Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
"தயிர்சாதம் கோபில எல்லா இடத்துலயும் கிடைக்காது போல.... நான் இன்னும் ட்ரை பண்ணதில்லை.... நீ பண்ணிருக்கியா....?"என அவள் கேட்க,
"இவளை பஸ்ல பார்த்திருக்கேன்.. " என எண்ணிக் கொண்டே உடைந்து போன தன் கையை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டு,
"எங்கே போச்சு அந்த நிழல்..." என முகில் கேட்க, சுற்றும் முற்றும் பார்க்க,
நிழல் போல அந்த உருவம் வேகமாக அந்த பெண்ணை நோக்கி செல்ல, அவள் வள்ளிமான் நிழலை பார்க்கறாள்.
வள்ளியின் நிழல் தன் கையில் உள்ள கத்தியை எடுத்து அவளை நோக்கி குத்த முயல, கீழே குனிந்த அந்த பெண் வள்ளியின் காலை நோக்கி சுடுகிறாள்.
"செம்ம.. உனக்கு என்ன பொடணில கூட கண் இருக்கா...??" என கேட்டுக் கெண்டே அவள் எழ,
"உனக்கு எப்படி...?" என கேட்டுக் கொண்டே வள்ளியின் நிழல் கரைந்து அழிந்து போகிறது.
"நம்பவே முடியல இவ உண்மைலயே நிழலை போட்டுத் தள்ளிட்டாளா...? " என மனதினுள் நினைத்தபடி முகில் பார்க்க, அந்த பெண் திரும்பி அவனைப் பார்த்து, "நைஸ்டூ மீட் யூ" என கூறி தன் கையை நீட்டுகிறாள்.
"ஓ...சாரி....கை முறிஞ்சி போயிருச்சா....??" என அவன் அருகே சென்றவள் அவன் கைகளை அசைக்க முடியாதபடி துணி மற்றும் கட்டைகளை கொண்டு கட்டிக் கொண்டே,
"நான் சின்ன வயசில் இந்த ஊருலதான் இருந்தேன்.... ஆனால் இதுவரைக்கும் கடைல தயிர்சாதம் சாப்பிட்டது இல்லை...."என கூறுகிறாள்.
"யார்... நீ...? " என முகில் கேட்க,
"சாரி...நான் யாருன்னு சொல்லவே இல்லை...என்பேரு மணி...." என அவள் கூற,
"மணியா..?" என முகில் கேட்க,
"ஆமா... நான் உன்னை காப்பாத்த வந்தருக்கேன்....சாரி....நான் வரதுக்கு கொஞ்ரம் லேட் ஆகிருச்சு....முகில்...."என அவள் கூற முகிலின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிகின்றன.
"என் பேர் எப்படி உனக்கு தெரியும்...? "என முகில் கேட்க,
"ஒரு நிமிஷம் இப்படி வா..." என எதையோ பார்த்தவள் போல முகிலை இழுத்து பக்கத்தில் இருந்த புதரின் உள்ளே நுழைகிறாள்.
"என்னாச்சு.....?"என முகில் கேட்கிறான்.
"நிழல்கள்.."என அவள் பார்க்க, அவள் பார்க்கும் திசையில் முகில் பார்கிறான்.
தனது முகத்தில் பவர் ரேஞ்சர் முகமூடி அணிந்த சந்தீப் வேகமாக கோவிலை நோக்கி படிக்கட்டில் ஏறி கொண்டு இருக்கிறான்.
அதை பார்த்த முகில்,"இவனை நான் ஒளிஞ்சிருக்கதானே சொன்னேன்...." என்றெண்ணியபடி முகில் பார்க்க,
"இங்கேயே இரு... மேலே ரொம்ப ஆபத்து...எல்லா நிழல்களும் ஒன்னா கூடுதுங்க...."என மணி கூறுகிறாள்.
