அன்பு – 25.3

“சும்மா வச்சுப்போம். அந்த இருபது பேரோட வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு அவங்களைப் பார்த்துட்டே இருப்பீயா நீ? உனக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், வேலைன்னு அத்தனை இருக்கும்போது நீ என்னை பத்தி நினைக்கணும்னு சொல்றது எல்லாம் சரியில்ல டா. இதுதான் நடக்கணும்னு கடவுளோட பிளான். தட்ஸ் இட்!” என்று இலகு பாவனையில் கூற முயன்றவளின் குரல் வருத்தத்தில் தோய்ந்தாலும் தன்னை மீட்டுக்கொண்டு அவர்களை அமர வைத்து விளையாடினாள்.

இருவருமே அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட, “ச்சு… போங்க டா. விளையாட இன்ட்ரெஸ்டே போய்டுது உங்களால. விட்டுக் கொடுக்குறானுங்க” சுகமான அலுப்புடன் சமையலறைக்குள் சென்று தேநீரைத் தயாரித்து சுடசுட பஜ்ஜி செய்தாள். நேரம் நான்கு முப்பதாகியிருந்தது.

இன்னும் வெறும் தொண்ணூறு நிமிடங்கள் மட்டுமே மனோ தன்னுடன் இருப்பான் என மனம் வேதனையில் உழல, அமைதியாய் தேநீரை தாயரித்து எடுத்து வந்து அவர்களுக்கு கொடுத்து மனோவின் அருகே அவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

மூவரும் தேநீரை சுவைக்க சந்தனாவுக்கு அழுகை வரும் போலிருந்தது. ‘போகாத மனோ… என்னைவிட்டுப் போய்டாத மனோ!’ மனம் அரற்றத் தொடங்க, அதை தட்டி அடக்கிவிட்டு அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். விட்டுவிடக் கூடாது என்றொரு எண்ணமும் அவன் சென்று தானே ஆக வேண்டும் என்று மற்றொரு எண்ணமும் ஒரு சேர அவளை கொன்று தின்றது.

மனோ எதுவும் பேசவில்லை. விழிகளை குவளையில் பதித்திருந்தான். அவன் மற்றொரு கை அவளிடமிருந்து. தீனாவிடம் ஏதோ பேச்சுக் கொடுத்தபடியே அவ்வப்போது இவனது முகத்தைக் கண்களில் நிரப்புகிறாள் என அவனுக்குப் புரிந்ததும் மெல்ல விழிகள் கலங்கின.

குவளையைக் கழுவி வைத்துவிட்டு அறைக்குள் சென்றாள். முகத்தை நன்றாய் நீரால் அடித்துக் கழுவினாள். பதினெட்டு வருடம் அவனில்லாது வாழ்ந்துவிட்டாள் தான். ஆனால் இப்போது முடியாது என நேசம் கொண்ட மனது போராட்டம் நிகழ்த்த, கண்களில் சரசரவென நீர் வழிந்தது.

இதற்குத்தானே இந்தப் பெண் அவனைக் காணக் கூடாதென மனதை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாள். முன்பே இங்கிருந்து தான் கிளம்பியிருக்க வேண்டும். தப்பு செய்துவிட்டோம். தன்னால் ஷோபனாவின் வாழ்வில் எந்தவித இன்னல்களும் வந்துவிடக் கூடாது என அடைத்த தொண்டையை சரி செய்து கண்ணீரை துடைத்து முகம் கழுவி வெளியே வர, மனோ அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

“வா மனோ… என்ன டா, என்ன வேணும்?” எனக் கேட்டுப் புன்னகைத்தாள்.

“என்ன கேட்டாலும் செய்வீயா குட்டி?” என வேதனை நிரம்பிய குரலில் கேட்டவனை நிராசையாய்ப் பார்த்து சின்ன சிரிப்புடன் முடியாது என தலையை அசைத்தாள்.

அவளுக்கு அழ வேண்டும் போலொரு எண்ணம். இந்தப் பையன் ஏன் என்னை இத்தனைக் கஷ்டப்படுத்துகிறான் என அவனைப் பார்த்தாள். இப்படியெல்லாம் பார்த்தால் எப்படி இவனை என்னால் விட்டுக் கொடுக்க முடியும் என கண்ணில் சரசரவென நீர் வழிந்தது.

“மனோ… இப்படிலாம் பார்க்காத டா. அப்புறம் உன்னை விட்டுட்டு என்னால எங்கேயும் போக முடியாது. என்னைக் கஷ்டப்படுத்தாத நீ!” என்றாள் அழும் குரலில்.

