அன்பு 12.2

“எத்தனை கலர் வாங்குனாலும் அவருக்கு வொய்ட் அண்ட் ரெட் மேலதான் இஷ்டம். டெய்லி எல்லா செடிக்கும் தண்ணி ஊத்தும்போது இதுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப்பாரு. நான் கூட ஏன் இந்த பாரபட்சம்னு கேட்டு சண்டை போட்டிருக்கேன்!” என்றவளின் முகம் கணவனின் செய்கையில் கனிந்து போயிருந்தது. அவர்களுக்கிடையேயான செல்ல சண்டைகளில் இதுவும் பிரதானமான ஒன்றாகிற்றே.

“ஷோபி… இந்த வொய்ட் ரோஸ் நீங்களே எடுத்துக்கோங்க…” சந்தனா வெள்ளை நிற ரோஜா தொட்டியை இவளிடம் எடுத்து நீட்டினாள்.

“நோ… வேணாம் சந்தனா. ஆல்ரெடி எங்க வீட்லயே நிறைய ரோஸ் இருக்கு. இதை நீங்களே வச்சுக்கோங்க…” என்றாள் மறுப்பாய்.

“இல்ல ஷோபி, இப்போ எல்லாம் செடிக்கு தண்ணி ஊத்த மறந்துடுறேன். சம்டைம்ஸ் வாடிப் போய்டுது. என்னைவிட இந்த வொய்ட் ரோஸை நீங்க நல்லா பார்த்துப்பீங்க”

“அப்படியா சொல்றீங்க? ஹம்ம், சரி நானே எடுத்துட்டுப் போறேன்…” என அதை வாங்கிக் கொண்டவள், “ரெட் ரோஸ்க்கு தண்ணி வேணாமா டாக்டர்?” எனக் குறும்பாய் கேட்டாள்.

“ரெட் ரோஸ் இங்கேயே இருக்கட்டும் ஷோபி. அதுக்கு தண்ணி வேணும்னா, நானே ஊத்திக்கிறேன். வொய்ட் ரோஸ் உங்ககிட்டதான் இருக்கணும்…” எனப் புன்னகைத்தாள்.

ஷோபி சில நொடிகள் அவளது பேச்சு புரியாது விழித்துப் பின், “சந்தனா, இந்த வீக்கெண்ட் ஷாப்பிங் போகலாமா? உங்களுக்கு கம்பர்டபிளா இருந்தா மட்டும் போகலாம். கட்டாயம் இல்ல…” தயங்கிபடியே அவளை அழைத்தாள்.

“ஷ்யூர் ஷோபி, நானும் ஷாப்பிங் போகணும்னு நினைச்சேன். போய்ட்டு வரலாம்…” என்றாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு மற்றவள் நகர, லட்சுமி சந்தனாவை ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.

“என்ன லட்சுமி மா, என்னையே பார்த்துட்டு இருக்கீங்க?” இவள் வினவ,

“இல்ல சந்துமா, அந்த வெள்ளை ரோஜா செடி உனக்கு எவ்வளோ இஷ்டம். அதை இவ்வளோ நாள் பொத்தி பொத்தி வச்சிருந்த. மனோவைக் கூடத் தொட விட மாட்ட. இப்போ அந்தப் பொண்ணு ஷோபனாகிட்டே தூக்கி கொடுத்துட்டுடியேன்னு பார்க்குறேன் டா…” என்றார்.

“லட்சுமா, அந்த வொய்ட் ரோஸ் இங்க இருந்ததை விட ஷோபனா வீட்ல சந்தோஷமா இருக்கும். நான் அதை நேசிச்சதை விட, அவங்க ரொம்ப நேசிப்பாங்க, நல்லா பார்த்துப்பாங்க. அதனால வொய்ட் ரோஸ் அங்க இருக்கதுதான் சரி…” எனப் புன்னகைத்துக் கடந்தவளை லட்சுமி புரியாது பார்த்தார்.

‘என்னவானது இந்தப் பிள்ளைக்கு?’ என அவர் மனம் கவலை கொண்டது.

சோம்பேறித் தனங்களை உதறிவிட்டு குளித்து முடித்து மருத்துவமனைக்குப் புறப்பட்டாள் சந்தனா. மறக்காமல் அந்த பணிமாறுதல் கடிதத்தில் கையெழுத்திட்டு, அதையும் எடுத்துக் கொண்டாள்.

“வாங்க சந்தனா… இப்போ ஹெல்த் எப்படி இருக்கு?” தலைமை மருத்துவர் வினவ,

“யெஸ் மேடம், நல்லா இருக்கேன்…” என அவர் கை காண்பித்த இருக்கையில் அமர்ந்தாள்.