திரும்பி மணியை பார்த்த முகில், " இரு....உன்னால எது மனுசங்க... எது நிழல்ன்னு சொல்ல முடியுமா...."என கேட்க,
அவனை ஆழமாக பார்த்த மணி,"நிழல் மனுசங்களோட சதையை ட்ரஸ் மாதிரி யூஸ் பண்ணிக்கும்..... அதோ அங்க தரையை பாரு.... அதோட உண்மையான உருவம் தரைல தட்டையா இருக்கும்... அதுங்களோட உண்மையான நிழல் மேலே யாராச்சும் நடந்தா அங்களுக்கு புடிக்காது... நீ அதுங்க நிழல் மேல கால் வச்சா அதுங்க நகர்ந்து போகும்..."என கூறியபடி மணி நகர்ந்து முன்னே சென்று,
"நான் என் அக்கா சொன்ன தியரிபடி நடக்கறேன்...எனக்கு தெரிஞ்சு நிழல்கள் எல்லாம் ஒளி பயன்படுத்தி மத்தவங்களோட உருவத்தையும் நினைவுகளையும் உறிஞ்சு எடுத்துக்கும்... இப்படி பண்ணிதான் அதுங்க உயிர் வாழுதுங்க...நம்ம நியாபகங்கள் மற்றும் தகவல்கள்தான் அதுங்க சாப்பாடு...ஆனால் அது மட்டும் பத்தாது...அதுங்க நேரா சதைகளை சாப்பிடும்.... டேஸ்ட்க்கு சாப்பிடற மாதிரி...இங்க பாரு..."என கீழே இருந்த மனித அச்சுகளை காட்டி,
"இந்த அச்சு எல்லாம் அவங்க சாப்பிட்ட மனுசங்களோட அச்சுதான்...அதுங்க இனி என்னை குறி வைக்கும்....உன்னையும் தான்...இங்க நிழல்கள் ரொம்ப அதிகம் ஆயிருச்சு...இந்த கடைசி மூணு நாளாக நான் நிறைய நிழல்களை கொண்ணு குவிச்சிட்டேன்...அதை வச்சு சொல்றேன்....அதுங்க எல்லாம் ஏதோ குறிக்கோள் வச்சு செயல்படுது..."என மணி கூறுகிறாள்.
"குறிக்கோளா...." என முகில் யோசிக்க, "இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா கண் முழிச்சிடுவாங்க..."என வள்ளியின் நிழல் கூறியது நினைவிற்கு வந்தது.
அந்த சமயம் மேலே கோவிலில் திடீர் என பெரிய ஒளி வருகிறது.
"என்ன வெளிச்சம் அது....?"என பார்த்து கொண்டே திரும்பி மணியிடம்,"நீ நிழல்கள் துப்பாக்கில சுடறே...சரியா.... ம்ம்...கண்மணி....நீ எழுத்தாளர் கண்மணிதானே..."என முகில் கேட்க,
"ம்ம் ...ஆமாம்..."என தயங்கியபடி கூறுகிறாள்.
"எனக்கு தெரியும்....தயவு செய்து எனக்கு உதவி பண்ணு...உன்கிட்ட நான் நிறைய கேட்டு தெரிஞ்சுக்கணும்...ஆனால் அதுக்கு முன்னாடி...வள்ளியும் என்னோட ப்ரெண்ட்ஷும் மேல இருக்காங்க...."என முகில் கூறிவிட்டு மேலே படி ஏறி செல்கிறான்.
மேலே செல்பவனை நிமிர்ந்து பார்த்த மணி,"முகில்... இவனால எல்லாரையும் காப்பாத்த முடியுமா... அக்கா..?"என மனதினுள் நினைத்தபடி தன் கையில் துப்பாக்கியை எடுத்து கொண்டு அவளும் மேலே எறுகிறாள்.
மேலே முகில் செல்ல மேல் படிக்கட்டு நுனியில் சுதா நின்று கொண்டு இருக்க, அவளை சுற்றி நெருப்பு வெளிச்சம் தெரிகிறது.
"சுதா...."என முகில் கத்த,
திரும்பிய சுதா,"முகில்..."என பார்க்கிறாள்.
மேலே சென்ற முகில்,"நல்ல வேளை.... எங்க மத்தவங்க எல்லாரும்...எங்க வள்ளி...?சுதா..."என கேட்டு கொண்டே முன்னே நடந்து வர முகிலின் கால்களின் ஏதோ ஈரமாகி வழுக்க முகில் கீழே பார்க்கிறான்.
கீழே இரத்தம் சிந்தி இருக்க,
"என்னை மன்னிச்சிடு....என்னால எதுவும் செய்ய முடியல..."என சுதா முகிலை பார்த்து அழ தொடங்க, அவளை யாரோ பின்னால் இருந்து குத்துகிறார்கள்.
