Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
"நான் என்னோட நினைவுகளை பயன்படுத்தி கடைசி முறை இழவு எப்படி நடந்ததோ அதே மாறி பண்ண போறேன்...அதே செயல்கள்....அதே பேச்சு வார்த்தைகள்...."என முகில் மனதில் நினைத்து கொண்டே போன முறை செய்த அனைத்து செயல்களும் செய்கிறான்.
"மித்ரா...உன்னை மாதிரியே இருக்க பொண்ணை நீ பார்த்து இருக்கியா...?? கவனமா இரு...அந்த கொடிய மிருகத்தை நிழல்ன்னு சொல்லுவாங்க...நீ அதை பார்த்தா அதுகிட்ட இருந்து ஓடி வந்திரு...சரியா...??"என இழவு வீட்டில் மித்ராவிடம் முகில் கூறுகிறான்.
"நான் எல்லாத்தையும் மறுபடியும் பண்ணேன்...நான் நினைச்ச மாதிரியே மித்ரா என்னை ஒன்னும் பண்ணல..."என முகில் மனதினுள் நினைத்தபடி சந்தீப்பின் உடலை ஒரு மணிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
"சந்தீப் உடலை ஒரு மணிக்கு அனுப்பியாச்சு...எல்லாம் சரியா போகுது..."என மனதினுள் நினைத்து கொண்டு இருந்த முகிலிடம்,
"ஹே...முகில்...மித்ரா நிழலை பார்த்ததா வள்ளி உன்கிட்ட சொன்னாளா...??" என மித்ராவின் தாய் மாலதி கேட்கிறாள்.
"ஆமா...வள்ளி இப்படித்தான்..."என முகில் கீழே பார்க்க, ஒரு எறும்பு ஒன்று மாலதி மற்றும் மாலதியின் கணவரின் நிழலின் மீது ஊர்ந்து செல்ல அந்த எறும்பின் மீது நிழல் விழுகவில்லை.
அதை கவனித்த முகில் அதிர்ச்சியுடன் நிமிர,"முகில்..."என மாலதியின் நிழல் கேட்க,
"ஹே...சரி...வள்ளி இப்படித்தான்..அவ சின்ன பொண்ணா இருக்கும் போது அவளோட பாட்டி இதை பத்தி சொல்லிருக்காங்க...சாரி...வித்தியாசமா சொன்னதுக்கு சாரி..."என முகில் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் கூறுகிறான்.
"ம்ம்...சரி...மாலதி...வா போலாம்..."என மாலதியின் கணவர் கூற, இருவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
"இப்படி நடக்க கூடாது...மித்ரா குடும்பத்துல இருக்க மூணு பேருமே நிழல்கள்...அப்போ உண்மையான நிழல் ஏற்கனவே... ஷோ....நீ இப்போ எங்க இருக்கே கண்மணி...??நம்மகிட்ட இப்போ நேரம் இல்லை..."என முகில் யோசித்து கொண்டிருக்க, அவனின் பின்னே வந்த வள்ளி,
"முகில்.... ஆர் யூ ஓகே...??"என கேட்கிறாள்.
"வள்ளி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா...? நீ காலேஜ் யூனிஃபார்ம் நாளைக்கு பொடுவியா...?"
"என்ன கேள்வி இது...??"என வள்ளி கேட்க,
"நான் இரண்டாவது லூப்ல இருக்கும் போது வள்ளி காலேஜ் யூனிஃபார்ம் போட்டுட்டு வந்திருந்தா...ஆனால் காலைல வள்ளி யூனிஃபார்ம் போடலை....அவ முன்னாடி போட்டிருப்பா போல..."என முகில் யோசிக்க,
"நான் நேத்து போட்டிருந்தேன்...காலைல மாத்திட்டேன்...அதுனால என்ன...??"என வள்ளி கேட்கிறாள்.
"வள்ளி நேத்து எங்கயோ பார்த்து நிழல் அவளை காபி பண்ணிருக்கு...அதை என்னால மாத்த முடியாது...அதை நான் எப்படியாவது கொன்னாகனும்...அப்போதான் வள்ளியை காப்பாத்த முடியும்..."என முகில் மனதினுள் நினைத்து கொண்டிருக்கிறான்.
