“அது சரி… நான் கேக் வேணாம்னு சொன்னேன். பட், எல்லாரும் சேர்ந்து வாங்கிட்டாங்க. யூஸ்வலா யாருக்குப் பெர்த் டேன்னாலும் வாங்கிடுவாங்க. எனக்குத்தான் சின்ன பையன் இல்ல நான்னு ஷையா ஃபீலாகுது!” தேவா சங்கடத்துடன் அங்கே நடப்பவற்றை பார்த்திருந்த ஜீவாவிடம் கூறினான்.
“ஹம்ம்… எல்லாருக்குமா கேக் வெட்டுறாங்க தேவா சார்? ஹீரோ, ஹீரோயின், டைரக்டருக்கு மட்டும்தானே இந்த மரியாதை, கேக் எல்லாம்? மத்த யாருக்கும் பண்ண மாட்டீங்க தானே? அப்புறம் என்ன எல்லாருக்கும்னு சேர்த்துச் சொல்றீங்க?” அவள் புருவம் உயர்த்தினாள்.
“ஹம்ம்… லிட்ரலி யெஸ்தான் ஜீவா. பட், நான் யாரையும் வெட்ட வேணாம்னு சொன்னதில்ல. அவங்களா பண்றதுதானே?” அவன் சமாளிப்பாகப் பிடரியைக் கோதினான்.
“இப்போ கூட நீங்க அவங்களை கேக் வெட்டச் சொல்லலை. அவங்கதானே பண்றாங்க?” அவள் கேலியாகக் கேட்டாள்.
“ச்சு… கேக் வெட்ட உன்னை இன்வைட் பண்ணது ஒரு குத்தமா ஜீவா? எல்லார் பெர்த்டே டேட்டையும் ஞாபகம் வச்சு விஷ் பண்றது, கேக் கட் பண்றது எல்லாம் இம்பாசிபிள்மா!” அவன் சலித்தான்.
“ஆனால் உங்க பெர்த் டேவை ஒவ்வொரு வருஷமும் அவங்க ஞாபகம் வச்சுப் பண்றாங்களே?” அவள் விடாமல் கேட்க,
“ஷ்… ஜீவா. போதும்… எனக்கு இன்னைக்கு பெர்த் டே. விட்டுடேன்!” அவன் சரணடைவது போலக் கையைத் தூக்க, அப்போதுதான் அவனிடம் தான் அதிகப்படியாகப் பேசிவிட்டோம் என்பது ஜீவாவிற்குப் புரிந்தது. சட்டென நத்தை தன் ஓட்டிற்குள் சுருங்குவது போல தனக்குள் சுருங்கினாள்.
“சாரி தேவா சார்… நான் உங்களை மூட் அப்செட் பண்ணச் சொல்லலை. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். நீங்க போங்க… எல்லாரும் அசெம்பிளாகிட்டாங்க. என்ஜாய் யுவர் டே!” அவள் தன் இடத்திற்கு மீண்டும் வந்தது போல அன்னியமாகிப் போன குரலில் உரைத்தாள்.
“எங்க போக… நீயும் வா. உனக்காகத்தான் நான் வெயிட் பண்ணேன். வந்து பக்கத்துல நில்லு!” அவன் அழைக்க,
“அங்க ஏற்கனவே அழகான ஹீரோயின் உங்களுக்காக வெயிட்டிங். நீங்க என்னடான்னா என்னைக் கூப்பிட்டு இருக்கீங்க தேவா சார்? நீங்க போங்க… நான் டெக்னீசியன்ஸோட நிக்கிறேன். ஆல்ரெடி அவங்க ஆர்டரா நின்னுட்டாங்க. நான் இடையில வந்து நிக்க முடியாது!” எனக் கட்டாயப்படுத்தி அவனை அனுப்பியவள், மற்ற ஊழியர்களோடு நின்று கைதட்டிப் வாழ்த்துப் பாடினாள்.
தேவா சங்கடத்துடன் அணிச்சலை வெட்டி வாசுவுக்கு ஊட்டியவன், கதாநாயகிக்கு நாகரிகமாகக் கையில் கொடுத்தான்.
