காதல் 11.2

ஹ்ம்ம் கூட்டிட்டு போறேன்” என்று குரு பதில் மொழிய,

“அப்புறம் நியூ ட்ரெஸ் சைக்கிள் இதெல்லாம் வாங்கி தர்றீங்களா?” என்று அடுக்க,

“ஹ்ம்ம் எல்லாமே வாங்கி தர்றேன்” என்று பதில் அளித்தான்.

கவின், “அப்போ என்கு என்கு பிக் சைத்தில்” என்று வினவ,

முதலில் புரியாது சிந்தித்தவன் பின்னர்,

“பிக் சைக்கிளா?” என்று வினவ,

“ஹ்ம்ம் ஆமா பிக் சைத்தில்”

“அதுக்கு பர்ஸ்ட் நீ பிக் பாயா வளரு நான் உனக்கு பிக் சைக்கிள் வாங்கி தர்றேன்.‌ இப்போ ஸ்மால் சைக்கிள் தான் உனக்கு” என்றிட,

“சதிப்பா எப்போ வாந்தி தத?” என்று வினா கொடுத்தான் கவின்.

“இப்போ இல்லை டூ டேஸ் அப்புறம்”என்று குரு பதில் மொழிய,

“தூ தேதா என்கு இப்போ வேது” என்று கவின் கூற,

“இப்போ வொர்க் இருக்குடா. டூ டேஸ் அப்புறம் கண்டிப்பா நான் வாங்கி தர்றேன்” என்று குரு பதில் அளிக்க,

“நோ…” என்று உதடு பிதுக்கி அழ தயாரானான் கவின்.

சட்டென்ற அவனது அழுகையில் குரு என்ன செய்வதென்று தெரியாது மகிழினியை பார்க்க,

“கவின் இதென்ன அடம்பிடிக்கிற பழக்கம்.‌ அதான் டூ டேஸ்ல அவங்க வாங்கி தர்றேன்னு சொல்லியிருக்காங்கல்ல. சொன்ன மாதிரி வாங்கி தருவாங்க. இப்போ நீ சாப்பிட வா” என்று அதட்ட,

அது அவனிடம் சிறிது வேலை செய்தது.

இருந்து, “தூ தேத்ல வாந்தி தத்துவிந்தல்ல அம்மா வாந்தி தத்தேனு ஏமாத்தித்தே இதுக்கா” என்று உறுதியாக கேட்க,

குருவின் பார்வை மகிழினியிடம் ஒரு நிமிடம் சென்று மீண்டது.

மகிழினிக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தையும் வாங்கி தர ஆசை நிறைய இருந்தது தான். ஆனால் ஆசை இருந்து என்ன பயன் அதற்குண்டான பொருளாதார நிலை இல்லையே.

அவள் வாங்கும் சம்பளம் சாப்பாடு மற்றும் கல்வி செலவிற்கே சரியாக இருந்தது. ‌ இதில் எங்கே மிதிவண்டி வாங்குவது.

மகிழினியின் முகம் நிர்மலாக இருந்தது.‌ எதையும் காண்பிக்கவில்லை. சொல்ல போனால் பணத்தை வைத்து மனிதர்களை அளவீடு செய்பவனிடம் தன்னுடைய நிலையை காண்பிக்க விருப்பமில்லை அவளுக்கு.

“நான் சொன்னா சொன்னது தான் டூ டேஸ்ல கண்டிப்பா வாங்கி தர்றேன்” என்று கூறவும் தான் உணவுன்ன இருவரும் வந்தனர்.

எல்லோரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர். அம்முவும் அகிலனும் கூட வந்துவிட்டிருந்தனர்.

மகிழ் கவினுக்கு உணவூட்ட வர,

“ம்ஹூம் வேதாம்” என்று மறுத்தான்.

மகிழ், “கவின் ஒழுங்கா சாப்பிடு. இல்லை அம்மா அடிப்பேன்” என்று கூற,

“நீ வேதாம் அப்பாத்த சாப்பிதுதேன்” என்று கவின் மொழிய,

உணவை அள்ளிச்சென்ற அவளது கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

சடுதியில் உள்ளத்தில் ஒரு வலி விரவியது. இத்தனை நாட்கள் தான் ஒற்றை ஆளாய் பார்த்து கொள்ள இவன் என்னெவன்றால் நேற்று வந்த ஒரு உறவிடம் அடைக்கலம் நாடுகிறானே என்று உள்ளம் தவித்தது.

எழிலும், “ஆமா நானும் அப்பாட்ட தான் சாப்பிடுவேன்” என்றிட,

மொத்தமாக சிதறிதான் போனாள். ஒரு நொடி விழிகள் கலங்கிட சடுதியில் அதனை உள்ளிழுத்தவள் தன்னை சமாளித்து கொண்டு,

“அவங்க சாப்பிட வேண்டாமா? நீ நான் ஊட்றேன்” என்றிட,

“ப்பா ப்ளீஸ்ப்பா தினமும் அம்மா தான ஊட்றா இன்னைக்கு நீங்க ஊட்டுங்க” என்று எழில் விழிகள் சுருக்கி கெஞ்ச குருவால் மறுத்து தலையசைக்க கூட இயலவில்லை.

“கொடு நான் ஊட்றேன்” என்று உணவிற்காக கையை நீட்டினான்.

மகிழ், “இல்லை உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்று தயக்கத்துடன் மறுக்க,

“ப்ச் இதுலென்ன சிரமம் நீ கொடு” என்று கூற,

அவள் உணவு தட்டை நீட்ட இருவரும் அவனது அருகே சென்று அமர்ந்து கொண்டனர்.