அதே சமயம் வள்ளி கல்லூரி உடை அணிந்தபடி ஒரு ஊஞ்சலில் ஆட அவளின் நிழலில் இருந்து ஒரு கருப்பு உருவம் வெளியே வருகிறது.
"அப்போ உங்களுக்கும் இதை பத்தி தெரியாது....அப்பா...??"வள்ளியின் நிழல் கேட்க, அவளின் நிழலில் இருந்து வெளியே வந்த நிழல் வரதனின் உருவத்தை எடுக்கிறது.
"நீ இப்போ எங்க போயிருக்கேண்ணு தெரியணும்...அண்ணா..."என வானத்தை பார்த்து கூறுகிறாள்.
" இப்போ மணி 11:30 சந்தீப் உடல் நெருப்பில் விட்டாச்சு...அதுக்கு பின்னாடி எல்லாரும் சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சாச்சு...எனக்கு ரெண்டு கேள்வி கேட்டாகனும்...ஒன்னு இந்த நிழல்கள் பத்தி தெரியுமா...??" என முகில் மனதினுள் நினைத்து கொண்டே கேட்க,
"இது பாட்டி சொன்ன கட்டுக்கதை..."என போலீஸ் விஜய் கூற,
"இதை யாரோ என்கிட்ட முன்னாடி கேட்டாங்க.."என வரதன் யோசிக்க,
"ஆப்கோர்ஸ்...என் தாத்தாவோட அப்பாதான் அதாவது என் கொள்ளு தாத்தாதான் அதுக்கு அப்படி பேர் வச்சது..."என ராம் கூற,
"இது உண்மை...அது ஒரு மன வியாதி ஒரு சில பேருக்கு வரும்..."என டாக்டர் விமல் கூறுகிறார்.
"கேள்வி இரண்டு...யாராச்சும் கண்ணாடி போட்ட பொண்ணை பார்த்தீங்களா...??"என முகில் கேட்க,
"ஹே...நான் பார்த்தேன்...அந்த பொண்ணை...செம்ம அழகு..."என போலீஸ் விஜய் கூற,
"நீ...கண்மணி பத்தி கேட்கற....சரியா...??"என ராம் கேட்க,
"எனக்கு அதெல்லாம் தெரியாது..."என டாக்டர் விமல் கூற,
"முகில்...உனக்கு கண்மணி பத்தி தெரியுமா...?? அவ நம்ம ஹோட்டல்கு அடிக்கடி வந்திருக்கா..."என வரதன் கூற,
"என்னது நம்ம ஹோட்டல்கா...?? எப்படி எனக்கு தெரியாம போச்சு..."என முகில் கேட்க,
"இங்க பாரு முகில்...இதுதான் கண்மணி ஃபோன் நம்பர்...நான் கேட்டப்போ குடுத்தா..."என ஒரு காகிதத்தை நீட்டுகிறார் வரதன்.
"கண்மணியின் நம்பர்...???"என முகில் வாங்கி பார்க்க அதில் எங்களுக்கு பதிலாக எழுத்துக்கள் இருக்கின்றன.
"இது என்ன கோட் வேர்ட் போல...."என முகில் பார்க்க,
"இரு முகில் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்..."என வரதன் எழுந்து நடந்து செல்கிறார்.
வரதன் கழிவறையின் உள்ளே நடந்து சென்று கதவை மூட, இன்னொருவர் உள்ளே நுழையும் சப்தம் கேட்கிறது. உள்ளே நுழைந்த உருவம் தன் கையில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்து அவர் நுழைந்த கழிவறையின் மேல் ஒட்டுகிறது.
"அவுட் ஆப் ஆர்டர்..."என அதில் எழுதி இருந்தது.
முகில் தனது கைபேசியில் தன் கையில் உள்ள எழுத்துக்களை தமிழ் எண்ணுருக்களாக மாற்றி அழைக்க, மறுபுறம் அவனது அழைப்பை எடுக்கிறார் ஊர் பெரியவர் ராமு.
"ஹலோ...கண்மணி....???"என முகில் கூற,
"யார் நீங்க...??"என ராமு கூறுகிறார்.
