காதல் 30.2

மகிழ் அமைதியாக பார்த்தாள். இந்த மூன்று மாதத்தில் பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்க வழக்கம் போல செலவை சுருக்கியிருந்தாள்.

அதுவும் புது வீடு வாடகை வீட்டில் உள்ள பொருட்கள் குழந்தைகளின் பள்ளி செலவு அகிலனுக்கு வேறு பணம் அனுப்ப வேண்டும் ஆக சிக்கனத்தை கடை பிடித்தாள்.

இவன் வாங்கி தந்ததில் பாதி கூட இந்த மூன்று மாதத்தில் மகிழ் வாங்கி கொடுக்கவில்லை.

முதலில் அடம் பிடித்தவர்கள் பின்னர் ஓரளவு பழகி கொண்டிருந்தனர்.  ஆனால் இப்போது மீண்டும் வந்து இத்தகையை வாங்கி கொடுக்கிறாரே.

சரி இதை கூட சமாளிக்கலாம் என்றால் இவர் எதற்கு மீண்டும் வந்தார். இவரை கேட்டால் நான் என்ன செய்வேன் என்று நினைத்தபடி தான் பார்த்திருந்தாள்.

குரு உள்ளே வர எழுந்து கொண்டாள்.

குரு, “மகி கொஞ்சம் குடிக்க தண்ணீ” என்றிட,

இவளுக்கு அப்போது தான் வீட்டிற்கு வந்தவனுக்கு எதுவுமே கொடுக்காதது உரைக்க தலையசைத்துவிட்டு சென்று நீரை எடுத்து வந்து கொடுத்தவள்,

“என்ன குடிக்கிறீங்க டீயா…? காஃபியா…?” என்று தயங்கி வினவினாள்.

இவன் தன் வீட்டில் எதுவும் அருந்துவானா? இல்லை பணியாள் வீட்டில் வேண்டாம் என்று மறுத்துவிடுவானோ என்று உள்ளுக்குள் அச்சம் இருந்தது. காரணம் அவனுடைய முந்தைய செய்கைகள் தான்.

ஆனால் குருவோ, “டீ…” என்று எந்தவித அலட்டலும் இன்றி கூற,

சரியென்றுவிட்டு தேநீரை தயாரிக்க உள்ளே சென்றவளுக்கு அப்போது தான் அந்த எண்ணம் வந்தது.

‘ஒருவேளை இருக்குமோ…?’ என்று சந்தேகமும் வந்தது.

‘அப்படியாக தான் இருக்கும்’ என்று முடிவு செய்தவள் தேநீரை தயாரித்து கொண்டு சென்றாள்.

குரு இளையவர்களுக்கு இனிப்பை பிரித்து கொடுத்தபடி இருந்தான்.

இவள் கொடுத்ததும் தேநீரை அருந்த துவங்க‌ மகிழ் அமைதியாக நின்றாள்.

தேநீரை அருந்தி முடிக்கவும் பேசலாம் என்று எண்ணியிருக்க குருவே,

“எப்படி இருக்க மகி…?” என்று அவனே பேச்சை துவங்கினான்.

அதில் ஒரு கணம் தடுமாறியவள்,

“ந… நல்லா இருக்கேன். நீங்க…?” என்று வினவினாள்.

“ஹ்ம்ம் இருக்கேன்” என்றவனிடம்,

“ஏன் என்னாச்சு எதுவும் பிராப்ளமா…?” என்றாள்.

‘இல்லை’ எனும் விதமாக தலை அசைத்தான்.

“உங்களுக்கு ஹனிகா மேமோட மேரஜ் முடிஞ்சதுதான…?” என்று வினவியவளின் உள்ளத்தின் அறையெங்கும் பேரிரைச்சல்.

இந்நேரம் நிச்சயமாக திருமணம் முடிந்திருக்கும் என்று தெரியும் இருந்தாலும் அவன் மூலமாக உறுதிபடுத்த மனதில் ஒரு நமைச்சல்.

“இல்லை” என்று பதில் வந்ததும் உள்ளத்தின் ஓரம் தோன்றிய மகிழ்ச்சியை ஓரம் கட்டியவள்,

“ஏன் என்னாச்சு எதாவது பிரச்சனையா…? அவங்க வீட்ல எதுவும் ஒத்துக்கலையா…? இல்லை ந..” என்றிட்டவள் பிறகு மாற்றி,

“உங்க வீட்ல யாரும் ஒத்துக்கலையா…? நான் ஐ மீன் என்னால தான் பிரச்சனையா…? நான் நான் வேணா வந்து பேசவா?” என்று முகம் முழுவதும் அச்சத்துடன் படபடத்தவளை அமைதியாக பார்த்தான்.