“என்னை விட்டுப் போறதுல உனக்கு அவ்வளோ சந்தோஷமா குட்டி?” அவன் கேட்டதும், இவளுக்குப் பேச்சே இல்லை. மனோ என்ற வார்த்தையை அவள் வாழ்விலிருந்து அவளே நினைத்தால் கூட வெளியேற்ற முடியாதே. அவனை விட்டுப் பிரிவதை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அவளது உயிர்க்கண் வரை வலிப்பதை அவள் மட்டுமே அறிவாள்.

“உன்னைவிட்டு நான் போனாதான் நீ நிம்மதியா இருப்ப…” எனப் புன்னகைத்து கண்ணீரைத் துடைத்தவள், “மனோ… போகும்போதும் உன்கிட்ட காட்டலாம்னு சிலது வச்சிருக்கேன். அந்த ரூம்க்கு வா டா!” என விறுவிறுவென அருகிலுள்ள அறைக்குச் சென்று அலமாரியில் பூட்டி வைத்திருந்த பையைத் திறந்தாள். மனோ கொடுத்த புகைப்படம், கடிதம் என அதிலிருந்தது.

அந்தக் கடிதத்தை கையிலெடுத்தவள், “இந்த லெட்டர் உனக்கு ஞாபகம் இருக்கா மனோ?” எனக் கண்கள் மின்னக் கேட்டாள்.

“நீ சென்னைக்குப் போனப்புறம் எனக்கு போஸ்ட் பண்ண இல்ல…” கட்டிலில் அமர்ந்து அவனை அருகே அமர்த்தினாள்.

“ஏன் மனோ, எனக்குப் புரிய கூடாதுன்னுதானே இங்கிலீஷ்ல லெட்டர் எழுதுன நீ?” அவளின் மென்முறைப்பிற்கு அவனது உதடுகளில் விரக்தி சிரிப்பு படர்ந்தது.

“இந்த லெட்டர் நீ எழுதுனப்போ எனக்கு ஒன்னுமே புரியலை டா. அப்புறம் டிக்ஷ்னரி எல்லாம் வச்சுப் பார்த்து கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கிட்டேன். இதுல நான் வருவேன், வெயிட் பண்ணு குட்டின்னு நீ எழுதி இருக்கல்ல. அது மட்டும் நல்லா புரிஞ்சுது டா. அப்பப்போ இதை எடுத்துப் பார்த்துட்டே இருப்பேன். உவமையா எழுதியிருப்பல்ல மனோ, அதைப் படிக்க படிக்க ஆசையா இருந்துச்சு டா. ஆனாலும் லெட்டர் எங்க வீட்டுக்கு வந்தப்போ செம்ம கோபம் எனக்கு. என்னடா இப்படி எழுதி வச்சிருக்கான். நமக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச இங்கிலீஷூம் மறந்துடுமேன்னு…” எனப் புன்னகைத்தவள்,

“பட் இப்போ கொஞ்ச வருஷமா இதைத் தொடவே இல்ல நான்!” என்றாள் மீண்டும் அந்தக் கடிதத்தில் கண்களை ஓட்டி. அந்தக் கடிதத்தை வாங்கி படித்தான் மனோரஞ்சன்.

My dearest Kutty,

Forgive me, English is the palette I’ve chosen to express the depths of my love. You may be colourblind to the language of these words and lost in the translation but you’re not blind to my heart, that beats in the language that you understand perfectly.

If I were to write in Tamil, it would be like gazing into a broken mirror.The reflections of myself would be shattered, fragmented and distorted.

I know you want our connection to feel like a safe and familiar home not a grand, majestic palace of love. I understand, I respect the comfort that we have built within these walls. You won’t like it, you’ll scold me. So this is another reason why I chose to write in English.

I am missing you a lot Kutty. Wherever I turn, I could hear my name “Mano, Mano” in your voice, it might not be a literal echo or the sound I hear physically. But it seems like your voice and everything you talk about is woven into every fabric of my whole existence. It’s like a melody that plays softly in the background of my life.

Leaving you all alone twist my thoughts like a serrated knife. It’s not a scar but a constant ache of being away from you. I know you’re strong and capable but even the strongest trees need the support of the earth and the nourishment of rain. Your mother is the earth, that nourishing force in your life. So please Kutty, promise me that you won’t go alone rather be accompanied by Poorni Aunty.

Eat well, Study well. I’ve been proudly telling everyone about your good grades. In the same way, I want you to score the first mark in your twelfth and become a Doctor. When I spoke to Dheena, I told him about you. I asked him to convey my regards and concerns to you like a homing pigeons carrying messages of love and longing across the miles.

I really want to come and see you right away, Kutty. But college is still on and exams rise on the horizon like a range of mountains that I need to climb before I can reach you. Waiting for the day when I could finally close this distance that feels so vast. Until then I’ll talk to you over the phone.

error: Content is protected !!
Scroll to Top