சுதாவின் தலையில் இருந்து கொடுக்கு போன்ற ஒரு உறுப்பு வெளியே வர சுதா கீழே விழுந்து வலியில் கத்தி துடிக்கிறாள்.
யார் என பார்க்க முகிலிற்கு முன்னே வந்த மணி தனது துப்பாக்கியை முன்னே நீட்டி, "இரு...பின்னாடி போ..."என கூறுகிறாள்.
சுதாவின் பின்னே ஒரு உருவம் நிற்க அதை முகில் பார்க்கிறான். கரிய நிறத்தில் கோரமான முக அமைப்புடன் 12 அடிக்கு ஒரு உருவம் நிற்கிறது.
"ஒன்பது ஆயாச்சு....ஒரு வழியா...."என அந்த உருவம் கூறுகிறது.
மணி அந்த உருவத்திற்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டி குறி பார்க்க, முகில் சுற்றும் முற்றும் பார்க்கிறான். சுற்றிலும் கொத்து கொத்தாக திருவிழாவிற்கு வந்தவர்கள் பிணங்கள் இருக்க, அந்த காட்சி முற்றிலும் சுற்றிலும் நெருப்பு சூழ, பினக்குவியலாக இருக்கிறது.
"பண்டிகை முடிஞ்சது...இந்த உலகின் கடைசி நாளை நான் கொண்டு வந்துட்டேன்..."என அந்த உருவம் கூற, முகில் பயத்தில் உறைந்து போய் நிற்கிறான்.
அந்த இடத்தில் பிணங்களின் வாடையும் இரத்த நெடியும் வீச, பிணங்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.
"உன்னால என்னை தடுக்க முடியாது..."என அந்த உருவம் கூற, முகில் சுற்றியும் பார்க்க கரிய நிறத்தில் பத்து அடி உயரத்தில் சில கோரமான உருவங்கள் எல்லா பினங்களையும் எடுத்து ஒரு இடத்தில் வைக்கிறது.
"ஒன்னு....மூணு...அஞ்சு....ஏழு...ஒன்பது...பதினொண்ணு...என்னால எண்ண கூட முடியல...என் மூளை கூட வேலை செய்யல..."என முகில் எண்ணிக்கொண்டே பார்க்க, முகில் பார்த்த அந்த காட்சி முகிலின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்தது.
கையில் கோடாரியுடன் ஒரு உருவம் ஓங்கி சுரேஷின் தலையை வெட்டியபடி நிற்க சுரேஷ் வள்ளியை காப்பாற்ற அந்த உருவத்திற்கும் வள்ளிக்கும் நடுவில் இருக்கிறான்.
"சுரேஷ்...."என முகில் அலற,
அந்த நிலையிலும் சுரேஷ் தலையில் இருந்து இரத்தம் வடிய, "வள்ளி....இங்க இருந்து ஓடி போயிடு..."என சுரேஷ் கூற,
பின்னால் இருந்த அந்த உருவம் சுரேஷின் உருவத்தை எடுத்து கொண்டே,"இன்னும் நீ உயிரோட இருக்கியா...? தப்பிக்க முடியாது..."என கூறி கொண்டே சுரேஷின் தலையில் இருந்த கோடாரியை உருவி எடுக்கிறது.
சுரேஷ் இரத்த வெள்ளத்தில் வள்ளியின் மீது சரிகிறான்.
"இவன் உயிரை குடுத்து உன்னை காப்பாத்தி இருக்கான்...இவன் லவ் உண்மைதான் போல...ஆனால் நீ எப்போவும் ஒரே மாறித்தான்...கண்ணு முன்ன இருக்கறது விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைபடறே..."என கூறி கொண்டே சுரேஷின் நிழல் தன் கையில் உள்ள கோடாரியை ஓங்க, சீறி பாய்ந்து வந்த தோட்டா சுரேஷ் நிழலின் கையை துளைக்கிறது.
நிழல் திரும்பி பார்க்க அடுத்த தோட்டாவை துப்பாக்கியில் போட்டு மணி தயாராக குறி பார்க்க, மணியின் முன்னால் நின்று கொண்டு இருந்த அந்த உருவம் மணியின் உருவத்தை எடுக்கிறது.
