“அண்ட் ஆப்ரேஷன் முடிஞ்சு முரளி கவின் நல்லா இருக்கான்னு சொன்ன பின்னாடி நீ என் கையில முகத்தை புதைச்சிட்டு அழுதியே அந்த செகெண்ட் என் கைய நனைச்ச உன்னோட கண்ணீரால மறுபடியும் எனக்குள்ள ஒரு பூகம்பம் நான் ஆடி போய்ட்டேன். என் வாழ்க்கையில என் குடும்பத்தை தவிர்த்து என்னை முதல்முறையா ஆடி போக வச்சது உன் கண்ணீர் மட்டும் தான். ஹனிகா அழுதா கூட அதை எப்படி சரி பண்ணனும்னு தான் தாட் போகும் ஆனால் நீ அழுதப்போ இனி வாழ்க்கையில உன்னை அழவேவிடக்கூடாதுனு தோணுச்சு. ஏன் அப்போ புரியலை”
“அதுக்கப்புறம் என் அப்பாவோட திதி அன்னைக்கு நான் ஏன் உன்கிட்ட ஆறுதல் தேடுனேன்னு தெரியலை. இதுவரைக்கும் என் அம்மாக்கிட்ட கூட நான் மனசு திறந்து பேசாத நான் எப்படி உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டி ஆறுதல் தேடுனேன்னு நான் அப்போ யோசிக்கவே இல்லை”
“அப்புறம் நாள் போக ஹனிகாவோட படிப்பு முடியிற ஸ்டேஜ்ல இருந்துச்சு என்னோட பிளான்படி உன்கிட்ட டிவோர்ஸ் வாங்கிட்டு உனக்கு ஒரு ஜாப் ஏற்பாடு பண்ணி செட்டில் பண்ண தான் எல்லாம் செஞ்சேன். எல்லாம் முடிஞ்சு உன்னை அனுப்புறவரை எனக்கு எதுவும் தெரியலை. பட் உன்னை பஸ் ஏத்திவிட்டுட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்ச நொடி ஒரு வெறுமை முகத்தில பட்டுனு அறைஞ்சது. இத்தனை நாள் குழந்தைகளோட இருந்துட்டு அவங்க கிளம்புனதும் அப்படி தோணுதுனு அசட்டை பண்ணிட்டு ரூம்க்குள்ள நுழைஞ்சேன்”
“அப்பவும் நைட் தினமும் குழந்தைகள படுக்க வச்சு கதை சொல்ற உன்னோட குரல் காதுக்குள்ள கேட்டுச்சு அதையுமே பெரிசா எடுத்துக்காம ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து படுத்து கண்ணை மூடுனா மூடுண கண்ணுக்குள்ள உன்னோட முகம் தான். என்னைக்கோ முகம் முழுக்க சிரிப்போட பட்டு சேலைல வந்த உன்னோட உருவம் அடிச்சு பிடிச்சிட்டு எழுந்து உட்கார்ந்தேன்”
“கொஞ்ச நேரத்துக்கு ஒன்னும் புரியலை. ஒரு நிமிஷத்துல உன்னை பார்த்ததுல இருந்து பஸ் ஏத்திவிட்ட வரை அப்படியே படமா மனசுல ஓடுச்சு. உள்ளே என்னவோ ஒரு குரல் ‘உசிரை அவக்கிட்ட விட்டுட்டு வந்துட்டு நீ என்ன பண்ற அவதான் உனக்கு எல்லாம் அவதான். அவ இல்லாம நீ இல்லைனு’ அப்போ அந்த நொடி தான் நான் ரியலைஸ் பண்ணேன். ஹாஸ்பிட்டல்ல உன் கண்ணீர் ஏன் என்னை அசைச்சு பாத்துச்சு. ஆடி போக வச்சதுனு எனக்கு தெரிஞ்சது. நீ எனக்குள்ள எவ்ளோ தூரம் இறங்கியிருக்க. நான் எவ்ளோ தூரம் உனக்குள்ள ஆழ்ந்து போயிருக்கேன்னு புரிஞ்சது”
“எல்லாத்தையும் பீல் பண்ண நிமிஷம் எனக்கு எதுவுமே ஓடலை. ஓடு அவக்கிட்ட போ அவளை அழைச்சிட்டு வான்னு உள்ள ஒரு சத்தம். என்னை எனக்கே புரிஞ்சுக்க முடியலை. ஹனிகாவோட முகம் சட்டுனு வந்துட்டு போச்சு. எப்படி ஹனிகாவ விரும்பிட்டு இருக்கும் போது உன்னை பிடிக்கும். அப்போ அவ மேல இருந்த பீலிங்க்கு பேர் என்ன? இப்போ உன்மேல வந்திருக்க பீலிங்கு நேம் என்ன? எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேர் மேல காதல் வரும். நான் அவ்ளோ வீக்கா இத்தனை நாள் நான் தனியா இருந்ததால தான் சரியா இருந்தேனா?”
