காதல் 18.1

காதல் 18:

“அண்ணி எனக்கொரு காஃபி…” என்ற அம்முவின் குரல் கூடத்தையே நிறைக்க,

சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த மகிழ்,

“ஹ்ம்ம் இதோ டூ மினிட்ஸ் வர்ஷினி” என்றுவிட்டு அவளுக்கு குளம்பியை தயாரிக்க செல்ல,

கோதை, “ஏன்டி இதான் எழுந்து வர்ற டைமா…?” என்று கடிந்து கொண்டார்.

குளித்த பிறகும் கூட லேசாக கலையாத உறகத்துடன்,

“ம்மா ட்ராவலிங் டையர்ட்ல தூங்கிட்டேன்” என்று பதில் அளித்தாள்.

“வந்து ரெண்டு நாள் ஆச்சு உனக்கு ட்ராவலிங் டையர்டா அதுவும் ப்ளைட்ல தான வந்த…? என்னமோ ட்ரெயின் நாள் முழுக்க ட்ராவல் பண்ண மாதிரி அலுத்துக்கிற” என்று மீண்டும் திட்ட,

“ம்மா ட்ராவல் ட்ராவல் தான். எதுல இருந்தா என்ன…?” என்று விடாது பதில் மொழிந்தாள்.

“எதையாவது பேசி சமாளி. குழந்தைங்க கூட சீக்கிரமா எழுந்து ஸ்கூலுக்கு போய்டுச்சிங்க” என்று கோதை கூற,

“ஸ்கூல் படிக்கும் போது நானும் எழுந்து தான் போனேன்” என்று பதிலளித்துவிட்டு மகிழ் கொண்டு வந்த குளம்பியை

“ஹ்ம்ம்… நல்ல ஃப்ராக்ரென்ஸ். வீட்டு காஃபி ஸ்மெல்லோ தனி தான்…” என்று மிடறு விழுங்கினாள்.

மகிழ் அதனை கண்டு புன்னகைக்க,

“காஃபி சூப்பரா இருக்கு அண்ணி…” என்று விழி மூடி ரசித்தவள் மகிழ் திரும்பி செல்ல எத்தனிக்கும் நேரம்,

“எங்க போறீங்க இங்கயே உட்காருங்க. வந்ததுல இருந்து உங்களை பிடிக்கவே முடியலை” என்று கூறி சமயம்,

“மகிழ்…” என்ற குருவின் குரல் அவனை அழைத்தது.

“இதோ வந்திட்றேன் வர்ஷி” என்று மகிழ் எழுந்த சமயம்,

“அதுக்குள்ள அழைப்பு வந்தாச்சா. சீக்கிரமா போய்ட்டு வாங்க” அலுத்துக் கொண்டாள்.

வர்ஷினி குளம்பியை பருகி முடித்திருந்த சமயம் மகி திரும்பி வர,

“நீங்க வர்றதுக்குள்ள நான் காஃபியை குடிச்சே முடிச்சிட்டேன். சரி விடுங்க வந்து இப்படி உட்காருங்க” என்று மகியின் கையை பிடித்து அமர வைத்தாள்.

மகி, “என்ன விஷயம் வர்ஷி…?” என்று வினவ,

“அது உங்க லவ் ஸ்டோரிய கேக்கதான் கூப்பிட்டேன். சொல்லுங்க” என்று மொழிய,

“லவ் ஸ்டோரியா?” என்று அதிர்ந்து வினவினாள் மகிழினி.

“ஆமா லவ் ஸ்டோரி தான். அண்ணாவும் நீங்களும் லவ் மேரேஜ் தான பண்ணிக்கிட்டிங்க”

“வாட் நாங்க லவ் மேரேஜா யார் சொன்னது?”

“யார் சொல்லணும் எனக்கே பார்த்தா தெரிஞ்சிடுச்சு. அண்ணா அம்மாக்கிட்ட மேரேஜ் பண்ணா உங்களை தான் பண்ணுவேன்னு சொல்லிட்டாரமே…”

“இதெல்லாம் உன்கிட்ட யார் சொன்னது?”

“யாரும் சொல்லலை. தூரத்து பெரியம்மாக்கிட்ட அம்மா சொல்லும் போது ஒட்டு கேட்டேன். நான் சின்ன பொண்ணுனு அவங்க என்கிட்ட சொல்ல மாட்டாங்க. சரி அதை விடுங்க. யார் பர்ஸ்ட் லவ் ப்ரபோஸ் பண்ணது. நீங்களா அண்ணனா? எப்படி அண்ணா பால்கனியில நிக்க நீங்க அவுட் ஹவுஸ்ல நின்னுக்கிட்டு லவ் பண்ணிங்களா…?” என்று கன்னத்தில் கையை தாங்கி கேட்டவளை பார்க்கையில் லேசாக புன்னகை அரும்பியது மகிழுக்கு.

