Member
- Messages
- 63
- Reaction score
- 2
- Points
- 8
டிசம்பர் 22 காலை பேருந்தில் இருந்து இறங்கிய மணி முன்னே நடந்து செல்ல, எதிரில் தனது ஸ்கூட்டியில் வந்த வள்ளி, "ஹே வாடா....முகில்... இப்போதான் வர்றியா....?"என சத்தமாக கேட்க,
அதை கவனித்த கண்மணி திரும்பி முகிலை பார்க்கிறாள்.
"இவன்தான் முகிலா...? ச்சே...இருக்காது..."என மனதினுள் நினைத்து கொண்டே திரும்ப அங்கே சந்தீப்பின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. பேருந்தில் முகில் சந்தீப் என கத்தியபடி தன் மீது சாய்ந்தது மணிக்கு நினைவிற்கு வர, ஏதோ யோசித்தவளாய் சந்தீப் இழவிற்கு செல்ல ஆயத்தமானாள்.
தான் சந்தீப் இழவிற்கு செல்வதை தனது கைபேசியில் குரல் பதிவு செய்துவிட்டு அங்கே செல்கிறாள்.
உள்ளே நுழைய, ஊர் மக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றனர். முன்னே கண்மணி நடந்து செல்ல,
"கண்மணி....இது நீதானே...நினைச்சேன் நீயாதான் இருக்குன்னு..."என பின்னே இருந்து ஒரு குரல் வர, குரல் வந்த திசையை நோக்கி கண்மணி பார்க்கிறாள்.
"பரவால்ல....கண்டு பிடிச்சுட்டீங்க..."என எதிரே நின்று கொண்டு இருந்த ஊர் கோவில் பூசாரி ராமை பார்த்து கூறுகிறாள்.
"பார்த்து ரொம்ப நாள் ஆச்சு...எவ்ளோ வருஷம் இருக்கும்..."என கேட்க,
"14 வருஷம் ஆச்சு..."என கண்மணி கூறுகிறாள்.
"இவரு நடந்து வர்றப்ப நிழல் மேல கால் வைக்கல..."என மனதினுள் நினைத்து கொண்டே அவரின் நிழல் மேல் கால் வைக்க அவர், " நீ என்னம்மா இங்க..."என கேட்கிறார்.
"எந்த சலனமும் இல்லை...இவர் நிழல் இல்லை..."என மனதினுள் நினைத்து கொண்டே,
"சந்தீப் என்னாச்சு அவனுக்கு...?"
"அவன் தெரியாம தண்ணில மூழ்கி இறந்து போயிட்டான்... நீ அவன் இழவு செய்தி கேட்டு வந்தியா...?"
"இல்லை..."
"இல்லையா...?? பின்னே ஏன்மா இங்க வந்தே..."
"அது வந்து..."
"இரு...இரு...நீ ரொம்ப புத்திசாலி பொண்ணு...நீ கண்டிப்பா டாக்டர் இல்லை லாயர் ஆயிருப்பே...சரியா...?"என ராம் கேட்க,
"ஆரம்பிச்சாச்சா...இந்த கேள்வி எல்லாம் தேவையா..."என மணி கோபப்பட,
"ஹா... ஹா..."என ராம் சிரிக்கிறார்.
"நான் என்ன காமெடி பன்றேனா..."என மணி கூற,
அவர்கள் எதிரே வந்த வரதனை பார்த்த ராம்,
"வரதன்...இது யார்னு தெரியுதா...?"என கேட்க,
வரதன் அவளை மேலயும் கீழேயும் பார்க்க,
"இவதான் கண்..."என ராம் சொல்ல முயல்கிறார்.
"நான்தான் கண்மணி..."என கண்மணி கூறுகிறாள்.
"ஹே...நான் சொல்லிட்டு இருக்கேன்ல...என்னை சொல்ல விடு.."என ராம் கூறுகிறார்.
"என்னது...கண்மணியா..."என வரதன் கிட்டே வர,
"பார்த்து ரொம்ப நாள் ஆச்சு வரதன் சார்..."என கண்மணி கூறுகிறாள்.
"நான் ஸ்கூல் படிக்கும் போது இவங்க ஹோட்டல் அதிகமா போவேன்...இவருக்கு ரெண்டு குழந்தை...ஒன்னு பையன் சந்தீப்...இன்னொன்னு பொண்ணு வள்ளி...வள்ளி பிறக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க...வரதன் வேலை பார்துட்டு இருக்கும் போது அங்க போற கஸ்டமர் எல்லாரும் குழந்தைங்க கூட விளையாடுவாங்க..."என மனதினுள் நினைத்தபடி தனது பள்ளிபருவத்தை நினைத்து பார்க்கிறாள்.
