ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 21

“அப்போ மதுவோட வாழ்க்கையில் உனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நடந்த எல்லாத்தையும் எங்கிட்டே விவரமாகச் சொல்லும்மா! அப்பறம் அந்த விஷயங்களை எல்லாம் நான் கேட்டு முடிக்கிறதுக்கு முன்னாடியே உனக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். என்னவாக இருந்தாலும் அவ தான் என்னோட தம்பிக்குப் பொண்டாட்டியாக இருப்பாள்! அது எப்பவும் மாறாது!”என அவளுக்கு வாக்களித்தாள் வெண்பா. 

அதைக் கேட்டதுமே மனம் நிறைந்து போயிற்று பிரேமாவிற்கு!

“ரொம்பத் தாங்க்ஸ் மேம்”என்றவளோ, 

சிறிது நேரத்திலேயே தனது தோழியின் வாழ்க்கை வரலாற்றை அவளிடம் சொல்லி முடித்து விட்டிருந்தாள். 

அதைக் கேட்டு விட்டு,”அவங்க அப்பாவும், அம்மாவும் இறந்ததுக்கு அப்பறமாக அவங்க அண்ணன் பண்ணது ரொம்பவே அநியாயமான விஷயம்மா! மதுவோட தங்கச்சிச் சுதா ரொம்பவே சின்னப் பொண்ணு ஆனால் அவ கூடத் தன்னோட அக்காவுக்கு எல்லா விஷயத்திலும் துணையாக இருக்கும் போது அந்தப் பாஸ்கர் அப்படி செஞ்சதை என்னால் ஏத்துக்கவே முடியலை! இப்போ அவருக்கும், இவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது போக்குவரத்து இருக்கா?”என்று யோசனையாக கேட்டாள் வெண்பா. 

அதற்கு அவளோ,”இல்லை மேம். எனக்கு இது நல்லா தெரியும்! மதுவும், சுதாவும் அவரை ஒரேயடியாக ஒதுக்கி வச்சிட்டாங்க! அதே மாதிரி தன்னோட தங்கச்சிங்களுக்கு எதுவும் செய்றதுக்கு அவருக்கும் மனசில்லை! அதனால் ரெண்டுப் பக்கமும் போக்குவரத்தோ, பேச்சு வார்த்தையோ கண்டிப்பாக கிடையாது! இதைக் காரணமாக வச்சு மதுவை நீங்க வேண்டாம்னுச் சொல்லிடாதீங்க மேம்! ப்ளீஸ்!”எனத் தன்னிடம் கெஞ்சியவளைப் பார்த்து, 

“இங்கே பாரும்மா! நான் உனக்கு முன்னாடியே ஒரு வாக்குக் கொடுத்தேனே! அது ஞாபகம் இருக்குத் தானே? அதை நானும் மறக்க மாட்டேன்! மதுவோட வாழ்க்கையைப் பத்தி முழுசாக கேட்டதுக்கு அப்பறமாக எனக்கு இன்னும் அவளையும், அவளோட தங்கச்சியையும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு! இனிமேல் அவங்களே மறுத்தாலும் மது தான் எங்க வீட்டு மருமக”என்று அவளிடம் தீர்க்கமாக மொழியவும்,

“அச்சோ! நன்றி மேம்! அவ உண்மையிலேயே ரொம்பவே கொடுத்து வச்சவ!”என்று தன்னுடைய தோழிக்காக மனதார நன்றியைத் தெரிவித்தாள் பிரேமா. 

“ஹேய்! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. இதுக்கு மது தகுதியானப் பொண்ணு!”என்றுரைத்து விட்டு, 

“நாம இப்படி பேசிக்கிட்டதை நீ மது கிட்டேயும், அவளோட தங்கச்சி கிட்டேயும் இப்போதைக்குச் சொல்லாதே! அதுக்கான கால, நேரம் வரும் போது நாம எல்லாரும் சேர்ந்து அவகிட்டேயும், என் தம்பிக் கிட்டேயும் சொல்லிக்கலாம்!”என்றிருந்தாள் வெண்பா. 

“ஓகே மேம்! நீங்க என்னைக் கண்டிப்பாக நம்பலாம்”என்று தானும் அவளுக்கு வாக்குக் கொடுத்திருந்தாள் பிரேமா.

“நான் சீக்கிரம் புகழ், மது கல்யாணத்தை நடத்த ஏற்பாடுப் பண்றேன்!”என அவளிடம் தீர்க்கமாக உரைத்து விட்டு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அவ்வறையில் இருந்து வெளியேறினாள் வெண்பா. 

