காதல் 13.1

காதல் 13:

உதகையின் காலை நேரத்து குளிர் காற்று உடலை மிதமாய் தழுவிச் செல்ல விழிகளை மூடி அதனை அனுபவித்தபடி வந்த மகிழினியின் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் வட்டமிட்டது.

காதிற்குள், “ப்பா இன்னும் ஸ்பீடா போங்க” என்ற எழிலின் குரலும்

“ஆமப்பா இந்து த்பீதா போ…” என்ற கவினது குரலும் தான் நுழைந்தது.

அதற்கு குரு,

“டேய் போதும் டா. இதுக்கு மேல ஸ்பீடா போகக்கூடாது” என்று கண்டிப்பதும் விழுந்தது.

மகிழ் இருக்கையின் பின் புறம் அமர்ந்திருக்க இளையவர்கள் குருவின் அருகில் உள்ள இருக்கையில் குதித்து கொண்டிருந்தனர்.

“ப்பா ப்ளீஸ்ப்பா…” என்ற எழில் குருவின் தாடையை பிடித்து கெஞ்ச,

“ப்தீத் பா” என்று கவினும் அதே போல கொஞ்சினான்.

இவர்களது செயலில் மகிழுக்கு மட்டுமல்ல குருவிற்குமே மென்னகை பிறந்தது.

“டேய் என்னங்கடா ஏதோ குழந்தையை கொஞ்சுற மாதிரி கொஞ்சுறிங்க” என்று சிரிப்புடன் கேட்டபடி சிறிது வேகத்தை கூட்டினான்.

ஊட்டி குன்னூர் யாருமற்ற பிரதான சாலையில் குருவின் கையில் அவனது நவீன ரக மகிழுந்து சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

குருவின் இதழ்களில் நெளிந்த புன்னகையை கண்டவளுக்கு காலை நடந்த நிகழ்வு தானாய் கண்முன் விரிந்தது.

எங்கே தன்னை ஏதும் தவறாக நினைத்துவிடுவாரோ என்று எண்ணி தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்ட போதும் இதயத்தின் வேகம் குறையவில்லை.

வியர்வை துளி துளியாய் அரும்பியிருக்க முகமே ரத்த பசையற்று போயிருந்தது.

உடலில் லேசாய நடுக்கம் கூட பிறந்திருந்தது. தன்னை தன்னுடைய ஒழுகத்தினை தவறாக அவன் நினைத்துவிட்டால் என்று நினைக்கவே உடல் பதறியது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் இதோ இந்த அறையில் இவருடன் தான் இருக்க வேண்டும். ஒருவேளை தன்னை இவர் தவறாக நினைத்து பேசிவிட்டால் தன்னால் எப்படி இவரது முகத்தில் விழித்து கொண்டு இந்த அறையில் இருக்க முடியும் என்று நொடி நேரத்தில் சிந்தனை மேகமாய் விரிந்திருந்தது.

நொடிகள் நிமிடங்களாக கடக்க அவளது முகத்தை நிர்மலான பாவனையுடன் பார்த்திருந்தவன்,

“உன் மேல தப்பில்லை. போ” என்றிட,

அந்த ஒரு வார்த்தையில் இவளுக்கு உயிர் திரும்பி வந்திருந்தது. தனது ஒழுக்கமே கேள்வி குறி ஆகியிருந்தால் தான் என்ன செய்திருப்பேன். அவனுடைய ஒற்றை வார்த்தையில் இவளுக்கு எவ்வளவு நிம்மதி பிறந்தது.

அவன் கூறியது தான் தாமதம் சடுதியில் அந்த அறையில் இருந்தே வெளியேறி சென்றிருந்தாள்.

போகும் அவளை பார்த்திருந்தவனது முகத்தில் என்ன இருந்தது என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

ஏதோ ஒரு பெண்ணின் குரல் ஓர் மூலையில் சற்று அழுத்தமாக கேட்டிட சடுதியில் விழிகளை திறந்தவனது பார்வை முழுவதும் மகிழினியின் முகம் தான்.

தன்னை கண்டதும் சட்டென்று அதிர்ந்தது பின்னர் தனது கன்னத்தில் இருந்த கரத்தை கண்டு மேலும் அதிர்வை தாங்கி படக்கென்று கையை இழுத்துக் கொண்டது.

