புன்னகை மாறாது அதனை கேட்டவன் மனதிற்குள் குழந்தைகளது மகிழ்ச்சி கூட இந்த பணத்தில் தான் அடங்கியுள்ளது என்று தான் நினைத்து கொண்டான்.
இங்கு கவினோ எதை பத்தியும் கவலை கொள்ளாது அந்த முழு இனிப்பையும் அப்போதே உண்டுவிடும் எண்ணத்தில் உடையெல்லாம் சிந்தியபடி உண்ண,
“கவின் மெதுவா. ட்ரெஸ் எல்லாம் ஆகுது பாரு” என்றவுடன் தன் உடையை குனிந்து கண்டவன்,
“த்தெஸ் எல்லா ஆச்சு ம்மா தித்துவா?” என்று பயந்த விழிகளுடன் கூற,
அந்த அப்பாவிதனத்தை கண்டு அவனை தூக்கி கொஞ்ச தோன்றியது.
அடுத்த கணம் இது தான் தானா என்று கூட குருவிற்கு ஆச்சரியம் பிறக்க முகம் முழுவதும் புன்னகையுடன்,
“அம்மா திட்ட மாட்டா நான் சொல்லிக்கிறேன்” என்று கூறுகையில் சரியாக குளம்பி குவளையுடன் உள்ளே நுழைந்த மகிழ் வியப்புடன் அப்படியே நின்றுவிட்டாள்.
குருவின் வதனத்தில் கண்ட இமை நீண்ட புன்னகை அத்தனை அழகனாய் அவனை காண்பித்தது. இவன் நிச்சயமாக அழகன் தான் என்று அந்த நொடி மனது கூறியது.
இளையவர்கள் இந்நேரம் அழுது கொண்டிருப்பார்களோ என்று அச்சத்துடன் ஓடி வந்தவள் நிச்சயமாக இதனை எதிர்பார்க்கவில்லை.
முகம் முழுவதும் சிரிப்புடன் குரு அவர்கள் அருகில் அமர்ந்து பேச இளையவர்களும் பதில் அளித்து கொண்டிருந்தனர்.
‘எப்படி இது சாத்தியம் இவரை கண்டதும் அஞ்சி நடுங்கியவர்கள் இப்படி பேசுகிறார்களே நான் சென்று வருவதற்குள் என்ன நடந்திருக்கும். இவர் என்ன மாயக்காரரா?’ என்று அசையாது நின்றிருத்தாள்.
குரு அவள் அரவம் உணர்ந்து திரும்பி, ‘என்ன?’ என்பதாய் புருவம் உயர்த்தி கேட்க,
“ம்ஹூம்” என்று வேகமாக தலையசைத்தவள்,
“காஃபி” என்று அவன் அருகில் சென்று கொடுக்க,
அதனை வாங்கி பருகியவன் மீண்டும் அவர்களிடம் பேச துவங்க,
கவின், “ம்மா அந்திள் எக்கு பெதிய சாக்தேட் கொதுத்தாது” என்று சிரிப்புடன் கூற,
“பெரிய சாக்லேட்டா. நிறைய சாக்லேட் சாப்பிட்டா கேவிட்டி வந்திடும். போதும் சாக்லேட் மீதிய அப்புறமா சாப்பிடலாம்” என்று கூற,
“ம்ஹூம் ததமாத்தே” என்று கவின் மொழிய,
இவள் முறைத்து பதில் கூறும் முன்,
“மகிழினி” என்ற குருவின் அழைப்பு அவளை தடை செய்தது.
திரும்பி, “சார்” என்றிட,
“ஏன் இவனுக்கு இன்னும் க்ளியரா ஸ்பீச் வரலை. ஏஜ் ஃபைவ் ஆகிடுச்சே. எதாவது டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணியா?” என்று வினவ,
“இல்லை இவன் ஒரு ப்ரீமெச்சூர் பேபி. இவனுக்கு எல்லாமே லேட்டாதான் நடக்கும். க்ளியரா பேச்சு வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்க” என்று மொழிந்திட,
“ஓ…” என்றவனது முகத்தில் சிந்தனை ரேகைகள்.
அதற்குள் எழில், “அங்கிள் ஹட்டோரி பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்களே போவோமா?” என்று ஆசையாக வினவ,
குருவிற்கு மறுப்பு சொல்ல மனம் வராது போக,
“ஹ்ம்ம் போகலாமே. வாங்க கிளம்பலாம்” என்க,
கவினும் பாதி இனிப்பை வைத்துவிட்டு,
“நா நா” என்று குதிக்க,
மகிழ், ‘இவர் எங்கே அழைத்து செல்ல போகிறார்?’ என்று கேள்வியுடன் நோக்கினாள்.
“இன்னும் டென் மினிட்ஸ்ல கிளம்பணும். பசங்களுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டுட்டு நீயும் நல்ல ட்ரெஸ்ஸா சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று ஆணை போல தான் கூறினான்.
இதில் வருகிறாயா உனக்கு விருப்பமா என்று எதுவும் இல்லை நீ வர வேண்டும் என்ற ஆணை மட்டும் தான் இருந்தது.
