கனவெங்கும் தித்தித்தாய் – 4.1

சடசடவென அவர்களின் பூட்ஸ் சத்தம் அவள் காதிற்குள் நுழையவும் மூடியிருந்த கண்களை அவள் திறந்து பார்க்கும் போது தில்ஷத் அவளை நோக்கி வருவது புரிந்தது. அதற்குள் அவளை நெருங்கி விட்ட தில்ஷத்தின் கார்ட்ஸ் குரூப்பை சேர்ந்திருந்த ஒருவர் அவள் கழுத்தில் சிறிய வகை பிஸ்டல் ஒன்றை ஆழமாக பொருத்தவும் அவர்களின் அருகில் வந்துவிட்டிருந்த தில்ஷத் அதை அவனிடம் இருந்து வேகமாக கை பற்றியவாறு ‘அவங்க நம்ப கெஸ்ட்!’ என்று அந்த நபரிடம் ஆங்கிலத்தில் சீறினான்.

பிருந்தாவிற்கு இப்போது தில்ஷத்தின் உயரமும் பலமும் ஓரளவுக்கு புரிந்தது. அவனுடைய ஆட்கள் அனைவரும் ஒரே வகையான கருப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து நின்றிருந்தனர். அதில் அவர்களை பார்க்க அந்நாட்டின் காப்ஸ் போன்று தான் தெரிந்தார்கள். சிலர் இவளை பார்த்து புன்னகைக்கவும் செய்தார்கள். ஆனால் பிருந்தாவிற்கு அங்கிருந்து தான் உடனே மறைந்து விட மாட்டோமா என்று எண்ணும் அளவிற்கு படபடப்பு தொற்றிக்கொண்டது.

ஸ்வீடனுக்கு அவள் இப்போது தான் முதல் முறையாக வந்திருக்கிறாள். அவர்களின் மொழியும் பழக்க வழக்கங்களும் அவளுக்கு புரிவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும். அதற்குள் இப்படியான நிகழ்வுகளில் மாட்டிக் கொண்டு அதற்கு எப்படி பதிலளிப்பது என்பது கூட புரியாமல் தனியாக திருதிருவென விழித்து கொண்டிருந்தாள் பிருந்தா.

பிருந்தாவை மட்டுமே கவனித்திருந்த தில்ஷத் அந்த பத்து நபர்களுக்கு இடையே கோட் சூட் அணிந்து ஃபுல் ஃபார்மல்ஸில் இருந்தவனை அருகில் அழைத்து அவனிடமாக பேசினான். அவன் தந்தவைகளை வாங்கி கொண்ட தில்ஷத் பிருந்தாவை சுட்டி காட்டி மீண்டுமாக என்னமோ அவனிடம் நிதானமாக பேசிக் கொண்டிருந்தான்.

பிருந்தாவை பார்த்து புன்னகைத்த அந்த நபர், “ஹாய் மேடம்! நான் ரித்விக். சாரோட” என்று அவன் முடிப்பதற்குள் அவனை இடையிட்ட தில்ஷத், “இவன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் மார்வெல்! இவருக்கு ரித்விக்னு ஒரு நேமும் உண்டு” என்று அவளுக்கு அவனுடைய உறவுகளை அறிமுகம் செய்யும் பாவனையுடன் புன்னகை முகமாக கூறினான். அருகில் நின்றிருந்த ரித்விக்கை பார்த்து வரவேற்பாக புன்னகைத்த பிருந்தா எதுவும் பேசாமல் தில்ஷத்தை தான் பார்த்தாள்.

அவள் பார்வையில் கிடைத்த பொருளை புரிந்து கொண்ட தில்ஷத் அங்கிருந்த அனைவரையும் அடுத்த ஐந்தாவது நிமிடம் வெளியேற்றி இருந்தான். வெளியே பனி பொழியும் அந்த இரவு நேரத்தில் குளிருக்கு இதமாக இருக்கும் சூடான ஹாட் சாக்லேட் டிரிங்கை அவர்கள் இருவருக்குமாக தில்ஷத் அறையின் பால்கனியில் செட் செய்து விட்டு அவர்களிடம் விடைபெற வந்து நின்றான் ரித்விக்.

பிருந்தாவின் முகம் பார்த்து நின்றிருந்த தில்ஷத்தின் அருகில் வந்த ரித்விக், “தில்ஷத்! அவங்க ரொம்ப கோவமா தான் இருக்காங்க போல!” என சின்ன குரலில் கேலியாக கூறவும் அவனை பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்த தில்ஷத் பிருந்தாவை நோக்கி நடப்பதை பார்த்துவிட்டு ரித்விக் அங்கிருந்து வெளியேறினான். அவளுக்கு முன்னால் வந்து நின்ற தில்ஷத், “மார்வெல்! அது” என்று துவங்கும் போதே பிருந்தா அங்கிருந்து நகர துவங்கினாள்.