அதற்குப் பிறகுத் தன்னுடைய தம்பியிடம் செல்ல, 

“அந்தப் பிரபலமான நடிகர் ரன்வீரோட இப்போ வரப் போறப் படத்துக்கு நம்மளோட கம்பெனியில் இருந்து தான் மறுபடியும் டிரெஸ் டிசைன் செஞ்சிக் கொடுக்கப் போறோம்க்கா!”என்று அவளிடம் உற்சாகமான குரலில் அறிவித்தான் புகழேந்தி. 

அதைக் கேள்வியுற்றவளுக்கும் அந்த உற்சாகம் பரவி விட்டிருந்தது! 

“வாவ்! சூப்பர்டா! அவரே உனக்கு அந்த வாய்ப்பைக் கூப்பிட்டுத் தந்தாரா?”எனக் கேட்டிருந்தாள் வெண்பா. 

அதற்கு அவனோ,”ஆமாம்க்கா! நேத்து தான் ரன்வீர் சாரைப் பார்த்து அதைப் பத்திப் பேசி உறுதி செய்துக்கிட்டேன்! இனிமேல் அந்தப் படம் முடிஞ்சி வெளியாகுற வரைக்கும் நானும், நம்மக் கம்பெனி ஸ்டாஃப்ஸூம் பிஸியாகத் தான் இருப்போம்!”என்று தன்னுடைய முகத்தில் பெருமிதம் பொங்கப் பதிலளித்தான் புகழேந்தி. 

“கலக்குற போ! இனிமேலும் அவரோட அடுத்தடுத்தப் படங்களுக்கு நம்மக் கம்பெனி டிரெஸ் டிசைன் செஞ்சிக் கொடுக்கிறதுக்குச் சான்ஸ் கிடைக்கும்! அவரைத் தவிர இன்னும் புது முக நடிகர்களுக்கும் டிரெஸ் டிசைன் பண்ணிக் கொடுப்போம் புகழ்! அவங்களையும் நாம குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாதுல்ல? அதான் சொல்றேன்”என்று அவனுக்கு ஆலோசனைக் கூறவும், 

“அதுவும் என்னோட லிஸ்ட்டில் இருக்கு க்கா! என்னோட அடுத்த இலக்கே அது தான்!”என அவளிடம் உரைக்க, 

“அப்போ உன் கல்யாணமும் லிஸ்ட்டில் இருக்குது தானே?”என்றாள் படக்கென்று. 

அதில் அவளைத் தனது இரு பக்க நெற்றிப் புருவங்களையும் ஏற்றி, இறக்கி நோக்கி விட்டு,”அது என்னோட லிஸ்ட்டில் இல்லைன்னாலும் உங்களோட லிஸ்ட்டில் கண்டிப்பாக முதல் இடத்தில் இருக்கும் தானே க்கா?”எனச் சலிப்புடன் வினவினான் புகழேந்தி. 

அதைக் கேட்டவுடன் நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து,”ஆமாம்! அதில் என்ன உனக்குச் சந்தேகம்? என் தம்பிக்கு வேற இப்போ தான் காதல் வந்திருக்கு! அப்படி இருக்கும் போது என்னோட லிஸ்ட்டில் முதல் இடத்தில் அதை தவிர்த்து வேற என்ன இருக்கப் போகுது?”என்று அவனுக்குப் பதிலளித்தாள் வெண்பா. 

“ம்ஹூம்! அக்கா!”எனச் சிறுவனைப் போல் தன்னிடம் சினுங்கியவனைப் பார்த்து, 

“ரொம்ப நடிக்காதேடா! நீ அந்த மதுப் பொண்ணு நம்மப் பி. ஏ கிட்டே பேசும் போதெல்லாம் காது, மூக்கில் புகை விட்டதை நான் பார்த்துட்டுத் தான் இருந்தேன்!”என்று அவனைக் கேலிச் செய்ய, 

அதில் தனது முகம் சிவக்க,”அக்கா!”என்று சற்றே குரலை உயர்த்தி அவளை அமைதியாக்க முயன்றான் புகழேந்தி. 

ஏனென்றால், தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது என்றப் பதட்டம் ஒருபுறம், தன்னைத் தமக்கை ஏதாவது தவறாகப் புரிந்து கொண்டு விடுவாளோ என்றப் பயம் ஒருபுறம் என்று அந்த ஏஸிப் போடப்பட்டிருந்து அறையிலும் அவனுக்கு முகம் முழுவதிலும் வியர்வை அரும்புகள் பூக்கத் தொடங்கி விட்டிருந்தது! 

அதைக் கவனித்து விட்டு,”புகழ்! நீ முதல்லப் பதறாமல் இரு!”என்றவளோ அவனைத் தண்ணீரை அருந்த வைத்து நிதானப்படுத்தினாள் வெண்பா. 

