இதயம் 27
“அண்ணி, செம்ம அழகா இருக்கீங்க,” என்று யாழினி கூற, மலர் உள்ளுக்குள் இருந்த படபடப்பை மறைத்தபடி அவளுக்கு புன்னகையைப் பதிலாகக் கொடுத்தாள்.
“ஆமாண்ணி, இந்த ப்ளூ சாரி உங்களுக்கு நல்லா ஆப்ட் ஆகுது,” என்ற ஷாலினி, அவளது நகைகளைச் சரி செய்துவிட, யாழினியின் தாய், “கல்யாணம் ஆகாத பிள்ளைங்க இங்க இருக்கக் கூடாதுன்னு இப்பதானே சொல்லிட்டு போனேன். அதுக்குள்ள திரும்ப வந்து நிக்கிறீங்க. ஓடுங்க, ரெண்டு பேரும்,” என்று இருவரையும் அதட்டினார்.
“சித்தி, கல்யாணம் ஆகலைன்னா என்ன? நாங்க ஒன்னும் சின்ன பிள்ளைங்க இல்ல. ஐ அம் ட்வென்டி பைவ். அதுவும் அண்ணிய விட எனக்கு வயசு கூட தான்,” என்று சிலுப்பிக்கொள்ள, “வயசு எல்லாம் இங்க பிரச்சனை கிடையாது. ரெண்டு பேரும் கிளம்புறீங்களா, இல்லையா?” என்றவர் குரலை உயர்த்தினார்.
“போறோம்மா,” என்ற யாழினி, உள்ளே சென்ற குரலில் கூறிவிட்டு நகர எத்தனிக்க, “நம்ம மார்னிங் பேசலாம் ண்ணி,” என்றுவிட்டு சென்றாள் ஷாலினி.
தனது கையில் இருந்த மல்லிகை சரத்தை மலரின் கூந்தலில் சூட்டியவர், “அழகா இருக்க, மலர்,” என்று சிரிப்புடன் கூற, மலர் மெலிதாகப் புன்னகைத்தாள்.
“இந்தா, இந்த பாலை எடுத்துட்டு மேலே இருக்க பஸ்ட் ரூம் போ. அதுதான் உங்களோட ரூம். தெரியும் தானே?” என்று அவர் வினவிட, “தெரியும்த்தை,” என்று மலர் பதில் இயம்பினாள்.
“ஹ்ம்ம்,” என்று தலையசைத்தவர், மலரைப் படிக்கட்டு துவங்கும் இடத்தில் விட்டுவிட்டு, அவருடைய அறைக்கு செல்ல, மலர் ரிஷியின் அறையை நோக்கிச் சென்றாள்.
உள்ளுக்குள் லேசான படபடப்பு, பயம் எல்லாம் பரவிக் கிடக்க, முகத்தைச் சாதாரணமாக வைத்தபடி ரிஷியின் அறையை அடைந்தாள்.
சில நொடிகள் தன்னைச் சமன்படுத்திவிட்டு கதவைத் திறக்க, அது தாழ்போடாததால் திறந்து கொண்டது.
உள்ளே நுழைந்தவள் கதவைப் பூட்டிவிட்டு திரும்ப, ரிஷி நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான். கையில் அலைபேசி இருந்தது.
திருமணத்திற்கு வர முடியாத நண்பர்கள் சிலர் புலனத்தில் வாழ்த்து தெரிவித்திருக்க, அதற்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தவன், மலரின் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.
லேசான பதற்றம் விரவிக்கிடந்த முகத்துடன் தன் எதிரே நின்றிருப்பவளைக் கண்டு ரிஷிக்கு புன்னகை அரும்பியது.
இருக்கையில் இருந்து எழுந்தவன், “வெல்கம் டூ அவர் ரூம் மிஸஸ் ரிஷிகோஷவ்” என்று சிரிப்புடன் வரவேற்க, மலர் தனது அச்சத்தை மறைத்து மென்னகைக்க முயற்சித்தாள்.