கையில் துப்பாக்கியுடன் மணியை போலவே அவள் முன் நின்ற அவளின் நிழல் தன் கையில் உள்ள துப்பாக்கியை வைத்து மணியின் மூளையை சுட்டு சிதறடிப்பது போல் மணிக்கு தெரிய, மணி கண் சிமிட்டி கண் விழிக்க மணியின் நிழலின் கையில் இருந்த துப்பாக்கியின் தோட்டா சீறி பாய்கிறது. மணி சுதாரித்து கொண்டு லேசாக விலக தலையை துளைக்காமல் தோள்பட்டையை துளைக்கிறது.
மணி வலியில் துடைத்தபடி கீழே விழ, "இது ரொம்ப ஆபத்து...இந்த புனித ஊர்வலத்தில் நீங்க தலையிட்டால் உன் கதை அவ்ளோதான்..."என எதிரே பெரிதாய் நின்று கொண்டு இருந்த இராட்சத உருவம் கூறுகிறது.
"அப்போ இது எல்லாத்துக்கும் பின்னாடி நீதான் இருக்கியா...?"என மணி வலியில் கேட்க,
"யாரு...யாரு...நீ..."என முகில் கேட்க,
கண்களில் கண்ணீர் வடிந்தபடி மயங்கி கிடந்த சந்தீப் கண்விழித்து பார்க்க, அந்த இராட்சத உருவம் தன் கையில் உள்ள கொடுக்கை நீட்டி முகிலை பிடித்து சுற்றி இழுத்து தூக்குகிறது.
"உன்னோட வலது கண்ணு...எனக்கு தெரியும்...அம்மா ரொம்ப நாளுக்கு முன்னாடி இழந்த அந்த கண்ணு...ஆனால் எனக்கு புரியாத விஷயம் நீ எப்படி உண்மையான அம்மாவோட கண்ணை வச்சிருக்கே...அம்மா பண்ற மாதிரியே உன்னாலையும் காலத்தை கட்டுபடுத்த முடியுமா...?"என அந்த உருவம் கேட்க,
கண் விழித்த சந்தீப்பை முகிலின் நிழல் தூக்கியபடி திரும்பி, "அடம்பிடிக்காத...நீ எங்க பக்கம்தான்..."என கூற,
"இல்லை...நான் மனுஷன்...சந்தீப் என் பேரு..."என திணறியபடி கூறுகிறான்.
"இல்லை...நீ மனுஷன் இல்லை....மனுஷங்க யாரும் கை உடைந்த உடனே சீக்கிரம் சரி ஆகமாட்டாங்க..."என முகிலின் நிழல் கூற, சந்தீப் யோசிக்க தொடங்குகிறான்.
தூக்கிய முகிலை அந்த உருவம் கீழே போட, "நம்ம அம்மாவோட கட்டளைப்படி யாரு காலத்தை கட்டுபடுத்தற தன்மை இருக்கோ அவங்களை கொல்லறத விட அவங்க சக்தியை பயன்படுத்த முடியாம பண்ணனும்...நல்லா பாரு முகில்..."என கூற,
சுரேஷின் நிழல் உருகி கரிய நிறத்தில் நிழலாக மாற, அதன் அருகே பெரிய இராட்சத உருவம் கொண்ட நிழல் செல்கிறது. சந்தீப்பை தூக்கி கொண்டிருந்த முகிலின் நிழல் அவர்களை நோக்கி செல்ல, அதன் தோளில் இருந்த சந்தீப்,"இல்லை....என்னை கொண்டு போகாதீங்க...நான் உங்கள்ள ஒருத்தன் இல்லை...முகில்.... காப்பாத்து....வள்ளியை பத்திரமா பார்த்துக்கோ..."என சந்தீப் அலறுவது முகில் வலியில் படுத்தபடி பார்க்கிறான்.
முகில் லேசாக எழுந்தவாறு தவழ்ந்து வள்ளியின் அருகே செல்ல வள்ளி சுரேஷின் இறந்த உடலை விலக்கிவிட்டு எழுந்து தவழ்ந்து அவனருகே செல்கிறாள்.
வள்ளி தனது கையை நீட்டி முகிலின் கையை பற்ற முயல, முகில் தன் கையை நீட்டுகிறான்.
