இதயம் 27.2

இத்தனை நாள் தன்னை தவிக்கச் செய்த அவளது சுகந்த வாசத்தை தனது நுரையீரலுக்குள் முழுவதுமாய் நிறைத்துக் கொண்டவன், “ஆஹ்…” என்று பெருமூச்சை வெளியிட, அவனது அனல் மூச்சு மலரைத் தகிக்க வைத்தது.

“என்ன செய்றீங்க?” என்று நடுங்கிய குரலில் கூறியவள், அவனது தலை முடியை பற்றுகோளாகப் பிடித்துக் கொள்ள, “உன்னோட வாசத்தை எனக்குள்ள நிறைச்சுக்கிறேன்,” என்றவன், அவளை மேலும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு,” என்றவள் திணற, “என்ன மாதிரி இருக்கு, மலர்?” என்றவன், அவளது செவி மடலில் இதழ் குவித்து ஊதினான்.

அதில் சிலிர்த்து அடங்கியவள், “எனக்கு சொல்ல தெரியல,” என்று மெலிதாக முனங்க, “எனக்கு என்னென்னவோ மாதிரி இருக்குடி. என்னடி பண்ற என்னை?” என்றவன், அவளது வாசம் தந்த போதையில் பிதற்றினான்.

அவனது குரல் தந்த மயக்கத்தில் இவளும், “ஹ்ம்ம்…” என்று கிறங்க, அவளது செவி மடலை பற்களால் லேசாகக் கடித்திழுத்தான்.

“ஷ்…” என்று முனங்கியவள், அவனது சட்டை காலரைப் பற்றி இழுக்க, அவளது இழுப்பிற்கு வந்தவனது பார்வை, அவளது விழிகள், மூக்குத்தி வீற்றிருக்கும் நாசி, எப்போதும் போல அவனை கொன்று திண்ணும் அந்த இதழ்கள் என மெதுவாய் வலம் வந்தது.

அவனைத் தடுமாறித் திணற வைக்கும் அந்த இதழ்களைத் தாண்டிச் செல்ல முடியாதவன், அவளது கழுத்தில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்.

இருவரது முகத்திற்கும் இடையே நூலிழை இடைவெளி இருக்க, அதனை சுழியமாகக் குறைத்தவன், அவளது கீழுதட்டைப் பற்களால் கடித்து இழுத்தான்.

இவ்வளவுதான். இருவருக்கும் மோகத்தீ பற்றிக் கொண்டது. அவனை விலக்கித் தள்ளிக் கொண்டிருந்தவள், இப்போது நடுக்கத்துடன் பிடரியில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து இறுக்கினாள்.

அவள் இதழை மெதுவாய் தனக்குள் எடுத்துக்கொண்டு ரசித்துப் புசித்தவன், அவளிடம் இருந்து விலக, இருவருக்கும் பெரிதாய் மூச்சு வாங்கியது.

விழிகளோடு சேர்ந்து, இதழ், முகம் என மொத்தமாய் சிவந்து இருந்தவளைக் கண்டு, ரிஷியின் பார்வையில் தாபம் ஏறியது.

“கொல்றடி என்ன,” என்று மோகத்தில் பிதற்றியவன், அவளது தொண்டைக் குழியில் முகத்தைப் புதைத்தான்.

அவனது மீசை உரசலில் இவளுக்குள் ஒரு நடுக்கம் பிறக்க, மெலிதாய் விழி மூடி அதனை அனுபவித்தாள்.

தொண்டைக் குழியில் ஆழமாய், அழுத்தமாய் ஒரு முத்தத்தைப் பதித்து, அவளது உயிரைப் பருகத் துவங்கினான் ரிஷி.

அதில் கூசி சிலிர்த்தவள், அவனை விலக்க முயற்சிக்க, “ப்ச், அமைதியா இருடி,” என்று என்று கரகரத்த குரலில் அவளை அதட்டியவனது கரம், அவளது முந்தானையைச் சரித்திருந்தது.

அதில் ஏகமாய் அதிர்ந்து பதறிப் போனவள், அவனைத் தள்ள முயற்சிக்க, அவளது முதுகோடு கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன், மார்பில் முகத்தைப் புதைத்து அப்படியே அங்குமிங்கும் புரட்டினான்.

