• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Time - 5

Member
Messages
60
Reaction score
2
Points
8
சூரியன் மேகத்தை விலக்கி தனது வெப்பத்தை கொடுக்க அது எந்த விதத்திலும் டிசம்பர் குளரிற்கு பலனளிக்காமல் இருந்தது. முகில், சுரேஷ் மற்றும் வள்ளி தனியே வீட்டின் அறையில் இருந்து பேசி கொண்டு இருக்கின்றார்கள்.
" இதுனாலதான் நீ மித்ராவின் நிழல் சந்தீப்பை கொன்னுச்சுன்னு சொல்றே சரியா....?" என முகில் காட்டிய வள்ளயின் நிழல் புகைப்படம் மற்றும் வீடியோ பார்த்தபடி சுரேஷ் கேட்க,
"ஆமாம்" என முகில் தலையசைக்க,
"சந்தீப்போட கழுத்துல இருந்த அந்த அடையாளம், அப்புறம் அந்த நேரம் அவன் கூட இருந்த ஆளு இதெல்லாம் வெச்சு பார்க்கும் போது இது பத்தி எனக்கு ஒன்னு தோணுது " என சுரேஷ் நிமிர்ந்து வள்ளி மற்றும் முகிலை பார்த்து,
"வள்ளியை கொல்ல அது வரும்னு தோணுது"என சுரேஷ் கூறுகிறான்.
"இந்த நிழலிற்கும் மனுஷனுக்கும் ஏதாச்சும் வித்தியாசம் தெரியுமா? பார்த்தவுடனே வேறுபடுத்தி காட்டற மாதரி...." என சுரேஷ் கேட்டு கொண்டே முகிலடம் தனது கையில் இருந்த கைபேசியை கொடுக்க,
"அது பத்தி எனக்கு எதுவும் தெரியாது.... "என தனது கைபேசியை வாங்குகிறான் முகில்.
"அப்ப இது பெரிய பிரச்சினைதான்" என சுரேஷ் எழுந்து,
"ஒருவேளை அந்த நிழல் உன் வேஷத்துல இங்க வந்து எங்ககிட்ட பேசுனா நாங்க என்ன பன்றது.....? " என சுரேஷ் கேட்க,
"இந்த நிழல் எல்லாம் என்னது? என்னை கொன்றுமா ?"என பயத்துடன் வள்ளி கேட்க,
" அமைதியா இரு வள்ளி. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் "என சுரேஷ் கூறுகிறான்.
" இதுங்க எல்லாம் கேமராக்கள்ல பதிவாகுது. அதுனால இதுங்க பேய்கள் இல்லை. அப்போ அதுங்களுக்கும் உயிர் இருக்கும். அப்போ அதுங்கள கொல்ல ஏதாச்சும் வழி இருக்கும்ல முகில்......? " என சுரேஷ் கேட்க,
"ஆமா..... வாய்ப்பிருக்கு....."என முகில் யோசிக்க,
" முகில்... ஏன் நாம் இப்போ நம்ம ஊர் சிவன் கோயிலுக்கு போக கூடாது.. ? " என வள்ளி கேட்க,
"என்னது......?" என முகில் பார்க்க,
" அங்கதான் ராம் இருக்கார்ல.. அவருக்கு இந்த ஊரோட பழைய கதை எல்லாம் தெரியும்.. அவருக்கு இந்த நிழல்கள் பத்தி ஏதாவது தெரிஞ்சுருக்க வாய்ப்பு இருக்கு....." என வள்ளி கேட்க,
"இல்லை.....நானும் வள்ளியும் முதல் தடவை சிவன்கோவிலுக்கு போகும்போதுதான் அப்படி ஆச்சு.....அதுரொம்ப ஆபத்து....அந்த கோவில்கிட்ட இருந்து விலகியே இருக்கனும்... " என முகில் மனதினுள் நினைத்தபடி,
" இன்னைக்கு வேண்டாம்......நாளைக்கு போலாம்" என முகில் கூறுகிறான்.