"முகில்...நான் ஒரு உண்மை உன்கிட்ட சொல்லணும்...நான் ஆரம்பத்தில் இருந்தே உன்னை லவ் பண்ணேன்...நீ என்னதான் என்னை தங்கையா பார்த்தாலும் என்னால உன்னை அண்ணனா பார்க்க முடியல... ஐ லவ் யூ..."என வள்ளி கூற, வள்ளியின் உடல் காற்றில் கரைந்து வெந்து போனது போன்ற அச்சு தரையில் தெரிகிறது.
அதை பார்த்த சந்தீப், "இல்லை...வள்ளி....வள்ளி..."என அலற அவர்களை சுற்றி இருந்த நிழல்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்து அந்த பெரிய இராட்சத உருவம் கொண்ட நிழலை நோக்கி செல்கிறது.
"என்னை விடுங்க....வள்ளி....அய்யோ..."என சந்தீப் கண்களின் கண்ணீர் வடிய அலற,
"என்னோட கடைசி சாப்பாடு...உன்னோட விருப்பத்தோடு என்கிட்ட வா.."என அந்த பெரிய இராட்சத நிழல் சந்தீப் பார்த்து கூறுகிறது.
வலியில் துடித்தபடி இரத்த வெள்ளத்தில் இருந்த மணி நிமிர்ந்து பார்த்து,"அந்த பெரிய நிழல் லேசா தொட்டாலே உறிஞ்சு எடுத்திரும் போல ஆளை...என்னால ஒன்னும் பண்ண முடியலை மணி...நான் லேட்டா வந்துட்டேன் போல..."என மனதினுள் எண்ணியபடி வானத்தை பார்க்க வானத்தில் சிவப்பு நிற ஒளியுடன் ஏதோ ஒரு உருவம் நிற்கிறது.
"உன்னோட கடைசி பலத்தை எனக்கு கொடு..."என அந்த பெரிய இராட்சத நிழல் கூறியபடி தன் கைகளை வானத்தை நோக்கி காட்டி "அம்மா..."என கூறுகிறது.
கைகளை மேலே உயர்த்த சுற்றிலும் இருள் சூழ்கிறது. தரை முழுவதும் இருள் சூழ்ந்து அது கோபி நகரம் முழுவதும் பரவுகிறது. அது பரவும் இடத்தில் இருக்கும் மனிதர்களை விழுங்கி கொண்டே செல்கிறது. கொத்து கொத்தாக மனிதர்கள் விழுங்கபடுகிறார்கள்.
ஊரில் உள்ள போலீஸ் அதிகாரி விஜய் மற்றும் ஊர் பெரியவர் ராமு மலையின் மேல் இருந்து வரும் சிவப்பு நிற ஒளி வீசும் உருவத்தை பார்க்கிறார்கள். மலையில் இருந்து பரவிய இருள் ஊர் முழுவதும் பரவி விழுங்குகிறது.
"ஒரு வழியா அவ ஆயிரக்கணக்கான மக்களை சாப்பிட்டு திரும்ப வந்துட்டா போல..."என சுரேஷின் தந்தை விமல் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபடி யோசித்து விட்டு, அவரின் பின்னே சக்கர நாற்காலியில் இருந்த நிழலை பார்த்து,
"இங்க பாரு...இந்த ஊரு இருளால மூழ்க போகுது..."என கூறுகிறார்.
கீழே விழ்ந்து கிடந்த தனது கண்ணாடியை எடுத்து போட்டபடி மணி," மீரா...இது நீயா...?"என ஆச்சர்யத்தில் பார்க்க வானத்தில் பறந்து கொண்டிருந்த அந்த உருவம் தன் முகத்தில் உள்ள தங்கம் மற்றும் செம்பு கலந்த தகடில் ஆன முகமூடியை சரி செய்து கொண்டு கீழே பார்க்கிறது.
"ஆஹ்...இது ரொம்ப ருசியா இருக்கு..."என அந்த உருவம் கூறி கொண்டே கீழே பார்க்க,
"இதுதான் முடிவு..."என பெரிய நிழல் கூறுகிறது.
தன் இயலாமையை எண்ணி முகில் அழுது கொண்டே,"சாரி....வள்ளி...சுரேஷ்...எல்லாரும்...என்னை மன்னிச்சிடு..."என முகில் அழுகிறான்.