“கீதன்… எல்லாருக்கும் வெட்டிக் கொடுங்க!” என்றவன், ஜீவாவிற்கென இரண்டு துண்டுகளை எடுத்து வந்துக் கொடுத்தான். அவள் நன்றியுடன் பெற்றுக்கொண்டாள்.
“இன்னையோட இங்க ஷூட்டிங் முடியுதுல்ல தேவா சார். ஈவ்னிங் டைம் கிடைக்குமா உங்களுக்கு? வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்த்துட்டுப் போறீங்களா? நான் உங்களைப் பத்தி சொன்னேன். அம்மா இங்க வரலைன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அவங்களுக்கு இந்த சினிமா, ஷூட்டிங் எல்லாம் சுத்தமா பிடிக்காது!” அவள் சங்கடத்துடன் கூறினாள்.
“நோ இஷ்யூஸ் ஜீவா. ஈவ்னிங் ஷூட்டிங் முடிஞ்சதும் டைமிருந்தா நான் வந்து ஆன்டியை மீட் பண்ணிட்டே போறேன்…” என அவன் கூற, இவள் தலையாட்டி நகர்ந்தாள்.
மாலை சரியாகப் படப்பிடிப்பு முடிந்து தேவா, “பேக்கப்…” என்றதும் கடகடவென எடுத்து வந்த பொருட்கள் அனைத்தும் வாகனத்தில் ஏற்றப்பட்டன. ஜீவா உள்ளே வந்தவள், தங்களது பொருட்கள் ஏதாவது சேதமாகியிருக்கிறதா எனப் பார்த்தாள்.
“மேடம்… டேமேஜ் ஐட்டத்துக்கு எல்லாத்தையும் நாங்க ரீப்ளேஸ் பண்ணிக் கொடுத்துடுறோம்!” என கீதன் கூறியதும், இவள் எந்தெந்தப் பொருட்கள் உடைந்திருக்கின்றன எனப் பார்த்தாள்.
ஒரு மேஜையை மட்டும் தவிர்த்தவள், “இது வேணாம் சார். ஏற்கனவே உடைஞ்சுதான் இருந்துச்சு. நீங்க உடைச்சதை மட்டும் சரி பண்ணி இல்ல மாத்திக் கொடுங்க, போதும்!” என அவள் முடித்துவிட்டாள்.
“நாளைக்கே மாத்திக் கொடுத்துடுறோம்…” என அவன் உறுதியளித்தான்.
தேவா கதாநாயகனிடம் ஏதோ பேசினான். இவளைக் கண்டு தலையசைத்தவன், “டூ மினிட்ஸ்ல வரேன்…” எனக் கை காண்பித்தான். இவள் அமைதியாகக் காத்திருந்தாள். எல்லோரும் கிளம்பியதும் கீதனிடம் ஏதோ கூறியவன், பின்னர் ஜீவாவிடம் வந்து நின்றான்.
“போகலாமா?” எனக் கேட்டு அவளோடு நடந்தான். தேவா வந்ததும் கிரிஜா அவனை முறையாக வரவேற்றார்.
“பாப்பா சொன்னா, தம்பி நம்ம ஊர்னு. எனக்குத் தெரியாதுப்பா. வீட்ல அம்மா, தம்பி, தங்கச்சியெல்லாம் எப்படி இருக்காங்க?” எனப் பொதுவாக அவர் பேச, அவன் பதிலளித்தான். ஜீவா முன்பே சின்னத்தம்பியை அறையில் படுக்க வைத்துவிட்டாள்.
“கேசரி சாப்பிடுங்க தேவா சார்!” என நெய்யில் முந்திரி மிதக்கும் கேசரியை அவன் முன்னே வைத்தாள்.
“தேங்க் யூ ஜீவா!” என அவன் ஆர்வத்தோடு உண்டு, “சூப்பரா இருக்கும்மா…” எனப் பாராட்டினான்.
