“தீனா, அவருக்கும் உனக்கும் சேர்த்துதான். நேத்து நடந்தது வாஸ் அன் ஆக்ஸிடென்ட். யாரும் எக்ஸ்பெக்ட் பண்ணலை. அதை மறந்துடுங்க. அண்ட் ஷோபிக்கு இதெல்லாம் தெரிய வேணாம். நான் ரெக்வஸ்டா தான் கேட்குறேன். அவங்களாவது நிம்மதியா, சந்தோஷமா ரஞ்சனோட வாழட்டும்.
யார் வாழ்க்கையிலயும் என்னால பிரச்சனை வரக் கூடாது. அதுவும் ஷோபி இஸ் சோ ஸ்வீட். அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்களோட உலகம் ஹஸ்பண்ட் ரஞ்சன், பையன் அஷ்வின்னு அழகான கூடு. அதுல அவ்வளோ ஆசையா அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. என்னைக்கோ நடந்ததை இப்போ போய் அவங்ககிட்டே சொல்லி கஷ்டப்படுத்த வேண்டாம் தீனா. ஷீ டிசர்வ்ஸ் மனோரஞ்சன்!” என்றாள்.
குரல் இடறினாலும் அதை நூதனமானப் புன்னகையில் மறைத்துவிட்டாள். உண்மை கசந்தாலும் அது பொய்யாகிடாது என்றொரு வலி நிறைந்த குரலில் அவள் பேச, கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனம் கனத்தது.
“மோர் ஓவர் ரஞ்சன் ரொம்ப குடுத்து வச்சவரு. ஷோபியோட அன்பு அவ்வளோ தூய்மையானது. அவங்க பேசும்போது கூட ரஞ்சன், ரஞ்சன்னு நூறு தடவை சொல்லுவாங்க. தட் மச் ஷி லவ்ஸ் ஹெர் ஹஸ்பண்ட்.
இதை சொல்ல கூடாது. கம்பேரிஷன் தப்புதான். பட் இருந்தாலும் சொல்றேன். நான் அவங்க இடத்துல இருக்கதைவிட, ஷோபிதான் அந்த இடத்துக்கு ரொம்ப பொருத்தமானவங்க. அவங்களைவிட யாராலும் அவரை இந்த அளவுக்கு நேசிக்க முடியாது. பார்த்துக்கவும் முடியாதுன்றதை இந்த மூனு நாலு மாசத்துல நான் கூட இருந்து பார்த்ததை வச்சு சொல்றேன்!” என்றாள் அதிராமல் புன்னகைத்து.
மனோவிடம் பதிலில்லை. முகம் முழுவதும் விரக்தி பரவியிருந்தது போல. மெதுவாய் தலையைக் குனிந்து விழிகளை சிமிட்டிக் கொண்டான். கைகள் அன்னிச்சையாய் தலையைத் தாங்கின. தூங்காதது அழுதது பழைய ஞாபகங்கள் மீட்டது என அவன் உடல் மிகவும் சோர்ந்திருந்தது.
தீனாவிடம் பார்வை இருந்தாலும் சந்தனாவுக்கு உள்ளே பதறத்தான் செய்தது. சில நொடிகள் தயங்கியவள், “ரஞ்சன், உங்களுக்கு என்ன பண்ணுது?” எனக் கேட்டாள். என்ன முயன்றும் குரலில் இருந்த தவிப்பை அவளால் மறைக்க முடியவில்லை. இத்தனை நேரம் பேச்சிலிருந்த தெளிவு இந்த இரண்டு வார்த்தைகளில் அருகியிருந்தது.
“தலை ரொம்ப வலிக்குது குட்டி. ஒரு காஃபி போட்டுத் தர்றீயா?” எனக் கேட்டான்.
நொடியில் எழுந்தவள், “டூ மினிட்ஸ்… வரேன் இருங்க…” என விரைவாக எழுந்து சென்று அவனுக்கொரு குளம்பியைத் தயாரித்து ஒரு மாத்திரையும் எடுத்து வந்து கொடுத்தாள்.
“இதைப் போடுங்க ரஞ்சன். யூ வில் ஃபீல் பெட்டர்!” என்றாள் மருத்துவராய். மாத்திரையை விழுங்கியவன், மெதுவாய் குளம்பியைப் பருகி முடித்தான்.
அவள் முகத்தை நிமிர்ந்து மனோ பார்க்கவும், “வேற எதுவும் வேணுமா ரஞ்சன். அது, ரொம்ப நீங்க ஸ்ட்ரெஸ் பண்ணாதீங்க. பழைய மெமரீஸ் ரீகெய்ன் ஆகிடுச்சுல்ல. அதனால உங்களுக்குத் தலை வலிக்கலாம். எதையும் யோசிக்காதீங்க!” என்றாள் மெதுவாய். மருத்துவராகப் பேசினாலும் அவன் மீதிருந்த பிரியம்தான் வார்த்தைகளில் நிரம்பி இருந்தது.
“குட்டி, என் பக்கத்துல வந்து உக்காரு…” என்றான் மனோரஞ்சன்.
தலையை இடம்வலமாக அசைத்தவள், “ரஞ்சன், நீங்க வந்ததும் சொல்லலாம்னு நினைச்சேன். பட், அப்போ அது, வந்ததும் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடக் கூடாதுன்னு சொல்லலை. நீங்க இப்போ மனோரஞ்சன், ஷோபனாவோட ஹஸ்பண்ட், அஷ்வினோட அப்பா.
