காதல் 12.2

அவர் கேட்டதும் சட்டென்று வாய்க்கு வந்ததை கூறி இருந்தாள். இப்படி பொய் கூறிவிட்டோமே என்ற‌ எண்ணம் மனதை வருத்த இதை விட பெரிய பொய் ஒன்றில் தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று மனசாட்சி எள்ளி நகையாடியதில் சடுதியில் குளம்பியை தயாரித்துவிட்டு வெளியேறினாள்.

மகிழ் அறைக்குள் நுழையும் சமயம் குரு குளித்து உடை மாற்றி வந்திருந்தான்.

குளம்பியை எடுத்து சென்று அவனிடம் கொடுத்தவள் மீதம் இருந்த துணிகளை எடுத்து அடுக்கி வைத்தாள்.

மனதிற்குள் அவருடைய‌ உடைகளையும் எடுத்து வைக்க வேண்டுமே எப்படி செய்வது.

தன்னுடைய பொருள் எதையும் மறந்து கூட தொடக்கூடாது என்று கூறியிருக்கிறாரே இப்போது என்ன செய்வது.

தான் எடுத்து வைத்தால் நிச்சயமாக எதாவது கூறுவார். தான் என்ன செய்வது என்று பலவாறாக யோசித்தவள் தயங்கி தயங்கி அவன் முகம் பார்ப்பதும் பின்னர் திரும்பி கொள்வதுமாக இருக்க,

குளம்பியை மிடறு மிடறாக விழுங்கியபடி அலைபேசியில் பார்வை பதித்து இருந்தவன் இவளை கவனித்துவிட்டு,

“மகிழினி என்கிட்ட எதாவது சொல்லணுமா?” என்று சடுதியில் வினவிட,

அதில் ஒரு கணம் திகைத்தவள்,

“ஆமா அது உங்க ட்ரெஸ நீங்க எடுத்து வச்சிட்றிங்களா?” என்று கேட்டுவிட,

“வாட் நானா?” என்றவனது முகத்தில் திகைப்பும் அதிர்ச்சியும்.

அவனது முகத்தை கண்டபின் தான் தான் கூறிய வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவள்,

“இல்லை அது நான் எங்க ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன்.‌ உங்க நீங்க உங்களோட எந்த திங்க்ஸயும் தொடக்கூடாதுனு சொல்லிட்டிங்களே அதான் எப்படி எடுத்து வைக்கிறதுனு கேட்க வந்து இப்படி உளரிட்டேன் சா.. சாரி சார்” என்று மன்னிப்பை வேண்ட,

அவன் பார்வையில் நொடி நேரத்தில் கூர்மை தோன்றி மறைந்திருந்தது. முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

குருவிற்கு தாயை தவிர யார் தனது உடையை எடுத்தாலும் பிடிக்காது. இத்தனை நாட்கள் அவர்தான் குரு தொழில் சம்மந்தமாக ஊருக்கு செல்லும் சமயம் உடமைகளை எடுத்து வைப்பார். இப்போது தாயிடம் கூற முடியாது என்று எண்ணம் வந்தது.

அதற்காக மற்றொருவரை என் உடமைகளை தொட விடுவதா? என்றும் சிந்தை பிறந்தது. தானும் இதெல்லாம் செய்ய இயலாது. இதுவரை செய்து பழக்கம் இல்லை அதற்கு அவசியமும் வந்ததில்லை.

வேறு எந்த வழியும் இல்லை இவளையே எடுத்து வைக்க கூறுவோம். வேலைக்காரர் ஒருவர் எடுத்து வைப்பதாக எண்ணி கொள்வோம் என்று முடிவெடுத்தவன்,

“நீயே எடுத்து வை. எதாவது ரெண்டு கேஷுவல்ஸே எடுத்து வை” என்று குரு மொழிய,

“ஹ்ம்ம்” என்று சம்மதமாக தலையசைத்தவள்,

“நாங்க எங்க துணி வச்சிருக்கதிலே உங்களோடதையும் வச்சிடவா சார்?” என்று வினவ,

“நோ எனக்கு என்னோட ஃப்ரீஃப்கேஸ் உள்ளே கபோர்ட்ல இருக்கு அதுல எடுத்து வை” என்றான்.

சரியென்றவள் அவன் கூறிய அலமாரியில் இருந்து ஒரு கைப்பெட்டியை எடுத்தவள் அதனை திறக்க முயற்ச்சிக்க முடியவில்லை.

அது புது வகையான கைப்பெட்டியாக இருந்தது. இதற்கு முன்பு இது போன்றவற்றை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறாள் அவ்வளவு தான் மற்றபடி உபயோகிக்கவெல்லாம் அவளுக்கு தெரியாது.

இரண்டு நிமிடங்கள் முயற்சித்து பார்த்தவள் குருவை திரும்பி பார்க்க அவன் அலைபேசியில் கவனமாக இருந்தான்.

சரி அவனாக திரும்புவான் கேட்கலாம் என்று மகி அவனையே பார்த்திருக்க நிமிடங்கள் கடந்தும் அவன் நிமிரவில்லை.

எப்படி நிமிர்வான் குரு தான் அவனுடைய ஆருயிர் காதலி ஹனியுடன் பேசி கொண்டு இருந்தானே.

அவன் இப்போதைக்கு திரும்ப மாட்டான் என்று உணர்ந்தவள்,

“சார்…” என்று அழைக்க, அவனுக்கு அது எட்டியது போலவே தெரியவில்லை.

மீண்டும், “சார்…” என்று சற்று குரலை உயர்த்தி அழைக்க,

இப்போது குருவின் செவியில் அவளது குரல் விழுந்தது. காதலியுடன் இருந்த மோன நிலை கலைந்ததில் சற்று எரிச்சலுடன் என்ன எனும் விதமாக நிமிர்ந்து பார்க்க,

மகிழ்,”இதை ஓபன் பண்ண முடியலை” என்றதில் எரிச்சல் மேலும் மிக,

“பச் இது கூட உனக்கு தெரியாதா? நீ படிச்சிருக்க தான?” என்று சற்று அழுத்தி உரக்க திட்டியிருந்தான்.

திடீரென்ற அவனது கோபத்தின் காரணம் விளங்காது விழித்தவளுக்கு அவனது தோனியில் முகமே விழுந்துவிட்டது‌

error: Content is protected !!
Scroll to Top