" நாளைக்கா..? நாளைக்கு ஊர் திருவிழா.. மறந்துட்டியா...?" என சுரேஷ் கேட்க,
" அட ஆமா..." என முகில் கூற,
" நாளைக்கு ஊரே ஒரே பரபரப்பா இருக்கும்...... ஊர் கோவிலோட பூசாரியே அந்த ராம்தான்..... அந்த நேரத்துல அவனுக்கு நம்மகிட்ட பேச எங்க நேரம் இருக்கும்...."என சரேஷ் கேட்க,
"அதிக பேர் இருப்பாங்க....ஊர் திருவிழா நேரம்.....அந்தநேரம் நாம் கோவிலுக்கு போனா நமக்கு அது சரியா இருக்கும்..... பாதுகாப்பா இருக்கும்....."என முகில் மனதினுள் நினைத்தபடி, "இல்லை.....அதுதான் சரியான நேரம்....அப்போவே போலாம்......தனியா போனால் நம்மள ஒருவேளை நிழல்கள் தாக்க வாய்ப்பு இருக்கு" என முகில் கூற இருவரும் ஒப்பு கொள்கிறார்கள்.
" சரி நாளைக்கு நான் அஞ்சு மணிக்கு ரெடியா இருப்பேன்..... நாளைக்கு நம்ம மீட் பன்னும் போது நம்ம நம்மதானா இல்லை நிழலான்னு தெரிஞ்சுக்குறதுக்கு இப்போ ஒரு சீக்ரெட் கோட் முடிவு பன்னலாம் " என சுரேஷ் கூற,
"சரி" என முகில் கூற,
"நான் மலைன்னு சொன்னா...."என சுரேஷ் கூற,
"காடு மலை" என முகில் கூற,
"இல்ல அது எல்லாரும் சொன்றதுன்னு" என சுரேஷ் வள்ளியை பார்க்க,
" மெசப்படோமியா நாகரீகம்" என வள்ளி கூறுகிறாள்.
" இது ஓகே" என சுரேஷ் கூறுகிறான்.
" தாங்க்ஸ், என்னை நம்புனதுக்கு தாங்க்ஸ்...... " என முகில் கூற,
தனது கைகளை முகிலின் தோளின் மீது வைத்து, " நாம நண்பர்கள்.... என் மேல நம்பிக்கை வச்சு....என்னை நம்பி இந்த விஷயத்தை சொன்னதுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும்.... என சுரேஷ் கூறுகிறான்.
"அப்புறம் நான் ஒரு விஷயத்தை பாக்கனும்.....நான் அதுல ஏதாச்சும் கண்டுபுடிச்சா உனக்கு சொல்றேன்...."என சுரேஷ் கூறிவிட்டு அங்கிருந்து விலகி விடைபெறுகிறான்.
சுரேஷ் கிளம்பி சென்றதும் மழை துளிகள் வெளியே வர வானம் மழையை பொழிகிறது.
முகிலும் வள்ளியும் ஒரு கடையின் முன்னே மழைக்கு ஒதுங்க அந்த கடையின் முன்னே ஊர் திருவிழா அழைப்பிதழ் ஒட்டப்பட்டு இருந்தது.
"முகில்... எவ்வளவு நாள் நீ நம்ம ஊருல தங்கி இருப்பே....?"என வள்ளி கேட்க,
"அதுவந்து... சந்திப்போட இலவு முடிந்ததும் கிளம்பலாம்ன்னு இருந்தேன்... ஆனால் இப்போ....."என முகில் யோசிக்க,
" நீ இங்கேயே இருந்திரேன் எப்போவும்... " என வள்ளி தயங்கி தயங்கி கூறுகிறாள்.
"என்னது... எப்போவுமா?" என முகில் கேட்க,
"இல்லை..... ஒன்னுமில்லை விடு...."என வள்ளி வேறு பக்கம் திரும்பி தன் பையில் உள்ள சிப்பி இணைந்த ஒரு செயினை எடுக்கிறாள்.
"இந்தா..... என் அண்ணன் இறக்கும்போது இதை போட்டுட்டு இருந்தான்... அவன் இருந்திருந்தா இதை உன்கிட்டேதான் கொடுக்க சொல்லி இருப்பான்......" என முகிலிடம் அதை கொடுக்க,
முகில் அதனை வாங்கி விட்டு வேடிக்கை பார்க்க மழை தனது துளிகளை குறைத்து கொள்கிறது.