குருவிற்கு இதற்கு முன் குழந்தைகளுக்கு எல்லாம் ஊட்டி பழக்கம் இல்லை. ஏதோ தப்பும் தவறுமாக சிந்தியபடி ஊட்ட,

அம்மு சிரிப்புடன்,

“ண்ணா உனக்கு ஊட்டவே தெரியலை கொடு நான் ஊட்டி விட்றேன்” என்று கூற,

குரு பதில் அளிக்கும் முன் கோதை,

“அம்மு விடு அவனே ஊட்டி பழகட்டும். நாளை பின்ன இவங்களுக்கு குழந்தை பிறந்தா அதுக்கு ஊட்டிவிடத்தானே வேணும்.‌ இப்போவே ட்ரைனிங் எடுத்துக்கட்டும்” என்று சிரிப்புடன் கூற,

“ஆமா கோதை சொல்றதும் சரிதான். என் கொள்ளு பேத்திக்கோ கொள்ளு பேரனுக்கோ ஊட்டணும்ல” என்று தானும் பெரிய புன்னகையுடன் மொழிய,

அதனை கேட்ட மகிழுக்கு தான் இதயம் சில நொடிகள் துடிப்பை நிறுத்திவிட்டிருந்தது.

“எனக்கும் அவருக்கும் குழந்தையா?” இன்று வாங்கிய அதிர்ச்சிகளிலே இதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி இவளுக்கு.

இதற்கு முன் இருந்த வருத்தம் எல்லாம் இந்த ஒற்றை வார்த்தையில் காணாது போக குருவை தான் ஏறிட்டாள்.

அவனோ எதுவுமே தன்னை பாதிக்காத பாவனையில் கர்ம சிரத்தையாக உணவை ஊட்டி கொண்டிருக்க,இவர் மட்டும் எல்லாவற்றையும் எந்தவித எதிர்வினையும் இன்றி கடந்து போகிறாரே இவருக்கு உணர்வுகள் இருக்குமா இல்லையா? என்று சந்தேகம் எழுந்தது.

உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது. “தனக்கு ஒரு குழந்தையா?” என்று எண்ணமே ஏதோ செய்தது.

ஆனால் திருமணம் குழந்தை என‌ எதற்கும் தன் வாழ்வில் இடம் இல்லை.இது இவர்களது கற்பனை அதற்கு நான் எதுவும் செய்ய இயலாது. நானும் இவரை போல உணர்ச்சியற்றது போல மாற வேண்டும் அப்போது தான் தான் எதிலும் பாதிக்கப்படாது நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணினாலும் நம்பியவர்களுக்கு துரோகம் செய்கிறோமே நினைவே உண்ணவிடாது செய்தது.

ஏனோ தானோவென‌ உண்டவள் எழுந்து கொண்டாள். குழந்தைகளை உறங்க வைக்க வேண்டுமே நேற்று ஒரு நாள் தான் இல்லாது இருந்து கொண்டனர்.இன்றும் அதுபோல இருக்க இயலாதே.

தன்னுடன் தான் அழைத்து செல்ல வேண்டும். ஆனால் கோதை தான் நேற்று அவர்களை அகிலுடன் இருக்க கூறியது.இன்று தான் தன்னுடன் அழைத்துச் சென்று அவர் எதாவது கூறிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணம் வர சமையல் அறையில் பணிபெண்ணுடன் பாத்திரங்களை ஒதுங்க வைத்து கொண்டிருந்தவரிடம்,”அத்தை” என்று தயங்கி நின்றாள்.”என்னம்மா? எதுவும் வேணுமா?” என்று வினவ,”அது நான் பசங்களை என்னோடவே தூங்க அழைச்சிட்டு போகவா?” என்று தயங்கித் தயங்கி வினா தொடுக்க,கோதைக்கு சட்டென்று அவளது செயலில் புன்னகை வர,”அழைச்சிட்டு போம்மா. இதுக்கு ஏன் என்கிட்ட கேட்டுட்டு இருக்க. நேத்து சம்பிரதாயம் அதான் அவங்களை அகில் கூட தூங்க சொன்னேன்” என்று கூற,”சரிங்கத்தை” என்று தானும் மென்னகையுடன் தலையசைத்தாள்.

இவள் இந்த வீட்டிற்கு உண்மையான மருமகளாக வந்திருந்தால் கூட இப்படி அனுமதி கேட்டிருப்பாளோ என்னவோ ஆனால் ஒப்பந்த திருமணத்தில் வந்ததால் குருவின் சொல்படி எந்தவிதத்திலும் தன்னால் இந்த வீட்டில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் வந்துவிட கூடாது என்று உறுதியாக இருந்தாள்.அவர் அனுமதி அளித்ததும் தம்பியிடம் கூறிவிட்டு இளையவர்களை அழைத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.ஆனால் அவர்களை உறங்க வைக்கத்தான் இயலவில்லை. என்றாவது ஒரு நாள் இப்படித்தான் கதை வேண்டும் கதை வேண்டும் என்று ஏதாவது அடம்பிடிப்பார்கள்.இன்றும் அதே போலத்தான்,”ம்மா ஸ்டோரி சொல்லு ஸ்டோரி சொல்லு” என்று கூற,”சரி சொல்றேன். ஸ்டோரி கேட்டுட்டு உடனே சமத்தா தூங்கிடணும் என்ன?” என்று மொழிய,”சரிம்மா” என்று இருவரும் சமத்தாக தலையசைத்தனர்.இருவரையும் படுக்க வைத்தவள்,”ஒரு ஊர்ல ஒரு பெரிய ராஜா இருந்தாராம்” என்று ஆரம்பித்து கதைகளை கூற துவங்கினாள்.

error: Content is protected !!
Scroll to Top