உள்ளம் – 25.2

குமரனுக்கு ஏனோ அவளின் கோபத்தில் சிரிப்பு வந்தது. புன்னகைத்தால் திட்டுவாள் என எண்ணி அதை உதட்டுக்குள் மறைத்தவன், “ஏய்! அதான் எங்கக் கூட வான்னு நான் கூப்பிட்டேன் இல்ல டி!” என்றான் சமாளிப்பாக.

“ஆமா! ஆமா கூப்பிட்டீங்க! நீங்க வான்னு சொன்னதும் உங்கத் தங்கச்சி முகம் போற போக்கைப் பார்த்திருக்கணுமே! அதான் நான் வரலை!” என்றவள், “சரியான அடமெண்ட் அவ! இதெல்லாம் சரியில்லை. என்னை அண்ணின்னு மதிக்க மாட்றா! ஒரு வார்த்தை மரியாதை தர்றது இல்ல! திமிறா நடந்துக்கிறா!” குற்றப்பத்திரிகை வாசித்தாள் மனோஹரி.

“ஏய்! சின்னப்புள்ளை டி அவ! போக போக சரியாகிடுவா!” குமரன் கூற, “என்ன சின்னப்புள்ளை, சின்னப்புள்ளைன்னு சொல்லீட்டு இருக்கீங்க. அவளுக்கும் எனக்கும் ஒரு வயசுதான் வித்யாசம் இருக்கும்…” என உதட்டைச் சுழித்தாள்.

அதில் மெலிதாய்ப் புன்னகைத்தவன், “சின்ன வயசுல இருந்தே அவ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப செல்லம் டி. அதான் அவ நாங்கன்னு வரும்போது அடம்பிடிப்பா!” என்றான்.

“இங்க அடம்புடிக்கிறது சரி, அப்புறம் நாளைப் பின்ன கல்யாணம் நடந்தாலும் அங்கேயும் போய் இப்படித்தான் பண்ணுவாளா?” முகத்தைச் சுருக்கிக் கோபமாய்க் கேட்டாள்.

“அதெல்லாம் என் தங்கச்சிக்கு நல்ல அமைதியா, பொறுப்பா இருக்கப் பையனா கல்யாணம் பண்ணி வைப்போம்!” என்றான் தீவிரமான குரலில். இதைக் கூறும்போது திவாகர் ஒரு நொடி மனதில் வந்து போனான்.

“ஆமா! இவரு தங்கச்சிக்கு மட்டும் அமைதியான மாப்பிள்ளை. எங்களுக்கு மட்டும் ஹல்க் மாதிரி ஆளு!” என மனோ முணுமுணுக்கவும், ஒற்றைக்கையால் அவளது தாடையைப் பிடித்தவன், “ஏய்! என்னடி முணுமுணுக்குற, திட்ட மாட்டேன். தைரியமா சொல்லு!” என்றான் குறும்பாய்.

“ஓஹோ! உங்களுக்குப் பயப்பட்றேன்னு வேற எண்ணம் இருக்கோ?” என முறைத்தவள், “உங்க தங்கச்சிக்கு மட்டும் சாஃப்டான ஹீரோ… எங்களுக்கு மட்டும் ஹல்க் மாதிரி ஒரு ஆளு!” என்றாள் மனைவி.

அதில் வாய்விட்டு சிரித்தவன், “அடிப்பாவி! என்னைப் பார்த்தா ஹல்க் மாதிரியா தெரியுது?” எனத் தன்னை ஒருமுறை குனிந்து பார்த்தான்.

“நான் சொல்லலை… அவன் பேர், ஹம்ம் நீரஜ்தான் சொன்னான்!” என அங்கலாய்த்தாள்.

“நீரஜ் யாரு டி!” என குமரன் அதட்டலாய்க் கேட்க, “அதான் அன்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃபிஸ்ல பார்த்தோமே, உங்களைப் பார்த்ததும் ஓடுனானே!” மனோ கூறவும் குமரனுக்கு நினைவு வந்தது.

“ஏய்! கேடி… அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன். அவன்கிட்ட என்ன சொன்ன?” என இவன் தீவிரம் கலந்த ஆர்வமும் முறைப்புமாய்க் கேட்டான்.

“என்ன என்ன சொன்னேன், காபி குடிக்கலாமான்னு கேட்டான். புள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, என் புருஷன் அதோ வராரு. அவர்கிட்ட பெர்மிஷன் கேளுங்க, காபி என்ன லஞ்சே சாப்பிடலாம்னு சொன்னேன்.. அவன் ஷாக்காய்ட்டான், பார்பி மாதிரி இருக்க உங்களுக்கு ஹல்க் மாதிரி புருஷனான்னு!” என கேலியான குரலில் நிறுத்தியவளை குமரன் தீயாய் முறைக்க, “ஹக்கும்… என்ன பண்றது அந்த ஹல்க்கைத்தானே பிடிச்சிருக்குன்னு சொன்னேன்!” எனக் கூறி இவள் பொங்கிச் சிரிக்கவும், குமரனுக்கு கோபம் விடை பொற்று தாபம் வந்தமர்ந்து கொண்டது. அந்தச் சிரிப்பில், அவளது பேச்சில் உடல் கொஞ்சம் தகித்தது.

மனோ சிரிக்கும்போது விரியும் உதடுகளும் பளிச்சென்ன மின்னும் பற்களும் கொள்ளைக் கொண்டன. கலைந்திருந்த முடியும் கவிதையாய் இருந்த விழிளும் இவனை ஈர்த்துத் தொலைக்க, அவளை அருகே இழுத்தவன் அந்த சிரிப்பை தன் உதட்டால் மூடியிருந்தான். முதன் முதலான இதழ் முத்தம், மனைவி சிலிர்த்தாள், சிவந்தாள், விலகவில்லை. சில நிமிடங்கள் தொடர்ந்த முத்தம் மனோவை கிறங்கச் செய்ய அப்படியே விழிகளை மூடி கட்டிலில் சாய்ந்தாள்.

