காதல் 18.2

இதை கேட்ட பின்னாடி தான் நீங்க லவ் மேரேஜ் தான்னு எனக்கு கன்பார்ம்மா தோணுது” என்று பேசியவளை,

“ஹலோ…” என்ற குருவின் குரல் தடை செய்தது.

இருவரும் அதில் திரும்பி பார்க்க குரு அலைபேசியில் பேசினான்.

வர்ஷி, “ஐயோ அண்ணா எப்போ வந்தாங்க. நான் கவனிக்கவே இல்லையே…?” என்றிட,

மகிக்கும் அதுதான் தோன்றியது. எங்கே தான் பேசியதை கேட்டிருப்பாரோ என்று தான் தோன்றியது.

ஆனால் அதை கேட்க முடியாதே,

“நான் உங்கண்ணாக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று எழுந்து சென்றுவிட்டாள்.

ஆனால் கேட்டிருப்பாரோ கேட்டிருப்பாரோ என்று தோன்றி கொண்டே தான் இருந்தது.

முகத்தில் எதையும் காண்பிக்காது உணவை பரிமாறினாள்.

குருவும் அமைதியாக உண்டான். ஆனால் அவன் மகிழ் காதலுக்கான விளக்கத்தை தொடங்கும் போதே வந்திருந்தான்.

அவள் கூறியவற்றை எல்லாம் கேட்ட போது இவளுக்கு காதலை பற்றி எல்லாம் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா..? என்று தோன்ற அடுத்த நொடியே இவளும் மனித பிறவி தானே ஆசைகள் இருப்பது ஒன்றும் தவறில்லையே…?

அதுவும் அவள் கூறிய, “வீ ஆல் ப்ரோக் அவர் ரூல்ஸ் ஃபார் சம்ஒன்” என்று வார்த்தை சிந்திக்க வைத்தது.

மகியின் சூழ்நிலை இவள் இப்படி இருக்க வேண்டி உள்ளது. பெற்றோர் நன்றாக இருந்திருந்தால் மகிக்கும் நல்ல வாழ்க்கை துணை தேடி கொடுத்திருப்பார்கள் என்று தோன்றியது.

தன்னுடைய ஒப்பந்தம் முடிந்த பிறகு தன்னால் இயன்றால் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வந்தது.

குரு உண்டுவிட்டு கிளம்பியிருந்தான். மகிழுக்கு வழக்கமான வேலைகள் இழுத்து கொண்டது.

வர்ஷினி நண்பர்களை பார்க்க சென்றிருக்க கோதை பிறை சூடனுடன் சொந்தத்தில் ஒரு நிச்சயத்திற்கு சென்றிருந்தார்.

வீட்டில் யாருமில்லாததால் மதிய உணவை உண்டுவிட்டு சிறிது ஓய்வெடுக்க சென்றாள்.

அன்று குழந்தை விடயத்தை கூறிய போது இனி யாராவது இதனை பற்றி பேசினால் என்னிடம் கூறு நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டிருந்தான்.

அதன் பிறகு கோதையும் சரி வேறு யாரும் கூட இதை பற்றி பேசவில்லை.

அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு படுக்கையில் சாய்ந்த பத்து நிமிடத்தில் மகிக்கு அழைப்பு வந்தது.

எடுத்து பார்க்க கவினது பள்ளியில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

மகிழ் இந்த நேரத்தில் எதற்கு அழைக்கிறார்கள் என்று சிறிது பதட்டத்துடன் அழைப்பை ஏற்க மறுமுனையில் கவினது ஆசிரியர்,

“ஹலோ மிஸஸ் மகிழினி நான் கவினோட க்ளாஸ் டீச்சர் லதா கவின் பேசுறேன். திடீர்னு கவினுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ் வந்திருச்சு” என்று மொழிய,

“அச்சோ கவினுக்கு என்ன ஆச்சு…?* என்றவளுக்கு நொடி நேரத்தில் ஆட்கொண்ட பதட்டத்தில் பேச்சே வரவில்லை.

“ஒன்னுமில்லை பயப்படாதிங்க மேம். இப்போ நாங்க ஈஸி க்யூர் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். நீங்க வர்றிங்களா…?” என்றார்.

“இதோ இப்போவே கிளம்பி வர்றேன்…” என்று துண்டித்தவள் அடுத்த நொடியே அலைபேசி மற்றும் பர்ஸை எடுத்து கொண்டு விறுவிறுவென வெளியே சென்றிருந்தாள்.

வீட்டில் எந்த மகிழுந்தும் இல்லை. எல்லோரும் எடுத்து சென்றிருந்தனர்.

வெளியே வந்து காவலாளியிடம் சுருக்கமாக விடயத்தை கூறிவிட்டு ஒரு தானியை பிடித்து மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்.

இதயம் பயத்தில் மத்தளம் கொட்டியது. என்ன ஆயிற்று என் பிள்ளைக்கு காலையில் கூட நன்றாக தானே இருந்தான்.

முழுதாக முப்பது நிமிடங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். எதுவும் இருக்காது என் பிள்ளைக்கு எதுவும் ஆகியிருக்காது.

விளையாடும் போது கீழே விழுந்து சிறிதாக அடி தான் பட்டிருக்கும் அதுதான் மருத்துவமனை வரை அழைத்து சென்றிருப்பார்கள் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டபடி தான் பயணித்தாள்.

