காதல் 39:
அவனுடைய அனைத்தையும் தன்னிடம் சரணடைய வைத்துவிட்டு தன்னுடைய பதிலுக்காக முகம் நோக்குபவனை கண்டு ஒரு நொடி பேச்சற்று போனவளுக்கு விழிகளில் நீர் ஏகமாய் வழிந்தது.
இத்தனை நாள் இவன் எனக்கில்லை இந்த வாழ்வு எனதில்லை இது நிரந்தரமில்லை என்று எண்ணி உள்ளுக்குள் நேசத்தை புதைத்து மருகி கொண்டிருந்தவளுக்கு உள்ளத்தின் உணர்வுகளை வடிக்க வார்த்தைகள் வரவில்லை.
கானல்நீராய் இருந்த நேசம் கை சேர்ந்ததை உள்ளத்தால் நம்ப இயலவில்லை.
அதுவும் தன் மீதுள்ள நேசத்தை கூட கூறும் அளவு தான் இல்லையோ என்று எண்ணி தவித்து கலங்கி நின்றவளுக்கு தன்னுடைய எண்ணம் தவறு தான் தான் யாவையும் பிழையாக எண்ணியுள்ளோம் என்று புரிந்த விநாடி உள்ளே ஒன்று நழுவி சென்றது.
அவனுடைய வாதமும் சரிதானே அவனுக்குமான மன போராட்டங்கள் இருக்கத்தானே செய்யும். வேறு ஒரு பெண்ணை விரும்புவன் மீது தனக்கு நேசம் வந்துவிட்டதே என்று தானும் நேற்று வரை மனப்போராட்டத்தில் இருந்தோம் தான…?
அப்படி இருக்கையில் ஒரு பெண் மீது விருப்பம் இருக்கும் போது மற்றொரு பெண் மீது விருப்பம் வந்துவிட்டால் ஒருவரது நிலை எவ்வாறு இருக்கும் என்பது புரிந்தது. அவனது அதீத மனப்போராட்டத்தை உள்ளம் உணர்ந்தது.
அவர் கூறியது போல தன் மீது விருப்பம் வந்துவிட்டது என்று கூறியிருந்தால் தான் நம்பி இருப்போமா…? இல்லை இவருடன் வந்து இருப்போமா…? நிச்சயமாக வாய்ப்பு இல்லை.
அவரது நியாயங்கள் சரியானது தான் என்று அவன் பேசும் போது மனது ஆராய்ந்தது. ஆனால் வர்ஷினி விடயத்தில் தன்னை நம்பாது அவன் பேசிய வார்த்தைகள் தான் உள்ளத்தை வதைத்தது.
அவர் வளர்ந்த விதம் சந்தித்த சூழ்நிலை கடந்து வந்த மனிதர்கள் என்று நிறைய அவரை இவ்வாறு மாற்றி இருக்கிறது என்று புரிந்தாலும் மனது ஏற்க மறுத்தது.
என்னவோ கோபத்தில் பேசி இருந்தாலும் இன்றுவரை இதயத்தை தைத்து கொண்டிருக்கிறது.
பேசியவர்கள் மறந்துவிட்டாலும் அதனை வாங்கியவர்கள் எளிதில் மறப்பதில்லை மறக்க முடிவதில்லை.
விழிகளில் நீர் பெருகியது. எல்லா உறவிலும் நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விடயம்.
நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை விட நான் உன்னை முழுமையாக நம்புகிறேன் என்ற வார்த்தைக்கு வலிமை அதிகம்.
எதோ ஒரு தவறான சூழ்நிலையில் குருவை கண்டிருந்தாலும் நிச்சயமாக தான் சந்தேகப்பட்டிருக்க மாட்டோம்.
ஆனால் அவர் தன்னை துளியும் நம்பாது பேசிவிட்டார். பேசிய வார்த்தைகள் என்றோ என்னை உயிருடன் கொன்றுவிட்டிருந்தது.
இனி ஒரு முறை இது நடக்காது என்று என்ன நிச்சயம். அப்படி ஒரு முறை நடந்துவிட்டால் தான் மொத்தமாய் உடைந்து போவோம் அதன் பின்னர் என்ன செய்தும் இந்த வாழ்க்கையில் தன்னால் இருக்க இயலாது என்று உள்ளம் மொழிய விழி நீர் மேலும் நிறைந்தது.
மனது அவனை ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது தவித்தது. உள்ளுக்குள்ளே பெரிய போராட்டம். ஆனால் முகம் அத்தனை நிச்சலமாக இருந்தது.
இங்கு இவளது அமைதியில் குரு தான் சிறிது சிறிதாக சிதறி கொண்டிருந்தவன் நிமிடங்கள் கடந்ததும்,
“மகி ப்ளீஸ் மகி எதாவது பேசு. நான் இவ்ளோ சொல்லியும் உனக்கு என்னை புரியலையா…? என் மனசு தெரியலையா...? எதாவது பதில் சொல்லுடி” என்று தவிப்புடன் மொழிய,
அவனை பதிலின்றி வெறித்தாள் மகிழினி.
அந்த பார்வை அதில் இருந்த ஏதோ ஒன்று அவனை வதைக்க,
“மகி ப்ளீஸ் நான் உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன்னு புரியிது. அதை எப்படி சரி செய்யிறதுனு எனக்கு தெரியலைடி. எனக்கு தெரிஞ்சது எல்லாம் நீ இல்லாத வாழ்க்கை நரகம் அது மட்டும் தான். உனக்கு கோபம் போகலைன்னா என்னை அடிக்க கூட செஞ்சிடுடி” என்றவன் அவளது கரத்தை பிடித்து சட்டென்று தன்னை மாறி மாறி அறைந்து கொள்ள,
அதில் அதிர்ந்தவள்,
“எ… என்ன என்ன பண்றிங்க விடுங்க” என்று பதறி கையை உருவிக்கொண்டு,
“என்னை மேலும் மேலும் கஷ்டப்படுத்தாதிங்க என்னால முடியல” என்று அழுகையுடன் கூறியவள் அவனை அமர்ந்தவாக்கிலே அணைத்து கொண்டாள்.
உடல் அழுகையில் குலுங்கியது. குருவிற்கும் நீர் பெருக அவளை தானும் அணைத்து கொண்டான்.
இருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை. உணர்வுகளின் விளிம்பில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
நொடிகள் கடந்தும் அமைதி அங்கே கோலோச்சியது.
சிறிது நேரத்தில் வெளியே கதவை தட்டும் ஓசையில் தான் இருவருக்கும் நினைவு வந்தது.
சட்டென்று மகிழ் அவனிடமிருந்து பிரிந்துவிட,
குரு அவள் முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு எழுந்தவன் கதவை திறக்காது,
“யாரு…?” என்று குரல் கொடுத்தான்.
“அண்ணா நான் தான்…” என்று வர்ஷினியிடமிருந்து குரல் வந்தது.
‘இந்த நேரத்தில் எதற்கு வந்துள்ளாள்…?’ என்று எண்ணம் வர சட்டென்று முகத்தை துடைத்தவன்,
“போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா” என்று மகியிடம் கூறிவிட்டு கதவை திறந்தவன்,
“என்ன அம்மு இந்த நேரத்தில…?” என்று வினவ,
தமையனின் முகத்தில் இருந்த மாறுதலை கண்டாலும் எதுவும் வினவாது,