இவன் மெதுவாய் அவளது மூக்கில் முத்தமிட்டவன், “மூக்கு குத்திக்கோ டி… அழகா இருப்ப!” என்றான் கிசுகிசுப்பாய்.

மோனநிலை கலைந்து அவனை முறைத்தவள், “ஏன் இந்த செயின் அழற மாதிரி மூக்குத்தியும் அழணுமா? முடியாது போங்க!” என இதழ் வளைத்தாள். உதட்டில் மீண்டும் முத்தமிட்டு அவளின் பேச்சை நிறுத்தினான் கணவன்.

கைகள் அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தன. நாசியில் முத்தமிட்டு வாசத்தை நுகர்ந்தவன் மூக்கில் முத்தமிட்டு மோட்சம் பெற்றான். விழிகளில் முத்தமிட்டவனுள் ஆயிரம் ஆசைகள் கிளர்ந்தெழுந்தன.

கழுத்து வளைவில் முகம் புதைத்து மனோஹரியை நுகர்ந்தான். மனைவி வசீகரித்தாள். பெண் வாசனை போதையேற்றியது. அவள் அவனின் செயலில் விழிகளைத் திறக்கவே இல்லை. மொத்தமும் சிவந்து கிடந்தாள். அதுவே அவனை முன்னேறச் சொல்லி உந்தியது. ஆயிரம் ஆசைகள் மனைவியை உள்ளத்தால் மட்டுமல்ல உடலாலும் உணர்ந்து கொள்ள பேரவா எழுந்தது.

அவன் கைகள் மனோவின் உடையைத் தளர்த்தவும் இத்தனை நேரம் அமைதியாயிருந்தவள், அவனது கரத்தைத் தடுத்தாள்.
“கைல கட்டுருக்குங்க… போதும்! படுங்க!” என அதட்ட, “ச்சு… ஒன்னும் பண்ண மாட்டேன்! அமைதியா இருடி!” என அவளை அதட்டினான். ஏனோ அச்சிறு அதட்டலுக்கே அடங்கிப் போனாள் பெண்.

நெற்றியோரம் இதழ் பதித்தவன் காதில் முத்தமிடவும் இவள் கூசிச் சிலிர்த்தாள். கைகள் அவனது உடையைப் பிடிமானத்திற்குப் பிடித்துக் கொள்ள முகத்தை அவன் மார்பில் வைத்துத் தேய்த்தாள்.

மனைவியின் முகத்தைத் திருப்பி அவளது கழுத்தில் முத்தமிட்டான்.
“தாடி குத்துதுங்க…” அவளின் சிணுங்கல்கள் இவனுக்கு ஸ்ருங்கார சங்கீதமாய் போதை தந்தது.

மெதுவாய் முகத்தை மனோவின் மார்பில் புதைத்து அவளின் வாசத்தை உணர்ந்தவனை தாலி குத்தி தொந்தரவு செய்தது. அதைத் தொடச் சென்றவனின் கைகளைப் பிடித்துத் தடுத்தாள்.

“குத்துதுடி…” குமரன் முகத்தைச் சுருக்கிக் கூற, “நோ, தாலியை தொடக் கூடாது. தாலி, நீங்க ரெண்டுமே என்னோட பிராபர்டி!” என்று அதிகரமாய் விரல்களை நீட்டினாள் பெண்.

நீட்டிய விரல்களில் முத்தமிட்டு போலியாய் அவளை முறைத்தவன், “நான்தானே டி அதைக் கட்டுனேன்!” எனக் கூறவும், மனோ அலட்சியமாக முகத்தைத் திருப்பினாள்.

அதில் சினந்தவனின் முகம் இன்னுமே மனைவியில் ஆழப் புதைந்தது. அவளை உணர்ந்தான், ஸ்பரிசித்தான். இன்னுமின்னும் உணர வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என உந்தியது .
தொட்டால் முடிக்க முடியும் என்றோ விட முடியுமென்றோ தோன்றவில்லை. தொடர்கதையாகி விடுமென அவனுக்குப் புரிந்தது.
மயங்கி கிறங்கி கண்மூடி கிடந்த மனைவியின் உதட்டில் மென்முத்தம் வைத்தவன், நெற்றியில் இதழ் பதித்து நிமிர்ந்தான்.

எட்டி மேஜைக்கு அருகே இருந்த விளக்கை அவன் அணைக்கவும், மனோஹரி அவனை இறுக அணைத்தாள். “குட் நைட், தூங்குங்க!” என அவன் கன்னத்தில் இதழ் பதித்தவளின் உடலில் இன்னுமே கணவனின் ஸ்பரிசம் இருப்பது போலொரு உணர்வு. உதட்டில் புன்னகையுடன் அவள் உறங்க முற்பட, “தூங்க மட்டும்தானே டி முடியும்!” என ஆதங்கமாய் முணுமுணுத்தபடியே விழி மூடினான் குமரன்.

அதோ இதோவென ஒரு மாதம் முடிந்து மனோஹரியும் குமரனும் கைக்கட்டைப் பிரிக்கலாம் என மருத்துவரிடம் சென்றனர். இன்னுமே கை சரியாகவில்லை என கட்டைப் பிரித்து புதிதாய் வேறு கட்டையிட்டவர், மேலும் பதினைந்து நாட்கள் கழித்து வருமாறு கூற, குமரன் அவளை முறைத்தான்.

error: Content is protected !!
Scroll to Top