காதல் 14.3

சிறிய வயதில் இருந்தே எனக்கு நான் தான் என்னை சார்ந்தவர்களுக்கும் நான் தான் பொறுப்பு என்று வாழ்ந்துவிட்டேன். திடீரென வந்த ஒரு பாதுகாப்பை என் மனம் ஏற்று கொள்ளவில்லை என்று அவள் கூறியதன் அர்த்தம் விளங்கியது.

சிறு வயதில் இருந்தே மற்றவர்களுக்காக சிந்தித்து வாழ்வது எல்லாம் மிகவும் கொடுமையானது என்று மனது ஒரு கணம் அவளுக்காக சிந்தித்தது.

அதனை கலைக்கும் விதமாக கையில் குளம்பி குவளையுடன் வந்து நின்றாள் அவனது சிந்தையின் நாயகி.

அமைதியாக குரு அதனை எடுத்து கொள்ள மகி வெளியே வந்துவிட்டாள்.

அதன் பிறகு இரவு உணவு வரை நேரம் அமைதியாக சென்றது. இளையவர்கள் உறங்கியதும் ஷர்மியும் விஷாலியும் தங்களுடன் படுக்க வைத்து கொண்டனர்.

அறைக்குள் உறங்க நுழைந்த மகிழினிக்கு அப்போது தான் அந்த கட்டிலின் அளவு கண்ணில் பட்டது. மிகவும் சிறிதானது. குருவின் அறையில் இருந்த கட்டிலில் பாதி கூட இல்லை.

இருவர் படுத்தாலும் நிச்சயமாக கை கால் மற்றவர் மேல் படும் அபாயம் உண்டு. குரு வருவதை கவனித்தவள் கட்டிலின் மேல் இருந்த ஒரு போர்வையையும் தலையணையும் கையில் எடுத்து தரையில் விரித்திருந்தாள்.

குரு வந்ததுமே, “நான் கீழே படுத்துக்கிறேன் சார்” என்றுவிட,

குருவும் தலையசைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்துவிட்டான்.

தரையில் விரித்து படுத்தவளுக்கு தரை குளிரத்தான் செய்தது. அதற்காக என்ன செய்ய முடியும் இரண்டு நாட்கள் தானே. நீயென்ன பிறந்ததில் இருந்தே மெத்தையில் படுத்தா வளர்ந்தாய்.

உறங்கினால் குளிரெல்லாம் தெரியாது. உனக்கு வேறு வாய்ப்பு ஏதுமில்லை. பிறந்ததில் இருந்தே மிகவும் வசதியாக வளர்ந்து பழக்கப்பட்டவருக்கு அந்த கட்டிலை கொடுத்தது சரிதான் என்று சிந்தித்தவாறே உறங்கி போனாள்.

குருவும் பயணம் செய்து வந்ததில் நன்றாக தான் உறங்க தொடங்கினான். இடையில் கழிவரை செல்ல எழுந்து செல்லும் போது தான் ஒரு அனத்தல் சத்தம் அவனை அடைந்தது.

அது மகிழினியிடமிருந்து தான் வருகிறதோ என்று சந்தேகம் வர அவளருகே சென்றான்.

குளிரை தாங்காது கைகளை குறுக்கி கொண்டு படுத்திருந்தவளிடம் இருந்து தான் அந்த முனங்கல் வந்தது. உடல் வேறு லேசாக நடுங்கி கொண்டிருந்தது.

நெற்றியை தொட்டு பார்க்க உடல் கொதித்தது.

“ஷெட்” என்றவனுக்கு அவளை தரையில் படுக்க விட்டிருக்க கூடாதோ என்று தோன்றியது.

அதுதான் காய்ச்சல் வந்துவிட்டதே என்று சமயோகிதமாக செயல்பட்டவன் அவளை அப்படியே கையில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான். பிறகு தரையில் இருந்த போர்வை தலையணையை எடுத்து கட்டிலிலே போட்டுவிட்டு காசிநாதனிடம் விடயத்தை கூறி மருத்துவரை அழைத்திருந்தான்.

மகிழ் நடந்ததை நினைத்து பார்த்திருக்க,

இங்கு கண்விழித்துவிட்ட குரு அவளது பார்வையை கண்டு,

“என்ன மகிழினி பீவர் குறைஞ்சிடுச்சா?” என்று வினவ,

“ஹான் குறைஞ்சிடுச்சு” என்று சுயநினைவை அடைந்தவள் தட்டு தடுமாறி கீழே இறங்கிவிட்டு,

“நீ நீங்க கட்டில்ல படுத்துக்கோங்க” என்றிருந்தாள்.

குருவிற்கும் அது தேவையாயிருக்க கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டு உறகத்தினை தொடர்ந்தான்.

பிறகு மகிழ் குளித்துவர கோமதியும் நாதனும் காய்ச்சலை பற்றி விசாரித்தார்கள்.

