காதல் 11.3

தனது தாத்தாவிடம் பேசிவிட்டு அறைக்குள் நுழைய முயன்ற குருவினை மகிழினியின் குரல் தான் வரவேற்றது.

“ஒரு நாள் அந்த ராஜா எல்லார்கிட்டயும் ஒரு வேலை கொடுத்தாராம்” என்று கூறுயபடி இருந்தாள்.

குருவின் நடை ஒரு நொடி தடைபட்டது. எப்போதும் அவன் நுழையும் சமயம் அமைதியாக இருக்கும் அவனது அறையில் ஒரு பெண்ணின் குரல் அதனுடன் சேர்த்து இரண்டு சிறுவர்கள் என்னவோ வித்யாசமாக இருந்தது.

காலையிலும் அப்படித்தான் தன்னுடைய குளியலறையினுள் நுழைந்தவுடன் குப்பென்று சீகைக்காயும் ஒரு பெண்ணின் நறுமணமும் சேர்ந்து நாசியினுள் குப்பென்று பாய்ந்தது.

சட்டென ஒரு நொடி நின்றுவிட்டவன் பிறகு நிசர்தனம் உணர்ந்து குளிக்க சென்றான்.‌ இனி இரண்டு வருடங்களுக்கு இதுதான் உன்னுடைய வழக்கம் என்று தனக்குத்தானே கூறி கொண்டவன் உள்ளே நுழைய இவள் அவனது வருகையை உணர்ந்து பட்டென்று எழுந்து கொண்டாள்.

அதுவும் மெத்தையின் மேல் தான். குரு கேள்வியாக பார்க்க தனது செயலை உணர்ந்தவள் சடுதியில் கீழே இறங்கி,

“இவங்க இங்கே என்கூடவே தங்க வச்சுக்கலாமா சார். அது நான் இல்லாம தூங்க மாட்டாங்க‌”என்றவள்,

பின்னர் தயக்கத்துடன், ” அவங்க கண்டிப்பா உங்களோட எந்த திங்க்ஸயும் எடுக்க மாட்டாங்க. நான் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்” என்று
அவனது அனுமதி வேண்டி நின்றாள்.

பின்னே அறை அவனுடையது. என்னதான் அவன் குழந்தைகளுடன் சிரித்து பேசினாலும் எதுவும் மாறிடாது.

தான் தொழிலாளி அவர் முதலாளி. இது தான் எங்களுக்குள் இருக்கும் பந்தம். நானாக முடிவெடுத்து இவர்களை அழைத்து வந்து இவர்,

‘யாரை கேட்டு எனது அறையில் இவர்களை தங்க வைக்கப்போகிறாய்?’ என்று கேட்டுவிட்டால் தான் என்ன பதில் மொழிவது என்று எண்ணியே இதனை கேட்டிருந்தாள்‌.

ஒரு கணம் அமைதியாக அவளை பார்த்தவன் பின் ‘சரி’ என்பதாக தலையசைத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தான்.

ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள் அவர்களிடம் மீண்டும் கதையை துவங்கினாள்.

குளியலறையில் இருந்த வெளிவந்த குருவை கண்டு இளையவர்கள்,

“ப்பா தூங்க வா. அம்மா ஸ்டோரி சொல்றா. ராஜா ஸ்டோரி நல்லாயிருக்கு. உன்னையும் தூங்க வைப்பா” என்று கூற,
அவனுக்கு புன்னகை முகிழ்ந்தது.

“நீங்க தூங்குங்க எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. முடிச்சிட்டு வர்றேன்” என்றான்.

மகிழோ குருவை தொந்திரவு செய்துவிட கூடாது என்று எண்ணி முடிந்த அளவு சத்தத்தை குறைத்து கூறினாள்.

இருந்தும் குருவிற்கும் மகியுடைய குரலும் அதற்கு ஹ்ம்ம் கொட்டும் குழந்தைகளுடைய குரலும் செவியில் விழத்தான் செய்தது.

அலுவலகத்தில் உள்ள முக்கியமான வேலைகளை மட்டும் பார்த்து கொண்டிருந்தான்.

சட்டென அவனது அலைபேசியின் கானா இசைத்தது. குரு அதனை சார்ஜில் போட்டிருந்தான். மடியில் மடிக்கணினி இருந்ததால் சட்டென்று அவனால் எழமுடியவில்லை.