அதை கொஞ்சம் மனசுல பதிய வைங்க. நீங்க ஷோபியோட ஹஸ்பண்டா என்னைப் பார்க்கலாம், பேசலாம். பட், மனோவா என்னை மீட் பண்ண ட்ரை பண்ணாதீங்க. ப்ளீஸ், அதுதான் நம்ப ரெண்டு பேருக்கும் நல்லதும் கூட. முன்னாடி ஸ்ட்ரேஞ்சர்ஸா இருந்தோம் இல்ல. அதே மாதிரி கூட என்னைப் பார்த்து க்ராஸ் பண்ணிப் போய்டுங்க. அதுதான் என்னோட விருப்பம்!” என்றாள். வலித்தாலும் கூறிவிட்டாள். கேட்டிருந்தவனின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“குட்டி… லூசா டி நீ. இப்படியெல்லாம் பேசாத. நான், நாங்க எப்பவும் உன்கூட இருப்போம்!” தீனா ஆதங்கமாய்ப் பேசினான்.
அவனை அன்பாய்ப் பார்த்தவள், “தேங்க்ஸ் தீனா. எனக்குன்னு யாரும் இல்லன்னு நான் ஃபீல் பண்ண மாட்டேன். கண்டிப்பா இனிமே எதுனாலும் உன்கிட்ட ஷேர் பண்றேன்!” என அவனருகே சென்று அவன் கையைப் பிடித்தாள். இத்தனை வருடங்கள் கடந்தும் தன் மீதான அவனது அன்பில் அவளது முகம் கனிந்து போனது.
“தீனா, நான் அவர்கிட்டேதான் சொன்னேன் டா. நீ எப்பவும் போல வரலாம், போகலாம். பட், அவர் விஷயம் வேற டா. நான் வேற சும்மா இல்லாம நேத்து அழ வேற செஞ்சுட்டேன். என்னைப் பார்க்கும்போது எல்லாம் அவருக்கு கில்டினெஸ் வரும். அதுக்காக அவரைப் பார்க்க வர வேண்டாம்னு சொன்னேன். அதுவும் இல்லாம பிராக்டிகலா யோசிச்சு பார்த்தா, நான் சொல்றதுதான் டா சரி. அவர் இனிமே இங்க வரவோ, என்னைப் பார்க்கவோ முயற்சி பண்ண கூடாது. ஷோபியோட அவர் சந்தோஷமா வாழட்டும் டா!” என்றாள் புன்னகைத்து. மனோவுக்கு கோபம் வந்தது.
விறுவிறுவென எழுந்து வந்து தீனாவிடமிருந்து அவளது கையைப் பிடித்திழுத்தவன், தன் கரத்தை அழுத்தமாக அவள் கையுடன் சேர்த்தான். அவன் வரலாம், இவளைப் பார்க்கலாம். ஆனால், நான் வரக்கூடாதா எனக் கோபமாய் வந்தது மனோவுக்கு. அவர், இவர், ரஞ்சன் என்ற பன்மை விளிப்பு அவனுக்கு வேப்பங்காயாய் கசந்தது.
அவனது செய்கையில் சந்தனாவின் முகத்தில் மென்னகை படர்ந்தது. சிறுவயதில் மனோ இப்படித்தான் செய்வான் என எண்ணிப் புன்னகைத்தவள், “ரஞ்சன், கையை விடுங்க. ப்ளீஸ், வலிக்குது…” என்றாள்.
“மனோன்னு கூப்பிடு குட்டி…” என்றவன் குரல் வேதனை ததும்பி வர, இவளது உறுதியை அசைத்துப் பார்த்தது போல.
“மனோரஞ்சன், ப்ளீஸ் கையை விடுங்க. நிஜமா வலிக்குது!” என்றாள் அவனிடமிருந்து பிரிந்து. அவளது ஒதுக்கத்தில் இவனுள்ளே ஒரு வகை வலி பரவி அடங்கியது.
“குட்டி… இப்படியெல்லாம் பேசாத. அவனை ரொம்ப கஷ்டப்படுத்துற நீ. பாவம் மனோ!” தீனா நண்பனுக்காகப் பேச, சந்தனா புன்னகைத்தாள்.
“அதான் தீனா. அவர் என் முன்னாடி வந்தா, அவருக்குத்தான் கஷ்டம். அவர் கஷ்டப்பட்டா, ஷோபனா கவலைப்படுவாங்க டா. அதனால எனக்கு கில்டா இருக்கும். உனக்கு ஒன்னுத் தெரியுமா? நீ வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் ரஞ்சன் முகத்துல எப்பவுமே ஒரு ஸ்மைல் இருக்கும் டா. ஷோபியை பார்க்கும்போதே அவரோட கண்ணுல அன்பு தெரியும். அவங்களையும் அஷ்வினையும் அவ்வளோ அனுசரணையா, அக்கறையா பார்த்துப்பாரு டா. எனக்கு பார்க்க ஆச்சர்யமாக இருக்கும்… மனோ ரொம்ப பொறுப்பாகிட்டான்னு. சாரி, ரஞ்சன் அவரோட குடும்பத்தை அவ்வளோ நேசிக்கிறாரு டா…” என்றவள்,