முகில் மற்றும் வள்ளி இருவரும் வீட்டிற்கு செல்ல முகில் தனது அறைக்குள் நுழைந்து, சந்தீப்பின் கைபேசியை எடுத்து பார்க்கிறான்.
"இது என்ன பாஸ்வேர்ட் கேக்குது " என முகில் யோசித்து சந்தீப்பின் பிறந்த நாளை அதில் தொட,
"பாஸ்வேர்டு இன்கரெக்ட" என கைபேசி திரை காட்டுகிறது.

சூரியன் தனது கதிர்களின் பொலிவுகளை இழந்து ஆரஞ்சு, நிறத்தில் ஒளியை கொடுத்து கொண்டு இருந்தது. சந்தீப் கைபேசி டிசம்பர் 24 என காட்ட முகில் நிறைய தரவு எண்களை பரிசோதித்து இருந்தான், அப்பொருத்து முகில் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
"மலை... "என கதவு பின்னால் இருந்து சுரேஷ் கூற,
"என்னது..." என முகில் பார்க்கிறான்.
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சுரேஷ்,
"டேய்.. மெசபடோனியா நாகரீகம் சொல்லனும் மறந்துட்டயா...." என சுரேஷ் கேட்க,
"என்ன.... அதுக்குள்ள சாயங்காலம் ஆயிருச்சா.....? "என முகில் கேட்க,
"சரியா போச்சு போ....நீ இன்னும் ரெடி ஆகலையா முகில்....?" என உள்ளே நுழைந்த சுரேஷின் அக்கா சுதா கேட்க,
"இதோ ஆயிறேன்....." என குளியலறையில் நுழைந்து தனது துணிகளை மாற்றி கொண்டு வெளியே வருகிறான் முகில்.
வள்ளி புடவை அணிந்து கொண்டு இருக்க, "நான் எப்படி இருக்கிறேன் முகில்.. ?" என வள்ளி கேட்க,
"நீ...நீ..."என முதில் கூற,
"நீ ரொம்ப அழகாயிருக்கே.'' என சுரேஷ் கூறி முகிலிடம் வந்து,
"வள்ளி புடவை போட்டுருக்கா....நாம நிழல்கள் வந்தா ஈஸியா உண்மையான வள்ளியை கண்டுபிடிச்சிடலாம்...."என சுரேஷ் கூறுகிறான்.
"அதுவும் சரிதான்....." என முகில் கூற,
"பயப்படாதே... நான் சுதாகிட்ட இதைபத்தி எதுவும் சொல்லல....சும்மா வெளில போகலாம் சொல்லி கூட்டிட்டு வந்தேன்...." என சுரேஷ் கூற,
" ம்ம்... சரி....நேந்து எதை பத்தி தேடிப்போனே.....?"என முகில் கேட்க,
"ஓ அதுவா.."என சுரேஷ் இழுக்க,
" ஆமா அதை நீ கண்டுபிடிச்சியா....?" என முகில் கேட்க,
" அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை நீ அதை விடு...."என கூறிவிட்டு முன்னே சென்று,
"சரி திருவிழாவுக்கு போலாம்....யாருக்கும் இது தெரிய கூடாது.... இழவு முடிஞ்சு ரெண்டு நாளில் போக கூடாது....ஆனால் நாம போறோம்... அதுனால் யாருக்கும் தெரிய கூடாது...."என சுரேஷ் கூற,
"சந்தீப்.... ஊர் திருவாழா வந்தா ரொம்ப சங்கதாஷம் ஆகிருவான்...."என வள்ளி கூற,
"அவன்நம்ம கூடதான் இருப்பான் எப்போவும்..."என சுரேஷ் கூறுகிறான்
நான்கு பேரும் கிளம்பி திருவழாவிற்கு செல்ல ஊரே கூடி நின்று சாமி ஊர்வலத்தை வேடிக்கை பார்ந்து கொண்டிருக்க, வானவெடிக்கை வானை கிழித்து கொண்டு மேலே சென்று வெடித்து கொண்டு இருக்கிறது.