“இப்போ நீ என் பக்கத்துல இருந்ததும் எனக்கு உன் மேல விருப்பம் வந்திருச்சா…? அப்போ நான் அவ்ளோ தானா…? நீ போன பிறகு வேற ஒரு பொண்ணு வந்தா அவ மேலயும் எனக்கு விருப்பம் வருமா…? என்மேலயே ஆயிரம் சந்தேகம் குழப்பம் நிறைய வெறுப்பு வந்துருச்சு. அப்போ தான் ஹனிகா கல்யாணத்தை பத்தி வீட்ல பேச சொன்னா”
“உள்ள உன் நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கு. ஹனிகா வந்து மேரேஜ்க்கு பேசறா அம்மா உன்னையும் பசங்களையும் கேக்குறாங்க. அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி பிஸ்னஸ்ல கான்சண்ட்ரேட் பண்ண முடியலை. எப்பவுமே க்ளீன் ஷேவ் பண்ணி கரெக்டா இருக்க நான் ஷேவ் பண்ணாம தூங்காம சரியா சாப்பிடாம பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தேன்.”
“மூனு மாசம் நரகம் மாதிரி போச்சு. நீயில்லாத நம்ப ரூம் பெட் எதுவுமே எனக்கு பிடிக்கலை. வாழ்க்கை முழுக்க ஒரு வெறுமை. அந்த மூனு மந்த் லைஃப் எனக்கு புரிய வச்சது. நீ தான் நீ மட்டும் தான் இனி என் வாழ்க்கையில. உன் மேல வந்திருக்க பீல் வாழ்க்கை முழுக்க கடைசி காலம் வரை அப்படியே இருக்கும். இனி இந்த ஜென்மத்துக்கு நீ தான் எனக்குனு உணர்ந்தேன். உன்னை தவிர யார்க்கூடவும் என்னால வாழ முடியாதுனு ரியலைஸ் பண்ணேன். ஆனால் அதுக்கு பின்னாடியும் பிரச்சனை தான். ஹனிகா அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்”
“என்னை காதலிச்சதை தவிர வேற எந்த தப்பும் செய்யலை அவ. நாலு வருஷம் நான் தான் எல்லாமேன்னு இருந்தவ. ஒரு பெண்ணோட பாவம் என்னை சும்மாவிடாது காலத்துக்கும் துரத்தும்னு தெரிஞ்சது ஆனால் என்கிட்ட வேற வழியில்லை. நான் உண்மைய சொல்லாம நாளை கடத்துனா பாதிப்பு தான் அதிகமாகிடும். அதான் ஒரு நாள் நான் ஹனிகாகிட்ட சொல்லிட்டேன் என்னால அவக்கிட்ட உன்னை எனக்கு பிடிச்சிருக்குனு சொல்லவே முடியலை.
“அவ்ளோ குற்றவுணர்வு சொன்னதும் அதிர்ச்சியாகி அழுது என்கிட்ட சண்டை போட்டா. கடைசியில போய்ட்டா என்னவோ அந்த செகெண்ட் என்னடா நீ வாழ்க்கை வாழ்ந்திருக்க உன்னால ஒரு பொண்ணு எப்படி உடைஞ்சு போய் நிக்கிறா. இந்த பாவம் உன்னை சும்மாவிடாதுனு உள்ள திரும்பவும் குரல். எல்லாத்தையும் தாங்கிகிட்டு வந்து உன்கிட்ட பேசுனேன் உன்னை திரும்ப வீட்டுக்கு கூப்டேன்.”
