காதல் 10.4

ஐஸ்கிரீம் வேணுமா?” என்று இளையவர்களிடம் வினவ,

“ஹ்ம்ம் வேணும் வேதும்” என்று வேகமாக பதில் வந்தது.

பனிக்கூழ் விற்பனையகத்தின் அருகில் செல்லும் நேரம் குருவிற்கு அலைபேசி அழைப்பு வந்திட,

குரு, “நீ ஐஸ்கிரீம் வாங்கி கொடு நான் ஃபைவ் மினிட்ஸ்ல வந்திட்றேன்” என்று ஓரம் நகர்ந்தான்.

அங்கு சென்று பனிக்கூழின் விலையை கண்ட மகிழுக்கு ஏகமாக அதிர்ச்சி தான்.

ஒரே ஒரு பனிக்கூழே ஆயிரம் ரூபாய் போட்டிருந்தது.

“ம்மா எனக்கு இது வேணும்” என்று எழில் ஒன்றை காண்பிக்க,

அதன் விலையை பார்த்தால் இரண்டாயிரத்து முந்நூறு போட்டிருந்தது.

மகிழினி தனது பையில் பார்க்க இரண்டாயிரம் தான் இருந்தது.

‘இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு ஐஸ்க்ரீமா?’ ஒவ்வொரு ரூபாவையும் பார்த்து செய்யும் மகிக்கு மனது வலித்தது.

இருந்தும் சிறியவர்களின் விருப்பத்திற்காக,

“எழில் அது வேண்டாம் இது வாங்கி தரவா?” என்று ஆயிரம் ரூபாய் பனிக்கூழை காண்பித்தாள்.

எழில், “ம்ஹூம் எனக்கு இதை தான் வேணும்” என்று அடம்பிடிக்க,

“எழில் எங்க இருந்து வந்தது இந்த பழக்கம் உனக்கு.‌ ஒழுங்கா வாங்கி தர்றதை சாப்பிடு” என்று அதட்ட,

அவன் அழுக தயாராகும் நேரம் குரு வர,

“அங்கிள் அம்மா எனக்கு அந்த ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்றா?” என்று உதடு பிதுக்கி கூற,

“ஏன் இவன் கேக்குறதை வாங்கி தர வேண்டியது தானே?” என்று குரு வினவ,

இதில் பதில் கூற தயங்கி நின்றாள்.

“என்ன ஆன்சர் பண்ணு உன்கிட்ட தானே கேக்குறேன்” என்று மீண்டும் வினவ,

“அது இவன் கேட்ட ஐஸ்க்ரீம் இரண்டாயிரத்து முந்நூறு ரூபா ஆனால் என்கிட்ட இரண்டாயிரம் தான் இருக்கு” என்று தயங்கியபடியே கூற,

“நான் உன்னை பே பண்ண சொன்னேனா?” என்று அழுத்தமாக பதில் வந்தது குருவிடமிருந்து.

“அவங்க என்னோட” என்று மகி பேசுகையிலே இடை நுழைந்தவன்,

“உன்னோட சேர்த்து அவங்களும் டூ இயர்ஸ்க்கு என் ரெஸ்பான்ஸிபிலிட்டி. அக்ரிமெண்ட் ஞாபகம் இருக்கு தான?” என்றவனது பேச்சில் தெறித்த அனலில் அவளது வாய் பூட்டு போட்டு கொண்டது.

அதன் பின்னர் அமைதியாக தான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தாள்.

எழிலும் கவினும் அது வேண்டும் இது வேண்டும் என்று பார்ப்பதை எல்லாம் காட்டி வாங்கினர்.

ஆனால் உண்ணத்தான் இல்லை. மகிழுக்கு தான் அவர்களை பற்றி தெரியுமே?

முக்கால்வாசி அவர்கள் வாங்கியதில் மீதமிருக்க குரு கிளம்ப தயாராகி எழுந்து கொண்டான்.

ஆனால் மகியின் பார்வையோ அந்த மீதமிருந்த உணவில் தான் இருந்தது. அதன் விலை பல ஆயிரங்கள் இருக்கும் என்று அவளுக்கு தெரிந்தது. மகிழுக்கு வருத்தமாக இருந்தது.

பணம் நிறைய கொட்டி கிடப்பவர்களுக்கு உணவின் அருமை தெரியவில்லை. ஒரு வேளை உணவிற்கு கூட துன்பப்பட்ட தனக்கு தானே அது தெரியும் என்று எண்ணியபடி அவனுடன் சென்றாள்.

குரு அடுத்ததாக அலைபேசியை விற்கும் கடைக்கு சென்றான். யாருக்காவது அலைபேசி வாங்க வந்திருப்பான் நினைத்திருக்க,

குரு, “மகிழினி உனக்கு என்ன மாடல் மொபைல் வேணுமோ சொல்லு” என்றிட,

அதில் அதிர்ந்தவள், “மொபைல் எனக்கா? என்கிட்ட ஏற்கனவே போன் இருக்கே” என்றாள்.

“எது உன்கிட்ட இருக்குது மொபைலா. அது இப்போவோ அப்போவோன்னு இருக்கு. ஒரு மொபைல செலக்ட் பண்ணு” என்றவனது வார்த்தையில் அவளுக்கு கோபம் வர,

“எனக்கு அதுவே போதும். எனக்கு வேணும்னா நானே வாங்கிப்பேன்” என்க,

“லுக் நீ இப்போ மகிழினி சுவாமிநாதன் இல்லை மகிழினி குரு பிரசாத்.‌ நான் சொல்றதை தான் நீ கேட்கணும். என்னோட வொய்ப் ப்ளேஸ்ல இருக்க யாரும் அந்த மாதிரி ஒரு மொபைல வச்சிருக்க நான் விரும்ப மாட்டேன்” என்று குரலில் ஏறிய கடுமையுடன் கூறிவிட,

மகிழினி கண்கள் கலங்கிட அமைதியாகிவிட்டாள். குருவும் அதன் பிறகு அவளை காணாது பல ஆயிரங்களில் ஒரு அலைபேசியை அவளுக்காக வாங்கி அதில் அவளது சிம்மை போட வைத்து கொடுத்தான்.

அமைதியாக வாங்கி கொண்டவளுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது. அவர் கூறுவது சரிதானே நீ அவரிடம் பணி செய்கிறாய் அவர் கூறுவதை செய்து தான் ஆக வேண்டும் என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்

அதன் பிறகு அவர்கள் வீட்டை அடைய இவர்களுக்காகவே காத்திருந்த கோதை இளையவர்கள் கையில் இருந்த பொம்மைகளை கண்டு,

“என்னடா குட்டி பசங்களா பாதி கடையை வாங்கிட்டு வந்துட்டிங்களா?” என்று சிரிப்புடன் வினவ,

“ஆமா பாட்டி அங்கிள் எனக்கு நிறைய டாய்ஸ் வாங்கி கொடுத்தாங்க” என்று எழில் புன்னகையுடன் கூற,

“அப்படியா?” என்று வினவியவர்,

“அதான் கல்யாணம் முடிஞ்சதே இன்னும் என்ன அங்கிள். மகிழ் உங்களுக்கு அம்மான்னா குரு அப்பா. இனிமேல் வாய் நிறைய அப்பான்னு கூப்பிடுங்க” என்று கோதை கூற,

மகிழினி முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி…

error: Content is protected !!
Scroll to Top