காதல் 4.2

ஓ… சரிம்மா நீ அகில்கிட்ட பேசிட்டு கன்பார்ம் பண்ணிட்டு சொல்லு”

“இல்லை சார் நீங்க அவங்ககிட்ட பேசிடுங்க. அகிலனை நான் சம்மதிக்க வச்சிடுவேன்” என்று உறுதியாக கூறிவிட்டாள்‌.

“சரிம்மா நான் ரெஜிஸ்டரேஷனுக்கு டேட் கன்பார்ம் பண்ணிட்டு உனக்கு இன்பார்ம் பண்றேன்” என்க,

“சரிங்க சார் நான் கிளம்புறேன்” என்று எழுந்து கொண்டாள்.

“இரும்மா சாப்பிட்டு போகலாம்”

“இல்லை இருக்கட்டும் சார் லேட்டாகிடுச்சு” என்று மகி மறுக்க,

“சரி ஒரு டீ காஃபியாவது குடிச்சிட்டு போ” என்று வற்புறுத்த வேறுவழியின்றி தேநீரை பருகிவிட்டு ஊட்டியை நோக்கி பயணமானாள்.

மனதெங்கும் சொல்ல முடியாத வலி ரணம் தான். இதுவும் கடந்து போகும் என்று தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

வீட்டில் அகில் கேட்ட போதும் பணம் கிடைத்துவிட்டது என்று கூறிவிட்டாள்.

இப்போதே கூறினால் அகில் நிச்சயமாக ஒப்புக்கொள்ள மாட்டான். பத்திரபதிவிற்கு தேதி வந்த பிறகு அவனிடம் தெரிவிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

சாப்பாட்டை கொடுத்து அவர்களை உறங்க வைத்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது.

எழுந்து வெளியே வந்து தோட்டத்து கம்பியை பிடித்தபடி நின்றுவிட்டவளது விழிகள் கருநீல வானத்தை வெறித்தன.

என்னவோ வாழ்க்கையும் சுழ்நிலையும் மிகவும் கனமாகிவிட்டது போலொரு தோற்றம்.

என்னதான் எல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத்தானே ஆறுதல் கூறி கொண்டாலும் இனி தங்களுடைய இன்பக்கூடு தங்களுக்கு இல்லை என்ற‌ அப்பட்டமான உண்மை அவளை சுடத்தான் செய்தது.

ஊட்டியின் எலும்பை ஊடுருவி செல்லும் குளிர்காற்றும் அவளை ஏதும் செய்யவில்லை. முகத்தில் வந்து மோதிய கூதல் காற்றை கருத்தில் கொள்ளாது கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள்.

நேரம் செல்வதே தெரியாது நின்றிருந்தவள் வெகுநேரம் கழித்தே உறங்க சென்றாள்.

மறுநாள் வழக்கம் போல தன்னுடைய பணியில் ஈடுபட்டிருந்த மகிழினியின் கவனத்தை கலைத்தது அவளது முன்பு இருந்த இன்டர்கார்ம்.

எடுத்து காதில் பொறுத்த மறுமுனையில் மனோகர்,

“மகிழினி என்னம்மா பணத்துக்கு ஏற்பாடு பண்ண போறதா லீவ் வாங்கியிருந்த. பணம் கிடைச்சுதா?” என்று வினவ,

“ஹ்ம்ம் கிடைச்சிருச்சு சார்”

“ஓ… ரொம்ப நல்ல விஷயம்மா. என்னடா இந்த பொண்ணு என்னைக்கும் இல்லாம முதல் முறையா லோன் வாங்க ஹெல்ப் கேட்டு செய்ய முடியாம போய்டுச்சேன்னு ஒரு வருத்தமா இருந்துச்சுமா. இப்போ லோன் கிடைச்சிருச்சினு நீ சொல்லவும் தான் நிம்மதியா இருக்கு” என்றவர்,

“முழு பணமும் கிடைச்சிருச்சாம்மா. இல்லைன்னா ஆஃபிஸ்ல போர் லாக்ஸ் வரை உனக்கு லோன் போட எலிஜிபிலிட்டி இருக்கு. வேணும்னா சொல்லு அப்ளை பண்ணிடுவோம்” என்றிட,

“இல்லை சார். ஃபுல் அமௌண்ட் கிடைச்சிடுச்சு. தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்” என்று நன்றி கூறி முடித்து கொண்டவள் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தாள்.

அது மாதத்தின் இறுதியை நெருங்கி இருப்பதால் அந்த மாதத்தின் உற்பத்தி செலவு, விற்பனை மற்றும் அனைத்து செலவுகளையும் கணக்கு பார்த்து சரியாக வருகிறதா என்று அறிக்கையை மகிழினி சமர்பிக்க வேண்டும்.

அதற்காக தான் இப்போது மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருந்தாள்.

சலசலவென கேட்டு கொண்டிருந்த சத்தம் திடீரென நின்று போனதில் மகிழினி திரும்பி பார்க்க குரு பிரசாத் வந்து கொண்டிருந்தான்.

பேசியபடி இருந்தவர்கள் அமைதியாகி எழுந்து அவனுக்கு மரியாதை நிமித்தமாக காலை வணக்கத்தை தெரிவிக்க தானும் எழுந்து வணக்கத்தை வைத்தாள் மகிழ்.

எப்போதும் கண்டுகொள்ளாது செல்லும் குருவின் பார்வை ஒரு நொடி தன்மீது பதிந்தது போல தோன்ற,

“ப்ச் இருக்காது” என்று ஒதுக்கி தள்ளினாள்.

குரு உள்ளே நுழைந்ததும் மீண்டும் அங்கு சலசலப்பு. காரணம் குருவின் இந்த திடீர் வருகை.

வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இங்கு குரு பிரசாத் வந்து செல்வான். அதுவும் அவனது வருகை எல்லோருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கும்.

இந்த வாரத்தில் ஏற்கனவே குரு வந்து சென்றிருந்ததால் இனி வர வாய்ப்பில்லை என்று தான் நினைத்திருந்தனர்.

அவனது திடீர் வருகைக்கான காரணத்தை ஆராய்ந்து தான் இந்த சலசலப்பு அங்கே.

இந்த மாதத்தில் மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதில் விற்பனைக்கு சென்றது குடோனில் வைத்திருப்பது அதற்கு ஆகிய செலவு விற்று வந்த லாபம் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு கணக்கை சரிப்பார்த்தவள் அச்சு இயந்திரத்தில் அதனை பிரதி எடுத்து கொண்டாள்‌.

மீண்டும் ஒருமுறை சரிபார்த்தவள் மனோகரிடம் ஒப்படைக்கலாம் என்று எழுந்த போது இன்டர்காம் அலறியது.

எடுத்து காதில் பொருத்த மறுமுனையில் மனோகர்,

“மகிழினி உங்களை குரு சார் கூப்பிட்றாங்க‌. என்னன்னு போய் கேளுங்க” என்றிட,

“ஓகே சார்” என்று ஏற்பியை வைத்தவளுக்கு முகத்தில் சிந்தனை கோடுகள்.

error: Content is protected !!
Scroll to Top