அதனை உணர்ந்தவன் அவள் அருகே சென்று கையைப் பிடித்து, “சில், மலர். எதுக்கு இவ்வளவு பயம்?” என்று கீற்று புன்னகையுடன் கேட்க, “முகத்தில் பயம் தெரியுதா?” என்று வினா தொடுத்தாள் மலர்.
ரிஷி ஆம் எனும் விதமாக சிரிப்புடன் தலையாட்ட, “உங்களோட அண்ணிங்கதான் அது இதுன்னு சொல்லி என்னை பயமுடுத்திட்டாங்க,” என்றவள் பாவனை ரிஷிக்கு அள்ளிக் கொள்ளத் தோன்றியது.
அப்படி அவளைக் கட்டிக் கொண்டால் அவள் மேலும் பதட்டமடைவாள் என்று எண்ணியவன், “அவங்க சொன்னா நீ பயப்படுவியா? நான் என்ன செஞ்சிடபோறேன் உனக்கு?” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.
“எதுவும் செய்ய மாட்டீங்க தான்,” என்ற இழுத்தபடியே அவனைக் காண, “எதுவும் செய்ய மாட்டேனா?” என்று சிரிப்புடன் கேட்டான் ரிஷி.
மலர் ஒரு கணம் திகைத்து விழித்து, பிறகு நான்கு புறமும் தலையசைக்க, “எதுவும் செய்யாம இருக்கத்தான் ஊரை கூட்டி கல்யாணம் பண்ணி இருக்கேனா?” என்று குறும்புச் சிரிப்புடன் ரிஷி வினாவைத் தொடுத்தான்.
இதற்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் மலர் மலங்க மலங்க விழிக்க, “அச்சோ, க்யூட்டி நீ,” என்றவன் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
“நானா க்யூட்? என்னை விட நீங்கதான் க்யூட்டா இருக்கீங்க,” என்றவன் அவனுக்குள்ளே இருந்து முணுமுணுக்க, “நெஜமாவா?” என்று சிரிப்புடன் விழியுயர்த்தினான்.
“ஆமா,” என்று மலர் அவனை நிமிர்ந்து பார்க்க, “அதை இவ்வளவு நேரம் ஏன் சொல்லல? நான் சொன்ன பிறகு சொல்ற,” என்று சிரிப்போடு அதட்டினான் ரிஷி.
“சொன்னா தான் தெரியுமா?” என்றவள் மீண்டும் இதழுக்குள் முணுமுணுக்க, அவனது விழிகள் அவளது ஒற்றைக்கல் மூக்குத்தியில் பதிந்தது.
அடுத்த கணம் அவனது கரம் அவளது நாசியை நோக்கிச் செல்ல, வழக்கம் போல அவள் நழுவ முயற்சித்தாள்.
“ஹேய், என்னடி?” என்று ரிஷி அதட்ட, மலர் பதில் பார்வை பார்த்தாள்.
“நான் லைசன்ஸ் வாங்கி இருக்கேன். இந்த ஃபுல் பிராப்பர்ட்டி என்னோடது தான்,” என்று சிரிப்புடன் அவளைச் சுட்டிக் காண்பிக்க, “அப்படி என்னதான் இருக்கோ அந்த மூக்குத்தியில?” என்று போலியாக அழுத்துக் கொண்டாள் மலர்.
“என்ன இருக்கா அந்த ஒத்த மூக்குத்தில தாண்டி, என்ன மொத்தமா சுருட்டிக்கிட்ட நீ,” என்றவன் விழி மூடி ரசனையுடன் கூற, இவளுக்குப் புன்னகை பூத்தது.
“நான் வேணா இதை கழட்டி உங்ககிட்ட கொடுத்துடவா?” என்று சிரிப்புடன் மலர் கேட்க, “அது வேணா, இதை கழட்டி குடு,” என்றவன் அவளது சேலையைச் சிரிப்புடன் சுட்டிக் காட்டினான்.
“என்ன?” என்று திகைத்தவளது முகம் சடுதியில் சிவப்பேற, அவனது விரல்கள் அவளது கன்னத்தை வருடியது.
