அன்பு – 25.1

“அப்புறம் ஒவ்வொரு டைம் உங்களை ஜோடியா பார்க்கும்போது உன் முகத்துல இருக்க சந்தோஷத்தைவிட எதுவுமே பெருசா தெரியலை டா. நீ நல்லா இருக்கன்ற ஒரு காரணம் எல்லாத்தையும் மறக்க வச்சிடுச்சு மனோ. ஆசையா இருந்துச்சு டா. உன் கூட இல்லேனாலும் உன்னைக் கொஞ்ச நாள் பார்த்துட்டே இருக்கலாம்னு. நீ சந்தோஷமா வாழ்றதை கொஞ்ச நாள் தூரத்துல இருந்து பார்த்துட்டு, டாக்டர் சந்தனாவாவே நான் போய்டலாம்னு நினைச்சேன். பட், இப்படியெல்லாம் நடந்து போச்சு!” என்றாள் வருத்தம் மேவிய குரலில். மனோ பதிலே உரைக்கவில்லை‌.

“உனக்கு ஒன்னுத் தெரியுமா மனோ… நான் ரொம்ப கெட்டப் பொண்ணு டா. நேத்து உனக்குப் பழசெல்லாம் ஏன் ஞாபகம் வந்துச்சுன்னு அழுதேன். பட் இன்னைக்கு காலைல சந்தோஷமா இருந்தேன் டா. இனிமே மனோ வரவே மாட்டான்னு என்னை நானே அப்பப்போ சமாதானம் பண்ணிப்பேன்.

பட், ஒரே ஒரு நப்பாசை இருந்துச்சு டா. என்னைக்காவது ஒருநாள் உனக்கு ஞாபகம் வந்து என்னைத் தேடுவியா? நான் உனக்காக வெயிட் பண்றேன்னு தெரிஞ்சு வருவீயான்னு மனசுக்குள்ளே கேட்டுட்டே இருப்பேன் நான். இப்போ‌ உனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்து என் மனோ கூட ஒருநாள் டைம் ஸ்பென்ட் பண்ணப் போறேன்னு தெரிஞ்சதும் இந்த உலகத்துலயே அதிர்ஷ்டசாலி நான்தான்ற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன் டா.

இந்த நிமிஷம் என் மனோ என் கூட இருக்கான்ற ஒரு விஷயம் போதும் டா. நான் சந்தோஷமா இருக்கேன் மனோ. இனிமேலும் சந்தோஷமா இருப்பேன். என்னைக்கும் என்ன நினைச்சு நீ கவலைப்படக் கூடாது!” என அவன் கைகளை எடுத்து அவளது கன்னத்தில் புதைத்துக் கொண்டாள்.

‘அப்படி எந்த விதத்தில் நான் சிறந்தவன்? என்னுடைய ஒருநாள் இருப்பு இவளது வாழ்க்கை முழுவதிற்கும் போதும் என்கிறாள். நான் நான் எத்தனைப் பெரிய துர்பாக்கியசாலி. இந்த அன்பில் ஒருநாள் கூட எனக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை. அதற்கான தகுதி சிறிதும் இல்லை எனக்கு!’ என வரையறுக்க முடியாத உணர்வொன்று தொண்டையை அடைத்தது.

கரித்த கண்களை சிமிட்டியவன், “அப்படி நான் என்னடி ஸ்பெஷல். எனக்காக வாழ்க்கையே சாக்ரிபைஸ் பண்ற அளவுக்கெல்லாம் நான் வொர்த்தே இல்ல குட்டி…” என்றான் வலி நிறைந்த புன்னகையுடன்.

சிரிப்புடன் தலையை இடம்வலமாக அதை ஏற்க மாட்டேன் என அசைத்தாள். அவளைப் பொறுத்தவரை தன்னுடய மனோ மட்டுமே இந்த உலகத்திலே சிறந்தவன். அவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவோ இல்ல, விட்டுவிடவோ முடியாது.