வள்ளளியும் சுதாவும் ஒருபுறம் நின்று கொண்டு இருக்க, முகிலும் சுரேஷும் மறுபுறம் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
"சுரேஷ்....நான் இந்த ஊரை விட்டு போய் ரெண்டு வருஷம் ஆச்சு.... நான் கொஞ்சம் பெரிய ஆளாய் ஆனேன்னு நினைச்சேன்... ஆனா இல்லை.. அவனுக்கு ஆபத்து வந்தப்போ நான் அவன்கூட இல்லை.."என முகில் தரையை பார்த்தபடி கூற,
"முட்டாள்... அவன் இறந்தது உன் தப்பு இல்லை ... வள்ளியை காப்பாத்தறதுல்ல போகஸ் பண்ணு..... நீ வள்ளியோட அண்ணன்தானே...." என சுரேஷ் கேட்க,
"சரி....சரி...." என முகில் நிமிர்ந்து கூற,
"உன்னால் வள்ளியை காப்பாத்த முடியாதுன்னா அதை என்கிட்ட விட்டுடு...."என சுரேஷ் கூற,
"உனக்கு இன்னும் அவமேல பீலிங்க்ஸ் இருக்கா சுரேஷ்....."என முகில் கேட்க,
" ஏன் அதுல உனக்கு ஏதாச்சும் பிரச்சினையா....?" என சுரேஷ் கேட்க,
முகில் திரும்ப அதற்குள் சுதாவும் வள்ளியும் அவர்களை நோக்கி வர, இருவரும் அமைதியாக நிற்கறார்கள்.
"முகில் என் அப்பா இப்போதான் கால் பன்னாரு.... இந்த வானவேடிக்கை சாமி ஊர்வலம் முடிஞ்சதும், அந்த பூசாரி ராம் ஃபிரியா இருப்பாரு...."என சுரேஷ் கூற,
" சரி அப்போ அது வரைக்கும்.....?" என கூறிவிட்டு திரும்ப கூட்டத்தின் ஒருபுறம் சந்தீப் நடந்து செல்வது போல் முகிலிற்கு தெரிகிறது.
முகில் வேறு திசையில் பார்ப்பதை பார்த்த சுரேஷ்,
"என்னாச்சு முகில்....?"
"இல்லை... இப்போ நான் ... "என முகில் திணற,
"சரி நம்ம கோவில்கிட்ட போய் வானவேடிக்கை பார்ப்போமா.....?"என சுதா கேட்க,
"இல்லை....நீங்க போங்க நான் அப்புறம் வர்றேன்...."என முகில் கூறிவிட்டு அங்கே இருந்து அந்த உருவம் நடந்து சென்ற திசையை நோக்கி ஓடுகிறான்.
"டேய்..... எங்கடா போறே......"என சுரேஷ் கத்தியபடி கேட்க,
"இரு வர்றேன்.....வள்ளியை பார்த்துக்கோ..... "என ஓடி கொண்டே முகில் சொல்கிறான்.
முகில் ஓடி சென்று கூட்டத்தினுள் புகுந்து அந்த உருவத்தை தேடுகிறான்.
"சந்தீப் ஊர்திருவிழா வந்தா ரொம்ப சந்தோசம் ஆயிருவான்.....அவன் நம்ம கூடதான் அப்போவும் இருப்பான்... "என சுரேஷ் மற்றும் வள்ளி கூறியது முகில் நினைவலையில் வர, ஓடி சென்று மூச்சிரைத்தபடி ஒடி தன் முட்டியில் கை வைத்து நின்று சுற்றும் முற்றும் பார்க்க, சந்தீப் இறந்த ஆறு தெரிகிறது.
வேகமாக ஓடிய முகில் ஆற்றின் கரையில் சென்று பார்க்கிறான். அந்த கரையில் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல தெரிகிறது.
"முகில்.... என்னை கண்டுபிடி... " என சந்தீப் கனவில் கூடியது நினைவற்கு வர,
"சந்தீப்......"என முகில் அழைக்க,
வானவெடிக்கை வெளிச்சம் இருளை விலக்கி திரும்பி பார்த்தபடி நின்ற சந்தீப்பின் முகத்தை காட்டியது.

(தொடரும்........)
 
Top