"ம்ம்...நான் முகில்..."என கூற, "இது கண்மணி நம்பர் இல்லை..."என மனதினில் நினைத்தபடி,"நீங்க..??"என கேட்க,
"அப்படியா...நான் நினைத்ததை விட ரொம்ப வேகமா போகுது...நான் ராமு...கண்மணி இப்போ என்கூடதான் இருக்கா...இவ நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது...??"
"கண்மணி அவங்க நம்பரை அப்பா வரதன் கிட்ட கோட்ல குடுத்தாங்க..."
"நீ அதை கண்டுபிடிச்சியா...??"
"ஆமா....கண்மணி அவங்க புக்ல தமிழ் எண்ணுருக்கள் பத்தி நிறைய எழுதி இருப்பாங்க..."
"ம்ம்....நீ இப்போ ஹோட்டல் இருக்கியா..??"
"ஆமா..."
"அங்க இருந்து கிளம்பி ஹால் வா...தனியா....நான் உனக்கு அப்புறம் கூப்பிடறேன்..."என கூறி அழைப்பை துண்டிக்கிறார் ராமு.
"ஹலோ...ஹலோ..."என முகில் தன் கைபேசியை பார்க்க அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
வரதன் கழிவறையில் நுழைந்து திரும்பி பார்க்க அவரின் முகம் திடீரென லேசாக மாறி அது அவரின் நிழல் என்பதை காட்டியது.
கழிவறையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதத்தை பார்த்தபடி பக்கத்தில் உள்ள கழிவறையில் சென்று கதவை தட்டுகிறது வரதனின் நிழல்.
கதவு திறந்து கொள்ள,"ம்ம்..கதவு திறந்துதான் இருக்கும் போல..."என நிழல் உள்ளே பார்க்க உள்ளே கையில் பெரிய சுத்தியுடன் மணி நின்று கொண்டு இருக்கிறாள்.
"என்ன இது..."என அந்த நிழல் அதிர்ச்சியில் பார்க்க கையில் உள்ள சுத்தியை வைத்து அந்த நிழலின் நிழலை அடிக்கிறாள் மணி.
முகிலின் கைபேசிக்கு அழைப்பு வர அதை எடுத்த முகில்,"ஹலோ...ராமு சார்...நான் வந்துட்டேன்..."என முகில் இழவு ஹாலில் நின்று கொண்டு பேசுகிறான்.
"இப்போ நான் என்ன பண்றது...??"என முகில் கேட்க,
"நகராத...அப்படியே இரு...நீ இருக்க இடத்திலேயே..."என ராமு கூறி கொண்டே தன் கையில் உள்ள பெரிய துப்பாக்கியில் முகிலை குறி பார்த்தபடி மலை மீது இருக்கிறார்.
"இது சீக்கிரம் முடிய போகுது..."என அவர் கூறி கொண்டே தன் கையில் உள்ள துப்பாக்கியை சுட்டி தோட்டாவை செலுத்துகிறார். பாய்ந்து வந்த அந்த தோட்டா முகில் காலின் கீழ் உள்ள நிழலை துளைக்கிறது.
"நேரம்...இடம்...நீ வரதன் தனியா இருக்கும் போது அவரை தாக்க வருவே...நான் பதினேழு சூழ்நிலையை நினைத்து வச்சிருந்தேன்...ஆனா நீ பாத்ரூம் சூஸ் பண்ணிருக்கே..."என மணி கூற,
"நீ ஏன் இங்க இருக்கே....இது பசங்க டாய்லெட்..."என நிழல் கூற, நிழலின் உருவம் வெடித்து சிதறி காற்றில் கரைந்து போகிறது.
"இது சாதாரணம்..."என மணி கூற,
"என்ன சத்தம் இது வெளிய...இங்க என்ன நடக்குது..."என கழிவறையில் உள்ளே உள்ள வரதன் யோசிக்கிறார்.
சுத்தியலை தனது பையில் எடுத்து போட்டு கொண்டு வெளியே வர தன் கைபேசியை எடுத்து பார்க்கிறாள் கண்மணி.
அதில் அழைப்பு வர "ராமு..."என திரை காட்டியது.
அதே சமயம்,"நான் கண்மணியை சந்திக்க போறேன்..."என மனதில் நினைத்துக் கொண்டு ராமுவுடன் முகில் நடந்து சென்று கொண்டிருக்கிறான்.
