உள்ளம் – 34.2

மருத்துவமனையில் ரங்காவினருகே குமரன் அமர்ந்திருக்க, ராதாவும் மனோவும் பணிமனைக்குச் சென்றிருந்தனர். அத்தனை நேரம் விழிகளை மூடியிருந்தவர், அப்போதுதான் கண்ணைத் திறந்தார். குமரனும் அவரைத்தான் பார்த்திருந்தான். ரங்கா எழுந்தமர முயற்சிக்க, “இருங்க, நான் வரேன்!” என்றவன் அவரது முதுகு புறத்தில் கைக்கொடுத்து நிமிர்ந்து அமரவைத்துவிட்டு நகரப் பார்க்க, அவனது கைகளைப் பிடித்திருந்தார் மனிதர்.

அவன் என்னவென பார்க்க, “குமரா…” என்ற ரங்கா குலுங்கி அழ ஆரம்பிக்க, இவன் திகைத்துப் போனான். கடந்த பத்து வருடங்களில் அவரது அழுகையை முதல் முதலாகக் கண்டவனுக்கு அவர் மீதிருந்த சிறிதளவு கோபமும் விடை பெற்றிருந்தது.

“அழாதீங்க!” என்றவனுக்கு என்னப் பேசுவது எனத் தெரியவில்லை. மகள், மனைவியிடம் கூட அழாது அத்தனை நிமிர்வாய் அமர்ந்திருந்த மனிதர் இவனது கையைப் பிடித்து உடைந்தழுது, மனதில் உள்ளவற்றை இறக்கி வைத்திருந்தார்.

“என் புள்ளை என்னை ஏமாத்திட்டான் குமரா. ரெண்டு பேரையும் நல்லாதான் வளர்த்தேன்!” என மகனின் செயல் கொடுத்த வேதனையில் அவர் குலுங்கி அழ, குமரனுக்கு திவாகர் மீது இன்னுமின்னும் கோபம் கூடியது. இந்த மனிதருக்காகப் பார்த்துதானே அவன் திவாகரை எச்சரித்தான். இவர் இப்படி உடைந்துவிடக் கூடுமென எண்ணித்தானே வேண்டாம் என்று உறுதியாய் உரைத்திருந்தான்.

“இப்படியெல்லாம் நடக்கக் கூடாதுன்னு தான் முன்னாடியே திவாகர்கிட்டே வேணாம்னு சொன்னேன். அவர் கேட்கலை!” எனப் பல்லைக் கடித்து ரங்காவை சமாதானம் செய்தவனுக்கு, இந்த மனிதனின் அழுகை இந்த ஜென்மத்தில் மறக்காது. அவர் மீதிருந்த கோபம் மொத்தமும் வடிந்திருக்க, இவன்தான் அத்தனை சமாதானம் கூறித் தேற்றினான்.

நடந்ததை நினைத்துக்கொண்டே படுத்திருந்தவரின் அருகே அசைவு தெரிய, ராதா வந்து படுத்தார். கணவர் தூங்காது விழித்திருப்பதை பார்த்தவர், “எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காம அமைதியா தூங்குங்க!” என்ற அதட்டலுடன் அவர் திரும்பிப் படுக்க, இருவரும் சிறிது நேரத்தில் உறங்கிப் போயினர்.

மறுநாள் காலையில் குமரன் எழுந்து குளித்து முடித்து வெளியே கிளம்ப, சிந்து மகனைக் கவனித்தாலும் எதுவும் பேசவில்லை. அவனும் அமைதியாய்க் கிளம்பிவிட்டான்.

ரங்கராஜன் நீள்விருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். ராதா சமையலறையில் வேலையாய் இருக்க, மனோஹரி விழித்தாலும் இன்னுமே படுக்கையிலிருந்து எழாது இருந்தாள்.

குமரன் உள்ளே நுழைய, அவனைப் பார்த்த ரங்கா தலையை அசைத்து உள்ளே அழைத்தார். கூடத்திற்குள் நுழைந்தவனைக் கண்ட ராதா, “வா குமரா… உள்ள வா!” என்றார். அவரது குரல் சரியில்லை என அவனும் உணர்ந்தான். நேற்றைய அவனது செயலின் பிரதிபலிப்புதான் அது.

“வந்து உட்காரு குமரா!” என்றவர் குரலில் கண்டனத் தொனிதான். அவன் அமர்ந்ததும், தொலைக்காட்சியை அணைத்தார் ரங்கா.

“உங்க ரெண்டு பேருக்கு இடையில இருக்கவரைதான் அது புருஷன் பொண்டாட்டி சண்டை குமரா. ரூம்க்கு வெளியே வந்துட்டாலே, அதுல பெத்தவங்க கண்டிப்பா தலையிடுவாங்க. என்ன பிரச்சனையா வேணா இருக்கட்டும். இனிமே என் பொண்ணை கை நீட்டி அடிக்கிற வேலை இருக்கக் கூடாது குமரா! பேசி தீர்க்கப் பாருங்க!” என்றவர் குரலில் பழைய அதிகாரம் மீண்டிருந்தது. தன் மகளை அடிக்க எந்தவித உரிமையும் உனக்கு கொடுக்கவில்லை என்ற பாவனையில் அவர் பேச்சியிருக்க, இவனுக்கு எரிச்சல் மூண்டெழுந்தது. முகத்தில் அதைக் காட்டாது எப்போதும் போல அசட்டையாக அமர்ந்திருந்தான். அவர் பேச்சை மதித்தானா? இல்லையா? என்ற சந்தேகம் ரங்காவிற்கு முகிழ்க்க, ‘திமிரு… நான் வளர்த்தவன் என்கிட்டேயே காட்டுறான்!’ என மனதிற்குள் முணுமுணுத்தவர், “மனோ உள்ளதான் இருக்கா!” என்றார் தகவலாய்.

இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல நொடியில் இருக்கையிலிருந்து எழுந்த குமரன் மனோஹரியின் அறைக்குள் நுழைந்தான். அப்போதுதான் எழுந்து கழிவறை சென்று முகம் கழுவிவிட்டு வெளியே வந்தவள் இவனை இத்தனை காலை எதிர்பார்க்காது திகைத்துப் போனாள்.

நொடியில் அவன் அடித்தது நினைவிற்கு வர, “எதுக்காக வந்தீங்க?” எனக் கோபமாகக் கேட்டுக் கொண்டிருந்தவளை துளியும் மதிக்காது கதவை அடைத்துவிட்டு வந்தவன் அவளைத் தூக்கி அத்தனை இறுக்கமாய் அணைத்திருந்தான்.

இந்த அதிரடியை எதிர்பார்க்காது தடுமாறிப் போனவள், “அடிக்கிறதையும் அடிச்சுட்டு காலையிலே எதுக்கு கிளம்பி வந்தீங்க?” என பல்லைக் கடித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகப் போராடினாள் மனைவி. ஆனாலும் பிடி அத்தனை எளிதாய் இல்லை.

“அமைதியா இரு டி… நான் உன்னைப் பார்க்க வரலை. என் குழந்தையைப் பார்க்க வந்தேன்!” என்றவன் அவளது கழுத்தில் முகத்தைப் புதைத்துப் அங்குமிங்கும் திருப்பினான். மனைவியின் சுகந்தத்தோடு மகளின் புத்தம் புதிய நறுமணமும் நாசியை நிறைப்பது போலொரு பிரம்மை தகப்பனுக்கு. ஒருநாள் இரவிலே இந்தப் பெண்ணை அத்தனையாய் தேடித் தொலைத்தது மனது.

“அதானே பார்த்தேன். என்னைக்கு எனக்காக நீங்க வந்துருக்கீங்க? நான்தானே எப்பவும் உங்களுக்கு இளிச்சவாய்?” என்ற மனோ கோபத்தில் அவன் கையில் கிள்ளினாள். அவனது பேச்சில் இன்னுமே கோபம். தன்னை சமாதானம் செய்ய வரவில்லை அவன் என இன்னுமே சினம் மூண்டெழுந்தது.

“மனோ… ப்ளீஸ் கொஞ்சம் நேரம் அமைதியா இரு டி… எனக்கு உன்னைக் கட்டிக்கணும், உணரணும். உன்னை, நம்பக் குழந்தையை!” என்றவனின் பேச்சு ஒரு நீண்ட இரவுப் பிரிதலின் தவிப்பை தவிப்புடன் கூற, மனோஹரி அமைதியாகிப் போனாள். அவளுக்கும் ஆசையில்லையா என்ன? எத்தனை மகிழ்வான செய்தி. தங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம் அவளது கருவில் சூல் கொண்டிருக்க, அதை உரியவனிடம் ஒப்படைத்து மகிழ வேண்டும் என்றொரு எண்ணம் பிரவாகமாகப் பொங்கியது. ஏனோ அழுகை வரும் போலிருக்க, “எதுக்கு வந்தீங்க?” என்றாள் குரலை முயன்று சரிசெய்து.

குமரனிடம் பேச்சே இல்லை. மனைவியைத் தொட்டுத் தடவி, உணர்ந்து முத்தமிட்டு, வயிற்றிலிருக்கும் மகவை ஸ்பரிசித்து நுகர்ந்து அங்கே முகத்தைப் புதைத்தான். இப்போதே குழந்தை அவனிடம் வந்து சேர்ந்த ஆசுவாசம் மனதில். மனைவி அருகே இருக்கவும் , அனைத்தும் இருப்பது போலொரு நிறைவு. வயிற்றோடு கணவனை இறுக அணைத்து, “நீங்க அப்பாவாகப் போறீங்க… நான் நான் அம்மாவாகப் போறேன்!” என்றவளின் விழிகள் கலங்கி கண்ணீர் அவன் முகத்தில் பட்டுத் தெறித்தது. ஆசை பொங்க விழிநீர் வழிய உரைத்தவளின் உதடுகளில் புன்னகை ஏறின. கோபமெல்லாம் இருவரிடமும் வடிந்து போயிருந்தது.

எழுந்து நின்றவன், அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். தன் கைத்தடம் பதிந்து சிவந்திருந்த கன்னத்தில் மென் முத்தமிட்டான். அவன் மீசை குத்தி கன்னம் வலிக்க, “அடிச்சது பத்தாதுன்னு மீசையை வச்சுக் குத்துங்க!” என அவன் முகத்தை கைக்கொண்டு தள்ளினாள் மனோ. இப்போது இருவருக்குமே நிதானம் வந்திருக்க, குமரன் அவளை

error: Content is protected !!
Scroll to Top