“ஐ அம் டாம் சீரியஸ், மலர். இதை என்கிட்ட கொடுத்துடு. இதுமட்டும் இல்ல, உன்கிட்ட இருக்க எல்லாத்தையும்,” என்றவன் அவளது காதில் முணுமுணுக்க, அந்த குரல் செவிக்குள் நுழைந்து உயிரைத் தீண்டி அவளைச் சிலிர்க்க வைத்தது.
அதில் மெலிதாய் கிறங்கியவள் அவனது சட்டையை இறுக்கிப் பிடித்தாள்.
“என்ன? உனக்கு என்னோட ஷர்ட் வேணுமா?” என்று வந்து சிரிப்புடன் சட்டையை கழற்ற முயற்சிக்க, “ஹையோ, கெட்ட பையனா இருக்கீங்க நீங்க,” என்று மார்பில் கை வைத்து தள்ளினாள்.
“அடியே, நான் இன்னும் எதுவுமே பண்ணல. அதுக்குள்ள கெட்ட பையன் பட்டம் கொடுத்துட்ட. என்னோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு கொடுடி,” என்றவன் கண்ணடித்துச் சிரிக்க, இவளுக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது.
அவனிடமிருந்து தப்பிக்க வழி தேடி, “அது இன்னைக்கு முழுக்க நின்னுட்டு இருந்தது. கால் வலிக்குது,” என்று திணறலுடன் கூற, அருகே இருந்த நீள்விருக்கையில் அவளை அமர வைத்தவன், “எந்த கால், மலர்,” என்றபடி அவளது சேலையை முட்டிவரை உயர்த்தியிருந்தான்.
அதில் விதிர்விதிர்த்துப் போனவள், அவனிடமிருந்து காலை உருவ முயற்சிக்க, “ப்ச், என்னடி, கால் வலிக்குதுன்னு சொன்னேல்ல? அதான் எங்க வலிக்குதுன்னு பாத்துட்டு இருக்கேன்,” என்றவன் சிரிப்புடன் அவளது கெண்டைக்காலை வருட, மலருக்கு அடி வயிற்றில் பூகம்பம் பிறந்தது.
“அச்சச்சோ, விடுங்க. எனக்கு எந்தக் காலும் வலிக்கல,” என்றவள் மெலிதாய் அலற, “நீ தானடி சொன்ன, கால் வலிக்குதுன்னு,” என்றவன், மற்றொரு காலையும் பிடித்தான்.
“ப்ளீஸ், விடுங்க,” என்று மலர் கெஞ்சலுடன் கூற, “வேற எங்க வலிக்குது, மலர்? சொல்லு, அங்கயும் அழுத்தி விடுறேன்,” என்றவனது விழிகள் அவள் மீது அப்பட்டமாய் படர்ந்தது.
அவனது பார்வையில் முழுதாய் சிவந்து போனவள், “இல்ல, நான் பொய் சொன்னேன். எங்கேயும் வலிக்கல,” என்று திக்கித் திணற, “ஆனா, நான் உண்மையாதான் அழுத்தி விட வந்தேன்,” என்று விஷமச் சிரிப்புடன் சொன்னவன், அவளது இடையை அழுத்திப் பிடித்தான்.
அவனது அழுத்தத்தில் அவஸ்தையில் நெளிந்தவள், “என்னங்க, விடுங்க,” என்று முணுமுணுப்புடன் விலகப் பார்க்க, “விடுறதுக்கா சண்டை போட்டு கல்யாணம் பண்ணி இருக்கேன்?” என்றவன், அவளை அப்படியே தன்மீது சரித்துக் கொண்டான்.
அவன் மீது மொத்தமாய் விழுந்தவள், அதிர்ந்து விழிகளை விரித்துப் பார்க்க, “என்னடி, கண்ணாலே என்ன முழுங்குற மாதிரி பாக்குற?” என்று சிரித்தவன், அவளது கழுத்தில் முகத்தைப் புதைத்து வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான்