அழைப்பை ஏற்றதுமே சடசடவென பொழியும் மழைதுளி போல வாய் ஓயாது பேசி அவனை ஒருவழியாக்கிடுவாள்.
“வாட் ஹாப்பன்ட் ஹனி?”என்று குரு நெரித்த புருவத்துடன் வினவ,
“குரு ஷாமியோட லவ் வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிராப்ளம் ஆகிடுச்சு. டாடிக்கு ரொம்ப கோவம். ஷாமிய அடிச்சிட்டாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்ம மேரேஜ்க்கு ஒத்துப்பாங்களா இல்லையான்னு” என்று அச்சமும் வருத்தமும் கலந்த குரலில் கூற,
“ஃப்பூ இவ்ளோ தானா? நான் உன் வேற ஏதோன்னு நினைச்சிட்டேன்” என்றவன்,
“லுக் ஹனி நீ ஏன் இவ்ளோ பயப்பட்ற. நம்ம மேரேஜ் கண்டிப்பா பேமிலி சம்மதத்தோட நடக்கும். அதுக்கு நான் கியாரண்டி. இன்னும் உன் பயம் போகலைன்னா? நான் உன் டாடிக்கிட்ட பேசுறேன்” என்க,
இத்தனை நேரம் அமைதியாக கேட்டவள்,
“நோ நோ… அப்படி எதுவும் பண்ணிடாத. ஏற்கனவே இருக்க பிராப்ளம்ல இது பெரிய இஸ்ஸூ ஆகிடும். அக்கா விஷயத்திலே டாடி ரொம்ப அப்செட் ஆகிட்டாரு. இதுவும் இப்போ தெரிஞ்சா ரொம்ப ப்ரேக் ஆகிடுவாரு. என்னோட ஸ்டடீஸ் கம்ப்ளீட் ஆனதும் நானே டாடிக்கிட்ட பேசுறேன். அப்புறம் மேரேஜ் பண்ணிக்கலாம். எனக்காக டூ இயரஸ் வெயிட் பண்ணுவ தானே?” என்று வருந்தி கேட்டவளின் விழிகள் கலங்கிட,
காதலியின் வருத்தம் தாளாதவன்,
“வாட் இஸ் திஸ் ஹனி. ஏன் இப்படி எமோஷனல் ஆகுற. டூ இயர்ஸ் என்ன போர் இயர்ஸ் அப்புறம் கூட மேரேஜ் பண்ணிக்கலாம். நானா மேரேஜ் பத்தி பேச மாட்டேன் ஓகே” என்று அழுத்தமாக கூறிட,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவளின் முகத்தில் மெலிதான புன்னகை.
அதில் தன்னுடைய சிறு சுணக்கத்தையும் காண சகியாத காதலனின் காதல் தந்த பெருமிதம் இருந்தது.
அவளது புன்னகையை கண்ட பின்னர் தான் இவனுக்கு இங்கே எல்லாம் சரியானது.
“ஹ்ம்ம் தட்ஸ் மை கேர்ள்” என்று அவன் புன்னகைக்க,
“எஸ் ஐ ஆம் ஆல்வேஸ் யுவர்ஸ்” என்றவளது முகத்தில் பெரியதான புன்னகை மிளிர்ந்தது.
“எஸ்”என்றவனது புன்னகை இமை நீள,
அவனது முகத்தினை ரசித்தவள்,
“குரு லவ் யூ லாட்…” என்று மொழிய,
“மீ டூ…” என்றவனது வதனமெங்கும் தன்னவள் மீதான காதல் தான்.
பிறகு சில நிமிடங்கள் காதல் பேச்சுகள் தொடர பேசிவிட்டு படுக்கையில் விழுந்தவனது மனமெங்கும் காதலி நினைவு தான்.
ஹனி என்கின்ற ஹனிகா பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவள். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கேளிக்கை விருந்தில் குருவை கண்டவள் அவன் பால் ஈர்க்கப்பட்டு அவனிடம் தானே பேச தொடங்கினாள்.