“அக்காவுக்கு நான்தான் தேவா சார் ஹெல்ப் பண்ணேன் கேசரி செய்ய!” சஷ்டிகா முந்திக்கொண்டு வந்து அவன் முன்னே நின்றாள்; அவனிடம் பேசும் ஆர்வத்தில். அவன் புன்னகைத்து அவளையும் பாராட்டினான். என்ன படிக்கிறாள் என விசாரித்தான். பாலுவை அருகே அமர்த்திப் பேசினான். அவனின் இயல்பான அணுகுமுறையைச் சின்ன சிரிப்புடன் பார்த்தாள் ஜீவா.
நேரமானதை உணர்ந்து அனைவரிடமும் கூறிக்கொண்டு அவன் விடைபெற, “ம்மா… விட்டுட்டு வரேன்…” என அவன் பின்னே சென்றாள். அவள் பார்வை வேலுவைத் தொட, அவன் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ எனக் கண்ணசைத்தான். அவள் நிம்மதியுடன் இவனை வழியனுப்பச் சென்றாள்.
“உங்கம்மா ரொம்ப ஸ்வீட் ஜீவா. கல்லாவுல உக்கார்ந்திருக்கும்போது டெரரா தெரிவாங்க!” அவன் கூற, அவள் சிரித்தாள்.
“அப்போ நீங்க கஸ்டமர் சார். ஆனால் இப்போ பெரிய டைரக்டர். சோ, உங்களுக்கான மரியாதையும் உயரும் இல்ல?” எனக் கேட்டாள்.
“அதுவும் சரித்தான்…” என்றவன், “என் பெர்த் டே ஸ்பெஷலா கேசரி பண்ணியா ஜீவா? டேஸ்ட் அல்டிமேட்…” என மீண்டுமொருமுறை பாராட்டினான்.
அதற்குப் பதிலுரைக்காதவள், “தேங்க் யூ தேவா சார்…” என்றாள் மனதார.
சட்டென அவன் பேச்சுத் தடைபட, பிடரியைக் கோதியவன், “கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சேன் ஜீவா…” என்றான் மென்குரலில்.
“முதல்ல சின்ன கோபம். அப்புறம் தான் புரிஞ்சுது, எனக்காகத்தான் நீங்க இங்க ஷூட்டிங் எடுக்க ப்ளான் பண்ணது. உண்மையிலயே இந்த மூணு நாள் ரொம்ப நல்லா போச்சு. பரபரன்னு வேலை பார்க்காம, பொறுமையா எழுந்து குளிச்சு சாப்பிட்டு தூங்கி, அம்மா, பாப்பாவோட டைம் ஸ்பெண்ட் பண்ணேன். எல்லாரும் சேர்ந்து உக்கார்ந்து படம் பார்த்தோம். ரொம்ப நாள் கழிச்சு கோவிலுக்குப் போய் அபிஷேகம் பார்த்துட்டு வந்திருக்கேன். தேங்க் யூ சோ மச் தேவா சார்!” அவள் பேச்சில் அவன் மீதான மரியாதையும் பிரியமும் கூடிப் போயிற்று.
“ப்ம்ச்… எல்லாருக்கும் ரெஸ்ட் வேணும் ஜீவா. நம்ம மெஷின் இல்லம்மா. ஏதோ என்னால முடிஞ்ச சின்ன ஹெல்ப். நீ ஹேப்பி தானே?” எனக் கேட்டவன், தோளைக் குலுக்கினான். ஜீவா தலையசைத்துவிட்டுப் பின்னே திரும்பிப் பார்க்க, வேலு வந்தான்.
“ஹேப்பி பெர்த் டே அங்கிள்…” என மூச்சு வாங்க, அவனிடம் ஒரு கைக்கடிகாரத்தை நீட்டினான். கடந்த அரை மணி நேரத்தில் சார் என்ற விளிப்பு அங்கிள் என மாறியிருந்தது. தேவாவின் முகத்தில் ஆச்சர்யம்.
“ஹே… வேலு, தேங்க்ஸ்!” என்றுவிட்டு ஜீவாவைப் பார்க்க, அவள் சிரித்தாள்.
“ச்சு… ஜீவா, நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீ நிஜமா எனக்காகப் போய் வாங்கிட்டு வந்திருக்க?” அவளைக் கடிந்தான் தேவா.