"என்னை மன்னிச்சிடு முகில்...அந்த செய்தியை நான் முன்னாடியே நம்பிருந்தா...இது நடந்திருக்காது... லேட் ஆயிருச்சு...ரொம்ப லேட் ஆயிருச்சு..."என மணி கூற,
"இல்லை...இது மாதிரி இதுக்கு முன்னேயே நடந்து பார்த்திருக்கேன்...என்னால ஒன்னும் பண்ண முடியலை...எல்லா தப்பும் என்மேலதான்...இது ஒன்னும் லேட் இல்லை...இன்னும் லேட் ஆகலை..."என முகில் கத்தி கொண்டே மேலே பறந்து கொண்டு இருந்த உருவத்தை பார்த்து,
"யார் நீ...சொல்லு... உன்ன எல்லாரும் அம்மான்னு சொல்றாங்க...நீ யாரு...?"என கேட்க,
கீழே பார்த்த அந்த உருவம்,"ம்ம்...என் கண் உண்கிட்டதான் இருக்கா..."என கேட்டபடி தனது முகமூடியை விலக்க அதற்குள் ஒரு பல்லி போன்ற உருவம் இருக்கிறது.
"மனித இனத்தோட ஆரம்பத்துல இருந்தே பல மதங்களை மனிதர்கள் உருவாக்குனாங்க...அவங்க நம்பிக்கைக்கு உருவம் தரணும்றதுக்காக கடவுள், சாத்தான், அரக்கன் என பல உருவம் கொடுத்தாங்க...பல்வேறு நிலபகுதில வாழ ஆரம்பிக்கும் போது அவங்களுக்குன்னு உரித்தான மொழிகளை பேச ஆரம்பிச்சாங்க...ஆனால் என்ன காரணமோ தெரில இந்த மொத்த மனித இனமும் இந்த கடவுள் சாத்தான் விஷயத்தை மட்டும் மதங்கள்ன்ற பேர்ல சண்டை போட்டுட்டு வந்தாங்க...அதன் பேரால மனிதர்கள் இங்க பல்வேறு மதங்களை உருவாக்க ஆரம்பிச்சாங்க... மனிதர்களோட ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவங்களோட எண்ணங்களை அவன் போக்குக்கு ஏத்த மாதிரி மாத்தி இந்த உலகத்தோட வரலாற்றையே அவன் மாத்தி அமைச்சிருக்க வாய்ப்பு இருக்கு...மனிதர்கள் தன்னோட கடவுள்கள் என நினைச்சுட்டு இருக்க உருவங்கள் எல்லாம் அவனோட கற்பனைல உருவான உருவங்கள்... ஆர்த்திகம் பேசற ஆட்கள் சொல்ற அந்த கடவுள் நான்தான்... நார்த்திகம் பேசற ஆட்கள் சொல்ற அந்த வேற்று கிரக வாசி நான்தான்...நீ எதிர்கறது இந்த உலகத்தையே உருவாக்கின அந்த கடவுளைதான்...நான்தான் அனுநாகி..."என அந்த உருவம் கூற,
"கண்மணி...என்னை சுடு... என்னை கொல்லு...நான் இறந்து போனால் இது எல்லாத்தையும் மாத்தியமைக்க முடியும்...என் தலைல சுடு..."என முகில் கத்த,
தன் கையில் உள்ள துப்பாக்கியை எடுத்து முகிலை குறி வைத்த மணி,"நீ வித்தியாசமா சொல்றே..."என கூறுகிறாள்.
"நான் 22 தேதிக்கு திரும்ப போவேன்..."என முகில் கூற,
"இதுதான் என்கிட்ட இருக்க கடைசி புல்லட்..."என மணி கூற,
"என்னை நம்பி சுடு..."என முகில் கூறுகிறான்.
"உன்னை இப்போவே நான் உரியறேன்...நீ அம்மாவுக்கு ரொம்ப தொல்லையா இருப்பே..."என அந்த பெரிய நிழல் கூறியபடி தனது கொடுக்கை நீட்ட,
ஓடி வந்த சந்தீப் அந்த கொடுக்கை எட்டி உதைக்க அந்த பெரிய நிழல் நிலை தடுமாறி கீழே விழுகிறது. உதைத்த சந்தீப்பின் கால் முறிந்து தனியாக விழுகிறது.