சம்மதமாக தலையசைத்தவள் இளையவர்களுக்கு விரைவாக உடை மாற்றிவிட்டு தானும் கோதை வாங்கி கொடுத்ததில் ஒரு நல்ல சேலையை உடுத்தி கொண்டு கூந்தலை பின்னலிட்டு தயாராகி வந்தாள்.
மருமகளின் முகம் கண்ட கோதை என்ன பிரச்சனையோ என்று கவலையாக அமர்ந்திருந்தவர் இருவரும் தம்பதி சகிதமாக குழந்தைகளுடன் வருவதை கண்டு ஆச்சர்யமாகி மகிழ்ந்து தான் போனார்.
தாயின் முகத்தை வைத்து அவரது அகம் உணர்ந்தவன்,
“ம்மா நாங்க வெளியே போய்ட்டு வர்றோம்” என்றிட,
“சரிப்பா பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க” என்று அனுப்பி வைக்க,
மகிழும் அவரிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.
குரு தனது மகிழுந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விட்டு சிறியவர்களை அருகில் அமர வைத்தான்.
மகிழினி தான் தான் எங்கு அமர்வது முன்னாடி அமரவா இல்லை பின்னால் அமர்வா? பின்னால் அமர்ந்தால் நான் என்ன உனக்கு ஓட்டுநரா என்று இவர் திட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசனையுடன் நிற்க,
“மகிழினி என்ன திங்கிங் ஏறு சீக்கிரம்?” என்று துரிதப்படுத்தியவன் பின்னால் இருக்கையை காண்பிக்க சடுதியில் ஏறி அமர்ந்தாள்.
கவினுக்கும் எழிலுக்கும் தான் மகிழுந்தை கண்டு ஏக குஷி.
அவர்களுக்கு இது தான் முதல் மகிழுந்து பயணம்.
“அங்கிள் இது உங்க காரா? ரொம்ப சூப்பரா இருக்கு” என்று எழில் வினவ,
புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்தான் குரு.
“பெரிசா இருக்கு. தீபக் அப்பாவோட காரை விட பெரிசா இருக்கு. நீங்க என்னை தினமும் இதுல கூட்டிட்டு போவீங்களா?” என்று ஆசையும் ஏக்கமுமாக கேட்க,
“கண்டிப்பா” என்று குரு பதில் மொழிய,
இங்கு எழிலின் முகத்தை கண்ட மகிழுக்கு தான் முதன் முதலில் அச்சம் வர துவங்கியது.
இவர்கள் இந்த ஆடம்பரத்திற்கு பழகிவிட்டு மீண்டும் எப்படி பழைய வாழ்வை ஏற்பார்கள்.
அகிலனது எதிர்காலத்தை பற்றி சிந்தித்துவிட்டு இவர்களை கவனிக்க தவறிவிட்டேனோ? என்று வருந்தி கொண்டிருக்க,
சிறியவர்களோ அத்தனை மகிழ்ச்சியில் குருவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
குருவும் சளைக்காமல் பதில் அளித்து கொண்டிருந்தார்.
மகிழினிக்கும் இந்த மகிழுந்து பயணம் புதிது தான். அதுவும் இது போன்ற விலை உயர்ந்த மகிழுந்தில் எல்லாம் அவள் கனவில் தான் பயணம் செய்ய இயலும். இருந்தும் இப்பயணம் உவப்பாக இல்லை.
சில நிமிடங்களில் அவர்களது மகிழுந்து ஒரு பெரிய வணிக வளாகத்தின் முன் நின்றது. இவர்கள் வந்ததும் ஓடி வந்த காவலாளியிடம் சாவியை கொடுத்துவிட்டு அவர்களுடன் உள்ளே நுழைந்தான்.
பணமிருந்தால் மகிழுந்தை நிறுத்துவதற்கு கூட ஆட்கள் வருவார்கள் போல என்று எண்ணியபடி அவனுடன் நடக்க குளிர்காற்று முகத்தில் மோதியது.
பொம்மை படங்களில் வரும் கதாபாத்திரங்களை போல உடையணிந்து கடந்து செல்லும் குழந்தைகளை மகிழ்வித்து கொண்டிருந்தவர்கள் அருகில் தான் இளையவர்களை குரு அழைத்து போனான்.
கவினுக்கும் எழிலுக்கும் அவர்கள் தெலைக்காட்சியில் கண்ட கதாபாத்திரங்களை நேரில் கண்டதில் மகிழ்ச்சி தாளவில்லை.
“ம்மா ஹட்டோரி ம்மா சின்சான்” என்று துள்ளி குதித்தார்கள்.
அவர்களுடன் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பித்து மகிழ்ச்சிபடுத்தினர்.
மகிழ் இதையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்தாள். அவள் மனதிற்குள் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது.
இளையவர்கள் களைத்து முடிக்கும் வரை விளையாடவிட்டவன் பின்னர் அந்த கதாபாத்திரங்களாக நடித்தவர்களிடம் தனது பர்ஸில் இருந்து நான்கு தாள்களை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
பின்னர் உணவு கூடத்திற்கு அழைத்து வந்தவன்,