“நான் உன்கிட்ட அப்போ என்னோட மனசை சொல்லாததுக்கு காரணம் என்னோட குற்றவுணர்ச்சி தான். அதுக்கும் மேல நான் ஹனிகாவை விரும்பிட்டு இருந்தது உனக்கு தெரியும். அப்படியிருக்கும் போது நான் எனக்கு உன் மேல காதல் வந்திடுச்சுனு எப்படி சொல்ல முடியும். சொன்னா நீ தான் என்னை ஏத்துப்பியா. இப்போ வரை நான் என்னோட மனசை உன்கிட்ட வெளிப்படுத்தாதுக்கு இது மட்டும் தான் காரணம். நிஜமா நீ நினைக்கிற மாதிரி என்ன காரணமும் இல்லை”
“நான் செஞ்ச எல்லாம் உன்னை இவ்ளோ தூரம் காயப்படுத்தும்னு நான் நினைக்கலை. நான் யாருக்குமே சரியா இல்லை. என் தாத்தா அம்மா ரெண்டு பேருக்கும் உண்மையா இல்லை. தங்கச்சிய ஒழுங்கா பாத்துக்கலை. ஹனிகாகிட்டயும் சரியா இல்லை. உன்கிட்டயும் நான் ரொம்ப தப்பா இருந்திருக்கேன். நான் வாழ தகுதி இல்லாதவன்” என்றவன் அவளை இடையோடு கட்டிக்கொள்ள இங்கு மகிக்கும் விழி நீர் பெருகி வழிந்தது.
“முடிஞ்சா என்னை மன்னிச்சிடு. என்னைவிட்டு மட்டும் போய்டாத. நீ இல்லைன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கு தெரியலை. நீ ஒரு நாள் வர்ஷினிக்கிட்ட காதலுக்கு டெபினிஷன் சொன்னியே…”
“நமக்கானவங்க நம்ம சொல்லாமலே நம்ம உணர்வுகளை புரிஞ்சுப்பாங்க. கண் பார்த்து மனசை புரிஞ்சிக்கிறதுனு சொல்லுவாங்க. ஈருடல் ஓர் உயிர் மாதிரி. கடைசி வரை முதல் தடவை பார்த்தப்போ இருக்கிற அதே அன்போட கையை பிடிச்சிட்டு காடு வரை கூட வர்றவங்க. அதாவது தள்ளாடுற வயசுல தோள் சாஞ்சுக்கிற வரை நம்ம தடுமாறும் போது தாங்கி பிடிக்கணும். அப்படி வருவாங்கன்னு நமக்கு தோணுச்சுனா கண்டிப்பா நமக்கான எல்லாத்தையும் அவங்களை காலடியில சரணடைய வச்சிடலாம். வீ ஆல் ப்ரோக் அவர் ரூல்ஸ் ஃபார் சம்ஒன். அந்த சம்ஒன் தான் நமக்கானவங்களா இருப்பாங்க. அவங்க நம்ம இயல்பை தொலைக்க வைக்கணும். நாம அவங்களா வாழணும் கடைசிவரை. வாழ்க்கையில எதுவுமே வேண்டாம் இவ ஒருத்தி இருந்தா எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரினு தோணனும். அப்படி தோணினா அவங்களுக்காக எல்லாத்தையும் ப்ரேக் பண்ணிடலாம்னு எனக்கு அந்த சம்ஓன் நீதான்”
“உன்னால தான் உன்னால மட்டும் தான் என் இயல்பை தொலைச்சிட்டு நிக்கிறேன். உனக்காக தான் என்னோட ரூல்ஸ எல்லாத்தையும் ப்ரோக் பண்ணிட்டேன். என்னோட தப்பை எல்லாம் மன்னிச்சு என்னை ஏத்துப்பியா…?” என்று அவளது முகத்தில் நேசமும் ஏக்கமும் போட்டிபோட கேட்டவனை பார்த்து பேச்சற்று போனாள்…