"நீ திரும்ப என்னை பார்த்தா...உன் பேரை என்கிட்ட சொல்லு...நான் உன்னை காப்பாத்தரேன்..."என மணி முன்பு கூறியது நினைவிற்கு வருகிறது.
"நம்ம முன்னாடியே ஒன்னா வேலை செய்திருந்தா ஒரு வேளை வள்ளியின் நிழலை கொண்ணிருக்கலாம்... இவங்களுக்கு எப்படி நிழல் பத்தி தெரிந்தது...என் மண்டைக்குள்ள நிறைய கேள்வி ஓடிட்டு இருக்கு..."என முகில் மனதினுள் நினைத்து கொண்டே,
"இதுதான் நம்ம முதல் தடவை சந்திக்கிறது..??"என ராமு கேட்க,
"ஆமா...உங்களுக்கு நிழல்கள் பத்தி தெரியுமா...??"என முகில் கேட்க,
"நான் உனக்கு பதில் சொல்லணும்னா முதல்ல எனக்கு பதில் சொல்லு...அந்த கோட் பத்தி உனக்கு தெரியணும்னா...உனக்கு ரெண்டு விஷயம் தெரிஞ்சு இருக்கணும்...ஒன்னு அந்த புத்தகத்தை எழுதுனது கண்மணி...ஆனால் கண்மணி யார்கிட்டேயும் இது பத்தி சொன்னது இல்ல...அதுனால இப்படி அந்த விஷயம் தெரிந்தது ஒரே ஒரு ஆளா இருக்கணும் அதுதான் கண்மணியின் நிழல்..."என ராமு கூற,
"ஆனால் நீ ஒரு மனிதன்..."என கண்மணியின் குரல் கேட்க முகில் நிமிர்ந்து பார்க்க மணி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாக தொங்கி கொண்டு இருக்கிறாள்.
"கண்மணி..."என முகில் பார்த்து கொண்டு தன் கையில் உள்ள அவள் எழுதிய புத்தகத்தை எடுத்து நீட்டி,"எனக்கு உங்க ஆட்டோகிராப் வேணும்...என் பேர் முகில்...என் பேரும் இதுல எழுதி குடுங்க...அதாவது...என் பேர் முகில்...நான் உங்க பெரிய ஃபேன்...என்கிட்ட உங்க எல்லா புக்ஸ் இருக்கு..."என முகில் கூறுகிறான்.
"நீ சொன்ன மாதிரியே உன்கிட்ட என் பேர் சொல்லிட்டேன்...இப்போ என்ன நடக்க போகுதுன்னு தெரியல...சரி இப்போ என்ன நடக்க போகுது..."என முகில் மனதினுள் நினைக்க,
"இது அதுக்கான நேரம் இல்லை...நீ சாதாரணமான ஆளு மாதிரி தெரியல...உண்மை கற்பனையை விட வித்தியாசமானது என சொல்லுவாங்க...எனக்கு இந்த ஃபேண்டஸி புடிக்காது...ஆனால் இப்போ இருக்க எல்லா சூழ்நிலையும் வச்சு பார்க்கும் போது...நான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன்..."என கண்மணி அவன் புத்த்கத்தில் கையெழுத்திட்டு அவனிடம் நீட்டுகிறாள்.
"தாங்க்ஸ்.."என முகில் வாங்கி கொள்ள,
"நான் ஏதாவது தப்பா சொன்னா என்கிட்ட சொல்லு...இன்னைக்கு காலைல பஸ்ல பார்க்கும் போது என்னை யாருன்னு உனக்கு தெரியலை...நான் யாருன்னு மத்தவங்களுக்கு சொல்லாத வரைக்கும் அவங்களுக்கு என்னை பத்தி தெரியாது...நான் உன்கிட்ட என்னை பத்தி ஒன்னும் சொல்லல...டிசம்பர் 22 உனக்கு இது முதல் தடவை இல்லை...இந்த நாள் உனக்கு திரும்ப திரும்ப வருது...வேற விதமா சொல்லணும்னா நீ ஒரு டைம் டிராவல்லர்..."என கண்மணி கூற,
"ஆமா..."என முகில் அவளை கலங்கிய கண்களோடு பார்க்கிறான்.
(தொடரும்....)