“எதுக்கு இவ்வளவு பதட்டம் ஆகுற? நான் அப்படி என்னச் சொல்லிட்டேன்? உனக்கு இந்த விஷயத்தைப் பத்தி மேற்கொண்டுப் பேசப் பிடிக்கலையா?”எனப் பாவமாக கேட்கவும்,

அதில் அவளைக் கனிவுடன் ஏறிட்டுப் பார்த்து,”அக்கா! அப்படி எதுவும் இல்லை! நான் அந்தப் பொண்ணை எந்த வித தப்பான நோக்கத்தோடப் பார்க்கலை! நீங்கத் திடீர்னு அப்படி சொல்லவுமே எனக்கு ஒரு மாதிரிக் கூச்சமாகச், சங்கட்டமாக ஆயிடுச்சு! அதனால் தான் பதறிப் போயிட்டேன்”என்று தமக்கைக்கு விளக்கம் அளித்தான் புகழேந்தி. 

அதைக் கேட்டதும் தான் அவளுக்குள் நிம்மதிப் பிறந்தது எனலாம்!

“அப்போ நான் பேசின விஷயம் உனக்கு ஓகே தானே? அதைப் பத்தி என்ன நினைக்கிற? அந்த மதுபாலாவை உனக்குக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்குத் தானேடா?”என்று அவனிடம் எதிர்பார்ப்புடன் வினவினாள் வெண்பா.

உடனே அவளை நிமிர்ந்து பார்த்து,”இதில் எனக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதுமா அக்கா? அந்தப் பொண்ணுக்கும் என்னைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் இருக்கனுமே! அப்போ தானே நல்லா இருக்கும்?”என்றவனை வியப்பாகப் பார்த்து, 

“என்னடா நீ எல்லாத்தையும் உள்ளே வச்சிட்டு வெளியே எதையுமே காட்டிக்காமல் இருக்கிற? உனக்குத் தான் அந்தப் பொண்ணைப் பிடிச்சு இருக்குத் தானே? அதை எங்கிட்டே சொல்ல வேண்டியது தானே? நானாவது இதில் மேற்கொண்டு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சு இருப்பேனே!”என்றாள் பொருமலுடன். 

அதற்கு,”அக்கா! எனக்கே அதைப் பத்தி லேட் ஆகத் தான் உணர்வு வந்துச்சு! அப்பறம் எப்படி நான் உங்ககிட்டே என்னோட விருப்பத்தைச் சொல்ல முடியும்?”எனத் தமக்கைக்குப் பதில் கூறினான் புகழேந்தி. 

“ஓஹோ! லாஜிக் ஆகப் பேசுறீங்களாக்கும்? அதுவும் சரி தான்! ஆனால் உன்னோட சம்மதம் கிடைச்சதுக்கு அப்பறமும் என்னால் எல்லாத்தையும் அமைதியாகப் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியாதுடா! அதனால் நான் வீட்டுக்குப் போன உடனேயே உங்க மாமா கிட்டே இதைப் பத்தி தெரிவிச்சு நாம எல்லாரும் சேர்ந்து ஒரு நல்ல நாளில் அந்த மதுப் பொண்ணைப் பொண்ணுக் கேட்கப் போகலாம். சரியா?”என்றவளை மலைப்புடன் பார்த்து, 

“நீங்க என்ன க்கா இவ்வளவு ராக்கெட் வேகத்தில் முடிவு எடுத்துட்டு இருக்கிற? அந்தப் பொண்ணைப் பத்தி நமக்கு எதுவுமே தெரியாது! அவ நம்மளோட ஆஃபீஸில் வேலைப் பார்க்கிறதையும், நடந்துக்கிறதையும் வச்சு மட்டும்  எப்படி அவளை மதிப்பிட முடியும் சொல்லுங்க? அவளோட குடும்பப் பிண்ணனி, இப்போ இருக்கிள சூழ்நிலைன்னு எதுவுமே நமக்குத் தெரியாதே! அப்பறம் எப்படி உடனே எல்லாத்தையும் முடிவுச் செஞ்சிப் போய்ப் பேச முடியும்? அதுவும் இல்லாமல் அந்தப் பெண்ணுக்கு இது பயங்கரமான அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்தும்! அதையும் நாம மனசில் வச்சிட்டுத் தான் எதுவாக இருந்தாலும் முடிவுச் செய்யனும்!”என அவளுக்கு அறிவுறுத்தினான் அவளது இளவல். 

“ஓஹோ! அதையெல்லாம் நானும், உங்க மாமாவும் பார்த்துக்கிறோம்! நீ இதுக்கு ஓகேன்னுச் சொன்னா மட்டும் போதும்”என அவனிடம் கறாராக உரைத்திருந்தாள் வெண்பா. 

