காதல் 13.2

காசிநாதன் கோமதி தம்பதியினர் தென்காசி அருகே பண்பொழி என்ற கிராமத்தில் தான் வசித்து வருகின்றனர். இப்போது ஊட்டியில் இருந்து தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இளையவர்கள், “அப்பா இது அப்பா அது…” என்று அவனை பாடாய் படுத்தி கொண்டிருக்க குருவும் பொறுமையுடன் அவர்களுக்கு பதில் அளித்தபடி பயணம் செய்தான்.

அவனுக்கும் இந்த பயணம் வெகுவாய் பிடித்திருந்தது. வேலை வேலை என்று அதன் பின்னரே ஓடி கொண்டிருந்ததில் இப்படிபட்ட பயணம் எல்லாம் எப்போது செய்தது என்று கூட நினைவில் இல்லை.

கல்லூரி காலத்தில் வார இறுதி வந்துவிட்டாலே போதும் நண்பர்களுடன் ஆடல் பாடல் என ஊர் சுற்ற தொடங்கிவிடுவான். அப்பொழுது இருந்த குரு பிரசாத் புன்னகையுடன் சிரித்த முகத்துடன் வலம் வருபவன்.

ஹனியை நேசித்தாலும் இருவரும் பெரிதாக எங்கு சென்றதில்லை. காரணம் இருவருடைய சூழ்நிலை தான். குருவினால் தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு எங்கும் செல்ல இயலாது. அவனை விட்டால் யாரும் சரியாக பார்த்து கொள்ளமாட்டார்கள். அதுவும் குரு யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க தயாராக இல்லை. அதனால் இருவரும் சந்திக்கும் நேரம் அருகில் உள்ள இடத்திலேயே நேரத்தை செலவழிப்பர்.

இளையவர்களது ஆசைக்காக மட்டும் அல்ல குருவிற்குமே மகிழுந்தில் உயர் வேகத்தில் பறப்பது அவ்வளவு இஷ்டம். நண்பர்களுடன் விளையாட்டாய் நிறைய மகிழுந்து பந்தையங்களை செய்திருக்கிறான்.

இப்போதும் அதே நினைப்பில் மகிழுந்தில் சீறிப்பாய இளையவர்களும் பயமின்றி ஆர்ப்பரித்தனர். மகிழினிக்கே ஆச்சரியம் தான் இவ்வளவு வேகத்தில் பயப்படாது மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருக்கின்றனரே. இளம் கன்று பயமறியாது என்பது உண்மை தான் போல என்று அந்த நொடி தோன்றியது.

ஊட்டியில் இருந்து தென்காசிக்கு கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயணம். இரண்டு மணி நேரம் கடந்ததும் இளையவர்கள்,

“ப்பா பசிக்கிது பசிக்கிது” என்று கூவத்தொடங்கிவிட,

“பசிக்கிதா குட்டீஸ்க்கு. இருங்க ஒரு நல்ல ஹோட்டலா பாத்து சாப்பிடுவோம்” என்றிட,

மகிழ், “நான் பசங்களுக்கு ஸ்நாக்ஸ் கொண்டு வந்து இருக்கேன்” என்று மொழிந்தாள்.

“ப்ரேக் பாஸ்ட் டைம் வந்திடுச்சு. சாப்பிட்டு போகலாம்” என்று இளகுவாகவே பதில் அளித்தான். காரணம் அவனது மனநிலை தான்.
மகியும் சரியென தலையசைத்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு உயர்தர‌ உணவகத்தில் மகிழுந்தை நிறுத்தியிருந்தான். அந்த காலை வேளையிலும் பாதிக்கு மேல் இருக்கைகள் நிரம்பி இருந்தது.

குளிரூட்டப்பட்ட பிரத்யேக அறைக்குள் அழைத்து சென்றவன் ஊழியர் வந்ததும் தனக்கு உணவை கூறிவிட்டு இளையவர்களிடம்,

“டேய் நீங்க என்ன சாப்பிட்றிங்க?” என்று வினவ,

மகிழ், “அவங்களுக்கு இரண்டு இட்லி சொல்லிடுங்க” என்று எழிலுக்கு முன் கூறியிருந்தாள்.

குரு பதில் மொழிவதற்குள் எழில்,

“நோ எனக்கு நூடுல்ஸ்” என்று மொழிய,

“என்கும் நூதுல்” என்று கவினும் கையை உயர்த்தி இருந்தான்.

குரு ஊழியரிடம் உணவை கூறுவதற்குள்,

“இல்லை வேண்டாம். அவங்களுக்கு தனி தனியாக எதுவும் வாங்கி கொடுக்காதிங்க இட்லியே போதும்” என்று மீண்டும் மொழிய,

“விடு ஒரு நாள் தான சாப்பிட்டு போறாங்க” என்றவன் அதனை விடுத்து,

“உனக்கு என்ன வேணும்?” என்றிட,

அவனை மறுத்து பேச இயலாதவள்,

“இரண்டு இட்லி” என்றாள்.

“போதுமா?” என்றவனது வினாவிற்கு,

“ஹ்ம்ம் போதும்” என்று முடித்துவிட்டாள்.

சில நிமிடங்களில் அவர் கேட்ட உணவு வர மகிழ் இளையவர்களுக்கு ஊட்ட முயற்சிக்க,

“அவங்களே சாப்பிட்டு பழகட்டும். நீ சாப்பிடு” என்று குரு கூறிவிட,

மகியும் இருவரையும் கவனித்தபடி உண்ண துவங்கினாள்.

அவள் நினைத்தது போலவே இருவரும் பாதி கூட உண்ணாமல் அப்படியே வைத்துவிட்டு,”போதும்” என்றிட,குரு, “என்ன போதுமா? ஒழுங்கா சாப்பிடுங்க.‌ ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணனும் அப்புறம் பசிக்கும்” என்றான்.”நோ எனக்கு ஸ்டோமெக் பில் ஆகிடுச்சு பா” என்று எழில் கூற,கவினும் அதையே கூறினான்.மகிழ், “நான் ஊட்டிவிடவா சமத்தா சாப்பிட்றிங்களா?” என்று வினவிட,”ம்ஹூம்… வேணாம்” என்று மறுத்துவிட்டிருந்தனர்.அவன் புறம் பார்வையை திருப்பியவள் மெதுவாக,”இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன். இவங்க சாப்பிட மாட்டாங்க. சாப்பாடு வேஸ்டா போய்டும்னு தான் சொன்னேன்” என்றவள்,

error: Content is protected !!
Scroll to Top