“குட்டி… நீ… நீ எங்கேயும் போக வேணாம் டி. இங்கேயே இருக்கலாம் இல்ல. எதுக்கு எங்கேயும் போய் கஷ்டப்படணும்?” எனக் கேட்டான்.

“உன் பக்கத்துலயே இருந்து காலம் முழுக்க அழ வைக்க நினைக்கிறீயா டா. அப்போ சொன்னதுதான். நானும் மனுஷி தானே. எனக்கும் ஃபீலிங்க்ஸ் எல்லா உண்டு டா. உன் பக்கத்துல இருந்தா அது உனக்குத்தான் டா பெரிய கஷ்டம். நான் எல்லாத்தையும் கடந்துட்டேன். பட், நீ என்னை இப்படியே டெய்லி பார்த்துட்டே இருந்தா, கஷ்டப்படுவ டா. என் மனோ சிரிச்சுட்டேதான் இருக்கணுமே தவிர இப்படி அழுது வடிஞ்சுட்டு இல்ல. உனக்கு அழகே உன் முகத்துல இருக்க ஸ்மைல்தான் டா. எனக்காக ஒரு தடவை சிரி டா!” என்றாள். கண்களில் குளம் கட்டி நின்ற நீருடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தவளின் வலி அவனுக்கும் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.

“எனக்குப் ப்ராமிஸ் பண்ணிருக்கல்ல குட்டி. டெய்லி என்னைப் பார்க்க வருவேன்னு!” என அவன் சிறுவன் போல ஆதங்கமாய்க் கேட்டான். சந்தனா சிரித்தாள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவளது முகத்தில் நிறைவானப் புன்னகை.

“என் மனோ கூடதானே டா நான் இருக்கேன். அவன் எங்கேயும் போகலை. இத்தனை வருஷமா அவனோட தான் வாழ்ந்துட்டு வரேன். அவனுக்கு கொடுத்த ப்ராமிஸை என்னைக்கும் நான் மீற மாட்டேன் டா!” என்றவள், “பசிக்குது டா. சாப்பிடலாமா?” என வயிற்றைத் தடவிக் காண்பித்து அவனது பேச்சை திசை திருப்ப முயல்கிறாள் எனப் புரிந்தவன் விசிலை எடுத்துவிட்டு காமைக்கலத்தைத் திறந்து உணவைக் கிளறினான்.

“ச்சே… ரொம்ப நாள் கழிச்சு எனக்காக ஒருத்தர் குக் பண்ணி நான் பிரியாணி சாப்பிட போறேன் டா. நானே சமைச்சு நானே சாப்பிட்றது ரொம்ப போர் மனோ. இந்த மனோகருக்குப் பிரியாணியே பிடிக்காது. லட்சுமிமா முட்டை மட்டும்தான் எடுத்துப்பாங்க. அவங்களோட ஹெல்த் கண்டிஷனால நான்வெஜ் சாப்பிட்றதை விட்டுட்டாங்க டா. அதனாலயே அவங்களை பிரியாணி குக் பண்ண சொல்ல மனசு வராது டா!” என்றவள், “ஸ்மெல்லே சூப்பரா இருக்கு!” என்க, அவளைக் கனிவாய்ப் பார்த்த மனோ ஒரு கரண்டியை எடுத்து ஒரு வாய் உணவை எடுத்து ஊதி சூட்டைக் குறைத்து ஊட்டிவிட்டான்.

“மனோ… செம்ம டா. சூப்பரா பண்ணியிருக்க நீ. ஷோபி இஸ் சோ லக்கி!” என்றவள் பேச்சில் மனோவின் கைகள் சில நொடிகள் நின்று பின் இயங்கின.

“இந்த நாள் இதைவிட சந்தோஷமா இருக்காது மனோ. நீயே குக் பண்ணி நீயே ஊட்டிவிட்ற இல்ல?” எனக் கேட்டவளின் வாயை அவன் உணவுகொண்டு அடைத்தான்.