"எனக்கும் காட்டுங்க....என்ன படிக்கறீங்க....??"என மழலை மொழியில் குழந்தை சந்தீப் கேட்க,
புத்தகத்தை விலக்கி அவனை பார்க்கிறாள் கண்மணி.
"இது ஒன்னும் நீ படிக்கற புத்தகம் இல்லை..."
"என்னது....இல்லை....நா படிக்கணும்....நா படிக்கணும்....நா படிக்கணும்...."என சந்தீப் தனது கால்களை தூக்கி தரையில் உதைத்து அடம்பிடிக்க தொடங்குகிறான்.
"சரி....சரி...இதை விடு...இதை விட செம்மையா என்னோட கதையை உன்கிட்ட சொல்றேன்....கேட்க தயாரா...?"என கண்மணி கேட்கிறாள்.
"எது உன்னோட கதையா..."என சந்தீப் புரியாமல் கேட்க,
"பரவால்லையே...என் பையன் ரொம்ப லக்கி....வருங்காலத்தில் கண்மணி நல்ல எழுத்தாளராக வருவாள்...."என வரதன் கூறுகிறார்.
இதை நினைத்தபடி சந்தீப்பின் உடலை பார்த்த கண்மணி,"மரணம் எல்லாருக்கும் வரும்...மணி....14 வருஷம் ஓடி போயிருச்சு....ஒருத்தன் போன பின்னாடி இன்னொருத்தன் போக சீக்கிரம் நேரம் ஆயிருச்சா..."என கண்மணி மனதினுள் நினைத்து கொண்டு இருக்கிறாள்.
"என்ன நீ கீழ விழுந்துட்டயா...பார்த்து வண்டி ஓட்ட மாட்டியா...??"என வரதன் கைபேசியில் பேசி கொண்டு இருக்க,
"என்னாச்சு..."என ராம் கேட்க,
"முகிலை கூட்டிட்டு வர வள்ளி போனாள்ல அவ கீழே விழுந்துட்டா....அதுனால அவங்க வர கொஞ்சம் லேட் ஆகும்..."என வரதன் கூறுகிறார்.
அவர்கள் பேசுவதை கேட்ட கண்மணி அவர்கள் அருகே வந்து," ஆமா....முகில் யாரு...??"என கேட்க,
"அட ஆமா உனக்கு தெரியாது...நீ இந்த ஊரை விட்டு போய் 14 வருசம் ஆய்ருச்சு...அவன் பேர் முகில்....என் பிரென்ட்டோட பையன்....அவனை நான்தான் வளர்த்தேன்..."என வரதன் கூறுகிறார்.
"முகில்..."என பேசி கொண்டே கண்மணி தன் கையில் உள்ள கைபேசியில் குரல் பதிவு செய்கிறாள்.
"பத்து வருஷத்துக்கு முன்னாடி அவனோட அப்பா அம்மா ஒரு படகு ஆக்சிடென்ட்ல செத்து போய்ட்டாங்க...அவனுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லை..."என ராம் கூற,
"இருங்க....வர்றேன்..."என கண்மணி கூறி கொண்டே அங்கே இருந்து ஓடுகிறாள்.
"பஸ்ல நம்ம கூட வந்த பையன் முகில் தான்...ச்சே...என்னால அவனை மீட் பண்ண முடியாது....என்னால யாரையும் நம்ப முடியாது..."என கண்மணி மனதினுள் நினைத்தபடி நடந்து செல்கிறாள்.
"கண்மணி....இரு ஒரு நிமிஷம்..."என பின்னே வந்த வரதன் அவளிடம் நடந்தவற்றை கூறுகிறார்.
"என்னது...கழுத்தை நெரிச்ச மாறி இருந்த அடையாளமா..."என கண்மணி கேட்க,
"ஆமா...யாரோ கழுத்தை சுற்றி நெறிச்ச மாதிரி இருக்குன்னு சொன்னாங்க...."என வரதன் கூறுகிறார்.