“இல்லை உன்னால எதுவும் இல்லை. காம் டவுன் மகி” என்று மகிழ் என்றவனது வார்த்தையில் சடுதியில் அவனிடமிருந்து பதற்றம் வடிந்தது.

“அப்புறம் ஏன் நீ நீங்க கல்யாணம் பண்ணிக்கலை‌…? இன்னும் வீட்ல பேசலையா?” என்று மீண்டும் அதையே அமைதியாகவே வினவினாள்.

குரு பதில் கூறும் முன் கதவு தட்டப்படும் ஓசை கேட்க மகிழ் எழுந்து சென்று கதவை திறக்க,

“எவ்ளோ நேரம்டி கதவை தட்றது. வந்து திறக்க இவ்ளோ நேரமா…? பச்சை மிளகாய் இருந்தா ரெண்டு வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்” என்று தன் போக்கில் பேசி கொண்டு இருந்த சௌமியா குருவை கண்டதும் ஒரு கணம் கப்சிப்.

ஏதோ அலையடித்து ஓய்ந்தது போல ஒரு அமைதி அங்கே.

அதுவும் ஒரு கணம் தான் பிறகு,

“ஏய் அண்ணா வந்திருக்காங்களா…? சொல்லவே இல்லை…” என்று மகிழிடம் வினவியவள்,

“வாங்கண்ணா எப்படி இருக்கிங்க. மகி சொன்னா நீங்க வெளியூர்ல ஒர்க் பண்றிங்கன்னு. லீவ்க்கு வந்து இருக்கிங்களா?” என்றிட,

மகிழ் தான் சற்று அதிர்வுடன் குருவை கண்டாள்.  சிறிதான பயம் பிறந்தது எங்கே குரு எதற்காக என்னை உனது கணவன் என்று கூறி வைத்திருக்கிறாய் என்று கோபப்பட்டுவிடுவானோ என்று.

அதுவும் மகி ஏதும் கூறவில்லை எழிலும் கவினும் தான் ‘இதுதான் எங்க அப்பா’ என்று புகைப்படத்தை காட்டியிருக்க இவளும் வேறு வழியின்றி ஒத்து கொண்டிருந்தாள்.

ஆனால் குரு அவள் எதிர்பார்த்தது போல எந்தவித எதிர்வினையும் இன்றி,

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க. இப்போ தான் வந்தேன்” என்றிட,

மகிழுக்கு உள்ளே நிம்மதியும் அதிர்வும் ஒருங்கே ஜனித்தது.

“நல்லா இருக்கேன். சாப்பிட்டிங்களாண்ணா?” என்று வினவிட,

“இல்லை மா இனிதான்” என்று பதில் மொழிந்தான்.

சௌமியா, “அப்படியா?” என்றவள் மகியிடம்,

“மகி நான் சொதி செஞ்சிருக்கேன். எடுத்துட்டு வர்றேன் அண்ணாக்கு கொடு. நல்லா தான் செஞ்சிருக்கேன். இரு வரேன்” என்றவள் பதிலை எதிர்பாராது தன் வீட்டிற்குள் நுழைய,

குருவிற்கு அவளது செயலில் லேசான புன்னகை கூட பிறந்தது.

மகி, “அவ சௌமியா. இங்க என்னோட கொலிக்” என்று பதில் மொழிந்தாள்.

சென்ற வேகத்திலே திரும்பி வந்தவள்,

“இந்தா மகி. சட்னி அரைச்சு கொண்டு வர்றேன்” என்றவள் குருவிடம்,

“அண்ணா சாப்பிட்டு பாத்து எப்பிடி இருக்குனு சொல்லுங்க” என்றிட,

“கண்டிப்பாம்மா” என்றவனுக்கு அந்த தங்கையின் அன்பு பிடித்திருந்தது.

சொன்னது போல ஐந்து நிமிடத்தில் தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து கொடுத்து சென்றாள்.

மகிழ் தான் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.

இவள் வேறு உணவை கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றிட்டாள்.

இப்போது இவரை சாப்பிடுமாறு கூற வேண்டுமா…? அதுவும் தங்களது வீட்டில்.

ஐந்து நட்சத்திர விடுதியில் சாப்பிடும் குரு பிரசாத் தனது வீட்டில் உண்பானா…? தேநீரே ஏதோ கேட்டுவிட்டேன் என்று அருந்தினான் இப்போது இதை கேட்டால் என்ன சொல்வானோ என்று எண்ணம் பிறந்தது.

இருந்தும் வேறு வழியின்றி,

“அது நீங்க சாப்பிட்றிங்களா…?” என்று கேட்டுவிட்டாள்.

மறு கணமே, “ஹ்ம்ம் சாப்பிடலாம்” என்றிட,

தோன்றிய அதிர்வை உள்ளுக்குள் மறைத்து உணவை எடுக்க சென்றவள் இட்லியை ஊத்தி வைத்துவிட்ட கணம் அவன் எங்கு அமர்ந்து உண்பான் என்று பெரிய வினா பிறந்தது.