குருவிற்கு ஏனோ அப்போது எந்த ஆர்வமும் இல்லாததால் அவளை ஒதுக்கிவிட்டான். ஆனால் அவளது தொடர்ந்த படையெடுப்பு இவனுக்கு சுவாரசியத்தை வரவழைக்க தானும் அவளது செயல்களை கவனிக்க துவங்கினான். விளைவு இருவரும் காதலில் விழுந்தது தான்.
காதலியை பற்றிய சுகமான நினைவுகளுடனே உறங்கி போனான் குரு பிரசாத்.
வழக்கம் போல சிட்டுக்குருவியின் ஒலியில் உறக்கம் கலைந்த மகிழினி உடைகளை எடுத்து கொண்டு குளிக்க அகிலனின் அறைக்கு சென்றவள் தமையன் விழித்து இருப்பதை கண்டு,
“என்ன அகி இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட?” என்று வினவ,
“தூக்கம் வரலைக்கா” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.
“நைட் தூங்குனியா இல்லையா?” என்று அவனை பார்க்க,
“ப்ச் இல்லைக்கா” என்றவன் அவளது கரத்தை பிடித்து உள்ளங்கையில் கன்னத்தை வைத்து கொண்டான்.
அவனது அலைப்புறுதலை உணர்ந்தவள் மறுகையை அவனது தலைமேல் வைத்து,
“அகி இங்க பாரு” என்க,
நிமிர்ந்து அவனை கண்டவன், “க்கா லைட்டா பயமா இருக்குக்கா” எனறான் முகம் முழுவதும் தவிப்புடன்.
“எதுக்குடா பயம். ஹ்ம்ம் நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல கண்டிப்பா உனக்கு சீட் கிடைக்கும் சரியா” என்று அவனது தலையை வருட,
“ஹ்ம்ம்…” என்றவன் அவளை இடையோடு கட்டிக்கொண்டான்.
அகிலன் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சுவாமிநாதனின் ஆசை. செழியனை வழக்கறிஞராகவும் மகிழினியை பொறியாளராகவும் அகிலனை மருத்துவராக ஆக்க வேண்டும் என்று நாதன் விருப்பம்.
அதனை அடிக்கடி கூறி கொண்டு இருப்பார். அதன்படி செழியனை வழக்கறிஞருக்கு படிக்க வைத்துவிட்டார்.
மகிழினியை பொறியியல் சேர்த்துவிட்ட போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. இதனால் மகிழினி தனது படிப்பை
தொடர இயலாது போனாலும் தந்தையின் ஆசைப்படி தமையனை கண்டிப்பாக மருத்துவம் படிக்க விரும்பினாள்.
அகிலனும் தந்தையின் ஆசைக்கும் தமக்கையின் விருப்பத்திற்காகவும் பள்ளியில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். அதன்பின் மருத்துவ நுழைவுத்தேர்விற்கும் விண்ணப்பித்து நன்றாக படித்தான்.
இரவு பகல் பாராது படித்தான். ஆனால் அவனுடைய போதாத காலம் தேர்விற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவனுக்கு காய்ச்சல் வந்திருந்தது. மருத்துவரை பார்த்துவிட்டு வந்த பிறகும் நான்கு நாட்களுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
காய்ச்சலால் அவதிப்பட்டாலும் தன்னால் முயன்ற அளவில் தேர்வினை நல்ல முறையில் எழுதி இருந்தான். ஆனால் மதிப்பெண் சற்று குறைவாக தான் வந்திருந்தது.
மிகவும் குறைவு அல்ல. அரசு மருத்துவக் கல்லூரியில் கிடைக்கும் மதிப்பெண்ணை விட ஒன்று தான் குறைவு. தேர்வு முடிவு வெளியானதிலிருந்தே அகிலனுக்கு வருத்தம் மற்றும் பயம் தான்.
மகிழ் தான் கண்டிப்பாக உனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்று பலவாறாக நம்பிக்கை கூறி கொண்டிருந்தாள்.
அதன்பின் அகில் மருத்துவத்திற்கும் விண்ணப்பித்திருந்தான். இன்று தான் அவர்களுக்காக எந்த கல்லூரி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கல்வி துறை மூலம் தெரிவிக்கப்படும்