"ஒரு நிமிஷம் வரதன் சார்....போலீஸ் என்ன முட்டாள்களா...?? ஒரு வேளை கழுத்தை நெருச்சு இருந்தா அவன் கண்டிப்பா போராடிருப்பான்...அப்படி இருந்தா கொண்ணவங்க இரத்தமோ இல்லை சின்ன சதையோ தோலோ அவன் நகத்துல சிக்கிருக்கும்...அவங்க அதை செக் பண்ணலையா....??"என கண்மணி கேட்கிறாள்.
"இ...இல்லை...."என வரதன் கூற,
"நம்பவே முடியல..."என கண்மணி கூறுகிறாள்.
"உனக்கு இது அந்த சம்பவத்தை நினைவுபடுத்தலையா....?? 14 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரிதான் மணி இறந்து போன அப்போவும் நடந்தது..."என வரதன் கூற, கண்மணி அதை நினைத்து பார்க்கிறாள்.
"மணி....மணி....எழு....மணி..."என காட்டிற்குள் கண்மணி தனது தம்பி மணியின் இறந்த உடலை தன் மடியில் கிடத்தி கண்ணீர் மல்க கதறி அழுவதை நினைத்து பார்க்கிறாள் கண்மணி.
தனக்குள் ஏதோ நினைத்தவள் வேகமாக நடந்து சென்று
"வழியை விடுங்க..."என கூட்டத்தை விலக்கி, சந்தீப் உடலின் அருகே சென்றவள், அவனை சுற்றியுள்ள துணியை விலக்கி பார்க்கிறாள்.
சந்தீப்பின் கழுத்து அடையாளங்கள் எதுவுமின்றி சாதாரணமாக இருக்கிறது.
"ஏய்...என்னம்மா பன்றே நீ...?"என பின்னே இருந்த போலீஸ் விஜய் அவள் கையை பிடித்து இழுக்க,
"என்னை...விடு..."என மணி கூறுகிறாள்.
"என்ன பிரச்சினை பண்ணாத...உன்னை அரெஸ்ட் பண்ணிருவேன்...நான் சொல்றது கேட்குதா இல்லையா..."என விஜய் கூறுகிறார்.
சந்தீப்பின் கழுத்தை தொட்டு பார்த்த மணி, "வித்தியாசமா ஒன்னும் தெரியல முதல்ல பார்க்கும் போது...ஆனால்..."என தனது விரலை வைத்து கழுத்தை தேய்க்க, அவன் கழுத்தில் இருந்து வெள்ளை நிற சாயம் போகிறது. இப்போது லேசாக கழுத்தை நெரித்த அடையாளங்கள் தெரிகிறது.
"டெத்பாடிக்கு யாரு இங்க மேக்கப் போட்டது....??"என மணி கேட்க,
"அது....விமல் கிளினிக்ல இருக்க ஒரு நர்ஸ்..."என வரதன் கூறுகிறார்.
"என்ன நடக்குது இங்க...இறந்து போனவர்களை கொச்சைபடுத்திறயா...??"என டாக்டர் விமல் அதை பார்த்து கூற,
"டாக்டர்...இவ நமக்கு தெரிந்த பொண்ணுதான்..."என வரதன் கூற,
"யாரு இங்க கொச்சையாக பண்ணினது...."என கேட்டுகொண்டே மணி நடந்து அங்கே இருந்து செல்கிறாள்.
"கண்மணி..."என அவள் பின்னே வந்த வரதன் கூற,
"ஸாரி...தேவை இல்லாம பண்ணதுக்கு..."என அவள் கூற,
"இல்லை தப்பு எண்மேலதான்...நான் உன்கிட்ட அதை சொன்னதால் நீ பண்ணுன....அதை மறந்துடு..."என வரதன் கூற,
முன்னே நடந்து சென்ற கண்மணி நின்று, "நான் உங்ககிட்ட ஒன்னே ஒன்னு கேட்கணும்....சந்தீப் இறந்து போறதுக்கு முன்னாடி அவனை மாதிரியே ஏதாச்சும் உருவத்தை பார்த்தேன்ன்னு சொன்னானா...??"என கண்மணி கேட்க,
"கண்மணி...."என ஒரு குரல் கேட்க திரும்பி பார்க்கிறாள் கண்மணி.
எதிரில் அவளின் பள்ளி பருவ தோழியான மாலா நிற்கிறாள்.
"மாலா..."என அவள் பார்க்க,
"நான் உன்கூட டச்ல இருக்கணும் நினைச்சேன்...ஆனால் நீ உன்னோட ஃபோன் எண் இல்லை அட்ரஸ் கூட தரல...நீ எப்படி இருக்கே...??" என மாலா கேட்கிறாள்.
