காதல் 31:
முழுதாக உள்ளுக்குள் இறங்கிய அதிர்ச்சியை உள்வாங்க இயலாதள்,
“எ… என்ன என்ன சொல்றிங்க சார்…” என்று திக்கி திணறி வினவ,
“ஆமா என்கூட திரும்ப வந்திடு. ஊட்டிக்கு வந்திடு” என்று மீண்டும் அழுத்தமாக மொழிந்தான்.
“எனக்கு நீங்க சொல்றது புரியலை” என்று இன்னும் தடதடத்தது கொண்டிருந்த இதயத்துடன் வினா தொடுத்தாள்.
ஒரு விநாடி மௌனம் காத்தவன் பின்னர் ஒரு பெருமூச்சை விட்டு,
“நாம நம்ம அக்ரிமெண்ட்டை லைஃப் லாங் போட்டுக்கலாம். நீ எப்படியும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்லை. நீ பழைய படி என் கூட எனக்கு வொய்ஃபாவே இருந்திடு. பசங்களை இனி எப்பவுமே நானே பாத்துக்கிறேன். படிக்க வைக்கிறேன். என்ன வந்திட்றியா…?” என்று முகத்தை நோக்கியவனது வார்த்தைகளில் என்னவோ உள்ளே வெடித்து சிதறியது.
ஆழி பேரலையாய் ஏமாற்றமா வருத்தமா எதுவென்று பிரித்தரிய முடியாத வகையில் உள்ளுக்குள் ஜனித்தது.
“ஏன் என்ன திடீர்னு இந்த முடிவு…?” என்றவள் உணர்வு துடைக்கப்பட்ட குரலில் வினவ,
“என்னால என் அம்மாக்கிட்ட தாத்தாக்கிட்ட உண்மையை சொல்ல முடியலை. அவங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையை என்னால் உடைக்க முடியலை. ஸோ சொன்ன பொய்யை அப்படியே மெயின்டைன் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவனிடம்,
“ஓ…” என்று பதில் மொழிந்தவளுக்கு ஏமாற்றம் அலையலையாய் பரவியது.
“அப்போ ஹனிகா மேடம். உங்க லவ்” என்று வினா தொடுத்தவளுக்கு இதயத்தின் ஓரம் மெலிதான வலி.
“இல்லை இனி அவ என் வாழ்க்கையில இல்லை” என்றவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை உடைய செய்ய,
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா நா நான் வந்து வீட்ல பேசவா..? எல்லாத்தையும் எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க. முதல்ல கோபப்பட்டாலும் உங்க விருப்பத்துக்கு கண்டிப்பா மதிப்பு கொடுப்பாங்க” என்று இயம்பிட,
‘வேணாம்’ எனும் விதமாக தலை அசைந்தது.
“இல்லை ஹனிகா மேடம் உங்க லவ் இதெல்லாம் எப்படி உங்களால விட முடியும்…?” என்று வினவியவளுக்கு காதல் கைக்கூடாததன் வலி தெளிவாக தெரிந்து இருந்ததே…
“இல்லை அது சரி வராது” என்று மீண்டும் கூற,
அவனுக்காகவது ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணியவள்,
“எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தர்றீங்களா நான் நிச்சயமாக எல்லாத்தையும் சரி பண்ணி உங்களுக்கு ஹனிகா மேமை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று கெஞ்சலுடன் தன் முகம் பார்த்தவளை ஒரு நொடி விழியகலாது பார்த்தவன்,
“மகி ப்ளீஸ் இதை பத்தி பேச வேண்டாம்” என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அமைதியாயிருக்க செய்தது.
அதுவும் அவன் கூறிய, ‘ப்ளீஸ்’ என்ற வார்த்தை அவளை ஒரு விநாடி சிந்திக்க வைத்தது.
முதன் முதலாக குருவின் வாயில் இருந்து ‘ப்ளிஸ்’ என்ற வார்த்தையை கெஞ்சும் தொனியில் கேட்கிறாள்.
குரு பிரசாத்திற்கு தான் தான் எல்லாவற்றிலும் மேல் முதன்மை என்றெல்லாம் எண்ணம் உண்டு என்று அவளுக்கு தெரியும்.
அப்படி தன்னியல்பை தன்னுடைய இடத்தில் இருந்து இறங்கி வரும் அளவிற்கு இவருக்கு என்ன ஆயிற்று என்று தான் யோசனை ஓடியது.
இருவரும் பேசி கொண்டு இருக்க விளையாடி கொண்டு இருந்த எழில் வந்து,
“ப்பா இங்க ஒரு தீம் பார்க் இருக்கு. அங்க அழைச்சிட்டு போறீங்களா…?” என்று வினவ,
கவினும், “ஆமாப்பா அங்க பெரிய மிக்கிமௌஸ் இருக்குப்பா” என்று விழிகளை விரித்து கூறினான்.
இளையவர்கள் பாவனை அவனை கொள்ளை கொள்ள,
“கண்டிப்பா அழைச்சிட்டு போறேன்” என்று சிரிப்புடன் கூறி அவர்களிடம் சில நிமிடங்கள் பேசியவன் மகியிடம்,
“மகி நீ யோசிச்சு ஒரு முடிவை சொல்லு. அவசரம் இல்லை நாளைக்கு வர்றேன். அப்புறம் நான் கேட்டதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்னு கம்பல்ஷன் எதுவும் இல்லை” என்றவனுக்கு என்ன பதில் மொழிவது என்று அறியாது மௌனமாய் தலை அசைத்து வைத்தாள்.
