காதல் 5.2

அத்தனை அழுத்தக்காரன். அவன் சம்மதத்தை வாங்குவதை நினைத்து தான் கோதை அத்தனை அஞ்சினார் அதை போலவே மகனும் செய்துவிட்டான்.

இப்போது என்ன செய்வது என்ன செய்து மகனை சம்மதிக்க வைப்பது என்று தெரியாது பரிதவித்தது மனது.

“எப்படியாவது கண்டிப்பா குருவை சம்மதிக்க வச்சிடலாம்” என்று பிறைசூடன் கூற,

“எப்படிப்பா. அவனோட பிடிவாதத்தை பத்திதான் நமக்கு தெரியுமே.‌ அந்த ஜோசியர் வேற எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வச்சிடுங்கன்னு சொல்லிட்டாரு. இவன் வேற இப்படி பேசிட்டு போறான். எனக்கு பயமா இருக்குப்பா. ஏற்கனவே அவரை பறிகொடுத்திட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இன்னொரு இழப்பை தாங்குற சக்தி எனக்கில்லை. அப்படி என் பிள்ளைக்கு எதாவது ஒன்னுன்னா அதை பாக்க நான் கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டேன் என்று தந்தையின் தோள் சாய,

“ஏன் இப்படிலாம் பேசுற கோதை” இந்த மகளை அதட்டியவர்,

“நான் குருக்கிட்ட பேசி கண்டிப்பா சம்மதிக்க வைக்கிறேன்” என்று மகளுக்கு சமாதானம் கூறினார்.

“எனக்கு அவன் சம்மதிப்பான்னு நம்பிக்கையே இல்லைப்பா” என்று மகனை அறிந்தவராக கூற,

“நான் தான் சம்மதிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டேன்ல நீ இதையே நினைச்சு உடம்பை கெடுத்துக்காத. பிபி டேப்லெட் போட்டியா?” என்று வினவ,

“ம்ம் போட்டுட்டேன்” என்று தந்தையிடம் பொய் கூறியவர் எழுந்து உணவு பாத்திரங்களை ஒதுங்க வைக்க சென்றார்.

இங்கு அறைக்கு வந்த குரு கோபத்தை கட்டுப்படுத்த விழிகளை ஆழ மூடி திறந்தான். மூடிய விழிகளுக்குள் தாயின் கலங்கிய முகம் தான் வந்தது.

“ப்ச்…” என்று அலுத்து‌ கொண்டவனது முகத்திலும் வருத்தம் தான்‌.

அவனும் கடுமையாக தாயிடம் பேசிவிட கூடாது என்று எவ்வளோ முயன்றான் ஆனால் மீண்டும் மீண்டும் அதையே திருப்பி கூறி வற்புறுத்த முகத்தை காண்பித்துவிட்டான்‌.

இப்போது தாயின் கலங்கிய முகம் வலிக்க செய்தது. என்னதான் தந்தையிடம் மிக நெருக்கமாக இருந்தாலும் குடும்பத்தினர் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருந்தான் குரு பிரசாத்.

ஆனால் அதை முழுதாக வெளிக்காட்டத்தான் மாட்டான்.

அவனுக்கு எப்போதுமே இந்த ஜாதகம் பூஜை பரிகாரம் இது எதிலும் நம்பிக்கையே இல்லை.

அப்படியிருக்க தாய் திடீரென வந்து உனக்கு கண்டம் இருக்கிறது திருமணம் மூன்று மாதத்தில் செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று கூறியதும் சற்று எரிச்சலாகிவிட்டது.

இப்போதைக்கு அவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. ஹனிகாவிடம் கூறியது போல இரண்டு வருடங்கள் கழித்து தான் நிச்சயமாக திருமணம் செய்ய வேண்டும்.

தனது சரிபாதியாக வரப்போகிறவளிடம் வேறு வாக்கு கொடுத்தாயிற்று. குரு ஒரு முறை கூறிவிட்டால் எந்த சூழ்நிலையிலும் அதனை மீற மாட்டான் அதன் பொருட்டே தாயிடம் இப்படி நடந்து கொண்டு இப்போது தலையை பிடித்து அமர்ந்து கொண்டிருந்தான்‌.