"எப்படின்னா என்ன சொல்ல...என் இதயம் இன்னும் துடிக்குது..."என கண்மணி கூறுகிறாள்.
"நீ மாறவே இல்லை...உனக்கு சந்தீப் நியாபாகம் இருக்கா....?? எல்லாம் இப்போ நடந்த மாறி இருக்கு....பசங்க எல்லாம் கடகடன்னு வளந்தர்ராங்க... ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல...சந்தீப் என்னோட பொண்ணு மித்ரா உயிரை காப்பாத்தி இருக்கான்..."என மாலா கூறி அழ தொடங்குகிறாள்.
"சந்தீப் அப்படித்தான்...மித்ரா உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்..."என வரதன் அவளை சமாதானம் செய்ய எதிரே நின்ற கண்மணிக்கு பற்றி கொண்டு வந்தது.
"எதுக்கு இவ அழுவறா....என்ன மயிருக்கு இவ அழுவறா...?? இவளோட இந்த நடிப்பை பாக்கும் போது எனக்கு ஆத்திரம் வருது..."என கோவத்தில் பல்லை கடித்து கொண்டு கீழே பார்க்கிறாள் கண்மணி.
"நிழல்...."என கண்மணி ஆத்திரத்தில் பார்க்கிறாள். மாலாவின் நிழல் கண்மணியின் காலில் விழாமல் நின்றது.
"மாலா..."என பின்னே இருந்த அவளின் கணவன் அழைக்க, கண்மணி அவரை பார்க்கிறாள்.
"மாலா எற்கனவே செத்து போய்ட்டா...சந்தீப் உன்னோட பொண்ணை காப்பாத்திட்டானா...?? மன்னிக்கவே முடியாதுடி உன்னை... மாலா மாறி உருவம் எடுக்க என்ன தைரியம்..."என மனதினுள் நினைத்து கொண்டே மாலா மித்ரா மற்றும் மாலாவின் கணவருடன் செல்வதை வெறித்து பார்க்கிறாள் கண்மணி.
"அந்த குடும்பத்தில் இருக்க மூணு பேரும் நிழலா...??"என ஊர் பெரியவர் ராமு இழவுக்கு சென்று திரும்பிய கண்மணியை பார்த்து கேட்க,
"ஆமா....அதில் சந்தேகமே இல்லை...அதை நானே உறுதிபடுத்துகிட்டேன்...வர வர நிழல்கள் அதிகமா ஆகுது..."என தலை கீழே மரத்தில் தொங்கியபடி இருந்த கண்மணி கூறுகிறாள்.
"ஒரு நிழல் இன்னொரு நிழலை உருவாக்குது போல..."என அவர் கூற,
"எனக்கு தெரிஞ்ச நிழல்கள் அப்படி பண்ணாது...இந்த ஊருல என்னதான் நடக்குது..."
"யாருக்கு தெரியும்...எனக்கே ஒன்னும் புரியல...."
"என்னோட தியரி கேளுங்க...மித்ரா தண்ணில மூழ்கல...அவ நிழல்களால் தாக்கப்பட்டு இருக்கா...அது அவளை கொன்னு அவ உடம்பை எடுத்துகிட்டு அவளோட இடத்தில நல்ல பொண்ணு மாறி போய் இருக்கு...அப்புறம் அந்த நாள் வள்ளியால காப்பாத்தபட்டு இருக்கு..."என கண்மணி கூறுகிறாள்.
"அப்புறம்...அது அவங்க அப்பா அம்மாவை கொன்னு அவங்களோட எடத்துல வேற நிழல்களை மாற்றி இருக்கும்..."என ராமு கூற,
எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்த ராமு,
"என்ன அழுகை வருகிறதா...??விடு..."என கூறி அவள் கையில் உள்ள கைபேசியை பார்க்கிறார்.
"என்ன இது...??"என கேட்க,
"இது என்னோட இரண்டாவது ஃபோன்...இது ரிங் ஆனா என்கிட்ட சொல்லுங்க...எனக்காக நீங்க ஒன்னு பண்ணனும்...."என மரத்தில் தொங்கியபடி அழுது கொண்டிருந்த கண்மணி
கூறுகிறாள்.
அதே சமயம் ஆற்றில் படுத்து கொண்டு இருந்த சந்தீப் எழுந்து நடக்க தொடங்குகிறான்.
(தொடரும்.....)