“சரி நான் கிளம்புறேன்” என்று எழுந்து கொள்ள,
இளையவர்கள்,
“ப்பா எங்க கிளம்புறிங்க. இங்கேயே இருங்க” என்று அவனது காலை கட்டி கொள்ள,
மகி அதிர்ந்து போனாள்.
குரு, “அப்பாவுக்கு ஒரு வொர்க் இருக்கு அதை முடிச்சிட்டு வந்திட்றேன்” என்று இயம்ப,
“ம்ஹூம் வேணாம். இங்கயே இருங்க” என்றிட,
“சொன்னா கேக்கணும் ரெண்டு பேரும் நல்ல பசங்க தான…?” என்று குரு பொறுமையாக மொழிந்தான்.
“நோ நீங்க அன்னைக்கு கூட இப்படி தான் எங்களை பஸ்ல விட்டுவிட்டு போய்ட்டிங்க. அப்புறம் இப்போ தான் வர்றீங்க. நாள் ரொம்ப நாளாக நீங்க எப்போ வருவீங்கன்னு கேட்டுட்டே இருந்தேன் அம்மாட்ட. இப்பவும் எங்களை விட்டுட்டு கிளம்புறிங்க” என்றிட,
“ஆமப்பா. எனக்கு இந்த ஹவுஸ் பிடிக்கவே இல்லை. இங்க விளையாட இடமே இல்லை. அங்க பெரிய வீடு இருக்குல தாத்தா பாட்டி எல்லாம் இருக்காங்களே அங்க என்னை அழைச்சிட்டு போறீங்களா…?” என்று ஏக்கமும் ஆசையுமாக கேட்க,
மகிழ் தான் தந்தை பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் அந்த பிஞ்சுகளை கண்டு கலங்கி நின்றாள்.
குருவும் அவர்களுடைய வார்த்தையில் உருகிவிட்டவன் அவர்களது உயரத்திற்கு குனிந்து,
“கண்டிப்பா நான் நாளைக்கு வருவேன்” என்று மொழிந்திட,
“ப்ராமிஸ்ஸா…?” என்று கவின் தனது கரத்தை நீட்ட,
அந்த பிஞ்சு கரத்தின் மீது தன்னுடைய கரத்தை வைத்தவன்,
“ப்ராமிஸ்ஸா நான் நாளைக்கு வருவேன்” என்றதும் தான் அவர்களுடைய முகம் தெளிந்தது.
இருவரையும் சமாதானம் செய்தவன் நிமிர்ந்து பார்க்க உடையவளும் கலங்கி தான் நின்று இருந்தாள.
அவளிடம் இது போல ஏதும் சமாதானங்கள் கூற இயலாதே…
அமைதியாக தலையசைத்துவிட்டு வெளியே வந்தவன் மகிழுந்தை எடுத்து கொண்டு இலக்கில்லாது சுற்றினான்.
நடு இரவில் யாருமற்ற சாலையில் மகிழுந்தை நிறுத்தியவன் ஸ்டியரிங்கில் சாய்ந்து கொண்டான்.
இங்கு மகிழினியும் நடந்துவிட்ட நிகழ்வுகளில் இருந்து வெளியே வர இயலாது இரவு முழுவதும் விழித்து தான் இருந்தாள்.
விழிகளை மூடி சாய்ந்திருந்த குருவிற்கு இந்த மூன்று மாதம் நினைவில் நிழலாடியது…
மகியை பேருந்து நிலையத்தில் விட்டு வந்தவன் வீட்டை நோக்கி சென்றான்.
மகிழுந்தை நிறுத்திவிட்டு வீட்டு கதவை திறந்தவன் முகத்தில் ஒரு வெறுமை அறைந்தது.
எப்போதும் கதவை திறந்ததும் அப்பா என்று சிரிப்புடன் ஓடி வந்து காலை கட்டி கொள்ளும் குழந்தைகள் நினைவிற்கு வந்தனர்.
இத்தனை நாட்கள் உடனிருந்த குழந்தைகள் திடீரென சென்றுவிட்டால் மனது கண்டிப்பாக அவர்களை தேடத்தானே செய்யும் போக போக பழகிவிடும் என்று எண்ணி உள்ளே நுழைந்து மின்விளக்கை போட்டான்.
அறையெங்கும் வெளிச்சம் பரவியது. ஆனால் அவனது மனது முழுவதும் இருளில் மூழ்கடிப்பட்டு இருப்பதை அவன் அறியவில்லை.
நீள்விருக்கையில் ஓய்வாக அமர்ந்தவனுக்கு சூடாக தேநீர் அருந்தினால் தேவலாம் என்று தோன்ற சடுதியில் மனக்கண்ணில் மகியின் முகம் மின்னி மறைந்தது.
இந்நேரம் மகி இருந்திருநதால் தான் வந்தவுடன் கேட்காமலே சுட சுட தேநீரை கொண்டு வந்து கொடுத்திருப்பாள் என்று சிந்தை பிறந்தது.
‘ச்சு இதென்ன வேலைக்கு ஆள் வைத்தால் அவர்களும் வந்தவுடன் என்ன வருவதற்கு முன்பே எல்லாவற்றையும் செய்து வைப்பார்கள். தேநீருக்காக அவளை ஏன் எதிர்பார்க்க வேண்டும்’
‘ஏதும் இல்லை என்றால் ஊரில் ஆயிரம் கடைகள் இருக்கிறது வேண்டும் என்றால் போய் குடித்துவிட்டு வரலாம் அல்லது ஆர்டர் போட்டால் பத்து நிமிடத்தில் வீட்டிலே கொண்டு வந்து கொடுப்பார்கள்’