஒரே வழி அதற்கு பொருத்தமான ஆள் இதோ இங்கு அமைதியாக இருளில் நின்றிருக்கிறாளே இவள் தான் சரியாக வருவாள் காரணம் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று இவள் தனது தாத்தாவிடம் கூறியது மற்றொன்று அவளுடைய தற்போதைய பணத்தேவை.
தம்பியின் படிப்பு செலவிற்கு பணம் வேண்டுமென கடனுக்கு விண்ணப்பித்திருந்தாளே.
தான் அவளிடம் தம்பியின் படிப்பு செலவு மொத்தத்தையும் ஏற்று கொள்வதாக கூறினால் நிச்சயமாக ஒத்து கொள்வாள்.
பணத்திற்கு அடிபணியாதோர் இவ்வுலகில் உண்டா? என்று பலவாறாக சிந்தித்தவன்.
இந்த பிரச்சனைக்கு இது தான் தீர்வு அதுவும் இவள் தான் அதற்கு பொருத்தமான ஆள் என்று முடிவு செய்துவிட்டவன் அலைபேசியை எடுத்து யாரிடமோ வரிசையாக ஆணைகளை பிறப்பித்தான்.
மறுநாள் காலையில் குருவிற்கு மகிழினியின் குடும்பம் பிண்ணனி தற்போது அவள் வீட்டை விற்கும் முயற்சியில் இருப்பது வரை அத்தனை தகவல்களும் வந்து சேர்ந்தது.
அத்தனை பார்த்து முடித்தவன் உறுதியாக முடிவு செய்திருந்தான் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு தனக்கு மனைவியாக நடிக்க போகிறவள் மகிழினி தான் என்று.
அதன் பிறகு தான் அன்று அலுவலகத்திற்கு வந்து மகிழியினிடம் பேசியது.
அவளிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது மகிழிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.
அன்று ஒரு வேலைக்காக குரு இனிப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்றிருக்க அவனை சந்திக்க அனுமதி வேண்டி வந்து நின்றாள் மகிழினி ஸ்வாமிநாதன்.
குருவிற்கு அவள் தன்னுடைய முடிவை தான் கூற வந்துள்ளாள் என்று தெரிந்தது.
அவள் நிச்சயமாக தனக்கு சாதகமாக தான் பதில் கூறுவாள் என்று நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தது. காரணம் பணம் தான். லட்ச லட்சமாக அவன் கொடுப்பதாக கூறிய பணம் தான்.
அவள் உள்ளே வர அனுமதி அளித்த குரு அமைதியாக உள்ளே வந்தவளிடம் அமருமாறு கூறினான்.
குருவிற்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்த மகிழ் ஒரிரு நிமிடங்கள் அமைதியாக அவனை நோக்கினாள்…
குரு அவளது முடிவை எதிர்நோக்கினான் இல்லையில்லை அவளது சம்மதத்தை அவள் வாயிலாக கேட்க ஆவலாக இருந்தான்.