“போதும்… போதும், டைனிங் டேபிளுக்கு எடுத்துட்டு போய் சாப்பிடலாம்…” என உணவை வேறு பாத்திரத்திற்கு மாற்றியவள்,

“பாவம் தீனா. ட்ராவல் டயர்ட் போல. அசந்து தூங்குறான். அவனை எழுப்பவே மனசு வரலை டா!” என்றவள் குரலில் தாயின் வாஞ்சைக் கொட்டிக் கிடந்தது.

“நீ உக்காரு. அவனை எழுப்பிட்டு வரேன்!” என்று அவனை உசுப்பினாள்.

“தீனா… சாப்ட்டு வந்து படு டா!. பசிக்கும் இல்ல?” அவள் அவனைத் தொட்டு எழுப்ப,

“நிம்மதியா தூங்கவிடுடி. நீ செய்ற சமையலை சாப்பிட்றதுக்கு தூங்குறதே பரவாயில்லை ரதி!” என்று கோபமாய் உளறிவிட்டு அவன் போர்வையை இழுத்துப் போர்த்த, சந்தனா நறுக்கென அவனைக் கிள்ளினாள்.

அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவனுக்கு முதலில் எங்கிருக்கிறோம் என் புறத்தூண்டலே இல்லை. சில நொடிகளில் மெதுமெதுவாக சூழ்நிலை புரிந்தது. நிமிர்ந்து பார்த்தான். சந்தனா அவனை முறைத்தாள்.

“உன் வொய்ஃப் கஷ்டப்பட்டு உனக்காக சமைச்சா, இப்படித்தான் பேசுவீயா நீ?” என்றவள், “ஒழுங்கா வந்து சாப்பிடு டா…” என நடக்க, இவன் புரியாது விழித்தான்.

தூக்கத்திலிருந்து இந்தப் பெண் எழுப்பிவிட்டாளே என்ற கடுப்புதான். உறங்கும்போது தான் இந்த கசப்பான நிகழ்காலத்திலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருந்தான். இந்தப் பெண் கெடுத்து விட்டாளே என்ற முணுமுணுப்புடன் எழுந்து சென்றான். தான் சாப்பிட வரவில்லை என்றால் இருவரும் உண்ணாவிரதப் போராட்டம் நிகழ்த்த வாய்ப்புண்டு என அவன் அறிவான்.

சந்தனா மூவருக்கும் பரிமாற தீனா அமைதியாய் உண்டான். மனோவின் கரங்கள் சந்தனாவை நோக்கி நீண்டன. “நீ சாப்பிடு மனோ… நான் சாப்பிட்டுக்கிறேன்!” என்றாள் அன்பாய்.

அவன் கையைப் பின்னிழுக்க விழையாது அவளையே பார்க்க, இரண்டு வாய்கள் அவனிடம் உண்டவள், தானும் அவனுக்கு ஊட்டினாள். அப்படியே வலதுபுறம் கையை உயர்த்தி தீனாவிற்கும் ஊட்டிவிட்டாள். மூவரும் சாப்பிட்டு முடிய, தீனாவின் அலைபேசி இசைத்தது. காணொளி அழைப்பு வீட்டிலிருந்து வந்தது. ஒரு நொடி தயங்கியவன், அதை ஏற்றான்.

“அப்பா… எப்போ வருவீங்க?” குழந்தையின் குரல் ஒலித்ததும் அவன் முகம் கனிந்து போக, சந்தனா திரும்பிப் பார்த்தாள்.

“என் பொண்ணு…” அவன் இவளிடம் உதட்டை அசைத்துவிட்டு, “நாளைக்கு வரேன் டா தங்கம்…” என்றான்.

“ப்பா… அம்மா உங்களை ரொம்ப மிஸ் பண்றாங்களாம். சீக்கிரம் வாங்க!” எனக் குழந்தையின் குரலும்,

error: Content is protected !!
Scroll to Top