மகிழினியும் சரியாகிவிட்டது என்று கூறியிருந்தாள். பின்னர் காலை உணவு முடித்துவிட்டு எங்கும் செல்லவில்லை காரணம் மகியின் உடல் நிலை தான்.

வீட்டிற்குள்ளே தான் அன்றைய பொழுது கழிந்தது. நாதனும் கோமதியும் மகியை பெற்ற பிள்ளையை போல தான் கவனித்தனர்.

இரவு உணவு முடிந்து மகி இளையவர்களை உறங்கவிட்டு அறைக்குள் வர குரு யாரிடமோ காணொளி அழைப்பில் பேசியபடி இருந்தான்.

அவன் முகமே ஹனியிடம் தான் பேசி கொண்டு இருக்கிறான் என்று கூறியது.

மகிழ் அமைதியாக கீழே பாயை விரித்து படுக்க செல்ல,

“மகிழினி” என்ற குருவின் குரல் அவளை அழைத்தது.

திரும்பி பார்த்தவள்,

“சார்…” என்றிட,

“ஹனி உன்கிட்ட பேசணுமாம்?” என்று அலைபேசியை கொடுத்துவிட்டு காசிநாதனை பார்க்க சென்றுவிட்டான்.

இங்கு மகிழ் ஹனியை பார்த்து புன்னகைத்தாள். கடந்த முறை பார்த்ததை விட இன்னும் அழகாக தெரிந்தாள் ஹனிகா.

ஹனியும் புன்னகையுடன்,

“என்ன மகிழ் எப்படி இருக்கிங்க. குரு இப்போ தான் சொன்னாரு நடந்ததை இப்போ பீவர் பரவாயில்லையா?” என்று வினவ,

“ஹ்ம்ம் சரியாகிடுச்சுங்க” என்று பதில் மொழிந்தாள்.

“ஹ்ம்ம் பார்த்து என்ஜாய் பண்ண மாட்டிங்களா? இனி இதுமாதிரி ப்ளேஸ்ல கேர்புல்லா இருங்க” என்றிட,

“ஹ்ம்ம் சரிங்க” என்றவள்,

“குரு சார் தான் என்னை காப்பாதுனாங்க. அதுக்கு நான் காலம்முழுக்க நன்றி கடனோட இருப்பேன். குரு சார் மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். ஜெஸ்ட் ஓர்க்கரா இருக்க என்னை காப்பாத்தவே தண்ணிக்குள்ள குதிச்சிட்டாங்க. அப்போ லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிற உங்களை உள்ளங்கையில வச்சு பாத்துப்பாங்க” என்று தன் இயல்பையும் மீறி சற்று அதிகமாக பேசிவிட,

“ரியல்லி…” என்று புன்னகையுடன் கேட்டவள்,

“என்னை மாதிரி ஒரு வொய்ஃப் கிடைக்க உங்க சார் தான் கொடுத்து வச்சிருக்கணும்” என்று சிரிப்புடன் கூறிவிட்டு,

“ஆமா என்னை இன்னைக்கு இவ்ளோ தூரம் அதுவும் குருவை பத்தி வேற பேசுறிங்க. என்ன என் ஆளை நீங்க சைட் அடிக்கிறிங்களா?” என்று கேட்டுவிட்டாள்.

மகிழ் பதறிவிட்டாள். முகம் முழுவதும் பயத்துடன்,

“இல்லை இல்லை நான் அப்படியெல்லாம் செய்யலை. செய்யவும் மாட்டேன். சார் என்னை காப்பாத்துனதுனால தான் அப்படி பேசிட்டேன்” என்று தட்டு தடுமாறி பேச,

“ஹே மகிழினி கூல் கூல் ஏன் இவ்வளோ டென்ஷன் பயம். ஐ ஆம் ஜெஸ்ட் கிட்டிங்…” என்று சிரிப்புடன் சமாதானம் கூற,

மகிழுக்கு இன்னும் பதட்டம் குறையவில்லை.

“அது இனிமேல் இதுமாதிரி விளையாட்டுக் கூட பேசாதிங்க மேம். குரு சார் என் தம்பிக்கு படிப்பை கொடுத்து எனக்கு என்னோட உயிரையும் காப்பாத்தி கொடுத்திருக்காரு. சொல்ல போனா அவர் எங்களுக்கு கடவுள் மாதிரி. அவரை போய் நான்…” என்றவள் நிறுத்திவிட,

ஹனி, “மகிழினி டோன்ட் பீ சீரியஸ் ரியல்லி ஒரு ஃபன்காக தான் கேட்டேன்” என்று அவளுக்கு பதில் மொழிந்தாள்.

மகிழினியின் குரு சார் எங்களுக்கு கடவுள் மாதிரி என்ற வார்த்தையிலே குரு உள்ளே நுழைந்திருந்தான்…

error: Content is protected !!
Scroll to Top