இங்கு உணவு மேஜை ஏதுமில்லையே. சாதாரண மேஜை கூட கிடையாதே. குரு பிரசாத்தை கீழே அமர்ந்து உண்ண சொல்வதா என்பதை கற்பனை கூட அவளால் செய்ய இயலவில்லை‌.

என்ன செய்யலாம் என்ற சிந்தையுடன் உணவு பாத்திரத்தை எடுத்து கீழே வர குருவோ இளையவர்களுடன் தரையில் உண்பதற்காக அமர்ந்து இருந்ததான்.

அதனை கண்ட மகிழ் தான் அப்படியே நின்றுவிட்டாள். நம்ப இயலவில்லை.

அவன் சாதரணமாக தரையில் அமர்ந்திருப்பதை கண்டவளுக்கு விழிகளை தான் நம்ப முடியவில்லை.

குரு அவளரவத்தில் நிமிர்ந்து பார்க்க சட்டென்று முகத்தை மாற்றி வந்து உணவை வைத்தவள் தட்டை எடுத்து வந்து பரிமாறினாள்.

குரு, “நீயும் உட்காரு சேர்ந்து சாப்பிடலாம்” என்க,

“இல்லை அடுப்பில இட்லி வச்சிருக்கேன் வந்திட்றேன்” என்றவள் சுடசுட இட்லியையும் எடுத்து வந்து அவனுக்கு பிடித்த புதினா சட்னியுடன் பரிமாறினாள்.

எல்லாம் வேக வேகமாக இத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு சமைக்கும் ஆர்வத்தில் பத்து நிமிடத்தில் செய்திருந்தாள்.

குரு, “குக்கிங் ஓவர்னா. ஜாயின்ட் வித் அஸ்” என்றிட,

சற்று தயங்கி சம்மதாக தலையசைத்தவள் தானும் அமர்ந்து உண்டாள்.

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு மகிழ் கூடத்திற்கு வர,

“நீ கொச்சின்ல இருந்து ஏன் இங்க வந்த மகி…?” என்றவனது கேள்வி தான் அவளை எதிர் கொண்டது.

இதனை எதிர்பாராதவள் திகைத்து விழிக்க,

“அதுவும் என்கிட்ட சொல்ல வேண்டாம்னு கௌதம்கிட்ட சொல்லி இருக்க… நான் பசங்க படிப்பு செலவுக்கு அனுப்புன அமௌன்டயும் வேணாம்னு சொல்லி இருக்க…?” என்று கேள்விகளை அடுக்க,

இவளிடம் பதில் இல்லை. நொடிகள் கடக்க தன்னை சமாளித்து கொண்டவள்,

“அது அங்க அந்த ப்ளேஸ் எனக்கு செட் ஆகலை அதான் ஷிப்ட் பண்ணி வந்துட்டேன்” என்றவள்,

“அக்ரிமெண்ட்டோட பர்ஸ்ட் ரூலே நமக்கு டிவோர்ஸ் ஆன பிறகு நான் எந்த காரணத்தை கொண்டும் உங்களை கான்டாக்ட் பண்ண கூடாதுனு போட்டு இருந்திங்க. அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்களை கான்டாக்ட் பண்ணி ஷிஃப்ட் ஆகுறதை சொல்ல முடியும். அதுவுமில்லாம என்னால உங்க லைஃப்ல எந்த ப்ராப்ளமும் வர்றதை நான் விரும்பலை” என்றுவிட்டு,

“ஏற்கனவே நீங்க‌ எங்களுக்கு நிறைய செஞ்சிட்டிங்க. அதுக்கே நான் திருப்பி என்ன செய்ய போறேன்னு தெரியல. இதுக்கு மேலேயும் கடன்பட எனக்கு விருப்பம் இல்லை அதான் நான் அந்த பணத்தை வாங்கலை.” என்று நிறுத்தி நிதானமாகவே பதில் மொழிந்தாள்.

அதில் தனக்கும் அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவனுடைய எதையும் தான் வாங்க தயாரில்லை. தன்னுடைய பிள்ளைகளை தன்னால் படிக்க வைக்க முடியும் என்ற செய்திகளை தெளிவாக அவனுக்கு தெரியப்படுத்தி இருந்தாள்.

குருவுக்கும் அவள் கூறிய எல்லாம் புரிந்தது. சில நொடிகள் மௌனம் காத்தவன் பின்னர்,

“மகி என் கூடவே வந்திட்றியா? இப்போதைக்கு இல்லை லைஃப் லாங். கடைசி வரை. நான் இருக்கிற வரை…” என்றிட,

அவனது  வினாவில் மகிழினி விக்கித்து அவனை கண்டாள்…

error: Content is protected !!
Scroll to Top