பின்னர் தன் கைப்பையில் இருந்து கடிதத்தை அவர் முன்பு நீட்டியவள், “ட்ரான்ஸ்பர் லெட்டர் அக்செப்ட் பண்ணிட்டேன் மேடம். இன்னும் டூ வீக்ஸ்ல நான் திருச்சிக்கு ஷிப்ட் ஆகிட்றேன்…” என்றாள்.

“ஓகே சந்தனா, நான் இன்பார்ம் பண்ணிட்றேன்…” என அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டவர், “உங்களை இந்த ஹாஸ்பிடல் ரொம்ப மிஸ் பண்ணும் சந்தனா. உங்களை மாதிரி டெடிகேடட் ஸ்டாஃப் இனிமேல் கிடைக்க மாட்டாங்க..” என்றார். அவர் குரலில் உண்மையான வருத்தமிருந்தது.

“எல்லாருக்கும் ரீப்ளேஸ்மெண்ட் இருக்கும் மேடம். என்னைவிட பெஸ்டா ஒருத்தர் இங்க வருவாங்க பாருங்க. அப்பறம் நீங்களே என்னை மறந்துடுவீங்க…” என சின்ன சிரிப்புடன் வெளியேறினாள்.


திங்கட்கிழமை காலை சந்தனா, பூரணி தலையைப் பின்னி விட்டதும், “ம்மா.‌.. ரோஜா வச்சுவிடு மா…” என ஆசையாய் வெள்ளை ரோஜவை நீட்டினாள். தொட்டியில் நான்கு ரோஜாக்கள் இருக்க, ஒன்றை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

மனோவிடம் காண்பிக்க வேண்டும் என்று மனம் முழுவதும் அவா கொட்டிக் கிடந்தது. சதா வீட்டிற்குச் சென்றதும், “மனோ… வெள்ளை ரோஸ் எப்படி இருக்கு? நல்லா இருக்கா எனக்கு?” ஆசையாய்க் கேட்டாள்.

“சூப்பரா இருக்கு குட்டி. இனிமே டெய்லி ரோஸ் வச்சுக்கோ நீ!” அவனும் ஆர்ப்பாட்டமாய்க் கூறினான்.

“தேங்க்ஸ் மனோ. இன்னொரு ரோஸ் செடி மேஜிக் போட்டு வர வைக்குறீயா நீ? இதுல நாலு ரோஸ்தானே இருக்கு. எப்படி டெய்லி வச்சுட்டு வர முடியும்?” என யோசனையாகக் கேட்டாள் சந்தனா.

“குட்டி… ஒன் டைம்தான் மேஜிக் பண்ண முடியும். மறுபடியும் பண்ணா, அது பலிக்காது. ஒரு மாசம் கழிச்சுதான் பண்ண முடியும்.‌‌..” என அப்போதைக்கு வாய்க்கு வந்தப் பொய்யைக் கூறிவிட்டான்.

“அப்படியா… அப்போ சரி மனோ, நீ அடுத்த மாசம் மேஜிக் பண்ணி எனக்கு ரோஸ் குடு…” என அவள் சமாதானமாகிவிட்டாள்.

“மனோ… தக்காளி சோறு கொண்டு வந்திருக்கேன். உனக்கு வேணுமா?” இவள் அவனிடம் கேட்டவாறே டப்பாவை வெளியே எடுத்து வைத்தாள்.

“இல்ல குட்டி… உனக்கு மதியத்துக்கு வேணும்ல. நான் சாப்ட்டா, அப்புறம் உனக்கு பசிக்குமே!”

“மனோ, அம்மா இன்னைக்கு ரெண்டு டப்பா சோறு குடுத்துவிட்டாங்க. நீ ஒன்னு எடுத்துக்கோ…” என அவள் நீட்ட, இவன் அதை வாங்கி உண்டான்.

“என்ன குட்டி, உங்க வீட்டு சோறு இவ்வளோ பெருசா இருக்கு. எங்க வீட்டுல சின்னதா தான் இருக்கும்…” மனோ வினவ, சந்தனா தன் தாயிடம் ஏற்கனவே இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாள். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களின் வீட்டு சோறு சிறிதாக இருக்கிறதே என வினவ, அவர் பதிலளித்திருந்தார்.

அதை நினைவு கூர்ந்தவள், “மனோ… நான் சின்னபிள்ளையா இருக்கேன் இல்ல. பெரிய சோறு சாப்ட்டாதான் பெருசா வளருவேனாம். சின்ன அரிசி சோறு சாப்ட்டா இப்படியே இருந்துடுவேன்னு அம்மாதான் சொன்னாங்க…” எனப் பாவனையாய்க் கூறினாள் இவள்.

error: Content is protected !!
Scroll to Top