பிறகு பயத்தில் வியர்வை பூத்து ரத்தபசை அற்ற முகத்துடன் திக்கி திணறி தன்னிலை விளக்கம் கொடுத்தது.‌ அதன் பின்னரும் தனது எதிர்வினையை எண்ணி அதீத அச்சத்துடன் தனது முகத்தையே பார்த்திருந்தது என்று அனைத்தையும் கவனித்தபடி தான் இருந்தான்.

என்னதான் விழிகள் அவளுடைய விளக்கங்களை கேட்டாலும் மூளை சற்று முன்னர் அரை தூக்கத்தில் தான் அவளது கைகளை பிடித்து கன்னத்தில் வைத்து கொண்டது உண்மைதானா? என்று ஆராய்ந்தது.

விடை லேசாக தான் புரண்டு படுக்கையில் அவளது கையை பிடித்து அதன் கதகதப்பில் கன்னத்தில் வைத்தது நினைவில் வந்தது. அதன் பிறகு தான் அவளிடம் பதில் மொழிந்தான்.

குருவிற்கு மகிழினியின் பால் சந்தேகம் ஏதுமில்லை. இருந்தும் அவன் யாரையும் எளிதில் நம்புவதில்லை. காரணம் அவன் கடந்து வந்த பாதையாக இருக்கலாம்.

தான் பேசிய பிறகு அவளது முகத்தில் தோன்றிய பெரிய நிம்மதியையும் அவள் உடல்மொழியில் தெரிந்த தளர்வையும் அவன் விழிகள் அவதானித்திருந்தது.

குரு எழுந்து குளிக்க சென்றதும் தான் அறைக்குள் நுழைந்து இளையவர்களை எழுப்பிவிட்டு அகிலனின் அறைக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து தயார் செய்தாள்.

அவள் கிளம்பியிருந்த நேரம் கோதையும் பிறை சூடனும் எழுந்து வர அவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டனர்.

நடந்தவற்றை நினைத்து பார்த்த மகிழினிக்கு அந்த நொடி குரு பிரசாத் கெட்டவன் என்று கூறிவிடும்படி இல்லை. நல்லவனாக தான் தெரிந்தான். என்ன பணம் கொட்டி இருந்ததால் சற்று தான் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. அதுவும் அவரிடம் பணமுள்ளது அதற்கான திமிரும் உள்ளது. அதனை வைத்து யாரையும் புன்படுத்தவோ செய்ததில்லை.

ஆக யாருக்கும் கெடுதல் நினைக்காத வகையில் இருப்பதாலும் அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் தன்னை தவறாக‌ எண்ணிவிட வாய்ப்பு நிறைய இருந்திருக்கும். இவர் அப்படி நினைக்கவில்லை‌. ஒரே சொல்லில் தனக்கு நிம்மதியை கொடுத்திருந்தான். மொத்தத்தில் குரு பிரசாத் என்பவன் நல்லவன் என்று மனதிற்குள் எண்ணம் வலுத்தது.

அடுத்த கணமே அவர் நல்லவராக இருந்தால் உனக்கென்ன கெட்டவராக இருந்தால் உனக்கென்ன.‌ நீ இங்கே வந்திருப்பது ஒரு தொழிலாளியாக தான் உன்னுடைய வேலை முடிந்ததும் இங்கிருந்து கிளம்பிவிடுவாய் ஆக எதிலும் ஆழ்ந்து சிந்திப்பதை நிறுத்திவிடு என்று மூளை எச்சரிக்க தனது எண்ணத்தினை கட்டுபடுத்தியவள் சுற்றுப்புறத்தினை வெறிக்க துவங்கினாள்.

அந்த அதிகாலை வேளையில் பனியடர்ந்த சாலையில் காற்றின் தாளத்திற்கேற்ப ஆடும் யூகலிப்டஸ் மரங்களை பார்க்கவே இயற்கை அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

இத்தனை வருடங்களாக தான் வசித்த ஊட்டி இவ்வளவு அழகானது என்று இன்று தான் மகிழினிக்கு தெரிந்தது. காரணம் இதனை எல்லாம் நின்று நிதானமாக ரசிக்கவெல்லாம் அவளுக்கு நேரம் இருந்ததில்லை‌.

காலையில் இருந்து இரவு உறங்கும் வரை ஓட்டமாய் கழிய அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தது.

இப்போது வாய்ப்பு கிடைக்க நிதானமாக இயற்கை காற்றை உள்ளிழுத்து சுவாசித்தபடி வந்தாள்

error: Content is protected !!
Scroll to Top