அதில் சர்வமும் அடங்கி அதிர்ந்தவள், கூச்சத்தில் அவனைப் பிடித்துத் தள்ள, “ப்ச், ரொம்ப நாளா பாத்து தவிச்சு, ஏங்கி, இன்னைக்குத்தான் அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணுடி,” என்று அவளது காதில் தாபமாய் முனங்கியவன், அடுத்த நொடியில் அவளைத் தன் வசப்படுத்தினான்.

மெலிதான முனங்களும், சின்ன சின்ன பேச்சுகளுமாக, தனது குரலாலே அவளை மயங்கிக் கிறங்க வைத்தவன், அவளை மொத்தமாய் தனக்குள் எடுத்து பூசிக்கொள்ளும் வேலையைத் துவங்கினான்.

முதலில் தயங்கி, தவித்து, தவிர்த்தவள், பிறகு அவனிடம் மயங்கி முயங்கி, அவனுக்குள் அடங்கிப் போக, அவளை அணு அணுவாய் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான் ரிஷி.

நொடிகள் நிமிடங்களாக மாற, நிமிடங்கள் மணி நேரமாகக் கடந்த பின்பு, அவளுள் மூழ்கிக் கரைந்து, அவளையும் தனக்குள் உருக வைத்தவன், பெரிதாக மூச்சு வாங்கி மெத்தையில் அவளருகே சரிந்தான்.

அவன் தந்த புத்தம் புது உணர்வில் கிறங்கி மயங்கி கிடந்தவள், மெலிதாக இமை பிரித்து அவனை காண, அவளுக்குப் பக்கவாட்டில் படுத்திருந்தவனும் அவளைத்தான் இமையாது பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையில் கூச்சம் கொண்டவள், போர்வைக்குள் நுழைய முயற்சிக்க, அதனைத் தடுத்து அவளை தன் மீது போட்டுக் கொண்டான் ரிஷி.

இம்முறை மலர் விலக முயற்சிக்காது அவனை அணைத்துக்கொள்ள, “யூ ஆர் சச் அ டிவைன், மலர்,” என்று ரிஷி இன்னும் தெரியாத போதையில் முணுமுணுத்தான்.

“ஆங்…” என்று அவனது பேச்சு புரியாதவள் விழிக்க, ரிஷி நமட்டுச் சிரிப்புடன், “செம்மையா எனக்கு கம்பெனி கொடுத்தனு  சொன்னேன்,” என்றான்.

மலர் ஒரு கணம் திகைத்து, பின் அவனை முறைத்து, “கெட்ட பேச்சா பேசுறீங்க நீங்க?” என்க, “இந்த நேரத்துல கெட்ட பேச்சு பேசாம சொற்பொழிவா ஆத்த முடியும்?” என்றவனது விழிகள் அவள் மீது மேய்ந்தது.

“ப்ச், எனக்கு டயர்டா இருக்கு. போதும், தூங்குங்க,” என்றவள் விழிகளை மூட, “நீ தூங்கு. நான் என் வேலையைப் பார்த்துக்கிறேன்,” என்று சிரிப்புடன் கூறினான்.

அடுத்த கணம் படக்கென விழி திறந்த மலர், அவனை முறைப்புடன் காண, “என்ன? நான் இன்னும் என் ஃபர்ஸ்ட் நைட் ஒழுங்காவே செலிப்ரேட் பண்ணலை. இந்த நைட் ஃபுல்லா எனக்கு தான்,” என்று மந்தகாசச் சிரிப்புடன் கூறினான்.

“நெஜமாவே எனக்கு டயர்டா இருக்கு,” என்றவள், பாவமாக அவனைப் பார்த்து விழிக்க, “டயர்ட் ஆகுற அளவுக்கு நீ எதுவுமே பண்ணலையேடி. எல்லாமே நான் தானே பண்ணேன்,” என்றவனது பேச்சில் அவளது முகம் மீண்டும் சிவந்தது.

“நான் பண்ணதெல்லாம் நீயும் பண்ணிட்டு அப்புறம் டயர்டா இருக்குன்னு சொல்லு. நான் தூங்க விடுறேன்,” என்று ரிஷி அவளை விஷமச் சிரிப்புடன் வம்பிழுக்க, “ஏங்க,” என்று அவனைப் பாவமாகப் பார்த்தாள்.