இதனை கவனித்த மகிழ்,

“நான் எடுத்து தரட்டுமா சார்?” என்று வினவிட,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தான்.

எழுந்து சென்று சார்ஜரில் இருந்து அலைபேசியை கழட்டும் சமயம் திரையில் புன்னகையுடன் குருவுடன் மிகவும் நெருக்கமாக நின்றிருந்த பெண்ணும் அதற்கு மேலே ஹனி என்ற பெயரும் மகியின் பார்வையில் பட்டுவிட,

“ஓ… அவருடைய காதலி தான் அழைக்கிறார் போல” என்று எண்ணியபடி அலைபேசியை அவனிடம் கொடுத்தவள் காதலர்கள் பேசும் சமயம் தான் அங்கே இடையூறாக இருப்பது போல தோன்றியது.

குழந்தைகள் ஏற்கனவே பாதி உறகத்திற்கு சென்றிருந்ததால் அவர்களுக்கு லேசாக தட்டி கொடுத்துவிட்டு விரைந்து பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள்.

ஊட்டியின் குளிர் உடலை ஊடுருவி செல்ல கைகளை கட்டியடி நின்று வானத்தை வெறித்தாள்.

காலையில் இருந்து இப்போது வரை நடந்ததை வெறித்தாள்.

இங்கு ஹனியின் பெயரை கண்டதும் புன்னகையுடன் அழைப்பை ஏற்று பேச தொடங்கியவன் மகிழினி எழுந்து சென்றதில் ஒரு விநாடி அவளை பார்த்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தான்.

அவள் எழுந்து சென்ற காரணம் குருவிற்கு புரிய ஒரு முறை புருவம் ஏறி இறங்கியது.

அதனை கவனித்த ஹனி,

“என்ன குரு வாட் ஹாப்பன்ட்?” என்று வினவ,

“நத்திங்” என்று புன்னகைத்தான்.

அப்போது தான் ஹனி நினைவு வந்தவளாக,

“எங்க அந்த குட்டீஸ் அண்ட் மகிழினி?” என்று வினா எழுப்ப,

“குட்டீஸ் இதோ தூங்குறாங்க” என்று அலைபேசியை அவர்கள் புறம் திருப்பினான்.

ஒருவர் மேல் ஒருவர் கையும் காலையும் போட்டு உறங்கும் சிறியவர்களை கண்ட ஹனி,

“வாவ் சோ க்யூட் எவ்ளோ அழகா தூங்குறாங்க. நேர்ல மட்டும் பாத்தா அப்படியே அந்த கன்னத்தை கடிச்சு வச்சிடுவேன்” என்று சிரிப்புடன் சிலாகிக்க,

“ஆமா க்யூட் தான். இவ்ளோ நேரம் நல்ல ஆட்டம் இப்போ தான் தூங்குறாங்க” என்று தானும் மென்னகையுடன் மொழிய,

“பார்ரா என் குருவுக்கு குழந்தைகளை எல்லாம் ரசிக்க தெரியிது. நாட் பேட் நாளைக்கு நம்ம பேபீஸயும் நல்லா பாத்துக்குவ” என்று சிரிப்புடன் கூறியவளது நேசம் உணர்ந்தவன்,

“எஸ் அஃப்கோர்ஸ்” என்றவனது முகத்திலும் நேசம் தான்.

“சரி எங்க மகிழினிய காணோம்.‌ அவங்களும் தூங்கிட்டாங்களா?” என்று வினா தொடுக்க,

“இல்லை இங்கதான் இருக்கா” என்றவன்,

“மகிழினி இங்க வா” என்று சற்று உரக்க அழைத்துவிட,

அதில் பதறி உள்ளே நுழைந்தவள்,

“ஷ்… கத்தாதிங்க. குழந்தைங்க தூங்குறாங்க” என்று வாயில் விரலை வைத்தபடி அதட்டலாக மொழிந்துவிட்டவளுக்கு அடுத்த கணம் தான் தன்னுடைய செயல் உரைக்க,

சடுதியில் விரலை எடுத்தவள்,

“சா… சாரி சார். அது அவங்க எழுந்துட்டா திரும்ப தூங்க வைக்கிறது கஷ்டம் அதுதான் ஏதோ ஒரு வேகத்தில…” என்று நிறுத்தி மன்னிப்பை யாசிக்க

error: Content is protected !!
Scroll to Top