மருத்துவமனையை அடைந்ததும் தானி ஓட்டுநருக்கு பணத்தை கொண்டுவிட்டு வேகவேகமாக கிட்டத்தட்ட ஓடினாள்.

அவசர சிகிச்சை பிரிவு எதுவென கேட்டு கொண்டு செல்ல அந்த பிரிவின் கடைக்கோடியில் சற்று பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள் கவினது வகுப்பு ஆசிரியை லதா.

மகியை கண்டதும் வேகமாக லதா எழுந்து வர மகிழும் அவளருகே சென்றவள்,

“மிஸ் என்னாச்சு என் பையனுக்கு என்னாச்சு மார்னிங் கூட நல்லாதான் இருந்தான்…” என்று பதட்டத்துடன் மொழிய,

“பயப்படாதிங்க மிஸஸ் மகிழினி. இப்படி உட்காருங்க” என்று மகியை அமர வைத்தவள,

“நான் சொல்றதை கொஞ்சம் பயப்படாம கேளுங்க மேம். கவின் இன்டர்வெல்ல பசங்களோட விளையாடும் போது கீழே விழுந்து கையில லேசான காயம்” என்றிட,

இவளுக்கு மனதினுள் நிம்மதி ஆசுவாசம் பிறக்க,

“ஊஃப் சின்ன காயம் தான இதுக்கு ஏன் மிஸ் என்ன பயப்படுத்திட்டிங்க” என்று மகிழ் வினவ,

“முழுசா கேளுங்க மேம். சின்ன காயம் தானேன்னு நானே பர்ஸ்ட் எய்ட் பண்ணி க்ளாஸ்ல உட்கார வச்சேன். ஆனால் கவின் ரொம்ப நேரமா அழுதிட்டு இருந்தான். நானும் சமாதானம் பண்ண ட்ரை பண்ணேன். பட் அவன் அம்மாக்கிட்ட போகணும்னு ரொம்ப அழுதான்‌. சரி கொஞ்ச நேரத்தில அவனே சரியாகிடுவான்னு நினைச்சு விட திடீர்னு அவன் தேம்ப ஆரம்பிச்சா கூடவே ப்ரீத்திங் இஸ்ஸூவும் வந்திட்டு. நான் பதறி டாக்டர்க்கிட்ட அழைச்சிட்டு வந்தேன். ஆனால் வர்ற வழியிலே அவன் மயக்கத்துக்கு போய்ட்டான். உடம்பெல்லாம் கூட லேசா நீல கலர்ல ஆகிட்டு. அப்போ தான் நான் பயந்துட்டேன்” என்று நடந்தவற்றை கூற,

மகிழுக்கு உள்ளே பயப்பந்து உருண்டது. விழிகள் நீரை தேக்கியிருந்தது.

லதா, “மேம் பயப்படாதிங்க‌‌. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில ரிசல்ட் வந்திடும். பயப்பட்ற மாதிரி எதுவும் இருக்காது” என்று ஆறுதல் கூறுகையிலே மகியின் அழுகை கரை கடந்திருந்தது.

சடுதியில் எழுந்து கவினை வைக்கப்பட்டிருக்கும் அறையை காண கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அந்த நொடி உள்ளுக்குள் மொத்தமாக உடைந்து போனாள் மகிழினி. வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக கண்ணீரை வடிக்க,

லதா, “பயப்படாதிங்க மேம்…” என்று ஆறுதல் கூறியவள்,

“எனக்கு டைம் ஆச்சு மேம். நான் கிளம்பணும். உங்க வீட்ல வேற யாருக்காவது இன்பார்ம் பண்ணனுமா…?” என்று வினவ,

“இல்லை நான் பாத்துக்கிறேன்” என்று அவளை அனுப்பியவள் அப்படியே தளர்ந்து து அமர்ந்துவிட்டாள்.

மனது கவினுக்கு எதுவும் இருக்காது எதுவும் இருக்காது என்று மாறி மாறி கூறியது. உலகில் உள்ள அத்தனை கடவுளையும் மனது வேண்டியது.

இவர்களுக்காவே வாழ்பவள் இளையவனுக்கு ஒன்று என்றதும் மனதளவில் நொருங்கிவிட்டாள்.

தாய் தந்தையரது முகமும் அண்ணன் அண்ணியினது முகமும் நினைவிற்கு வந்தது. என்னவோ துன்பத்தில் சாய்ந்து கொள்ள ஒரு தோளை மனது தேடியது. விழிகளை இறுக மூடி கொண்டாள்.

மனதில் மட்டும் ஆயிரம் போராட்டம். இன்னும் எத்தனையை தான் இந்த வாழ்க்கை தனக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு மேலும் தன்னால் தாங்க முடியாது என்று தான் தோன்றியது.

சில மணி நேரங்களுக்கு பிறகு செவிலியர் வந்து மருத்துவர் அழைப்பதாக கூறினார்.

கனத்த மனதுடன் பயத்தில் படபடக்கும் இதயத்துடன் வேகமாக ஓடினாள்.

“உட்காருங்க மிஸஸ் மகிழினி” என்று மருத்துவர் கூற,

உயிரை கையில் பிடித்தபடி அமர்ந்தவள்,

“டாக்டர் என் என் பையனுக்கு பயப்பட்ற மாதிரி எதுவும் இ… இல்லைதானே…?” என்று கண்ணீருடன் திக்கி திணறி வினவ,

error: Content is protected !!
Scroll to Top