“ரொம்ப பேசுற நீ. போய் படிக்கிற வேலைய பாரு” என்றிட,

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க ப்ரபோசல் சீனை சொல்லுங்க” என்று அடம்பிடிக்க,

“வர்ஷி நீ சொல்ற மாதிரி லவ் மேரேஜ் எல்லாம் இல்லை. அவருக்கு என்னை பிடிச்சிருந்தது கல்யாணத்துக்கு கேட்டார். எனக்கும் சரின்னு தோணுச்சு சம்மதம் சொல்லிட்டேன்” என்று முடித்தாள்.

“ஓ… அப்போ மேரேஜ்க்கு அப்புறம் லவ் வந்திருக்கும்ல அதை பத்தி சொல்லுங்க” என்க,

“ஏய் வர்ஷி என்னை இதை பத்தியே கேக்குற?” என்று மகிழ் வினா தொடுக்க,

“ப்ச் சும்மா ஒரு க்யூரியாசிட்டில கேட்டுட்டேன். நீங்க உங்க மாமியார்க்கிட்ட கேட்டுடாதிங்க” என்றவள்,

“சரி உங்க லவ் ஸ்டோரிய விடுங்க. லவ்னா என்ன அதுக்கு டெபினிஷன் சொல்லுங்க. ரொம்ப நாளா இந்த டவுட் எனக்கு இருக்கு” என்றாள்.

இவள் தான் கூறாது விடமாட்டாள் என்று உணர்ந்த மகிழ்,

“காதலுக்கு பெருசா டெபினிஷன் எதுவும் இல்லை. நிறைய பேரை பார்ப்போம் பேசுவோம். ஒருத்தவங்ககிட்ட மட்டும் ஏதோ ஒரு வித்யாசமான பீல் வரும். எப்படி சொல்றது நம்ம ஆன்மாவை தீண்டுற ஒரு உணர்வு. அதை வார்த்தையால விளக்க முடியாது. வாழ்ந்து பார்த்தா தான் தெரியும்” என்றவளது முகத்தில் என்றும் குறையாத நேசத்துடன் வாழ்ந்த தாய் தந்தையர் நினைவு வந்தது.

“நமக்கானவங்க நம்ம சொல்லாமலே நம்ம உணர்வுகளை புரிஞ்சுப்பாங்க. கண் பார்த்து மனசை புரிஞ்சிக்கிறதுனு சொல்லுவாங்க. ஈருடல் ஓர் உயிர் மாதிரி. கடைசி வரை முதல் தடவை பார்த்தப்போ இருக்கிற அதே அன்போட கையை பிடிச்சிட்டு காடு வரை கூட வர்றவங்க. அதாவது தள்ளாடுற வயசுல தோள் சாஞ்சுக்கிற வரை நம்ம தடுமாறும் போது தாங்கி பிடிக்கணும். அப்படி வருவாங்கன்னு நமக்கு தோணுச்சுனா கண்டிப்பா நமக்கான எல்லாத்தையும் அவங்களை காலடியில சரணடைய வச்சிடலாம்…” என்று தன் போக்கில் பேசி சென்றவருக்கு சொல்லாமல் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என கூறுகையில் ஏனோ குருவின் முகம் நினைவிற்கு வந்தது.

“வீ‌ ஆல் ப்ரோக் அவர் ரூல்ஸ் ஃபார் சம்ஒன். அந்த சம்ஒன் தான் நமக்கானவங்களா இருப்பாங்க. அவங்க நம்ம இயல்பை தொலைக்க வைக்கணும்.‌ நாம அவங்களா வாழணும் கடைசிவரை. வாழ்க்கையில எதுவுமே வேண்டாம் இவ ஒருத்தி இருந்தா எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரினு தோணனும். அப்படி தோணினா அவங்களுக்காக எல்லாத்தையும் ப்ரேக் பண்ணிடலாம்…” என்று கூறு முடிக்க,

“வரே வா. லவ் மேரேஜ் இல்லைனு சொல்லிட்டு இவ்ளோ அழகா எக்ஸ்பிளனேஷன் கொடுக்குறிங்க. லவ் மேரேஜா இருந்தா அவ்ளோ தான் போல…” என்று சிரித்தவள்,

error: Content is protected !!
Scroll to Top