“ஹே! ஜஸ்ட் வெயிட் மார்வெல்…” அவளுக்கு முன்னால் வந்து வழி மறைத்து நின்றவன்,

“நான் எக்ஸ்பிளைன் பண்ண தான் ட்ரை பண்ணேன். ஆனா அதுக்குள்ள இப்படி ஆகும்னு எதிர் பார்க்கவே இல்ல. ஐ அம் ரியலி சாரி!” என்றான் சற்று வருத்தமான குரலில்.

அவள் எதுவும் பேசாது நிற்பதை பார்த்து அவளை இயல்பாக்கும் பொருட்டு அவனிடம் இருந்த கார்ட் ஒன்றை எடுத்துக் காட்டி, “இது போதுமாங்க மேடம் நான் தான் தில்ஷத்னு நீங்க நம்ப… இல்ல இன்னும் இந்த ரெசிடென்ஸ் பர்மிட், சர்டிஃபிகேட்ஸ், வோட்டிங் கார்ட்னு வேற ஏதாவது தேவைப்படுதா என்னை நீங்க இப்படி நம்பாம இருக்க?” என்று சற்றே குறும்பு குரலில் மொழிந்தான்.

சிரித்தவாறு இருந்த அவனுடைய புகைப்படத்துடன் தில்ஷத் என்று அவன் பெயரையும் தன்னில் குறிப்பிட்டு வைத்திருந்தது அவனுடைய டிரைவிங் லைசென்ஸ். அதில் இருந்தவற்றை அவள் குறித்து வைப்பதற்குள் ஈரம் பூத்திருந்த அவள் கண்கள் அவளுடைய நிலையை மோசமாக்கியது. அவனுக்கு தெரியாமல் அதை மறைப்பதற்கு வெகுவாக போராடியது அவள் முகம்.

அவன் பேசியவைகள் அவனுக்கு அதிகபடியாக தோன்றவில்லை தான் ஆனால் அவளுக்கும் அப்படி இருக்குமா என்ன? எதற்கு இதை இவ்வளவு பெரிது படுத்துகிறான் இவன்? அவனிடம் இருந்து ஆரம்பித்தது தானே இதெல்லாம். அதற்கு இவள் மட்டுமா காரணம் அவனும் தான் மாறுவேடம் அணிந்து அவனுடைய அறைக்கே பால்கனி வழியாக நுழைந்து அவளை சந்தேகத்துக்கு உள்ளாக்கி ஏமாற்றியது.

கடைசியாக இவர்களால் தன் அழகான சிவந்த மூக்கில் வெட்டு வாங்கியது என்னவோ அவள் தான் என்ற நினைவு சட்டென்று பிருந்தாவின் மனதில் சிறியதொரு கோபத்தை மூட்டியது தில்ஷத்தின் செயலில் அவன் வேண்டும் என்றே இதை செய்ததாக அவள் அவனை தவறாக புரிந்து கொள்ள கூடாது என்னும் எச்சரிக்கை உணர்வு மிகுந்து இருந்தது. ஆனால் அவளுக்கு அது அவன் மீது அப்படியானதொரு மனப்பான்மையை தான் பரிசளித்தது.

“உங்கள மீட் பண்ணதுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். ரொம்ப நாளுக்கு பிறகு இப்டி நம்ம ஊரை சேர்ந்தவங்களை நான் இங்க மீட் செய்து இருக்கேன். ஐ ஹோப் திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் யூ ஆர் ஹேர். நீங்க இங்க என்ன டிஃபிக்கல்டீஸ் ஃபேஸ் பண்ணாலும் எங்களுக்கு உடனே தெரியப்படுத்துங்க வீ வில் ஆல்வேஸ் பி தேர் டூ ஹெல்ப் யூ அட் எனி காஸ்ட்”

அவள் முகத்தின் வழியே அவளுடைய எண்ணங்களை அவன் படித்து கொண்டிருப்பதை பிருந்தா அறிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அவள் அவனோடு பேசுவதை தவிர்ப்பதை உணர்ந்து அவனும் அவளோடு மேலும் பேச்சை வளர்க்காமல் அத்துடன் அவளிடம் இருந்து விடைபெற்றான்

error: Content is protected !!
Scroll to Top