“ஒன்ஸ் அகைன் ஹேப்பி பெர்த் டே, தேவா சார். சந்தோஷமா இருங்க…” என்றாள் இவள் மனதார.
அவன் அந்தக் கடிகாரத்தைப் பிரித்துப் பார்த்தான். அவன் தனக்கு வாங்கிக் கொடுத்த பொருட்களோடு ஒப்பிடும்போது இதன் விலை குறைவுதான் என ஜீவாவிற்கே தெரியும். இருப்பினும், அவனுக்குத் திருப்பிச் செய்துவிடும் நோக்கத்தோடு கடிகாரம் வாங்கித் தந்தாள்.
“ரொம்ப நல்லாயிருக்கு. தேங்க்ஸ் ஜீவா…” என அதைக் கையில் கட்டிக் காண்பித்தான் அவன்.
“தேவா அங்கிள்… உங்களுக்கு இன்னைக்கு பெர்த் டே. பெரியம்மாவுக்கும் கூட இன்னைக்குத்தான் பெர்த் டே!” என அவள் கூற, தேவா யோசனையுடன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“என் அம்மாவோட பெர்த் டே இன்னைக்குத்தான் தேவா சார். ஒவ்வொரு வருஷமும் கோவிலுக்குப் போக நினைப்பேன். ஆனால் ஹோட்டல்ல வேலை இருக்கும். இந்த வருஷம்தான் பொறுமையா போயிட்டு சாமி கும்பிட்டு வந்தேன்!” அவள் சின்ன குரலில் கூறினாள்.
அவன் மூச்சை இழுத்துவிட்டவன், என்ன சொல்வது எனத் தெரியாமல் அவளைப் பார்த்திருந்தான்.
“ஓகே தேவா சார்… உங்களுக்கு டைமாச்சுல்ல? நீங்க கிளம்புங்க!” சங்கடத்தை அவளே கலைத்துப் போட்டாள்.
“அம்மா ஞாபகம் வந்துடுச்சா ஜீவா?” அவள் முகத்தைப் பார்த்துவிட்டு அவனால் அப்படியே செல்ல முடியவில்லை.
என்னவோ சட்டென ஒரு மனம் உந்தி தள்ளிற்று. இல்லையெனச் சிரிப்புடன் தலையாட்டிப் பின்னர் ஆமாமென்றாள்.
அவள் கண்கள் அவள் மனத்தைக் காண்பித்துக் கொடுத்தன. வனஜா உலகைவிட்டு பிரியும்போது இவளுக்கு பன்னிரெண்டு வயதுதான் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் தன் தாயை அவள் அதிகம் தேடுவாள்.
“அதான் கிரிஜாம்மா இருக்காங்களே தேவா சார்? எப்பவோ நடந்த விஷயத்துக்கு நீங்க இப்போ ஃபீல் பண்ண அவசியம் இல்ல. நானே அம்மாவை மறந்துட்டேன். இப்படி வருஷத்துக்கு ஒன்னு ரெண்டு தடவை ஞாபகத்துக்கு வருவாங்க. அவங்களோட சந்தோஷமா வாழ்ந்ததை நினைச்சுப் பார்த்துப்பேன். கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கும். இப்போ ஐ’யம் ஓகே. நீங்க கிளம்புங்க…” என அவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்றாள்.
தேவாவிற்குப் பரிசு வாங்கிக் கொடுத்தால் கிரிஜா ஏதேனும் எண்ணிவிடக் கூடுமென்று யோசித்துத்தான் வேலுவிடம் மறைத்து எடுத்து வரக் கூறினாள். இப்போது உள்ளம் குற்றம் செய்த உணர்வில் துணுக்குற்றது.
‘சே… அங்கங்க கொலை பண்ணிட்டு எத்தனையோ பேர் நிம்மதியா இருக்காங்க. சின்னதா ஒரு கிஃப்ட் நமக்குப் பிடிச்சவங்களுக்கு அம்மாவுக்குத் தெரியாம வாங்கிக் கொடுத்தாலே மனசுல குத்துது. என்ன மனசாட்சியோ போ!’ எனத் தன்னையே கேலி செய்தபடியே அறைக்குள் சென்றடைந்தாள்.
தொடரும்…