ரிஷி பதிலுக்கு, “என்னங்க?” என்று ராகமாய் இழுக்க, “நான் நிஜமாவே தூங்க போறேன். போங்க,” என்றவள் அவனிடமிருந்து இறங்கி, திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.

“கருணைமலருக்கு என் மேல கருணையே இல்லை,” என்று விட்டத்தைப் பார்த்தபடி ரிஷி கூடப் படக்கெனத் திரும்பி, அவனை கண்டவளது இதழ்களில் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

மாறாத சிரிப்புடன், “நைட்

 தூங்குற ஐடியாவே இல்லையா உங்களுக்கு?” என்று வினவிட, “தூங்குறதுக்கா இப்படி ரூம் முழுக்க அலங்காரம் பண்ண சொன்னேன்?” என்றவன், மெத்தையில் இருந்த பூவை எடுத்து அவள் மீது வீசினான்.

“அதான் இவ்வளவு நேரம்…” என்று கூற வந்தவள், சடுதியில் தன் பேச்சு உரைத்து நிறுத்திக் கொள்ள, இவனது இதழ்களில் மந்தகாசப் புன்னகை தொற்றிக் கொண்டது.

“இவ்வளவு நேரம் என்ன?” என்றவன், மின்னும் விழிகளுடன் அவளைக் காண, “ஒன்னுமில்ல,” என்றவளது உள்ளே போய்விட்டது.

“என்னடி?” என்று சிரிப்புடன் அலுத்தவன், அவளைத் தன்னருகே இழுத்தணைத்து, “என்கிட்ட பேசுறதுக்கு, என்ன செய்றதுக்கு, என்ன வேணா பண்றது, உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு,” என்று கண்ணடித்தான்.

“நான் அது ஏதோ தெரியாம பேசிட்டேன்,” என்றவள் லேசாகத் திணற, “தெரிஞ்சு கூட பேசலாம், மலர்,” என்று அவளது காதில் ரகசியம் பேசினான்.

“நான் பேசமாட்டேன். நான் ஒன்னும் உங்கள மாதிரி கெட்ட பையன் இல்லை,” என்றவள் இதழைச் சழிக்க, “ஆஹான்…” என்று இழுத்தவனது விழிகள் அவள் மீது மேய்ந்தது.

அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சிவந்தவள், போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

சிரிப்புடன் அவளது போர்வைக்குள் நுழைந்தவன், “ஐ அம் டூ டயர்ட். நாளைக்கு செகண்ட் நைட் கொண்டாடிக்கலாம்,” என்று கூறியபடி அவளை அணைத்து விழிகளை மூட, “அவ்ளோதானா?” என்றவளது சிரிப்பு அவனது செவியை நிறைத்தது.

“ஹேய்,” என்று புதிதாய் திகைத்தவன் அவளை சிரிப்புடன் பார்க்க, “என்ன?” என்று அவளும் பதில் பார்வை பார்த்தாள்.

“என்னடி சொன்ன இப்ப?” என்றவன், இதழில் சூடிக்கொண்ட சிரிப்புடன் கேட்க, “என்ன சொன்ன? தூக்கம் வருது, தூங்கலாம்னு சொன்னேன்,” என்று சிரிக்காமல் பதிலளித்தாள் மலர்.

“லையர்,” என்று ரிஷி சிரிப்புடன் அவளை நோக்க, “நான் அதான் பா சொன்னேன்,” என்றவள் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

“சாரி டு டிஸ்டப்பாயின்ட் யூ, மலர். நீ ரெடியா இருந்தாலும், நான் ரெடி ஆகல. செம டயர்ட்,” என்றவன் சிரிக்காது கூற, மலர் சிரிப்பும் முறைப்புமாக அவனை நோக்கினாள்.

இப்போது ஏதும் நடக்காத பாவனையில் ரிஷி, “என்ன?” என்று புருவம் உயர்த்த, “ஒன்னும் இல்ல. தூங்க போறேன் நீங்களும் தூங்குங்க” என்றவள் அவனுக்கு முதுகுகாட்டித் திரும்பிக் கொள்ள, ரிஷியும் சிரிப்புடன் அவளை அணைத்து விழிகளை மூடினான்.

error: Content is protected !!
Scroll to Top