மறுநாள் காலையிலும் எதுவும் கூறாது உண்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். தாயின் வருந்திய முகம் மனக்கண்ணில் அடிக்கடி தோன்றினாலும் தான் கொஞ்சம் இறங்கி வந்து பேசினால் மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்த தொடங்கிவிடுவார் ஆதலால் அவரே சரியாகட்டும் என்று விட்டுவிட்டான்.

ஆனால் இருள் கவிழும் நேரத்தில் பிறைசூடனிடமிருந்து அழைப்பு வர மறுமுனையில் கேட்ட செய்தியில் வேக வேகமாக வீட்டை நோக்கி ஓடினான்.

அவன் வேக எட்டுக்களில் தாயின் அறைக்குள் நுழைய அங்கே மெத்தையில் கோதை சோர்ந்து போய் படுத்திருக்க அவர்களது குடும்ப மருத்துவர் அவரை பரிசோதித்து கொண்டிருந்தார்.

அருகிலே கண்ணீருடன் தங்கையும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் பிறைசூடனும் நின்றிருந்தனர்.

பரிசோதித்து முடிந்த மருத்துவர் குருவை கண்டதும்,

“ப்ளட் ப்ரஸ்ஸர் அதிகமாகிடுச்சு. நேத்துல இருந்து அவங்க டேப்லெட் எடுத்துக்கலை. ப்ளஸ் சாப்பிடவும் இல்லை. ஒழுங்கா டைம்க்கு சாப்பிட்டு டேப்லெட்டை போட சொல்லுங்க” என்றவர் சிலபல மருந்துகளை எழுதி கொடுத்தார்.

சம்மதமாக தலையசைத்த அவரை அனுப்பிவைக்க வெளியே சென்ற குரு,

“டாக்டர் பயப்பட்ற மாதிரி எதுவும் இல்லையே?” என்று வினவ,

“நத்திங் சீரியஸ் மிஸ்டர் குரு. பட் அவங்க இது மாதிரியே டெப்லெட்டை ஸ்கிப் பண்ணா சீரியஸ் ஹெல்த் இஸ்யூஸ் வர வாய்ப்பு இருக்கு. ஏன் ஹார்ட் பிராப்ளம் கூட வரலாம். டேக் கேர் ஆஃப் ஹெர்” என்று குருவின் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டு சென்றார்.

கனத்த மனதுடன் குரு உள்ளே செல்ல அங்கு கோதை மகள் மற்றும் தந்தையிடம், “ம்ஹூம் மாட்டேன் நான் சாப்பிட மாட்டேன். டேப்லெட்டும் போட மாட்டேன்” என்று அடம்பிடித்து கொண்டிருந்தார்.அவர்கள் இருவரும் சமாளிக்கும் வழியறியாது நின்றிருந்தனர்.குரு, “ம்மா ஏன் இப்படி பண்றிங்க. ஒழுங்கா சாப்பிட்டு டேப்லெட்டை போடுங்க.‌ இல்லைன்னா சீரியஸ் ஹெல்த் இஸ்யூஸ் வந்திடும்” என்று கூற,”வரட்டும் எல்லாம் வரட்டும் நான் போறேன்.‌ என்கென்ன வந்தா உனக்கென்ன அதான் என் பேச்சை கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேல்ல” என்று பேச,”ம்மா ஏன் மா நீங்க அதையே பிடிச்சு தொங்குறிங்க” என்று மொழிய,”அப்படித்தான் தொங்குவேன். நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற வரை நான் சாப்பிடவும் மாட்டேன். டேப்லெட்டும் போட மாட்டேன்” என்று உறுதியாக கூறிவிட்டார்.தாயின் இந்த பரிமாணத்தில் குரு தான் திகைத்து நின்றான். அவர் குரலில் இருந்த உறுதி அவரது திடத்தை உணர்த்தியது.தாயிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பாராதவன் ஒரு நொடி திகைத்து பின் விறுவிறுவென வெளியே வந்து நீள்விருக்கையில் அமர்ந்து தலையை பிடித்து கொண்டான்.குருவின் செயலில் கலங்கிய கோதை,”பாத்திங்களாப்பா இப்போ கூட என்னைவிட அவன் வீம்பு தான் அவனுக்கு பெரிசா போச்சு” என்று கலங்க,”அப்படி எதுவும் இல்லை. நான் போய் பிரசாத்கிட்ட பேசுறேன்” என்று வெளியே வந்த பிறைசூடன் அவனது நிலையை கண்டு அவனருகில் அமர்ந்தார்.அவரது வரவை உணர்ந்தாலும் குரு நிமிர்ந்து பார்க்கவில்லை. “பிரசாத்…” என்று அழைத்தவர்,”நான் இதுவரைக்கும் உன்கிட்ட பெரிசா எதுவும் கேட்டதில்லை. எனக்காக இதை மட்டும் செய்ப்பா. உனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் எங்களுக்காக கல்யாணம் பண்ணிகோப்பா. எனக்கு எம்பொண்ணு ரொம்ப முக்கியம். அவளுக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது” என்று கரகரத்த குரலில் முடிக்க,இவ்வளவு நாள் வயதானாலும் கம்பீரமாக வலம் வந்த தாத்தாவின் இந்த குரலை கலங்கிய விழிகளை காண சகியாது,”தாத்தா…” என்று தானும் வேதனையுடன் அவரது கையை பிடிக்க,”எம்பொண்ணை எப்படியாவது நல்லபடியாக்குப்பா. அவளுக்கு எதாவது ஆச்சுனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” கலங்கிட,அதில் சடுதியில் இளகியவன்,”ப்ச் தாத்தா ஏன் இப்படி பேசுறிங்க. அம்மாவுக்கு எதுவுமில்லை ஜெஸ்ட் பிபி ஹை‌‌ ஆகிடுச்சு. டேப்லெட் சாப்டா நார்மல் ஆகிடும். நான் பேசிக்கிறேன்” என்று முடித்தவனுடைய நினைவில் தந்தையின் இறுதி தருவாயில் தங்கை மற்றும் தாயை எந்தவித சின்ன மனவருத்தமும் இன்றி நன்றாக பார்த்து கொள்வதாக கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தது.எழுந்து விறுவிறுவென அறைக்குள் சென்றவன்,”ம்மா நான் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்றேன். நீங்க இப்போ சாப்பிட்டு டேப்லெட் போடுங்க” என்றிட கோதையின் முகத்தில் சட்டென்று பிரகாசம்.இவ்வளவு நேரம் முடியாது பேசி கொண்டு இருந்தவன் இப்போது யோசித்து சொல்கிறேன் என்கிறான் அப்படி என்றால் நிச்சயம் நல்ல முடிவாக தான் இருக்கும் என்று எண்ணம் பிறந்தது.”சரிப்பா நீ இவ்ளோ தூரம் பேசுனதே சந்தோஷம். சீக்கிரம் யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லுப்பா. நான் சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்றேன்” என்றார்.அதன் பின்னர் அவர் சாப்பாடு மற்றும் மருந்தை உண்டு முடித்த பிறகே அறைக்கு வந்தான் குரு.உடை கூட மாற்றாது மெத்தையில் சரிந்து விழிகளை மூடி கொண்டவனது சிந்தை முழுவதும் இதனை எப்படி சரி செய்வது என்ற யோசனை தான்.ஹனி வீட்டில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதனை கூறினால் கண்டிப்பாக பூகம்பம் வெடிக்கும். அவளுக்கு அவளுடைய குடும்பம் மிகவும் முக்கியம் அதனால் இதனை அங்கு கொண்டு செல்ல இயலாது அதே போல அவளுக்கு வாக்கு வேறு கொடுத்தாயிற்று இதற்கு வேறுவழிதான் தேட வேண்டும் என்று இவன் சிந்தித்து கொண்டிருக்க அவனது அலைபேசி அலறியது எடுத்து பார்க்க ஹனிகா தான் காணொளி அழைப்பை விடுத்திருந்தாள்.மெத்தை மீது சாய்ந்தவாறு அமர்ந்தவன் அழைப்பை ஏற்றான்.”குரு…” என்று ஆர்ப்பாட்டமாக ஒலித்தவளது குரல் அவனது முகத்தை கண்டு அப்படியே சுருங்கிவிட,”என்னாச்சு.‌ எதுவும் பிராப்ளமா?” என்று வினவ,

error: Content is protected !!
Scroll to Top