"நீ திரும்ப போனால்...உன்னோட பேரை என்கிட்ட சொல்லு...நான் உன்னை காப்பாத்துவேன்..."என கூறியபடி டிரிக்கரை அழுத்த, சீறி வந்த தோட்டா முகிலின் தலையை சிதறடிக்கிறது.
கண்விழித்த முகில் சுற்றி பார்க்க, சுற்றியும் இருள் சூழ உலகமே வெற்றிடமாக முகில் காற்றில் மிதக்கிறான்.
மேலே பறந்த முகில் திரும்பி பார்க்க அவன் எதிரே நின்ற அந்த உருவம் அவனை பார்க்கிறது. பல்லியும் பறவையும் கலந்தது போன்ற உருவம் கொண்ட அந்த உருவம் தங்கம் மற்றும் செம்பினால் ஆன அணிகலனை அணிந்தபடி அவனை பார்க்க, திடீரென ஒரு விசை அவனை பின்னோக்கி இழுக்கிறது.
"முகில்..."என சந்தீப் குரல் கேட்க,
"சந்தீப்..."என முகில் கத்த,
"கவனமா இரு...உன்கிட்ட இருக்க காலத்தோட சக்திக்கும் ஒரு அளவு இருக்கு...எல்லாரும் திருவிழா அப்போ இறக்க போறாங்க..."என சந்தீப் குரல் கூற,
"இந்த தடவை என்னால உன் குரலை நல்லா கேட்க முடியுது...சந்தீப் எங்க இருக்கே நீ..."என முகில் கேட்கிறான்.
"உன்னால மட்டும்தான் அவங்களை தடுக்க முடியும்...வள்ளியை பார்த்துக்கோ..."என சந்தீப் குரல் கூறி மறைய, இருள் சூழ்ந்து முகில் கண்விழிக்கிறான்.
"முகில்...என்னாச்சு...?"என வள்ளி தனது ஸ்கூட்டியை கையில் பிடித்தபடி கேட்க,
"நான் திரும்ப வந்துட்டேன்..."என முகில் மனதினுள் நினைத்தபடி பார்க்கிறான்.
"இது....டிசம்பர் 22 பஸ் விட்டு வந்து வள்ளி கீழே விழுந்து நான் தூக்கிட்டு நடந்தப்போ வந்தது...வள்ளி உயிரோட இருக்கா...சந்தீப் என்னோட சக்தில அளவு இருக்குன்னு சொன்னான்...இப்போ புரியுது..."என முகில் எண்ணி கொண்டே வீட்டை அடைகிறான். கையில் ஒரு நோட் எடுத்து, தான் வந்த காலம் நேரம் எப்பொழுது என்ன நடக்கும் என இது வரை அனுபவித்ததை எழுதுகிறான்.
"முதல் தடவை பஸ்...இரண்டாவது முறை பஸ் ஸ்டான்ட்...மூணாவது தடவை வள்ளி கூட நடந்து போனது...லூப் பாயிண்ட் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக கிட்ட வந்து லேட் ஆகுது...நான் திரும்ப வரதுக்கு முன்னாடி நடக்கற விஷயங்கள் காலத்தை மாத்துது...இனி நான் செத்து போனால் மறுபடியும் நான் பஸ்ல வரமாட்டேன்...இனி நான் செத்து மறுபடியும் வந்தா முன்னாடி வரமாட்டேன்...வள்ளியை பார்த்து பேசிட்டு போன பின்னாடி நடந்த விஷயங்களுக்குதான் போவேன்...இதை தொடர்ந்து என்னால பண்ண முடியாது...டைம் சுருங்க சுருங்க ஒரு கட்டத்துல நான் உண்மையா இறந்து போயிருவேன்...ஒருவேளை மத்தவங்க எல்லாரும் செத்து போன பின்னாடி என்னோட லூப் பாயிண்ட் வந்தா என்னால லூப் மறுபடியும் பண்ண முடியாது...யாரையும் காப்பாத்த முடியாது... மூணு நாள்...இன்னும் மூணு நாளில் திருவிழா...மூணு நாள்ல என்னால இதை பண்ண முடியுமா...?நான் இதை பண்ணிதான் ஆகனும்..."என முகில் மனதினுள் எண்ணியபடி இழவிற்கு தயாராக தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறான்.
அதே சமயம் ஆற்றில் படுத்து கொண்டு இருந்த சந்தீப்பின் நிழல் கண்விழிக்கிறது.
(தொடரும்....)