அதற்கு அவனோ,”எனக்கு இதுக்கு ஓகே தான்க்கா!”என்று யோசிக்காமல் பதிலளித்து விட்டிருந்தான் புகழேந்தி.

அதை அவதானித்த அவனது சகோதரிக்கு முகம் மலர்ந்து, விகசித்துப் போயிற்று! 

“ஹப்பாடா! நீ இதுக்குச் சம்மதம் சொல்லிட்ட. அதனால் எனக்குப் பாதி வேலை முடிஞ்சது! இனிமேல் அந்தப் பொண்ணு மதுபாலா கிட்டேயும் இதைப் பத்திப் பேசிச் சம்மதம் வாங்கிட்டால் போதும்! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்காமல் நானும், உங்க மாமாவும் ஓய மாட்டோம்!”என்றவளின் குரலில் அத்துணை உறுதியும், நம்பிக்கையும் வெளிப்பட்டது. 

“இதனால் உனக்கும், மாமாவுக்கும் சந்தோசம்ன்னா நான் கண்டிப்பாக கல்யாணம் பண்ணிக்கிறேன்க்கா!”என அவளிடம் புன்னகையுடன் மொழிந்தான் புகழேந்தி. 

“எங்களுக்குச் சந்தோசம், நிம்மதி, நிறைவு எல்லாம் கிடைக்கிறது இருக்கட்டும்டா! இதனால் உன்னோட வாழ்க்கை முழுமை ஆகும்ன்னா அது தான் எங்களுக்கு வேணும்!”என்று தம்பியிடம் வலியுறுத்தினாள் வெண்பா. 

“இந்தக் கல்யாணத்தால் நீங்கச் சொன்ன எல்லாமே எனக்குக் கிடைக்கும்ன்னா நான் இதைச் செஞ்சிக்கிறேன்க்கா”என்று அவளுக்குத் தனது சம்மதத்தை தெரிவித்து விடவும், 

அதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனநிலையுடன் அன்றைய மதிய உணவைத் தம்பியுடன் சேர்ந்து உண்டாள் அவனது தமக்கை.

அதே நேரத்தில் மதிய உணவு நேரத்தில் சிற்றுண்டிச் சாலையில்,

“இங்கே பாருடி! என்னோட ஐடி கார்டு ரொம்ப அழகாக இருக்குல்ல?”என்று தன்னுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையைத் தன்னுடைய தோழியிடம் காட்டிக் கண்களில் பளபளப்பு மின்ன, இதழ்களில் புன்னகை மிளிரத் தனது ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டாள் மதுபாலா. 

அதை தானும் மகிழ்வுடன் கேட்டுக் கொண்டு,”ம்ஹ்ம்! செம்மயா இருக்கு டி! நீ இனிமேல் நீயும் இங்கே எங்களை மாதிரியான ஒரு அஃபிஷியல் ஆனப் பணியாளர்ன்றதை நினைக்கும் போது எனக்கு ரொம்பவே ஹேப்பியா இருக்கு! ஆல் தி பெஸ்ட் மது!”என்று அவளுக்குத் தனது வாழ்த்தையும் தெரிவித்தாள் பிரேமா. 

அதற்குத்,“தாங்க்ஸ் டி!”என்றவளிடம், 

“நீ உன்னோட சம்பள விவரம் இருந்தக் கவரைப் பிரிச்சுப் பார்த்துட்டியா?”என்று விசாரிக்கவும், 

“இன்னும் இல்லடி. சாப்பிட்டு முடிச்சிட்டு எல்லா வேலைகளையும் செஞ்சி வினோதினி மேடம் கிட்டே கொடுத்ததுக்கு அப்பறமாகச் சாயந்தரமாகத் தான் அதை திறந்துப் பார்க்கனும்”எனப் பதிலளித்தாள் மதுபாலா. 

“ஓஹ்! சரி டி. ஆனால் அதைச் சீக்கிரம் திறந்துப் பார்த்துட்டு வெற்றிச் சார் கிட்டே அதைப் பத்திச் சொல்லிரு”என்று அவளிடம் அறிவுறுத்தினாள் பிரேமா. 

அதற்குப் பிறகுத் தங்களது மதிய உணவை முடித்துக் கொண்டுத் தாங்கள் வேலை செய்யும் பிரிவுகளுக்குப் போய் விட்டனர் அந்த இரண்டுத் தோழிகளும்.

அதேபோல் தானும் தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து மதிய உணவை உண்டு முடித்து விட்டுச் சிறிது நேரம் அவனுடன் அளவளாவி விட்டு அவனிடமிருந்து மலர்ந்த முகத்துடன் விடைபெற்றுக் கொண்டுத் தன்னுடைய இல்லத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டாள் வெண்பா. 

  • தொடரும்
error: Content is protected !!
Scroll to Top